Load Image
Advertisement

ஆசிரியர் அடித்ததில் மாணவர் அட்மிட்

 ஆசிரியர் அடித்ததில் மாணவர்  அட்மிட்
ADVERTISEMENT
தஞ்சாவூர்: ஆசிரியர் கம்பால் அடித்ததில் காயமடைந்த பள்ளி மாணவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் புத்துாரைச் சேர்ந்த பழனியப்பன் - அமுதா தம்பதிக்கு, நான்கு மகன்கள், மூன்று மகள் உள்ளனர். கடைசி மகன் தமிழரசன், 8, புத்துார் யூனியன் துவக்கப் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம், வகுப்பு ஆசிரியர் சீனிவாசன், தான் சாப்பிட்ட பாத்திரங்களை கழுவி, பையில் வைக்குமாறு தமிழரசனிடம் கூறியுள்ளார். பாத்திரங்களை கழுவிய தமிழரசன், பையில் வைக்க மறந்து விட்டார். மாலை வகுப்புகள் முடிந்து, பையில் டிபன் கேரியர் இல்லாததால் ஆத்திரமான ஆசிரியர் சீனிவாசன், மாணவன் தமிழரசனை கூப்பிட்டு, கம்பால் அடித்துள்ளார். முதுகு, கை ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலியில் மாணவர் சிறுநீர் கழித்து விட்டார். 'வீட்டில் யாரிடமும் சொல்லக்கூடாது' என, ஆசிரியர் மிரட்டி அனுப்பி வைத்துள்ளார்.
அன்று இரவு தமிழரசனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. பெற்றோர் விசாரித்த போது, பள்ளியில் ஆசிரியர் அடித்ததை கூறியுள்ளார். நேற்று காலை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில், மாணவனை சேர்த்தனர். ஆசிரியரைக் கண்டித்து, 50க்கும் மேற்பட்ட மாணவர்களை,
பெற்றோர் பள்ளிக்கு அனுப்பவில்லை. தலைமை ஆசிரியை பேச்சு நடத்தி, மாணவர்களை அனுப்பி வைக்குமாறு கூறினார். மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக, ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழரசனின் பெற்றோர், திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்துள்ளனர்; போலீசார் விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து (2)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement