Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி பேட்டி: ஆர்.கே.நகர் தொகுதியில் நடப்பது, இடைத்தேர்தல் அல்ல; அது, எடைத்தேர்தல். முன்னர் அங்கு, ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதால், தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. ஓட்டுக்கு பணம் வழங்கிய விவகாரத்தில், தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது... அப்போது போட்டியிட்டவர்களே, இப்போதும் போட்டியிடுகின்றனர். பின், தேர்தல் எப்படி நியாயமாக நடக்கும்?


சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பேட்டி: நாடு முழுவதும், 1995ம் ஆண்டு முதல், இதுவரை, 12 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண,மத்திய அரசு விரும்பவில்லை. ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்திலும், மத்திய அரசுக்கு அக்கறையில்லை. பிரதமரின் பேச்சுக்கும், அவரது செயலுக்கும் இடையே, மிகப்பெரிய இடைவெளி காணப்படுகிறது.



தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி: கன்னியாகுமரி மாவட்டத்தை நான் பார்வையிட்டதில் தெரிந்து கொண்டது, மத்திய, மாநில அரசுகள், இந்தப் புயல் பாதிப்பு பற்றி எந்த கவலையும் படவில்லை என்பதை தான். கடந்த மழை வெள்ளம், 'வர்தா' புயல் போன்ற பாதிப்புகளின்போது தமிழக அரசு, மத்திய அரசிடம், ௮௮ ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி கேட்டது. இதில், மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது; அந்தப் பணத்தை வைத்து மாநில அரசு என்னென்ன பணிகளை எல்லாம் செய்தது என்பதை, தமிழக அரசு உடனடியாக, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.


இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு:
தொடக்கக் கல்வி என்பது, தாய்மொழியில் இருத்தல் அவசியம். அப்போது தான், சமூகத்தில் அனைவருக்கும் மதிப்பளிக்கும் குணத்தை, குழந்தைகளின் ஆழ்மனதில் விதைக்க முடியும். எந்த மொழியைக் கற்றாலும், அதில் தவறேதும் இல்லை. அதேவேளையில், தாய்மொழிக்கு தான் முன்னுரிமையும், முக்கியத்துவமும் கொடுக்க வேண்டும். தாய்மொழிக்கு மட்டும் தான், உணர்வுகளையும், உளச்சிந்தனைகளையும் துல்லியமாக வெளிப்படுத்தும் ஆற்றல் உண்டு.


'முக பாவம், ரத்த வாரிசுங்கறதெல்லாம் இருக்கட்டும்... ஜெ., போல தைரியமும், சுய சிந்தனையும், கம்பீரமும் இருந்தால் தான் மக்கள் ஏத்துக்குவாங்க... உங்க கணக்கு ரொம்ப தப்பு...' எனச் சொல்லத் தோன்றும் வகையில்,ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி: என் அத்தையின் முகபாவனையில் இருப்பதாலும், அவரது ரத்த வாரிசு என்பதாலும், ஆர்.கே.நகரில் எனக்கு, மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. நான் போட்டியிட்டால், அ.தி.மு.க., நிச்சயம் தோல்வி அடைந்து விடும். அந்த பயத்தில் தான், திட்டமிட்டு என் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர். தேர்தல் அதிகாரிகள் கூறிய காரணம், ஏற்றுக்கொள்ள முடியாதது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement