Load Image
Advertisement

தேனி நீர் நிலைகளில் பாதரசம் கலப்பா : ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

 தேனி நீர் நிலைகளில் பாதரசம் கலப்பா : ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
ADVERTISEMENT
தேனி: பெரியகுளம் நீர்நிலைகளில் பாதரச கழிவுகள் கலந்துள்ளதா என ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்'' என, கலங்கலாக வந்த நீரை பாட்டில்களில் எடுத்து வந்த தமிழக
அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள், தேனி கலெக்டர் வெங்கடாசலத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

செங்குட்டுவன், அஹமது முஸ்தபா உள்ளிட்ட நிர்வாகிகள் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர், தேனி மாவட்டம் பெரிய
குளத்தில் உள்ள சோத்துப்பாறை, மஞ்சளாறு, வைகை அணை, கும்பக்கரை, நந்தியாபுரம் குளம், பட்டத்தி குளம், புதுக்குளம், கல்லாறு, வராகநதி உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு வந்தடைகிறது.
இங்குள்ள தண்ணீரை ஆய்வு செய்த ஐதராபாத் ஐ.ஐ.டி., பேராசிரியர் ஆஷிப் க்யூரிசி அறிக்கையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் ஓடும் நீர்நிலைகளில் தொழிற்சாலை கழிவுகளால் 31.1ல் இருந்து 41.9 மைக்ரோ கிராம் பாதரசம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுதவிர, பெரியகுளம் அருகே உள்ள நீர்நிலைகளில் 94ல் இருந்து 195 மைக்ரோ கிராம் அளவில் பாதரச கழிவுகள் கலந்திருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 கிராமிற்கு மேல் பாதரசம் கலந்தால் மூளை
மற்றும் சிறுநீரகம்
பாதிக்கும்.
மீன்கள் பாதரச கழிவுகளை உண்கின்றன. அவற்றை விற்பனை செய்யும் மீன் வியாபாரிகள், வாங்கி உண்ணும் மக்கள் என அனைவரும் உடல்நிலை பாதிக்கப்படலாம்.
கடந்த வாரம் திண்டுக்கல், மதுரை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீரியல் ஆய்வாளர்கள் பெரியகுளம் நீர்நிலைகளில் ஆய்வு செய்தனர்.
எனவே நீர்நிலைகளில் பாதரச கழிவுகள் கலந்துள்ளதா என மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து முழுமையான தகவலை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், என்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement