Advertisement

'டவுட்' தனபாலு

தினகரன் ஆதரவாளர் புகழேந்தி:
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பா.ஜ., அரசை எதிர்த்து பேச, முதல்வர் பழனி சாமி மற்றும் அமைச்சர்களுக்கு தைரியம் இருக்கிறதா? இல்லாவிட்டால், மதுசூதனன் தன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

டவுட் தனபாலு: நடப்பது லோக்சபா இடைத்தேர்தல் என்றால், நீங்க சொல்றது சரி... சட்டசபை இடைத்தேர்தலில், மத்திய அரசை எதிர்த்துப் பேசி, என்ன பயன்... இன்னைக்கு இவ்வளவு வீராப்பா, பா.ஜ.,வுக்கு எதிராகப் பேசுற நீங்க, ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலில், வலியச் சென்று, பா.ஜ.,வை தினகரன் தரப்பு ஆதரித்தது ஏன்... அன்று, தைரியத்தை வாடகைக்கு விட்டிருந்தீங்களா... இல்லை, வாடகைக்கு கிடைக்கலையா என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன், கேட்போம்...!

************


நடிகர் விஷால்: ஆர்.கே.நகர் தொகுதி மக்கள், அடிப்படை வசதிகளை கேட்கின்றனர். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, மக்கள் பிரதிநிதி தேவை. அதற்காகவே,
தேர்தலில் போட்டியிடுகிறேன்.

டவுட் தனபாலு: 'நடிகர் சங்கப் பொதுச் செயலராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் போட்டியிட்டு வெற்றி பெற்றீங்க... உங்களுக்கு பரிச்சயமான அந்தத் துறைக்கு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றலைன்னு, பலரும் குரல் எழுப்பி வர்றாங்களே... இதுல, எங்க தேவையை எப்படி பூர்த்தி செய்யப் போறீங்க'ன்னு, மக்கள், 'டவுட்' எழுப்பினால், வேறு ஏதாவது தேர்தலில் போட்டியிட கிளம்பிடுவீங்களோ...!


************


மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜுஜு: மிகப்பெரிய பொருளாதார அறிஞரான மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, காங்கிரசார் அவருக்கு உரிய கவுரவத்தை அளிக்கவில்லை. மன்மோகன் சிங்கை கேடயமாக பயன்படுத்தி, அவர்கள் ஊழல்
செய்வதில் ஈடுபட்டனர்.

டவுட் தனபாலு: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீதான இந்த, திடீர் பாசத்துக்கு என்ன காரணம்... அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, 'மன்மோகன் சிங் மிகச் சிறந்த பொருளாதார அறிஞர்... அவரிடம், ஆலோசனைகளை பெற்று உள்ளேன்'னு, சமீபத்தில் பாராட்டு தெரிவித்திருந்தாரே... அதுக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • PADMANABHAN R - Chennai,இந்தியா

    மன்மோகன் சிங்ன் பொருளாதார அறிவை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் லஞ்சம் வாங்குபவனைவிட கொடுப்பவன் தான் குற்றவாளி (நடைமுறையில் சாத்தியமில்லை) என கூறுவது போல ஐக்கிய முன்னணி ஆட்சியில் ஊழல் நடந்தபொழுது அதை தடுக்க முற்படாமல் எஜமானி அம்மா (சோனியா) கோபம்கொள்ளக்கூடாது என மௌன சாமியாராக இருந்ததை தான் கண்டிக்கிறோம்.

  • G.Rameshchandran - Tamil nadu,இந்தியா

    காங்கிரஸ் காரர்கள் புகழ் இனிதான் எல்லோருக்கும் புரியும் இது காலத்தின் கட்டாயம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement