Advertisement

குன்றக்குடி அடிகளின் குட்டி கதை!

மதுரையில் சமீபத்தில், தேவார தமிழிசை மாநாடு நடந்தது. இதில், குன்றக்குடி பொன்னம்பல அடிகள் பேசும் போது, 'ஒரு ஊரில், விபத்தில் கையில் அடிபட்டு, ஒருவருக்கு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்றார்; டாக்டர் இல்லை. அங்கிருந்த நர்ஸ், அவரை அமர வைத்து, வாயில் தெர்மா மீட்டரை வைத்து விட்டார்.
'அந்த நபர், குழப்பத்துடன் பார்க்க, சுற்றி பலரும், வாயில் தெர்மா மீட்டருடன் அமர்ந்திருந்தனர். அருகில் இருந்தவரிடம் விளக்கம் கேட்க, அவர், 'நீங்களாவது விபத்தில் அடிபட்டு வந்தீங்க... நான் தபால் கொடுக்க வந்தவன்... எனக்கும் தெர்மா மீட்டரை வச்சுட்டாங்க' என்றார்.
'இன்றைய உலகம், இத்தகைய சூழலில் தான் இருக்கிறது' என, தனக்கே உரிய பாணியில் கூற, கூட்டத்தில் பலத்த சிரிப்பலை எழுந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement