Advertisement

பிரம்மாண்டமாய் ஒரு கேமிரா ஸ்டோர்.

சென்னையில் ஒரு பிரம்மாண்ட கேமிரா ஸ்டோர்.


போட்டோ மற்றும் வீடியோ எடுப்பது என்பது இப்போது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

விவரம் தெரிந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் பெண்கள் என்று குடும்பத்தில் உள்ள அனைவருமே ஔிப்பதிவு செய்வதில் ஆர்வமாக இருக்கின்றனர்.

போட்டோ மற்றும் வீடியோ தொடர்பான கேமிரா பிளாஷ் ட்ரைபாட் உள்ளீட்ட கருவிகளை பார்க்கவும் அது தொடர்பான புதுமையான வரவுகளை பற்றி தெரிந்து கொள்ளவும் விரும்புபவர்கள் குடும்பத்துடன் வருவதற்கு ஏற்ப விசாலமான நகைக்கடை போல ஒரு கேமிரா ஸ்டோர் அமைக்கவேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை நனவாக்கியிருக்கிறார் ஏ.எஸ்.தாஸ்.
சென்னை எல்லீஸ் ரோட்டில் நல்லதம்பி சாலையில் 1800 சதுர அடியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான கேமிரா ஸ்டோரில் கேமிரா தொடர்பான பொருட்கள் எது வேண்டுமானாலும் கிடைக்கிறது.

இது பற்றி சி ஸ்டோர் நிறுவனர் தாஸ் கூறியதாவது..
இப்போது ட்ரெண்ட் என்னவென்றால் கேமிரா இருபத்தைந்து சதவீதம் என்றால் அது தொடர்பான கூடுதல் கருவிகளின் எழுபத்தைந்து சதவீதம் வைத்திருக்கவேண்டும்,அந்த எழுபத்தைந்து சதவீத உப பொருட்களை வாங்குதற்கேற்ற கடையாக சிஸ்டோர் இருக்கும்.

இங்கே அனைத்து முன்னனி நிறுவனங்களின் பிராண்டட் பொருட்கள் கிடைப்பதுடன் பழம் பெருமையான கேமிராக்கள் அனைத்தும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும்.உங்களுக்கு தேவையான கேமிரா சம்பந்தப்பட்ட பொருள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் வாங்கித்தரப்படும்.
விஸ்காம் படிக்கும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தந்து உட்கார்ந்து பேசி பொருட்களை வாங்குமளவிற்கு கடை விசாலமானதாகும்.


ட்ரைபாட் உலகில் சக்ரவர்த்தியாக விளங்கும் மேன்ப்ரட்டோ நிறுவனத்தின் அனைத்து பொருட்களும் இங்கே கிடைக்கும் என்பது கடையின் சிறப்பாகும் இங்குள்ள மேன்ப்ரட்டோ பிளாக்கை திறந்துவைப்தற்காகவே இத்தாலியில் இருந்து அதன் தலைமை அதிகாரி வந்திருந்தார்.
கேமிரா சாதனங்களை நல்ல விலையில் தரமான பொருட்களை குடும்பத்துடன் குதுாகலத்துடன் வந்து வாங்கிச் செல்லவேண்டும் என்பதற்காகவே இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று சொல்லும் தாஸிடம் பேசுவதற்காக எண்:9840176599.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    நல்ல வேலையில் இருக்கும் (ஐடி) தற்போதைய இளம் தலைமுறையினர் கிட்டத்தட்ட அனைவரும் ஒரு SLR கேமரா வாங்கி உள்ளார்கள் எனலாம். அவர்களுக்கு இந்த கடை குட்டி சொர்க்கமாக இருக்கும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement