Advertisement

கமலுக்கு... ஒரு ஹிந்துவின் கடிதம்!

அரசியலில் அடி எடுத்து வைக்கையில், முதல் அடியிலேயே, தடுக்கி விழுந்து விட்டார், கமல். 'ஹிந்துத்துவதீவிரவாதமும் இருக்கிறது' என்று மட்டும் சொல்லி நிறுத்தியிருந்தார் என்றால், பெரும்பாலானோர்ஒப்புக் கொண்டிருப்பர்!ஏதோ, பா.ஜ., - ஹிந்து முன்னணிபோன்றவற்றை சொல்கிறார்போலும் என, பெரிதாக கண்டுகொள்ளாமல் விட்டிருப்பர்; இத்தனை எதிர்ப்பும் இருந்திருக்காது!ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் ஹிந்துக்களையும், அவர்கள் பழக்க வழக்கங்களையும் கேலி பேசியே வளர்ந்து விட்டவருக்கு, அங்கே நிறுத்த தெரியவில்லை.இன்னும் ஒருபடி மேலே சென்று, 'பண்டிகைகளை விமரிசையாக கொண்டாடுகின்றனர்; ஆர்ப்பாட்டம் அதிகமாகி விட்டது; வியாபாரமாகி விட்டது...' எனச் சொன்னது,
எல்லா ஹிந்துக்களையும் கொந்தளிக்க வைத்து விட்டது.'தங்கள் நம்பிக்கையையும்,பண்டிகைகளையும் விமர்சிக்க,இவருக்கு என்ன உரிமை...' என, கோபப்பட வைத்து விட்டது.
பண்டிகைகளை விமரிசையாககொண்டாடுவது குற்றமா...

கொண்டாட்டங்கள் நிறைந்தது தான் வாழ்க்கை. இவர் போன்ற சினிமாக்காரர்களுக்கு, தினம் தினம் கொண்டாட்டங்கள் கிடைப்பதால், எளிய மக்களை மறந்து விட்டார் போலும்!மேலும், பண்டிகைகளால் தான் வியாபாரம் பெருகுகிறது. உடனே, 'அதானி, அம்பானியின் பாக்கெட் நிரம்பி விடுகிறது' என, கொந்தளிக்க வேண்டாம்; இதனால், அவர்கள் மட்டும் பயனடைவதில்லை.
நாம், தினம் பார்க்கும் பூக்காரம்மாவிலிருந்து, தையல்காரர், ஜவுளி வியாபாரி என, எத்தனையோசிறிய, நடுத்தர வியாபாரிகளும்பயனடைகின்றனர்.உலகம் முழுவதும், கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போல, நமக்கு தீபாவளி. அவர்கள் யாரும், கிறிஸ்துமஸ் பண்டிகையை எதிர்ப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால், காத்திருந்து, இரு மாதங்களுக்கு முன்பிருந்தே தயாராகி, கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
அது போல ஹிந்துக்கள், சீக்கியர்,ஜைனர் மற்றும் பவுத்தர் என,இந்த மண்ணில் பிறந்த அத்தனை மதங்களும் கொண்டாடும் பண்டிகையை விமர்சிக்க, இவருக்கு என்ன உரிமை உள்ளது?இதில் வேடிக்கை என்னவென்றால், 'ஆடி, தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாட,குறிப்பிட்ட கடையில் ஜவுளிஎடுக்க வேண்டும்' என, விளம்பரப்படுத்தியவர், 'பண்டிகைகள்
பக்தியையும் தாண்டிய வர்த்தகமாகி விட்டது' என, அங்கலாய்ப்பதுதான் முரண்.இந்த விளம்பரங்கள், ஏதோ, கமல் குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்டதல்ல... மிக சமீபத்தில் வந்த விளம்பரங்கள். எனவே, கமலுக்குபண்டிகை பற்றி பேச, தார்மிக உரிமையில்லை.

கமல் பரிபாஷை படியே, அவரது எண்ணங்களை ஆழ்ந்து பார்த்தால், தெளிவாக தெரிவது இது தான்...தன்னை நாத்திகர் அல்லதுபகுத்தறிவாதி என, நம்பிக்கொண்டிருக்கும் அவருக்கு, ஆத்திகம், ஆன்மிகம், தெய்வ பக்தி என, பிரித்தறிய தெரியாத பெரும்பான்மை மக்கள், இன்னும் சமய வழியில் சென்று கொண்டிருப்பது,அவரை கவலை கொள்ளச்செய்கிறது.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சிகளால், நாத்திகம் தழைத்தோங்கி வருகிறது என, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதன் பிரதிபலிப்பு தான், இது. 'பழமைவாதம் பரப்பும் முயற்சி;தற்காலிக பேஷன்; ரொம்ப காலம் நீடிக்காது' என்பது போன்றபுலம்பல்கள்.கமல் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். நாத்திகத்தையும், ஹிந்து மதம் அனுமதிக்கிறது. அது, கடவுள் தன்மையை ஒருவர் முற்றிலும் ஆராய்ந்து, அதன்பின் அந்த முடிவுக்கு வந்தாரானால், அது பிரச்னையில்லை!
ஆத்திகனாவதை விட,நாத்திகனாவது தான் கடினம்.அதற்கு நிறைய மெனக்கெடவேண்டும். கடைக்கு போய்கத்தரிக்காய் வாங்குவது போல, எளிய விஷயமில்லை.கமல் போன்ற மெத்த படித்த மேதாவிகள், நீண்ட, நெடிய தேடலுக்கு பின், 'கடவுள் இல்லை' என உணர்ந்து, நாத்திகர்களானால் யாரும் பொருட்படுத்தப் போவதில்லை.ஒவ்வொரு நாத்திகரும், இந்த சோதனையை செய்து பார்த்து,கடவுள் இல்லை என, முடிவுசெய்து கொள்ளட்டும்; அதனால், குறையொன்றுமில்லை.ஆனால், இவர்களின் அனுபவங்கள் மட்டுமே சரி என்ற வறட்டு பிடிவாதத்துடன், மற்றவர் நம்பிக்கையில் வேல் பாய்ச்சும் போது, வேடிக்கை பார்ப்பதற்கில்லை.சுயம் தேடுதல் என்பதெல்லாம், பெரும்பாலானோருக்கு இயலாத காரியம். தங்களை விட, உயர்ந்த தெய்வ சக்தி இருக்கிறது என்ற அளவில் மட்டுமே, அவர்கள் ஆத்திகர்கள்.தங்கள் தேவைகளுக்கு பிள்ளையாரையோ, முருகனையோ, சிவனையோ ஏதோ ஒரு வடிவத்தில் வணங்க மட்டுமே தெரிந்தவர்கள்!அவர்களிடம் போய், 'நீ நம்பிக் கொண்டிருக்கும் கடவுள் இல்லை' எனச் சொன்னால், 'வேறு என்னகடவுள் இருக்கிறது...' என, திருப்பி கேட்பர். அவர்களின் ஞானம்அவ்வளவு தான்! அவர்களை மூடர்கள் என, எண்ணுவது தான் உண்மையிலேயே மூடத்தனம்.

இன்று நேற்றல்ல... நாத்திகவாதம், ஆதியிலிருந்தே இருந்து வந்துள்ளது. சார்வாக ரிஷி இவர்களுக்கெல்லாம் ஆதி குரு. சமீபகாலத்தில், ஈ.வெ.ரா.,
எத்தனையோ நுாற்றாண்டுகளாக எதிர்த்தும், கடவுள் மறுப்பு என்பது, இன்னும் வேர் பிடிக்கவில்லையானால், கோளாறு, கொள்கையில் தான் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதற்காக, அவரை யாரும் ஆத்திகராக மாறச் சொல்லவில்லை;அதற்குத் தேவையும் இல்லை.அவரவர் தமதமது அறிவு அறி வகைவகைஅவரவர் இறையவர் என அடி அடைவர்கள்அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்அவரவர் விதி வழி அடைய நின்றனரே.ஒவ்வொருவரும், அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் திருவடிகளை அடைவர். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி, அவரவர் இறைவனை அடைவர்.- இது, திருவாய்மொழி. சிறுவயதில், கமல் படித்திருப்பார்.மீண்டும் நினைவூட்டுவோம்!அவரவர், அவரவர் வழியை பார்த்து போனால், அனைவருக்கும் நலம். அவர் பட தலைப்புடனேயே முடிப்போம்... அன்பே சிவம்!இ - மெயில்:vvenkatesh_india@yahoo.com -- வி.வெங்கடேஷ் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (19)

 • Somiah M - chennai,இந்தியா

  கமல் அரசியலுக்கோ அல்லது சமுதாய பணிக்கோ வரவேண்டும் என்றால் அவர் சாதி மத சம்பந்தமான விஷயங்களை தள்ளி வைத்துவிட வேண்டும் .நம்பிக்கைதான் வாழ்க்கை .

 • வால்டர் - Chennai,இந்தியா

  "தன்னை நாத்திகர் அல்லதுபகுத்தறிவாதி என, நம்பிக்கொண்டிருக்கும் அவருக்கு" - செருப்படி பதிவு

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  நல்ல கருத்து கட்டுரை . ஹிந்துக்களுக்கு மட்டும் தனியாக உப்பு தயார் செய்து விற்க வேண்டும் ( சொரணை ??)

 • sangeedamo - Karaikal,இந்தியா

  கமல் அவர்களே இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் எம்மை. ஹிந்துக்கள் மூடர்கள் அல்ல. கொள்கையையும், தன்னையும் அறியாதவரும் அல்ல. சாது மிரண்டால் காடு கொள்ளாது. உம்மை போல் எத்தனையோ சாத்தான்கள் வேதத்தை கெடுத்தும் விழாது தழைப்பதோடு, உம் போன்றோரை வாழவும் வைப்பதுவே எம் ஹிந்து மதம்

 • tamilselvan - dindigul,இந்தியா

  கமல் தான் ஒரு ஞானி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார், கடவுள் இல்லை என்று சொல்லவில்லை , கடவுள் இருந்தால் நல்லாயிருக்கும் என்று தான் சொல்றேன் . நேரடியாக கடவுள் இல்லைனு சொல்ல தில்லு இருக்கா உனக்கு. நண்பர்களே ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள் தமிழ்நாட்டை சீரழிக்க வந்த 2 அணுகுண்டு ரஜினி - கமல் தான். இளைஞர்களை சிகரெட் குடிக்கவைத்து சீரழித்தான் ரஜினி., காம எண்ணத்தை சிறுவர்களும் தூண்டி கலாச்சாரத்தை சீரழித்தான் கமல். கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம் நண்பர்களே.

  • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

   திரு தமிழ் செல்வன் உங்களது கவனத்துக்கு . ரஜினி-ஆன்மீக கருத்து, அர்ஜுன் -நாட்டுப்பற்று, விஜயகாந்த -நன் நடத்தை, விசு -குடும்ப பிணைப்பு, இவைகளை எடுத்து சொன்னவர்கள். கமல்-நான்கு சுவருக்குள் இருக்கவேண்டிய காமத்தை திரையிட்டு காட்டியவர். கட்டுமரத்தின், வெங்காயத்தின் நேரடி வாரிசு. முள்ளும் மலரும் படத்தின் கடைசி வசனத்தில் வரும் ....

 • Ganesan Ramaiah - Tirunelveli,இந்தியா

  நல்ல ஒரு விளக்கம் , இதிலிருந்து இந்துக்கள் விழித்து கொண்டு இது போன்றவர்களுக்கு தக்க பாடம் புகுத்த வேண்டும் . ............................ சபாஷ் வெங்கடேஷ் .............. மேலும் இது போன்ற கருத்துக்கள் கொடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கணேசன் ராமையா புளியங்குடி.

 • sundaram - delhi,இந்தியா

  இந்த பருப்பாண்டி பன்னாடை யோட கருத்தை எல்லாம் ஒரு பொருட்டே படுத்த kuudathu . இவன் படத்தையெல்லாம் ஏன் பார்த்தோம் னு இப்ப தோணுது சுந்தர் டெல்லி

 • periyakulam madhu - karur,இந்தியா

  மேலே கருத்து சொன்னவர்க எல்லாம் இந்து தீவிர வியாதிகள் தான் இப்படி தான் பரவுது தீவிரவாதம்

  • narayanan - chennai,இந்தியா

   நீ சொன்ன கருத்து உனக்கே புரியுதான்னு ஒருமுறை படித்து பார். இதில் எங்கே தீவிரவாதம் வந்தது?.

 • Siva - Chennai,இந்தியா

  ஹிந்து விரோதி கமலுக்கு ஒரு சரியான ....

 • POPCORN - Chennai ,இந்தியா

  விருமாண்டி கோயிலில் கிடா வெட்டி கமலுக்கு விருந்து வைத்தால் கமல் மகிழ்ச்சி அடைவார்

 • BALAMURUGAN.E - CHENNAI,இந்தியா

  மிக சரியான , ஆழமான விமர்சனம். நான் ஒரு தீவிரமான கமல் ரசிகன். அதற்காக இப்பொழுது வருத்தப்படுகிறேன்.

 • Balasubramaniam Ragupathy - chennai,இந்தியா

  உண்மையில் கமல் அவர்களுக்கு கடவுள் மீது எந்த கருத்தோ அல்லது மதத்தின் மீது எந்த வெறுப்புமோ இல்லை. ஆனால் மதம், கடவுள்(இந்து?) பற்றி பேசினால் அரசியலுக்கு ஏற்றது என தவறாக எண்ணிவிட்டார். வெறுப்பு அரசியல் அவரை ஏமாற்றிவிடும். அவருக்கு வேறென்ன பேசமுடியும் என்பதும் இங்கு ஒரு வரையறையாகிவிட்டது. அவர் பொருளாதாரம் பற்றியோ, தமிழ் பெருமக்களின் உழைப்பு, பெருமைகள், இங்கு நிலவும் வறுமை, வேலையினமை, மாணவர்களின் முன்னேற்றம் இவைகளை பற்றியோ பேச தெரியாது. அப்படிப் பேசினாலும் அவருக்கே புரியாமல் கூட போகலாம். இன்னும் அத்தகைய வசனங்களை அவருக்கு எழுதித்தர யாரும் இல்லை. எனவே அவருக்கு அதுவரை அரசியலில் வேறு வேலை?

 • Fire - Thanjavur,இந்தியா

  தான் யார் என்பதுவே தெரியாத பேதை பிறருக்கு அறிவுரை கூறுவதும் அவர்களது முறையை கேலி செய்வதும் அறிவீனம். அதில் கமல் தலைவன். நல்ல கடிதம். ஆனால் அறிவிலிக்கு புரியாது.

 • Saravanan Thirunavukkarasu - chennai,இந்தியா

  மிகச்சரியான குட்டு. இந்த சினிமாக்காரர்கள் இந்து மதத்தின் வரலாற்றையே மாற்றி அமைக்க நினைக்கிறார்கள். இவருடைய தசாவதாரத்தில் ஒரு காட்சி. வைஷ்ணவரான இவரை கல்லில் கட்டி கடலில் இறக்குகிறார்கள் சைவர்கள். என்ன ஒரு பச்சை பொய். உண்மையில் சமண மதத்தில் இருந்து சிவனை உணர்ந்து சைவத்தை தழுவும் நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் இறக்குகிறார்கள் சமணர்கள். "கற்றுணை பூட்டினும் கடலில் பாய்ச்சினும் நற்றுணை ஆவது நமச்சிவாயவே என்று பாடுகிறார் நாவுக்கரசர். சிவன் அருளால் உயிர் பிழைக்கிறார். கமல் ஒரு குழப்பவாதி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து பரிதாபத்துக்கு உள்ளாகிறார். அரசியல் மேடையில் இவர் ஓய்வு காலத்தில் அசிங்கப்பட்டு வேதனைப்பட்டு ஓடி ஒளியப் போகிறார் அந்தோ பரிதாபம். இருந்த என்னை போன்ற சில ஓட்டுக்களையம் இழந்துவிட்டார் ஆண்டவர் என்கிற கூத்தாடி.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  அருமை அருமை வெங்கடேஷ் மிக நன்றாக எழுதியிருக்கிறீர்கள்

 • ச.சேதுராமன்மின்னல்கொடி - குவைத்(பர்வானியா),குவைத்

  நல்ல பதிவு செய்த தோழருக்கு வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement