Load Image
Advertisement

வங்கியில் ரூ. 48.45 லட்சம் கடன் பெற்று போலி நிறுவனம் நடத்தியவர் மீது வழக்கு மோசடி

விருதுநகர்: போலி முத்திரையுடன் நிறுவனம் நடத்தி வங்கியில் ரூ. 48.45லட்சம் மோசடி செய்ததாக, ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்த நக்கீரன் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் நக்கீரன். ரெகோபத் டிரேடர்ஸ் நிறுவனம் மூலம் 2005 முதல் ஸ்ரீவி., எஸ்.பி.ஐ., வங்கியில் வாடிக்கையாளர் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு கடன்களை பெற்றுத் தந்தார். கறவை மாடு, மாட்டுக்கொட்டம், பால் கறக்கும் இயந்திரம், நெல் வெட்டும் இயந்திரம் வாங்க என விவசாயிகளுக்கு கடன் பெற உதவினார். கடன் பெற்றவர்கள் கட்டாததால் இவர் மீது ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வங்கி மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார் ஏற்பாடு செய்தார்.
அப்போது நக்கீரன் போலி முத்திரையுடன் நிறுவனம் நடத்தியது தெரிந்தது. இதை தொடர்ந்து கடன் பெற உதவுவதுபோல் நடித்து போலிமுத்திரை, லெட்டர்பேடு, போலி கையொப்பமிட்டு வங்கிக்கு ரூ. 48.45 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாக, கிருஷ்ணகுமார் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement