Advertisement

நிதியை நிறுத்திய சீனா: பாக்., அலறல்

இஸ்லாமாபாத்: ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சாலை அமைப்பு நிதியை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால் பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீனா தனது பழங்கால பட்டு பாதையை மீட்டெடுத்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முக்கிய சாலை அமைப்பு திட்டங்களுக்கு சீனா நிதியுதவி அளிக்க ஒப்புக் கொண்டுள்ளது.

இது சீனா - பாகிஸ்தான் பொருளாதார விரைவு சாலை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி சீனாவில் ஜிங்ஜியாங் பகுதியுடன் பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் பகுதியுடன் இணைக்க சாலை வசதி ஏற்படுத்தப்படும்.


இதற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை நிதியுதவி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தானில் இந்த சாலை அமைப்பு திட்டத்தை மேற்கொள்வதில் ஊழல் புகுந்து விளையாடுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, நிதியுதவி அளிப்பதை சீனா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

இது பாகிஸ்தானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (22)

  • indu - russia,மெக்சிக்கோ

    தன் தலை மேலே மண்ணை போட்டுகொண்டுவிட்டது

  • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

    இது தான் சமயம், பாகிஸ்தான் அமெரிக்க டாலராக வாங்காமல் யுவானாக வாங்க வைக்க இருக்கும் தந்திரமாக கூட இருக்கலாம்

  • Somiah M - chennai,இந்தியா

    ஒரு பாதையில் இரு நல்லவர்கள் எதிர் எதிரே சந்தித்தால் ஒருவருக்கு ஒருவர் வழி விட்டு மூன்று பாதைகளை உருவாக்குவர். ஒரு நல்லவரும் ஒரு கெட்டவரும் சந்தித்தால் நல்லவர் வழி விடுவார் ,இரண்டு பாதைகள் உருவாகும் . இரு கெட்டவர்கள் சந்தித்தால் இருக்கும் ஒரு பாதையையும் அழித்து விடுவார் . இந்த நிலைதான் சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் . .

    • PERIYASAMYMANIMARANVK MANIMARANVK - keeranur,இந்தியா

      சூப்பர் சார்

  • Jey Kay - jeykay@email.com - Melbourne,ஆஸ்திரேலியா

    இலங்கைக்கு சீனா 150 கோடி வழங்கி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிறுவியதன் மூலம் தந்திரமாக இலங்கையை கடனில் தத்தளிக்க வைத்தது. அதை ஈடு கட்ட அந்த துறைமுகத்தை 99 வருடம் குத்தகைக்கு விட இலங்கையை சீனா நிர்பந்தப்படுத்தியது. புதிய துறைமுகத்தின் மூலம் வருவாயை பெருகி அதன் மூலம் நாட்டை செழிப்படைய செய்யவேண்டும் என்கிற எண்ணத்தில் இலங்கை அரசு நிறுவியதே ஹம்பாந்தோட்டா துறைமுக திட்டம். துறைமுகம் கட்டுவதற்காக கடன்வாங்கி, வாங்கிய கடனை அடைக்க துறைமுகத்தையே குத்தகைக்கு விடவேண்டிய நிலை ஏற்பட்டால் அது ஒன்று படுதோல்வி அடைந்த திட்டம், அல்லது தோல்வி அடையும் முடிவிலேயே வடிவமைக்க பட்ட திட்டம். அப்படி பட்ட மற்றொரு திட்டம் தான் cpec திட்டம். ஆப்கானிஸ்தான் நிலத்தால் சூழப்பட்ட நாடு, இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானிற்கு செல்லும் சரக்கு பாகிஸ்தான் நிலப்பரப்பின் மூலம் (cpec) இந்தியா எடுத்துச்செல்லும் என்று பாகிஸ்தான் கணக்கிட்டது, கவாடர் துறைமுகத்தை மத்திய ஆசிய நாடுகளின் நுழைவு வாயில் என்று பாகிஸ்தான் எண்ணிக்கொண்டிருந்தது. இந்தியாவையும் மத்திய ஆசிய நாடுகளையும் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் பிரிக்கின்றது. இதில் ஆப்கானிஸ்தான் நமது நண்பன் அதைப்போல் பாகிஸ்தான் மத்திய ஆசிய நாடுகளிடம் வர்த்தகம் புரிய ஆப்கானிஸ்தாணை பாகிஸ்தான் கடக்கவேண்டும். இந்தியாவிடம் வர்த்தகம் புரிய ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை கடக்கவேண்டும். ஆதலால் cpec ஐ துருப்புசீட்டாக பயன்படுத்த பாக்கிஸ்தான் எண்ணியிருந்தது, இந்திய சரக்கு பாகிஸ்தானை கடந்து ஆப்கானிஸ்தானை அடைய பாகிஸ்தான் ஒத்துழைத்தால் தனது சரக்கும் ஆப்கானிஸ்தானை கடந்து மத்திய ஆசிய நாடுகளை சென்றடைய ஆப்கானிஸ்தான் சம்மதிக்கும் என்று பாகிஸ்தான் கணக்கிட்டது. ஆனால் மோடி அரசு ஈரானில் சபாஹர் துறைமுகம் நிறுவியதன் மூலம் ஈரான் வழியாக சரக்கை எடுத்துச்செல்ல ஆயத்தமாகியது. பிறகு சீனாவின் மேற்கு மாகாணங்களுக்கு சரக்கை எடுத்துசெல்வதற்க்கு cpec திட்டம் பயன்படும் என்று பாகிஸ்தான் கூறியது. ஆனால் சீனாவின் மேற்கு மாகாண மொத்த மக்கள் தொகை பாகிஸ்தானின் இரு பெருநகரங்களின் மக்கள் தொகைக்கு கூட ஈடாகாது. அதுமட்டுமல்லாமல் cpec அமைந்திருக்கும் பெரும்பாலான சாலைகள் உலகின் உயரமான இமயமலைத் தொடர்களை கடந்து செல்கிறது, மலைகளை கடப்பதற்கு அதிக எரிவாயு தேவைப்படும் அதுமட்டுமல்லாமல் வாகனங்களின் பராமரிப்பு செலவுகளும் அதிகமாகும். இலங்கைக்கு ஏற்பட்ட அதே நிலை பாகிஸ்தானிற்கும் ஏற்படும். கூடியவிரைவில் பாகிஸ்தான் முன்னோக்கி சாய்வதை (சீனாவின் கால்களில்) நாம் விரைவில் காணலாம்.

    • rajan - kerala,இந்தியா

      A NICE EXPRESSION TO THINK GLOBAL IRONY. SOON PAKISTAN WILL BE VICIMIZED.

  • Gokul -

    இரண்டு குண்டு சீனா மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் போட்டாத்தான் இந்த சப்ப மூக்கனுங்க புத்தி உரைக்கும்.

  • K.Sugavanam - Salem,இந்தியா

    அதானி குழுமத்தின் ஆஸ்திரேலியா நிலக்கரி திட்டத்துக்கு 2 பில்லியன் டாலர் கடன் வழங்க இரண்டு சீன வங்கிகள் மறுத்துள்ளனவே.. பாவம்..இது யாருக்கெல்லாம் ஷாக் தருமோ?

  • Anand - chennai,இந்தியா

    எப்படியிருந்தாலும், பாகிஸ்தானுக்கு யாராவது பிச்சை இட்டால் தான் அவர்களால் வாழ முடியும் என்கிற நிலைமை, என்னத்தை செய்ய, பாக்கிஸ்தான் தனது கையை கிழக்கை (சீனா) விடுத்து மேற்கு (அமெரிக்கா) நோக்கி ஏந்தவேண்டும், அமெரிக்காவை குளிர்விக்க தான் வளர்த்த 200 தீவிரவாதிகளையாவது போட்டுத்தள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. என்ன ஒரு மானங்கெட்ட பொழப்பு.

  • நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா

    நீங்க பணத்தை மட்டும் கொடுத்துடுங்கலாமா, அவங்க சாதாரணமா புல்லக் மாடு போர வண்டிக்கு ரோடு போட்டு நெறையப்பணத்தை வச்சுக்குவங்க.

  • Nakkal Nadhamuni - Chennai,இந்தியா

    ரெண்டு நரிகள் சேர்ந்து அடுத்தவனை கெடுக்கலாம், பிரிக்கலாம், கொலை செய்யலாம்... ஆக்கபூர்வமா எதுவும் செய்யமுடியாது...

  • VIJAIANC -

    We have so many Pakistani supporters in India,they will donate money through their JAMAAT

  • Ramamoorthy P - Chennai,இந்தியா

    மத்திய நிதியை மாநிலங்களுக்கு வழங்கும் போதும் இதே நிலை தான். இந்த லட்சணத்தில் மாநில சுய ஆட்சி வேண்டுமாம். ஒட்டுமொத்தமாக மக்கள் தலையில் துண்டு போடுவதற்கான வழி .

  • Nalam Virumbi - Chennai,இந்தியா

    சீனா கொடுக்க நினைக்கும் உதவி ஊழல் மூலமாக பயங்கர வாதிகள் கைக்குச் சேர்ந்து சீனாவுக்கே உலை வைக்கும். பழ மொழியை மாற்றி பட்டால்தான் தெரியும் சீனாக்காரனுக்கு என்று எழுதிவிடலாம்.

  • Baskaran - Muscat,ஓமன்

    கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? நாங்கள் இதைத்தான் எதிர்ப்பட்டோம். எங்கள் கணிப்பு எப்போதும் தவறாகாது. சீனாவிற்கு நல்ல பாடம்.

  • Baskaran - Muscat,ஓமன்

    ஆடு கசாப் கடைக்காரனை தான் நம்புமாம். இந்த உதாரணம் சீனாவிற்கு பொருத்தமானது.

  • Rpalnivelu - Bangalorw,இந்தியா

    அய்யகோ அங்கும் இத்தாலிய மாஃபியா கட்சியும், தமிழக திருட்டு திராவிட கழகங்களும் புகுந்து விட்டதா?

    • Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்

      இல்லை இல்லை ...இந்த விரிசலில் பிஜேபி புகுந்து விளையாடுது...

    • Ranga Ramanathan - coimbatore,இந்தியா

      முதுகில் குத்திய சீனா, திண்டாடும் தீவிரவாதிகள்.

    • Pasupathi Subbian - trichi,இந்தியா

      எதற்கு எதை சம்பந்தப்படுத்துவது என்ற விவஸ்தையே இல்லையா? நீங்கள் இதை எப்படி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தீர்கள் என்பதற்கு ஒரு ஆதாரமானது கொடுக்க இயலுமா? உங்களை போன்ற மொடா முஸ்தபாக்கள் இருக்கும் வரை இந்தியாவின் வளர்ச்சி நடைபெறவே நடைபெறாது. பாகிஸ்தானில் மோடி எப்படி அய்யா நுழையமுடியும். அவர் இந்திய பிரதமர் என்ற அடிப்படை அறிவே இல்லையா?

    • Mariappa T - INDORE,இந்தியா

      Rpalnivelu - bangalorw,இந்தியா /// உண்மையில் இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் ஊழல் இல்லாத கட்சியே கிடையாது. இந்தியாவில் இருந்த பிரிந்த நமது சகோதரன் என்ன வித்தியாசம் இருக்க போகிறான். கழுதை........இல் . முன் ......... பின் ........ என்ன வித்தியாசம். அமித் ஷா வுக்கு எதிரான ஒரு வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் கொல்லப்பட்டது ஏன்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement