Advertisement

அறிவியல் ஆயிரம்

பனியில் கருகும் ஷாலிமார்


கோடைகால கடும் வெயிலில் தாவரங்கள் வாடுவது போல, டிசம்பர் பனியிலும் தாவரங்கள் வாடிவிடும். ஸ்ரீநகரில் ஜஹாங்கீர் அமைத்த முகல் தோட்டங்களில் ஷாலிமார் தோட்டம் சிறப்பு பெற்றது. டிசம்பர் பனிப்பொழிவை காண ஸ்ரீநகர் செல்பவர்களை கருகிய ஷாலிமார் தோட்டம் தான் வரவேற்கிறது. ஸ்ரீநகருக்கே உரிய ஆப்பிள் மரங்களும் பனியில் கருகி விடுகின்றன. குளிர்கால ஷாலிமார் தோட்டம் காலையில் தாமதமாகத் திறந்து மாலையில் விரைவில் மூடப்படுகின்றது. ஜம்மு காஷ்மீர் மாநில தோட்டக்கலைத் துறை முகல் தோட்டங்களை பராமரிக்கிறது.

தகவல் சுரங்கம்

பம்பையின் சங்கமம்


புனித பம்பை நதி கடலில் கலப்பதில்லை. வேம்பநாட்டு ஏரியில் தான் கலக்கின்றது.
இந்தியாவிலேயே மிக நீளமான ஏரியாக உள்ளது. ஏரியையும் கடலையும் சிறு குறுகிய நிலப்பரப்பு தான் பிரிக்கிறது. எனவே இந்த ஏரியை காயல் என்றும் சொல்வர். ஆலப்புழா, எர்ணாகுளம், கோட்டயம் மாவட்டங்கள் இந்த ஏரியின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்த ஏரி அரபிக்கடலின் மட்டத்திலேயே இருக்கிறது. பம்பை, மீனச்சல், மணிமாலா, அச்சன்கோவில், பெரியாறு, மூவாற்றுப்புழா என்ற ஆறு ஆறுகளின் சங்கமமாக இந்த வேம்பநாடு ஏரி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement