Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'மதவாத சக்திகளுக்கு மட்டும் தான் எதிர்ப்பா... தி.மு.க., ஜெயிக்கணும்ங்கறது உங்க நோக்கம் இல்லையா...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், இந்திய கம்யூ., கட்சி மாநில செயலர் முத்தரசன் பேட்டி:
மதவாத சக்திகள், இங்கு காலுான்றுவதை தடுக்கவே, சி.பி.ஐ., - சி.பி.எம்., - வி.சி., உள்ளிட்ட கட்சிகள், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஆதரவளித்துள்ளன. இந்த தேர்தல் நேர்மையாக நடந்தால், தி.மு.க., வெற்றி பெறும்.


சசிகலா அக்கா மகன் தினகரன் பேச்சு:
ஓட்டுக்கு பணம் கொடுத்து, ஆட்சி அதிகாரத்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற, முதல்வர் பழனிசாமி நினைக்கிறார். எங்கள் தொண்டர்கள், விஷால் ரசிகர்களுடன் இணைந்து விதிமீறல்களை தடுப்பர்.


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி பேட்டி:
'ஒக்கி' புயலால், குமரி மாவட்டம், மிக அதிக அளவில் சேதமடைந்துள்ளது. கேரள முதல்வர் விமானம், ஹெலிகாப்டர் என, மாயமான மீனவர்களை தேடும் பணியை முடுக்கி விட்டுள்ளார். தமிழக முதல்வர், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவுக்கு, 500 கோடி ரூபாய் செலவிட்டு சுற்றி வருகிறார். ஆனால், தமிழக வெள்ள பாதிப்புக்கு, 25 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு தலையிட்டு, புயல் பாதிப்பை, தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்.


மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ் பேட்டி: கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளவாறு, 'ஒக்கி' புயலை, தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. தேவைப்பட்டால் மத்திய அரசு, கூடுதல் நிதியை ஒதுக்கும். 'ஒக்கி' புயல் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்ததில், முன்கூட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறித்து எதுவும் கூறப்பட வில்லை. இதனால், மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்று விட்டனர். எனினும், புயல் தாக்கிய பின், தேவையான அனைத்து நடவடிக்கையும் மாநில அரசு எடுத்துள்ளது.


அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை பேச்சு:

ஜனநாயக நாட்டில், தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட்டால், அவருக்குத் தான் பாதிப்பே தவிர, அ.தி.மு.க.,வுக்கு இல்லை. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு: குஜராத்தில் ஜாதி, மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை பிடிக்க, காங்கிரஸ் விரும்புகிறது. அதற்காக வளர்ச்சி தடைபட்டிருப்பதாக ராகுல், பொய் சொல்கிறார். அவரது மனநிலையை நினைத்து வருந்து
கிறேன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement