Advertisement

இவர் தானுங்க முதல்வர்!

குஜராத் சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், 'அடுத்து ஆட்சி அமைக்கப் போவது நாங்கள் தான்' என்ற முடிவுக்கு வந்து விட்டனர், காங்கிரஸ் தலைவர்கள். கடந்த, 20 ஆண்டுகளாக இங்கு, பா.ஜ., ஆட்சி தான் நடக்கிறது. இதில் பெரும்பாலான ஆண்டு, நரேந்திர மோடி தான், முதல்வராக பதவி வகித்துள்ளார்.

தற்போது, நரேந்திர மோடி பிரதமராகி விட்டதால், பா.ஜ.,வின் விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டுமென, துடியாய் துடிக்கிறது காங்கிரஸ்.

முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் பணியும், திரை மறைவில் வேகமாக நடக்கிறது. சங்கர் சிங் வகேலா உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரசிலிருந்து விலகி விட்டதால், 'யாரை முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்வது' என்பதில், கட்சித் தலைவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுலின் ஒரே தேர்வு, சாம் பிட்ராடோ தான். இவர், பிரபலமான தொழில் அதிபர். ராஜிவ் பிரதமராக இருந்தபோது, அவரது ஆலோசகராக பதவி வகித்தவர்.

அமெரிக்க குடியுரிமை பெற்று, அங்கேயே பல ஆண்டுகள் வசித்தவர். தந்தையின் விசுவாசி என்பதாலும், விஷயம் தெரிந்தவர் என்பதாலும், குஜராத் தேர்தலில், காங்., வெற்றி பெற்றால், அவரையே முதல்வராக தேர்வு செய்வது என உறுதியாக உள்ளார், ராகுல்.

குஜராத் மாநில காங்கிரசாரிடம், சாம் பிட்ராடோ பற்றி கேட்டால், 'பகோடாவா; யாருப்பா அது' என, பரிதாபமாகக் கேட்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement