Advertisement

பெண்ணின் காதோடு கம்மல் பறித்த திருடன்

பெரவள்ளூர், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் குணசேகரன்; ரயில்வே ஊழியர். அவரது மனைவி கஸ்துாரி, 56. நேற்று இரவு, 7:30 மணியளவில், வீட்டில் தனியாக இருந்த போது, முகத்தில் துணி கட்டிய படி, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கத்தியை காட்டி மிரட்டி, கஸ்துாரி அணிந்திருந்த, 7.5 சவரன் செயினை பறித்தார்.
மேலும், கஸ்துாரி காதில் இருந்த அரை சவரன்
கம்மலை, காதோடு பறித்துக் கொண்டு, தப்பி ஓடினார். இதில், காது அறுந்து, ரத்த வெள்ளத்தில் கஸ்துாரி துடித்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். பெரவள்ளூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து
வருகின்றனர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement