Advertisement

அறிவியல் ஆயிரம்

மறைக்கப்பட்ட மகள்


சர்தார் வல்லபாய் படேல் மகள் மணிபென் படேல். படேல் இறந்தவுடன் காங்கிரசுக்கு சேரவேண்டிய ரூ. 35 லட்சம், கட்சியின் வரவு செலவு புத்தகத்தையும் இவர் தான், நேருவிடம் கொடுத்தார். படேலின் மறைவிற்கு பின், காங்., தலைவர்கள் இவரை கண்டுகொள்ளவே இல்லை என்று வர்கீஸ் குரியன் தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். மணிபென் இறுதிக் காலத்தில் அப்போதைய குஜராத் முதல்வர் சிமன்பாய் படேல் புகைப்படக்கலைஞருடன் வந்து புகைப்படம் எடுத்து, மணிபென்னின் கடைசிகாலம் அரசின் ஆதரவுடன் தான் கழிந்தது என, காட்டிக்கொள்வதில் மட்டும் ஆர்வம் காட்டினார் என குரியன் குறிப்பிட்டுள்ளார்.

தகவல் சுரங்கம்



மணலுக்கு மாற்று

ஆற்றில் தண்ணீர் வரும்போது, தண்ணீர் மாசுபடாமலும், சுத்தமாகவும் இருக்க ஆற்றில் மணல் மிகவும் அவசியம். மணல் துகள்கள் தான், ஆற்றில் உள்ள நீரை வடிகட்டும் வடிகட்டியாகச் செயல்படுகின்றன. கட்டடம் கட்டும் போது, அடித்தளத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணலோடு செம்மண்ணைக் கலந்து, புதிய கட்டடங்களின் அடித்தளத்தில் போடுமாறு மாற்று தொழில்நுட்ப நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். இதனால் கட்டடத்தின் உறுதித்தன்மை எந்த வகையிலும் பாதிக்கப்படாது. செம்மண்ணில் நைட்ரஜன், பாஸ்பரஸ், நிலமக்கு
ஆகியன குறைவாக உள்ளன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement