Advertisement

ரூ.13 லட்சம் மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல்

பக்ரைனில் இருந்து, 'கல்ப் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ஆந்திர மாநிலம், ஒய்.எஸ்.ஆர்., மாவட்டத்தைச் சேர்ந்த, பக்ருதீன் என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில், அதிகாரிகள் சோதனையிட்டனர்.அதில், அவரது கைப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த, 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 448 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், பக்ருதீனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement