Load Image
Advertisement

சின்னம் பறிபோக தினகரனே காரணம்: சிறையில் புலம்பிய சசி

சென்னை: முதல்வர் பழனிசாமி அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதற்கு தினகரனே காரணம் என பெங்களூரு சிறையில் சசிகலா புலம்பியதாக
கூறப்படுகிறது.

இது குறித்து, பெங்களூரு அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் கூறியதாவது: இரட்டை இலை தகவலை, கர்நாடகாவை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர்தான், பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து கூறினார். இதை கேள்வி பட்டதும், அப்செட்டான சசிகலா, இருந்த சின்னமும் பறிபோய்டுச்ச்சு; இனிமேல் அரசியல் செய்யறதே கஷ்டம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், தன்னையே வேட்பாளராக அறிவித்துக் கொண்ட தினகரன், தனது ஆலோசனையை கேட்டு இதை செய்யவில்லை என்பது, முதல்வருக்கு வருத்தம்.
இதை அறிந்த பிறகாவது, பக்க பலமாக இருப்பார் தினகரன் என எதிர்பார்த்தார் முதல்வர். ஆனால், இவை எதையுமே தினகரன் செய்யாததால், முதல்வர் பழனிச்சாமி, லாவகமாக செயல்பட்டு, தேர்தல் கமிஷன் மூலம் இரட்டை இலையை பெற்று விட்டார். ஆக, இதற்கெல்லாம், தினகரனே காரணம் என, சசிகலா புலம்புகிறார். இதற்கிடையில், தினகரனின் எந்த முயற்சியும் எடுபடாதது கண்டு, கட்சியினர் ஒரு பக்கம் பரிதாபப்பட்டாலும், இன்னொரு பக்கம் தேர்தல் கமிஷனின் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement