Advertisement

பக்க வாத்தியம்

வேதாளங்களின் வேதா இல்லம்...!

பா.ஜ., தேசிய செயலர், எச்.ராஜா, மதுரையில் நிருபர்களை சந்தித்தார். சென்னையில், ஜெ., வீட்டில் நடந்த ரெய்டு பின்னணியில், பா.ஜ., இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியது குறித்து, நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
சூடான ராஜா, 'ஆறு நாட்களுக்கும் மேலாக, 187 இடங்களில், வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அதன் தொடர்ச்சியாகவே, ஜெ., வீட்டில் ரெய்டு நடந்துள்ளது.
'வேதா இல்லத்தில், வேதாளங்கள் குடியிருந்ததால் தான் ரெய்டு நடந்தது. முதல்வர் பழனிசாமி கூட, தவறானவர்களால் தான் ரெய்டு நடந்துள்ளதாக கூறியிருக்கிறார்' என, ஆவேசமானார்.
'இதுக்கு மேல இதை பத்தி கேட்டு, அவர் பிரஷரை ஏத்தாதீங்கப்பா...' என, மூத்த நிருபர் ஒருவர்
முணுமுணுக்க, சக நிருபர்கள் சத்தமின்றி சிரித்தனர்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இந்தப் பெரிய சிதம்பர ரகசியத்தை அவர் சொல்லாவிட்டாலும் தெரியாதா ?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement