Advertisement

'தெறி'க்க விடுவேன் : அசத்தம் அதுல்யா

கண்களில் தெறிக்கும் மின்னல்... ஐம்பொன்னில் செதுக்கிய தேகம்... இன்றைய இளசுகளின் இதய துடிப்பை 'காதல் கண்கட்டுதே' மூலம் கட்டிப்போட்டு, 'ஏமாலி'யில் தடம் பதித்து வரும் அதுல்யா தினமலர் சண்டே ஸ்பெஷல் வாசகர்களுக்காக மனம் திறந்த நிமிடங்கள் இதோ...

* 'அதுல்யா' என்ற பெயரில் கேரள வாடை வீசுகிறதே?
அட...நான் தமிழ் பொண்ணுங்க! சொந்த ஊர் கோவை. பிறந்தது வளர்ந்தது படித்தது அங்கு தாங்க. உண்மையான பெயர் திவ்யா. சினிமாவிற்காக அதுல்யான்னு மாத்திட்டாங்க. அவ்வளவு தான்.

* சினிமாத்துறைக்கு வந்தது?
சென்னையில் எம்.டெக்., படிக்க சென்றேன். நண்பர்கள் சேர்ந்து எடுத்த படம் 'காதல் கண் கட்டுதே'. அவர்கள் அன்பு தொல்லையால் படிக்க சென்ற இடத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டியது.

* பொழுதுபோக்கு?
பிடித்த பாடல்களை கேட்பது, முணுமுணுப்பது. இசைக்கு ஏற்ப நடனம் ஆடுவதும் பிடிக்கும்.

* பிடித்த இயக்குனர்?

ஷங்கர், மணிரத்னம் என நீண்ட லிஸ்ட். இளம் இயக்குனர்கள் திறமையாக செயல்படுகிறார்கள்.
* நடிக்க விரும்பும் கதாபாத்திரம்?
'மொழி' படத்தில் ஜோதிகா நடித்த கதாபாத்திரம் ரொம்ப பிடித்தது. அதுபோன்ற கதாபாத்திரங்கள் கிடைத்தால் தெறிக்க விடுவேன்.
* அடுத்த வாய்ப்பு?
'ஏமாலி' படத்தில் சமுத்திரக்கனியுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். இன்னும் இரு படங்கள் கையில் உள்ளன. எல்லாப்படங்களிலும் நடிக்க வேண்டும் என ஆசைப்படக்கூடாது; நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.
* ஏமாலி டீசர் மிகவும் பேசப்படுகிறதே?
படம் வெளியானதும் அதற்கான விடை தெரியும். நல்லாயிருக்குன்னு நிச்சயம் ரசிகர்கள் கூறுவர். பார்க்கத் தானே போறீங்க.

* கிளாமர்?
கிளாமர் பண்ணினால் சினிமாவிலிருந்து விரைவிலேயே காணாமல் போய் விடுவோம். மலையாள படங்களில் கதைக்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர். அதனால் தான் அங்கு அதிக படங்கள் வெற்றி பெறுகின்றன. அதை தான் நானும் பின்பற்றுகிறேன்.

* காதல்?
கல்லுாரியில் படிக்கும் போதும் சரி, இப்போது நடிக்கும் போதும், விருப்பங்கள் தெரிவித்தவர்கள் உண்டு. ஆனால், அதை பற்றி நினைக்க கூட நேரமில்லை.

* லட்சியம்?
சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்க வேண்டும். எதையும் வித்தியாசமாக செய்தால் வெற்றி நிச்சயம்.
இவரை வாழ்த்த : divitweety21gmail.com

Advertisement

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement