Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

நம்பகமான இயந்திரம்


பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் பெங்களூரு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் ஐதராபாத் ஆகிய நிறுவனங்கள் இணைந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வடிவமைத்துள்ளன. இந்த இயந்திரத்தை வடிவமைத்ததில் எழுத்தாளர் சுஜாதா முன்னணியில் இருந்தார். இந்த இயந்திரத்தை உருவாக்கியதற்காக சுஜாதாவிற்கு 'வாஸ்விக்'
விருது வழங்கப்பட்டது இதில் பயன்படுத்தப்படும் மைக்ரோ சிப் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மைக்ரோ சிப்பை சிதைக்காமல் அதை திறந்து அதன் புரோக்ராமை மாற்றி எழுத முடியாது.

தகவல் சுரங்கம்

மன்னார்குடி மறுபக்கம்


மன்னார்குடியில் நடைபெற்ற சத்யாகிரகத்தை சிறப்பிக்கும் வகையில் காந்தியடிகள் 'தென்னாட்டு பர்தோலி' என அழைத்தார். பர்தோலி குஜராத்தில் உள்ள ஊர். பர்தோலி சத்தியாகிரகம் படேல் தலைமையில் நடைபெற்றது. எழுத்தாளர் தி.ஜானகிராமன் மன்னார்குடியை அடுத்து தேவங்குடியில் பிறந்தவர். ஊத்துக்காடு வெங்கட சுப்பையர், மன்னார்குடியை தான் பூர்வீகமாக கொண்டவர். ஆனால் வளர்ந்த ஊரின் பெயரால் அழைக்கப்பட்டார். அலைபாயுதே.. கண்ணா... என்ற பிரபல பாடலை ஊத்துக்காடு கண்ணனை பற்றி எழுதியுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement