Advertisement

'டவுட்' தனபாலு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: ராகுலின் தாய் சோனியா, காங்., தலைவராக, 19 ஆண்டுகள் சேவையாற்றி உள்ளார். அதன் மூலம், நாட்டுக்கும், 19 ஆண்டு கால சேவை புரிந்துள்ளார். அதே திசையில், ராகுலும் பயணிக்க உள்ளார்.

டவுட் தனபாலு: 'கட்சியின் தலைவராக, 19 ஆண்டுகள் இருந்தபோதிலும், பிரதமர் பதவிக்கு அவர் ஆசைப்படலை... கட்சியில் இருந்தே, நாட்டுக்கு சேவை புரிந்தார்... ராகுலும் அப்படித்தான் இருப்பார்'னு சொல்ல வர்றீங்களா... 'அதே திசையில் தான், ராகுலும் பயணிக்க உள்ளார்' என்பதற்கு, இது தான் அர்த்தமோ என்ற, 'டவுட்'டை ஏற்படுத்திட்டீங்களே...!


சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்: பல வளர்ந்த நாடுகளில், தேர்தலின் போது, ஓட்டுச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அதே போன்று, இந்தியாவிலும் ஓட்டுச் சீட்டு பயன்படுத்துவதில், என்ன பிரச்னை உள்ளது?

டவுட் தனபாலு: பல வளர்ந்த நாடுகளில், வாரிசு அரசியல் இல்லை... இவ்வளவு முறை தான், தேர்தலில் போட்டியிட முடியும், பதவி வகிக்க முடியும் என்ற கட்டுப்பாடு இருக்கு... அதைப் பத்தி எல்லாம், நீங்க பேச மறுப்பது ஏன்... அதில் என்ன உங்களுக்கு பிரச்னை என்ற, 'டவுட்'டை கொஞ்சம் விளக்குங்க...!

தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: காமராஜர் ஆட்சியை குறை சொன்னவர்கள் தான், தி.மு.க.,வினர். அதே போன்று தான், இன்றும், அ.தி.மு.க., அரசு மீது குறை சொல்லிக் கொண்டு இருக்கின்றனர்.

டவுட் தனபாலு: யாராலும் குறையே சொல்ல முடியாத ஆட்சியைத் தான், காமராஜர் கொடுத்தார்னு ஒப்புக் கொள்றீங்களா... அப்படீன்னா, அவரது புகழைப் பரப்ப நீங்க என்ன நடவடிக்கை எடுத்திருக்கீங்க... எத்தனை திட்டங்களுக்கு அவரது பெயரைச் சூட்டி இருக்கீங்க என்ற, 'டவுட்' எழுமே... அதற்கு என்ன சொல்லப் போறீங்க...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

    ஆமாம் ஆமாம் சோனியக்கா ஆசையே இல்லே கம்னுகிட்டங்கய்யா

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement