Advertisement

பணமதிப்பிழப்பு நடவடிக்கை: ஆன்லைன் சர்வேயில் மக்கள் ஆதரவு

புதுடில்லி : கடந்த ஆண்டு நவம்பர் 8 ம் தேதி பிரதமர் மோடி எடுத்த, பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு, பொதுமக்களிடையே ஆதரவு அதிகம் உள்ளதாக எகனாமிக் டைம்ஸ் நடத்திய ஆன்லைன் சர்வேயில் தெரிய வந்துள்ளது.



பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், வேலை இழப்பு, ஜிடிபி சரிவு, சிறு தொழில் பாதிப்பு ஏற்படும் என நிபுணர்கள் பலரும் தெரிவித்தனர். ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனே கூட பிரதமரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார்.


பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், அன்று இதனை விமர்சித்த பலரும் இன்று ஆதரவு தெரிவித்துள்ளனர். மோடியின் இந்த நடவடிக்கைக்கு மக்களிடையே ஆதரவு பெருகி உள்ளது.


மக்கள் ஆதரவு :




பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் ஓராண்டு நிறைவை முன்னிட்டு எகனாமிக் டைம்ஸ் பத்திரிக்கை ஆன்லைன் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்தனர்.


இதில், ஒட்டுமொத்தமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. 38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர்.


பொருளாதாரத்தில் இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என 26 சதவீதம் பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும், 42 சதவீதம் பேர், சில பாதிப்புக்களை ஏற்படுத்தி இருந்தாலும் அதிக வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.


வேலைவாய்ப்பில் பாதிப்பா ? :




வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என 23 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது குறுகிய கால பாதிப்பே என 45 சதவீதம் பேரும், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என 32 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.


இன்னொரு கேள்விக்கு, 77 சதவீதம் பேர் பண மதிப்பிழப்பு, வேலைவாய்ப்பில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என தெரிவித்துள்ளனர்.


ரூ.2000 மும் வாபஸ் பெறப்பட்டால்:




ஒருவேளை மோடி ரூ.2000 நோட்டையும் வாபஸ் பெற்றால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, 56 சதவீதம் பேர் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களையே பாதிக்கும் எனவும், 31 சதவீதம் பேர் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், 13 சதவீதம் பேர் நேர்மையாக தொழில் செய்பவர்களை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர்.


மோடியின் நோக்கம் என்ன? :




பண மதிப்பிழப்பு கொண்டு வந்ததன் மூலம் மோடியின் நோக்கம் என்ன என கேட்கப்பட்டதற்கு 71 சதவீதம் பேர், கறுப்பு பண புழக்கத்தை குறைப்பதற்கு என்றும், 15 சதவீதம் பேர் ஏழைகள் ஓட்டுக்களை பெறுவதற்காக என்றும், மதவாத பிரச்னைகளை திசை திருப்புவதற்காக என 14 சதவீதம் பேரும் பதிலளித்துள்ளனர். மோடியின் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஆதரவு அதிக அளவில் இருந்து வருகிறது என இந்த கருத்துகணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து (234)

  • P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    கஷ்டமில்லாமல் ஜெயிக்க முடியாது.

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    அரசாங்கத்தின் அறுவை மருத்துவம், நம்மை காப்பாற்றவே. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொது ஜனங்களின் அன்றாட வாழ்க்கை, என்னையும் சேர்த்து தான், ஓரளவு பாதிக்கப்பட்டது என்பது உண்மை. அது தற்காலிகமானது, உடனே மீண்டு விட்டார்கள். நிரந்தரமாக பாதிக்கப்பட்டவர்கள் கோடி கோடியாக கொள்ளையடித்து சேர்த்து வைத்திருந்த அரசியல் வாதிகள் , இது வரை வரி ஏய்ப்பு செய்து கொண்டிருந்த பெரிய நிறுவனங்கள், வியாபாரிகள், முறையாக கொடுக்கல் வாங்கல் செய்யாத ரியல் எஸ்டேட் காரர்கள், லஞ்சத்தில் திளைத்திருந்த அரசு ஊழியர்கள் தான். அவர்கள் தான் குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். ஊடகங்கள்சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டதை ஊதி பெரிதாக்கி விட்டார்கள். நல்ல நடவடிக்கையை தப்பாக்கி விட்டார்கள்.

  • ரத்தினம் - Muscat,ஓமன்

    அப்படியே விட்டிருக்கப்போய் தான் கருப்பு பணம் பெரிய அளவில் கோடிகோடியாய் சேர்ந்து, லஞ்ச லாவண்யங்கள் அதிகமாகி , பணவீக்கம் அதிகமாகி, விலை வாசி அதிகமாகி, அரசின் திட்ட பலன்கள் மக்களுக்கு சென்றடையாமல் செய்து விட்டது. சீல் பிடித்த புண்ணை அறுவை சிகிச்சை செய்து தான் ஆற்ற வேண்டும். அப்படி பண மதிப்பிழப்பு நடவடிக்கை செய்த்ததினால் தானே வண்டி வண்டியாய் கருப்பு பணம் வைத்திருந்த அரசியல் வாதிகள் பிடி பட்டுக்கொண்டிருக்கிறார்கள்

  • B.s. Pillai - MUMBAI,இந்தியா

    It is magical words but actual status is different. The demonetisation has stopped fake currency and stopped stone pelting in J&K, maoist cash flow is stopped. But there is a doubt whether black money was brought out or not in its full proportion is very difficult to judge. It may take more time to find out as the work of comparing the huge amount deposits, transfers and the procedure to track and prove black money is involved and the legal question whether it can be confiscated . But one thing is sure. The general public had undergone a lot of hardships and it may be in their minds and reflect in the forthcoming Parliament elections.

  • Shanu - Mumbai,இந்தியா

    மோடி வாயினால் வடை சுடுவார். வாயில் வருவது எல்லாம் பொய். இவரை பார்த்தாலே அந்த நாள் முழுவதும் எரிச்சலுடன் இருக்க வேண்டி உள்ளது. என்னை போல் உள்ளவர்கள் அனைவரும் ஓட்டு போடவில்லை.

  • Saravana - trichy,இந்தியா

    எதற்கு எடுத்தாலும் "ஆய்வு" என்கிற பெற சொல்லி ஏமாத்த பாக்காதீங்க...ET என்கிற ஆங்கில பத்திரிகை ஆன்லைனில் பத்தாயிரம் பேர் எடுத்த சர்வேயாம்...அதை வைத்து கோமணம் கட்டி கொண்டு, இரவு உணவு இல்லாமல் தூங்கப்போகும் கோடி கணக்கான அப்பாவி மக்களின் கருத்தாக எப்படி ஏற்று கொள்ள முடியும்....இதெல்லாம் ஒரு செய்தியா போட்டு தினமலர் அதன் தரத்தை குறைத்து கொள்ள வேண்டாம். இதை ஒரு விஷயமாக ஒரு கட்சி சொல்ல பார்த்தல், பொறுப்புள்ள பத்திரிகையாக, "ஆன்லைனில் பத்தாயிரம் ஆங்கிலம் படித்த வாசகர்கள் இந்தியா-வின் நாடி துடிப்பை தீர்மானிப்பதா???" என்று போடுங்கள்....

  • Adhavan - chennai,இந்தியா

    ஒரு பணக்காரன் கூட வரிசையில் நின்று செல்லாத நோட்டுகளை மாற்றி யாரும் பார்த்ததே இல்லை. கருப்பு பணத்தில் சிறிது கமிஷன் பெற்று புதிய 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி தர பல ஏஜெண்டுக்கள் உள்ளனர்.

  • Godwin jose - chennai,இந்தியா

    மோடியின் குஜராத்திலேயே, இளைஞர்கள் மத்தியில் பாஜக செல்வாக்கு சரிகிறது.. தேர்தல் சர்வேயில் பரபர தகவல்

  • THANGARAJ - CHENNAI,இந்தியா

    முன்பு தேர்தல் மெஷின் (ஓட்டு போடும் இயந்திரம்) ஐ கோல்மால் செய்து ஜெயிப்பது நடக்கும், அனால் இன்று கருத்து கணிப்பினிலும் கோல்மால் செய்து தனக்கு சாதகமான சூழ்நிலை என்று விளம்பரம் செய்வது மக்களை ஏமாற்றுவது ஒரு கலை .....

  • s.f.edison - chennai,இந்தியா

    யாருக்கு வேலை போனது யாரிடம் சேர்வே என்பதே ரியாலிட்டி செக் . ஆறுமாத காலமாக எந்த கட்டுமான பணியும் நடக்கவில்லை. கட்டுமான தொழிலாளி ஆறுமாதம் வேலை இல்லாமல் இருந்தது இந்த சர்வேயில் வருமா

  • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

    தொண்ணுறு % மக்கள் ஆதரவு இல்லை என்பது தான் யதார்த்தம்

  • spr - chennai,இந்தியா

    125 கோடி மக்கள் உள்ள நாட்டில் வெறும் 10 ஆயிரம் பேர் இதில் வாக்களித்த ஒன்றை (அது கூட நூறு விழுக்காடு சாதகமாக வாக்களிக்கவில்லை) விளம்பரப்படுத்தும்விதமாக செய்தி வெளியிடுவது அறிவீனம் ஒரு கைநாட்டுப் பேர்வழி பூக்காரம்மா சொன்னது " கடன் வாங்காம கௌரவமான இருந்த நான் அன்றாடம் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தை இவனுங்களை நம்பி வங்கியில் போட்டுவிட்டு அதை திரும்பி எடுக்க நான் பட்ட பாடு நாய் பட்ட பாடு கடனே வாங்காம என் பொழைப்பை நடத்தி வந்த என்னை அந்த ஆறு மாசம் கடன் வாங்க வைத்த அந்த மஹாநுபாவன் உருப்படுவானா. கறுப்புப் பணம் வைத்திருப்பவனை அவன் டிரெஸ்ஸ பார்த்தே கண்டுபிடிக்கலாமே போலீஸ்காரனுக்குத் தெரியாத பிக்பாக்கெட்காரனா இதுக்கு எங்களை இப்படிக்கு கொடுமைப்படுத்தணுமா?" இதுதான் உண்மையான கருத்துக் கணிப்பு திரு மோடி சொன்ன எதுவுமே இந்த நடவடிக்கைகளால் நடந்ததாக எவருமே சொல்லவில்லை துக்ளக் ஆட்சி

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பெற்றவரின் பிணத்தை நல்லடக்கம் செய்ய, கையில் பணமிருந்தும் உதவாமல். ஆளுக்கு கிடைத்தைச் சேர்த்து, அனாதைப்பிணம் மாதிரி எடுத்துச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்ட அந்தக் கருப்பு நாளால் அவஸ்தைப்பவரைக் கேட்டுப்பாருங்கள் இன்னும் எத்தனை, எத்தனையோ துயரங்கள்

  • pazhaniappan - chennai,இந்தியா

    டைம்ஸ் ஆப் இந்தியா IT ரைடிலிருந்து தப்பித்து விட்டது என்பதை தவிர வேறொன்றும் சொல்வதற்கில்லை

  • Nithyanandam Agamudayar Mudaliyar - chennai,இந்தியா

    எதுக்கு 77 சதவீதம் பொய் சொல்லிக்கிட்டு ....100 % சொல்லுங்க ..உங்களை யாரு கேட்க போற ............

  • A Shanmugam A Shanmugam - Gandhi Nagar,இந்தியா

    பணமதிபிழைப்பால , ஒரு பணக்காரனாவது இறந்திருக்கிறன? ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிக்கும் முன்னே அவர்கள் தங்கள் பணத்தை பாதுகாத்து விட்டனர். அயோ பாபம் மணி கணக்கில் ஏழை எளிய மக்கள் யூ வில் நிக்க முடியாத 72 பேர் பேப்பர் அறிக்கை படி இறந்தார்கள், அவர்களின் உயிரை உங்களால் மீட்டு தரமுடியும்மா அல்லது அவர்கள் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தீர்களா? இல்லை. இன்னும் எவ்வளவு பேரு இறந்தார்களோ எல்லாம் ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். உங்கள் குடும்பத்திலும், சொந்த பந்தங்களிலும், நண்பர்கள் வட்டாரங்களிலும் யாரவது இறந்தார்களா என்ற புள்ளி விவரம் நாடு மக்களுக்கு சொல்லமுடியுமா? முடியாது.

  • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மோடி ஜி வாழ்க.....................

  • Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    எகனாமிக் டைம்ஸ் என்ற பத்திரிக்கை. "38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர்." இது பத்திரிக்கையில் உள்ள செய்தி. ஆதரவு 38 சதமானம். இரண்டுக்கும் ஆதரவு - 30 சதமானம்.(15+15) தோல்வி - - 32 சதமானம். இப்ப சொல்லுங்க ஆதரவு எத்தனை சதமானம்?

  • Ramesh Lal - coimbatore,இந்தியா

    ரமேஷ்,கோவை. வேலை வாய்ப்பு பாதிக்கவில்லை என 77 % பேர் தெரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது பார்க்கும் போது இது ஒரு கேப்மாரி சர்வே என தெரிகிறது.

  • Sivan - Bangalore,இந்தியா

    தகவல் திரிப்பு கருத்து திணிப்பு இவை இரண்டுமே ஊடக தர்மமாக மாறிவிட்டது ... How to lie with statistics என்ற புத்தகத்தை படியுங்கள் இது போன்ற ஏமாற்று சர்வேக்கள் எப்படி எடுக்கின்றனர் என்பது தெரியும்

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    நாமளே ஆன்லைன் கணக்கு ஆரம்பித்து பல நூறு கோடி ஆதரவு என்றும், சோமாலியா நாட்டு மக்கள் அனைவரும் ஆதரவு என்றும் பொய் கணக்கு காட்டுவது நமக்கு ஒன்றும் சிரமம் இல்லை ஜி.

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    ஐயா, பல வித தொழில் செய்பவர்கள், தங்கள் லாபம் அல்லது வருமானத்தை குறைத்து காட்டி, அதற்குண்டான வரியை செலுத்தி, அரசின் கண்ணில் காட்டாத பணத்தை (கறுப்பு), உள்நாட்டில் சில சதவீதமும், வெளிநாட்டில் பல சதவீதமும், பற்பல ரூபங்களில் பதுக்கி வைக்கிறார்கள் எனலாம். இதில் கரன்சி நோட்டுக்களின் ரோல் என்பது சொற்பமே எனலாம். இந்த கறுப்பு பணத்தின் பெரும்பகுதி, கணக்கு இயல் சார்ந்தது எனலாம். ஆக கறுப்பு பண ஒழிப்பில், அந்த பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது தற்காலிகமான, ஓர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்றதுதான். கறுப்பு பணத்தை நிரந்தரமாக ஒழிக்க வேண்டுமானால், ஒரு பெரிய பொருளாதார போரையே அரசாங்கம் நடத்த வேண்டி இருக்கும்தான். ஆனால் மறைமுக உலகில் நடைபெறும், கறுப்பு பண பரிமாற்றங்களை, அவ்வளவு எளிதாக கண்டறிந்து, நம் இந்திய அரசு வெற்றி கொள்ள முடியுமா?. இது ஓர் பில்லியன் டாலர் கேள்வி எனலாம். இது சுமார் 70-வருடமாக தீர்க்கப்படாத பிரச்சனை அல்லவா?. சரிதானா வாசகர்களே?.

  • S.Ganesan - Hosur,இந்தியா

    120 கோடி மக்கள் இருக்கும் நாட்டில் வெறும் பத்தாயிரம் பேர் சொன்னதை வைத்து ஆன் லைனில் ஆதரவு என்று சொல்வது மடத்தனம்.

  • Bala - madurai,இந்தியா

    தேவா ரொம்ப நல்லவனா மாறிட்டான், யாரு சொன்னா ? தேவாவே சொன்னான் இது புரிஞ்சவன் பிஸ்தா

  • murugu - paris,பிரான்ஸ்

    50 நாளில் மாற்றம் ஏற்படாவிட்டால் என்னை உயிரோடு கொளுத்துங்கள் என்றாரே மோடி, நினைவிருக்கிறதா?

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    நேரில் கேட்டால் காறித்துப்புகிறார்களாம். அதான் ஆன்லைனில் சர்வே.

  • Sahayam - cHENNAI,இந்தியா

    குஜராத் தேர்தலில் மக்கள் பதில் சொல்லட்டும் பொறுத்து இருந்து பார்ப்போம்

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

    ஆன்லைன் சர்வேயில் மக்கள் ஆதரவு.

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    " ..... தமிழ்நாட்டுக்குள் முதலில் என்ன ஜாதி என்று பார்க்கிறார்கள். ஆனால் மீடியாக்கள் முன்பு மட்டும் தமிழன் என்று கூவுவார்கள். தமிழகம் தவிர உலகம் .....". - இதற்கு பதில் ரொம்ப எளிது எனலாம். இங்கே கமெண்ட்கள் போடும் வாசகர்களில், எத்தனை பேர்கள் நடுநிலையாளர் தன்மையுடன், கருத்துகள் போடுகிறார்கள்?. என்ன தான் நடுநிலையாளர்கள் போல, கமெண்ட்கள் சிலர் போட்டாலும், அவர்களின் சுய சார்பு (கட்சியின்) மனோநிலையை, அக்கருத்துக்களின் மையத்தில் ஓடுவதை அறியலாம் தான். ஆனால் இப்படிப்பட்டவர்கள் கூறும் கருத்துக்கள்தான், அகில இந்திய பொதுமக்களின் எண்ணம், அதன் பிரதி பலிப்பு என்று, எப்படி ஏற்றுக்கொள்வதாம்?. சரியா வாசகரே?.

  • Ramakrishnan Natesan - BANGALORE ,இந்தியா

    ஹா ஹா 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஒரு 10000 பேர் வைத்து கருத்து திணிப்பு ஏற்படுத்தி அதுவும் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யும் அன்று இந்த கருத்து திணிப்பை திணித்து அற்ப சந்தோஷம் அடைந்து விட்டார்கள் வந்தே மாதரம், இது இறந்த 200 குடும்பங்கள் சார்பாக போனவர்கள் வருவார்களா அவர்கள் குடும்பம் என்ன கதி ஒரு நாடு நல்லா இருக்க 200 குடும்பங்கள் பலி கொடுத்தால் தவறில்லை என்கிறீரா

  • P. Kannan - Bodinayakkanur,இந்தியா

    எனக்கு 33000 ரூபாய் மாதந்தோறும் பென்ஷனாக கிடைக்கிறது, அதை என் கணக்கில் ஏற்றும் போதே எஸ் பி ஐ வங்கியில் வருமான வரியை பிடித்துக்கொண்டுதான் ஏற்றுகிறார்கள். நான் எப்பொழுதும் தேவையான அளவுதான் பணத்தை கணக்கில் இருந்து எடுப்பேன் . திடீர் என்று மோடி ரூபாய் நோட்டு செல்லாது என்று சொன்ன போது என்னிடம் இருந்தது வெறும் 1500 ரூபாய் மட்டுமே, அதைமாற்ற அந்த அலைமோதும் கூட்டத்தில் கால்கடுக்க நின்று இருந்தேன், கால்வலி தாங்கமுடியாமல் எனக்கு அடுத்து நிற்பவரிடம் கூறிவிட்டு சிறிது நேரம் அமர்ந்தேன், 72 வயது என்னைப்போல் நிறையப்பேர் இருந்தோம். ஒருவழியாக மாற்றிக்கொண்டு வீடுவந்தால், டிவி யில் சேகர் ரெட்டி இடம் 200 கோடி ரூபாய் புதிய 2000 ரூபாய் கட்டுகள் கிட்டியதாக செய்தி வருகிறது, யாருக்காக இங்கு அரசியல் நடக்கிறது, வங்கியில் லோன் வாங்கவேண்டுமானால் கொலாஸ்டல் செக்குருட்டி வேணும் ஒருவர் ஜாமீனினும் போடணும், அப்பொறம் ஆயிரத்து எட்டு டாக்குமெண்டு கொடுக்கணும், தவணையை சரியாக செலுத்தவில்லை என்றால் காலையில் விடிந்தவுடன் வாங்கி மேனேஜர் ,கேஷியர் மற்றும் இருவர் கடன் கேட்டு வீட்டிக்கு வந்துவிடுவார்.ஆயிரம் கோடி கடனைவாங்கி ஆட்டைய போட்டுட்டு வெளிநாடு சென்றவனுக்கு இன்னும் ராஜ மரியாதை. அரசியல் வாதிகள் பதவிக்கு வருவதற்கு முன்பு பேசுவதற்கும் ,வந்தபின் பேசுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. இதில் அல்லக்கைகள் அவர் பிரதமர் மரியாதையாக பேசவேண்டும், அவரை விமரிச்சிக்கக்கூடாது, அவர் ஒரு மக்கள் தொண்டர்தான், என்பதை எல்லோரும் வசதியாக மறந்து விட்டார்கள். கருப்பு பணம் வச்சிருந்தவன் பணம் தான் முதலில் நல்லபணமாகி அவன் வீட்டிற்கு போனது. ஏழை ,எளியவர்கள் பணம் அவர்கள் கையிலேயே மாலை வரை காத்தாடிக்கொண்டு இருந்தது, ஐயா ,ஐயா என்று வாய்மட்டும் கெஞ்சிக்கொண்டே இருந்தது.எங்க ஊரில் உள்ள கந்து வட்டிக்காரன் பணம் எல்லாம் முதலில் மாற்றி நல்ல பணமாக மழையே உலாவந்தது, அவங்ககிட்ட இருக்கிற பணத்தை கணக்கெடுத்தா, அரசாங்க பணத்தை விட அதிகமாக இருக்கும் எந்த கணக்கும் இல்லாமல். அது கருப்பு பணம் இல்லையா???????

  • Gopal.V. - bangalore,இந்தியா

    கிராமத்துல போய் விசாரிச்சாங்களான்னு கேளுங்க.. எதோ பத்தாயிரம் பேர் நல்லதுன்னு சொன்னா நாங்க நம்பிடுவோமா. பட்டவனுக்குத்தான் தெரியும் பாட்டும் தாளமும்...

  • Dheventhiran - theni,இந்தியா

    பாமர மக்கள்தான் இதனால் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், கோவை, திருப்பூர் போன்ற பல தொழில் நகரங்களில் தொழில்கள் பல லட்சம் கோடிகளுக்கு இழப்பை சந்தித்தன என்பதும் உண்மை.

  • Amanullah - Riyadh,சவுதி அரேபியா

    அதென்ன 'வெறும் 32 % மக்கள் மட்டுமே' இந்த சர்வேயை பாமரர்களிடம் நடத்துங்கள்

  • bal - chennai,இந்தியா

    எப்படா சர்வே வரும் பிஜேபிக்கு ஆதரவு போடா வேண்டும் என்று காது கொண்டு இருப்பவர்கள் இது மாதிரி வோட் போட்டிருக்கிறார்கள். இது பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு பொருந்தாது. இந்த பண மதிப்பிழப்பு மூலம் எதனை பெரிய புருச்சாளிகளை பிடித்துள்ளனர். ஒன்றும் நடக்கவில்லை. வெறும் நாடகம்.

  • Siva Subramaniam - Coimbatore,இந்தியா

    பிளாஸ்டிக் நோட்டோக்களை வெளியிட்டால் மீதியுள்ள கருப்பு பணமும் வெளியே வரும். பலபேர் இன்னமும்,பழைய நோட்டுக்களை பதுக்கியிருப்பார்கள் போல் இருக்கிறது. அதிக நாள் பதுக்கி வைக்க முடியாது,அடுத்த அடியில் அதுவும் வந்துவிடும். பொறுத்து இருந்து பார்க்கவேண்டும் எப்படியானாலும் 2019 க்கு முன் இனியும் பல புதிய கட்டளைகள் வரலாம்

  • Prakash - Madurai,இந்தியா

    இங்கு கருத்து கூறும் டோல் டப்பி மா, நீ தமிழன், தமிழன் என்கிறாயே, லஞ்சம் வாங்காத தமிழ் அரசு அதிகாரி யாராவது இருக்கிறார்களா சொல்லு. உனது தமிழர்கள் எல்லாரும் வரி கட்டி உள்ளார்களா சொல்லு. நீ தலையில் வைத்து கொண்டாடும் தமிழ் நடிகர்கள், முழு வரி கட்டி உ்ளார்களா. தமிழன் என்றால் கொம்பா முளைத்துள்ளது.

  • Praveen - coimbatore,இந்தியா

    ஹலோ Mr.jeysen, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல பேங்க் மேனேஜர்கள் பில்லினர் ஆகி உள்ளதாக எழுதி இருக்கிறாய். பில்லியன் என்றால் 100 கோடி என்று தெரியுமா உனக்கு. ஒரு பேங்க் மேலாளர் 100 கோடி சம்பாதிக்க முடியுமா. அப்படி இருந்தாலும் அதில் தமிழன் யாரும் இல்லையா. ஒரு திட்டத்தை கொண்டு வரும்போது, ஒரு பேங்க் மேலாளர் ஏமாற்றினால், அரசு என்ன செய்யும். பிராடுகள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள். தமிழன், பிராடுத்தனம் செய்ய மாட்டானா. கடவுள் மீது சத்தியம் செய்து சொல்லு, நீ எவ்வளவு வரி கட்டி இருக்கிறாய். அதை வெளிப்படையாக வெளியிட ஒரு வெப்சைட் ஆரம்பிக்கலாமா. தினமலர் நிர்வாகமே, வாசகர்களுக்கு ஒரு தனி வெப்சைட் ஆரம்பியுங்கள். இதில் வாசகர்கள் தங்கள் வருமானம் பற்றியும் வரி செலுத்திய விபரங்களையும் வெளியிடட்டும்.

  • Reena Dove - chennai,இந்தியா

    Demonitisation நாம நெனைக்கற மாதிரி கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக அல்ல, அதற்க்கு முக்கியமான 2 காரணம், 1 . மினி இந்திய எலெக்க்ஷன் என்று சொல்லப்படும் UP எலெக்க்ஷன், மாயாவதி, முளையம் சிங்க் போன்ற பணமுதலைகள் மண்ணை காவுவதற்க்காக. 2 . பல பண முதலைகள் பேங்க் லோன் பெற்றுக்கொண்டு டிமிக்கி கொடுத்துவிட்டார்கள், நாட்டில் வங்கிகளில் இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகை மிக கீழே சென்று விட்டது, அதை மேலே ஏற்ற வேண்டிய கட்டாயம். ரகுராம் ராஜன் அதற்க்காக வார கடனை வசூலிக்க மிக கடுமையான அழுத்தம் கொடுத்தார், அதனால் ஆளும் கட்சிக்கு உறுதுணையாக இருந்த பல தொழில் அதிபர்கள் வெளி நாட்டிற்கு பார்த்தார்கள் ( மினிஸ்டர்கள் உதவியுடன் தான் ), ரகுராம் ராஜன் பதவிக்காலமும் நீடிக்கப்படவில்லை. புது கவர்னர் வந்தார், அவரும் அமித்ஷாவும் போட்ட மாஸ்டர் பிளான் தான் இந்த Demonitisation , ஆகா மொத்தம் அமித்ஷாவும் ஜெய்துட்டார், RBIயூம் ஜெயித்தது, பாவம் மக்கள் தான்....கருப்பு பணம், கள்ள நோட்டு, தீவிரவாதம் ஒழிப்பு எல்லாம் சும்மா லோலோலாஇ......

  • JOY - Chennai,இந்தியா

    ஹா ஹா ஹா டினேமலர்

  • Appavi Tamilan - Chennai,இந்தியா

    இந்த சர்வே ஆளுங்கட்சி நடத்திய டுபாக்கூர் சர்வே என்பது அனைவருக்கும் புரியும். பண மதிப்பிழப்பு என்பது படுதோல்வி என்பதும், உண்மையான கருப்பு பணம் பதுக்கிய திமிங்கலங்கள் எப்போதும்போல உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்கள் என்பதும், மோடியை நம்பி வாக்களித்த பாமர மக்கள்தான் இதனால் பல இன்னல்களுக்கு ஆளானார்கள் என்பதும், கோவை, திருப்பூர் போன்ற பல தொழில் நகரங்களில் தொழில்கள் பல லட்சம் கோடிகளுக்கு இழப்பை சந்தித்தன என்பதும் உண்மை.

  • suresh - chennai,இந்தியா

    கீழ்த்தட்டு மக்கள் இந்த ஒன்லைன் வோட்டிங்கில் நுழைந்து இருந்தால், சும்மா தட்டு தட்டு என பாஜகவை தட்டி பிழிந்து இருப்பார்கள். ஆதரவாக விழுந்த 42 சதவீத ஓட்டில் பெரும்பாலும் வங்கி ஊழியர்கள் மற்றும் பாஜகவினர்களின் வாக்குகள் தான் இருக்கும்.

  • raja - chennai,இந்தியா

    இங்கேயும் பிஜேபி பொய் சொல்லுகிறது அப்படி என்றால் "டாட்டா" வை வெளிப்படையா தரமுடியுமா ....இதுபோல ஒரு பொய் ,, அடுத்தவர்களை குறை சொல்வது .. செயும்போது நாங்கள் செய்தூம் என்றும், பிரச்னை வந்தால் அவர்களால் வந்தது என்றும், வெளிப்படை என்ற பெயரில் மற்றவர்களை பயமுறுத்துவது என்ன ஒரு மோசமான அரசு இது ... பழனி பன்னீர் எல்லாம் ஜால்ரா தான் தமிழகம் என்ன ஆகும்

  • Orion - Mount Shasta, California ,யூ.எஸ்.ஏ

    பாரத ஜன நாயகம் - கால காலமாக - பணக்காரர்களின் சரணாலயம் - மன்னர் ஆட்சிகள் முதல் கொண்டு - தற்போது - பணக்காரர்கள் வெளி நாடு பண முதலீடு பல்வேறு வகைகளில் - போதா குறைக்கு நடிக்கும் அரிசி வியாபாரிகள் மற்றும் ப்ரோக்கர்கள் - பாவம் இந்திய மக்கள் - என்ன கூவியும் நடக்க போவது ஒன்றுமில்லை - சாப்பிட்டோமா - நமது அன்றாட வாழ்க்கையை கவனித்தோமா - தூங்கினோமா - அருகில் நில நடுக்க கோடுகள் வந்தால் கூட எந்த சலனமும் இல்லாமல் வாழ கற்று கொள்ளுங்கள் - அது தான் சரியான வாழும் கலை - பாரத தாய்க்கு - ஜே ஜே -

  • Prakash - Madurai,இந்தியா

    இங்கு கருத்து கூறும் டோல் டப்பி மா, நீ தமிழன், தமிழன் என்கிறாயே, லஞ்சம் வாங்காத தமிழ் அரசு அதிகாரி யாராவது இருக்கிறார்களா சொல்லு. உனது தமிழர்கள் எல்லாரும் வரி கட்டி உள்ளார்களா சொல்லு. நீ தலையில் வைத்து கொண்டாடும் தமிழ் நடிகர்கள், முழு வரி கட்டி உ்ளார்களா. தமிழன் என்றால் கொம்பா முளைத்துள்ளது. தமிழன் தவறு செய்தால் ஏற்றுக்கொள்ளலாமா. தினமலர் ஆசிரியரே, விபரம் தெரியாமல் கருத்து எழுதும் டோல் டப்பி மா போன்றவர்களின் கருத்தை வெளியிட்டு தினமலரின் தரத்தை தாழ்த்தாதீர்கள்.

  • makkal neethi - TVL,இந்தியா

    2019 தேர்தலுக்கு இப்பொழுதே புரோக்கர்கள் ஒப்பந்தம் முடிந்து மக்கள் பணம் வாரி இறைக்கப்படுகிறது.

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    பாஜக ஆதரவு வாசகர்களின் நிலைமை பரிதாபம்... அவர்களில் பலரும் வேலை இழப்பும் , பணப்புழக்கம் குறைந்ததால், கஷ்டம் அனுபவித்தாலும், சும்மா மதவெறி மட்டும் மனதில் உள்ள காரணத்தால், பாஜகவை பிடித்து இன்னமும் தொங்கி கொண்டுள்ளார்கள்.. பக்தாஸ்களே , இன்னமும் எத்தனை காலத்துக்கு தான் வலிக்காதது போலவே நடிப்பீர்கள்? ..மதவெறி என்ற ஆயுதத்தை , போலி தேசபக்தி என்ற போர்வையால் மூடி வலம் வருவீர்கள் ? , . மோடி நல்லவரா கெட்டவரா என்பது வாதமே அல்ல?.. இந்த அரசால் மக்களுக்கு என்ன நன்மை ?.. சீனா தான் இந்தியாவின் நலிவடைவால் ஆதாயம் பெறுகிறது ... இந்த உண்மையை பக்தாஸ் மறைக்கிறார்கள்.. மோடியால் இந்தியா போன்ற பன்முக நாட்டை நிர்வகிக்க முடியாது... கக்கூஸ் கழுவவே தண்ணி இல்லையாம் ... டிஜிட்டல் இந்தியாவாம்.... இது ஒன்றே போதும் , மோடியின் தவறான பாலிசியை பறைசாற்ற... மோடி , உயர் வர்க்கத்தினருக்கான அரசினை நடத்துகிறார்... அதனால் தான் ஆன்லைன் ஆதரவு பிச்சிக்குது... வயக்காட்டுக்கு வர சொல்லுங்க ... உங்க ஆதரவு லம்பாடி லுங்கி போல கிழிஞ்சிடும் ...

  • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

    பொய்களாலேயே ஆட்சி நடத்துகிறார்கள். கருப்பு பணம் வைத்திருப்பவர்களுக்கு கஷ்டமாம். மிகச்சிறந்த ஜோக். 99% மதிப்பிழக்கச்செய்த பணம் திரும்பி வந்துவிட்டது. இன்னும் எண்ணவேண்டியது பாக்கி வேறு இருக்கிறது. அதையும் எண்ணினால் 105% வந்திருப்பது தெரியும். இது வெற்றி எனில் எந்த பொருள் / எந்த கட்டணம் / எந்த வரி குறைந்து விட்டது

  • Adirai Azagan - Doha,கத்தார்

    மோடியின் அண்ட் கோ வின் அண்ட புளுகுவில் இதுவும் ஒன்னு .இதெல்லாம் முன் கூட்டி ஏற்பாடு செய்த paid சர்வே . இந்திய மக்கள் அனைவரையும் ஜாதி, மத ,இளையவர் ,முதியவர்,குழந்தைகள் முதல் கொண்டு (கார்பொரேட் பெருச்சாளிகள் தவிர ) நடு தெருவில் கொண்டு நிறுத்தி அதிலும் பல பேர்களின் மரணத்துக்கு காரணமான ஒரே இந்திய பிரதமர் என்ற பெருமை வாய் ஜால வித்தை காரர் மோடியையே சாரும் .முட்டாள் தனமாக அவசர அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு. அதன் பின் விளைவு தெரிய ஆரம்பித்தவுடனே மக்களின் கேள்விக்கணை களிலிருந்து தப்பிப்பதற்காக 50 தினங்களில் எல்லாம் சரியாகி விடும் ,இல்லை என்றால் நான் தூக்கில் தொங்க தயார் என்று சொன்ன விவேகமில்லாத பிரதமர் .500 ,1000 நோட்டுகளை ஒழித்து விட்டு 2000 நோட்டுக்களை பல கோடிகள் செலவிட்டு அவசர, அவசரமாக அச்சடித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நோட்டில் பல சிறப்பம்சங்கள் உள்ளன ,குறிப்பாக யாரும் அதை பதுக்கி வைக்க முடியாத அளவுக்கு எலெக்ட்ரோனிக் சிப் உள்ளது என்று வதந்தியை பரப்பி மக்களை முட்டாளாக்க பார்த்தார்கள் .அதையும் நம்பி தமிழகத்தில் s .v சேகர் போன்ற முழு முட்டாள்கள் கொஞ்சம் கூட சுய புத்தி இல்லாமல் மக்களை ஏமாற்ற பார்த்தார்கள் .மோடியின் இந்த முடிவால் மக்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் கொஞ்ச நஞ்சமல்ல .தெய்வம் தான் இந்த நாட்டை இது போன்றவர்களிடமிருந்து காப்பற்றவேண்டும்.

  • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

    பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்ட மிகப்பெரிய நன்மை என்னவென்றால், வரி ஏய்ப்பு செய்யும் வசதிக்காக ஐம்பதாயிரத்திற்குமேலான வாங்கிக்கணக்குகளை உருவாக்கிய சுமார் 28 ,000 ஷெல்/நிழல் நிறுவனங்களையும் அவற்றின் வங்கிக்கணக்குகளையும் முடக்கியதுதான்.

  • Vaishnavi.Ne - Chennai,இந்தியா

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் அத்தனை மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான துயரங்கள். அஸ்ஸாம் மாநிலத்தில் தேயிலைத் தொழிலாளர்களுக்கு ஊதியம் தர முடியாத நிலை ஏற்பட்டது. மியான்மர், பூட்டான் எல்லைகளில் இந்திய குடிமக்களே அந்த நாடுகளின் கரன்சியை பயன்படுத்துகிற நிலைமை ஏற்பட்டது. மணிப்பூரிலோ உச்சகட்ட துயரம் ஏற்பட்டது. புதிய ரூ500, ரூ2,000 நோட்டுகள் அம்மாநிலத்துக்கு சென்றடையவில்லை. இதனால் பத்திரிகைகளுக்கு விளம்பரதாரர்கள் பணம் தர முடியாத நிலை ஏற்பட்டது. மணிப்பூரில் பெட்ரோல், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை மிக மோசமாக உயர்ந்தன. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ300க்கு விற்பனையானது. அதனால் பத்திரிகையாளர்கள் பணி செய்ய முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டனர். ஒருகட்டத்தில் நிலைமையை சமாளிக்க முடியாத பத்திரிகை நிறுவனங்கள், சில நாட்கள் பத்திரிகைகள் வெளியிடுவதை நிறுத்துவதாகவும் அறிவித்தனர். இயல்பு நிலைமை திரும்பும் வரையில் பத்திரிகைகள் வெளிவரவில்லை என்பது ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பின் உச்ச துயரங்களில் ஒன்று.மேலும் மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், சூரத் போன்ற மிகமுக்கிய வியாபாரதலங்களில் தொழில்கள் முடங்கின. பலர் வேலை வாய்ப்பை இழந்தார்கள். சுனாமி தாக்கியதைப்போல இந்திய பொருளாதத்தின் மீது தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்ட சாதனைகளை விட வேதனைகளே அதிகம்

  • B.Indira - thane,இந்தியா

    குஜராத் தேர்தலில்VVPAT உபயோகிக்க போகிறார்கள் .நாம்யாருக்கு ஒட்டு போடுகிறோம் என்று உடனே தெரிந்து கொள்ளலாம் .இனி எல்லா தேர்தல்களிலும் உபயோகிப்பார்கள் .அப்படியும்EVM￰கோளாறுஎன்பவர்களைடோல் டப்பிபோன்ற வர்களை என்னவென்பது ?அவர் அர்ச்சுனன் பிராம்மணன் என்று எழுதுகிறார்.ஒத்துகொள்ள முடியுமா?

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    இங்கே கருப்பு பணத்தை இழந்த தேச துரோகிகள் புலம்புவது அப்பட்டமாக தெரிகிறது. மக்கள் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் பணம் கொடுத்து எழுதினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள். எல்லோரும் திரு மோடிஜி பக்கம் தான். திரு மோடிஜி மக்களுக்காகத்தான்.

  • ஈரோடுசிவா - erode ,இந்தியா

    இங்கு மோடிக்கெதிராக ஆதாரமற்ற பொய்யான தகவல்களை பரப்புபவர்கள் திருட்டு முரட்டு கலக அடிமைகளும் , அரேபிய அடிமைகளும் தான் ... நீங்கள் புழுதிவாறித் தூற்றுவதால் மட்டும் மீண்டும் கட்டுமரம் ஆட்சியை பிடிக்க முடியாது ... பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்கவும் முடியாது .

  • Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா

    பண பதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னாள் பருப்பு மற்றும் அத்யாவசிய பொருட்களின் விலை என்ன வென்றும் இப்பொழுது விலை என்னவென்றும் ஒப்பிட்டாலே இதன் மகத்துவம் தெரியும் பதுக்கல்காரர்களிடம் பணம் இல்லாததே இதற்க்கு காரணம். 60 வருட ஊழல் ஆட்சியை பொறுத்துக்கொண்ட நாம் இந்த சின்ன சின்ன சிரமங்களை பொறுத்துக்கொண்டால் நம் தலைமுறை நம்மை வாழ்த்தும்

  • jysen - Madurai,இந்தியா

    If you give him a luxury suite with all other "amenities" the world Bank chief will parrot that India is the only super power in the whole world.

  • jysen - Madurai,இந்தியா

    The only people who benefited by DeMo were none other than bank managers who had a field day during that difficult period.They collected more than 40% for exchanging the old notes. Many bank managers have now become billionaires and will definitely vote for BJP. The ordinary people who incurred loses with vote for the real BJP headed by Atalji and Advaniji.

  • JIVAN - Cuddalore District,இந்தியா

    38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர்? கொஞ்சம் நல்ல தெரிஞ்சவங்க வெறும் 32 சதவீதம் என்பதற்கு விளக்கம் சொல்லுங்களேன்.

  • Denesh - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    A total of over 10,000 ET Online readers had responded to the சர்வே. ஏம்பா அகில இந்தியாவுலயும் மொத்தம் 10000 பேர்தான் இருக்காங்களா? அதிலும் பாருங்க 38 சதவீதம் மட்டுமே வெற்றின்னு சொல்லி இருக்காங்க. 30 சதவீதம் தோலவீன்னும் 32 சதவீதம் எந்த கருத்தும் சொல்லல.

  • ஆழ்வார்க்கடியான் நம்பி - Chennai,இந்தியா

    I support Prime Minister... I was also standing in Q... But, things started changing slowly after one month... after two months i have not faced any problems... problems were only to those who had black money....

  • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

    இந்திய வளர்ந்துடிச்சு அதானே ...சபாஷ்

  • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

    நாங்க எதையும் நம்ப மாட்டோம்...பாஜக வெற்றி, மோடி வெற்றி என்றால் மெஷின் பிராடு என்றே சொல்லுவோம்...பாஜக, மோடி தோல்வி என்று வரும் முடிவுகளை மட்டுமே நம்புவோம்...

  • Saravanan - Chennai,இந்தியா

    எட்டாவது தேறாதவன் எல்லாம் ஆடிட்டர் அளவுக்கு பேசுவான். மண் மோகன் ஜிங்கு காலத்திற்கு முன்னால் இந்தியாவின் பண மதிப்பும் சீன பண மதிப்பும் சீராக வளர்ந்தன. பிறகு சோணை அம்மா தலைமையில் சீனா மிக வேகமாக வளர்ந்தது. அதற்கு இணையாக இந்தியாவில் சில ஏழை குடும்பங்கள் (மட்டும்) வளர்ந்தன. அந்த ஏழை?? ( நீ நம்பனும்) குடும்பங்கள் இந்த பண நடவைக்கையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயின. பொது மக்களும் சிரமப்பட்டோம், ஆனால் மீண்டு வந்து விட்டோம். பாவம் ஏழை?? குடும்பங்கள்.

  • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

    கருப்பு பொருளாதாரத்தால் செல்வ செழிப்போடு நல்லா பசையோடு இருந்தவனுங்களுக்கு சம்பாதிக்கிற வழியும் வரும்படியும் போனது தான் அவுங்களின் வயிற்றெரிச்சலுக்கு காரணம்...

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    குஜராத்தில் அனைத்து சிறு தாெழில்களும் பணமதிப்பிழக்கத்தாலும் .ஜி.எஸ்.டி தாக்கத்தாலும் பாதிக்கப்பட்டதாக வேறு இணைய தள செய்திகளில் வந்துள்ளது.

  • Karun Muruga - banglore,இந்தியா

    Every one very well known about the policy " AGAINST OF POOR PEOPLE " SUPPORT THE MALTY MILLIONAIRE " No one support..simply cheating " THE PUBLIC"

  • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

    38 சதவீதம் பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30 சதவீதம் பேர் இரண்டும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32 சதவீதம் பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர்.பொருளாதாரத்தில் இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என 26 சதவீதம் பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர் பொருளாதாரத்தில் வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும், 42 சதவீதம் பேர், சில பாதிப்புக்களை ஏற்படுத்தி இருந்தாலும் அதிக வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். கூடி கழித்துப்பார்த்தால் மோடிக்கு ஆப்பு அடித்துள்ளார். பிஜேபி காரர்களை தேடி பிடித்து கேள்விகேட்டிருப்பார்கள். உண்மை கண்முன்னால் தெரிகிறது . வேலைவாய்ப்பு அறவே இல்லை . புதிய தொழில்கள் நில் . சத்து பற்றாக்குறை உலகத்தில் இந்தியாவில்தான் அதிகம் என்று உலக வாங்கி தெரிவிக்கிறது . இன்னும் சிலஆண்டுகளில் இது வெறுமையாக ,நோயாக , குறைந்த திறன் உடைய தொழிலாளர்களை இந்தியாவில் ஏற்படுத்தும் . 145 பொதுமக்களும் வாங்கி ஊழியர்களும் வரிசையில் நின்றதால் மாண்டுபோனார்கள் . வறுமை இந்தியா பூரா வேகமாக பரவி வருகிறது. விவசாயம் செத்துப்போனது . இளசுகள் வெளிநாட்டு வேலைக்கு பறக்கிறார்கள் . மோடியும் ,அவர் அமைச்சர்களும் , அம்தஷா மகனும் இந்த சர்வேயில் உள்ள நலல்து சொன்னவர்கள் .மீதம் கெடுதல் என்கிறார்கள் இந்தியர்கள் . தேர்தலில் தெரியும் நல்லதா கெட்டதா பண மதிப்பு குறைப்பு .

  • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

    வாசகர்களில் 100%. எதிர்ப்பாக இருக்கும்போது எப்படியா ஆதரவு என்று சொல்கிறார்கள் ? தாங்கள் அறிவிலிகளாக இருப்பவர்கள் மட்டுமே மற்றவர்களை அறிவிலிகளாக எண்ணுவார்கள் என்பதும் உண்மைதானே

  • விமர்சகன் - kovai,இந்தியா

    இங்க கருத்து போட்டவங்கள வச்சு பார்த்தாலே தெரிந்து விடும் அது டுபாக்கூர் சர்வே தான் என்று. பத்திரிகையும் மீடியாவும் பணம் பெற்று கொண்டு எவ்வளவு மோசமான சர்வே நடத்துகின்றனர்.

  • Kannan KR - Coimbatore,இந்தியா

    ஆன் லைனில் சர்வே என்பது டுபாக்குர் வேலை. இந்திரா காந்தி தான் இப்போ பிரதமர் அப்படின்னு வேணும்னாலும் சொல்ல வைக்கலாம். யாருகிட்ட

  • Palani Baba Thani Oruvan - Vyasarpadi, Chennai,இந்தியா

    பிக்காலிஸ் அம்பானி அதானி family மட்டும் சர்வே எடுத்தீங்களா...

  • Rajathiraja - Coimbatore,இந்தியா

    இப்பொழுது தான் news18 செய்தியில் விவரமாக பண மதிப்பிழப்பின் தாக்கத்தை கண்டேன். தமிழநாடு முழுவதும் உள்ள சிறு குறு தொழில்கள் GST மற்றும் பண மதிப்பிழப்பின் தாக்கத்தால் அவர்களின் முற்றிலும் நாசமடைந்துள்ளது. அவர்களின் சாபம் ஆள்பவர்களை சும்மாவிடாது

  • Robert - chennai,இந்தியா

    இந்த சர்வேயை ஏழை மக்களிடமும் கூலி தொழிலாளிடமும் எடுக்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்

  • appaavi - aandipatti,இந்தியா

    இதற்கும் எதாவது ' bot ' தயார் செய்து வைத்து இருப்பார்களோ?

  • K. Sadhasivam - Farwaniya,குவைத்

    From: K.Sadhasivam, Kuwait. A daring action with very good intention to the real progressive national interest. But,....... caused a national chaos due to improper preparedness advisory by the officials concerned, which in-turn ill-benefited many bad-elements and severe sufferings to good-ones, including prolonged uncompromising life loses. However in-spite the aggravated & long-awaited severe attacks by the oppositions and abnormal propagandist media in the name of journalism for their rating-Ups with very bad intentions, the common public who is always looking for a progressive Bharat-INDIA supports full 100% such good ventures of the Government.

  • Meenu - Chennai,இந்தியா

    ஐயா நான் பொது மக்களை சார்ந்தவன். அண்டை நாடு இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 30 கும் 40 கும் விற்கும்போது, நம் நாட்டில் மட்டும் 75 ரூபாய்க்கு வித்து கொள்ளை அடிப்பது தான் ஞாயமா? சிலிண்டர் விலையை மாதாமாதம் ஏற்றிக்கொண்டு போறீங்க. ஞாயமா? GST வரின்னு போட்டு எங்களிடமிருந்து உறிஞ்சுரீங்க. ஞாயமா? எப்படி மக்கள் நாங்கள் உங்கள் திட்டங்களுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று அப்பட்டமா பொய் சொல்றீங்க? பாதிக்க பட்ட மக்கள் எவ்வளவோ கருத்துக்கள் மூலம் சொல்லியும், பெட்ரோல் விலையை பற்றி பேசவே மறுக்குறீங்க உங்கள் கட்சி ஆட்சியாளர்கள். ஓட்டு போட்ட மக்கள் எங்களை ஏமாற்றிவிட்டீர்கள்.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இதுவெல்லாம் ஆன்லைன் கலாட்டாக்கள் தான். இதனால் ஒன்றும் ஓட்டையை மறைக்க முடியாது.

  • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    இது இவரின் ஆட்சியின் கருப்பு தான்தா அவளை பக்கம் தான்ன் அது. இந்த சர்வேயை ஏற்கவே முடியாது. பொதுவாக சர்வேக்கள் உண்மை சொல்பவை இல்லை என்றாலும், இந்த சர்வேயை யாரிடம் எடுத்திருப்பார்கள்? ஆன்லைன் சர்வேயால் என்ன பயன். முனியம்மாவின் எண்ணமும் குப்பன் சுப்பன் எண்ணமும் வெளிப்பட்டதா? பாதிப்பு என்பது சாமானியர்களுக்கு என்பதை தெருவோரம் மீனவரிக்கும் பெண்ணிடமும், பூவிற்கும் பெண்ணிடமும் கேட்டு தெரிந்து கொள்ளலாம், கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு. கார்பொரேட்களை மட்டுமே தான் கவனத்தில் கொள்வார்களா? ஜனநாயக முறைப்படி பார்த்தல் மக்களின் சர்வே தேவைப்படாது, தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளின் சர்வே தான் முக்கியம் அது தான் போராட்டத்திலும், பெட்டிகளிலும் தேர்தல் காலங்களிலும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறது. வெளிநாட்டில் இருந்த காரணத்தாலேயே எங்களால் மாற்ற முடியாமல் போன நேர்மையான பணத்தை எப்படியாவது மாற்றமுடியுமா? இல்லவே இல்லையே. அதன் பிறகு என்ன வக்காலத்து வெட்டி பேச்சு. வாங்கி அதிகாரிகளிடம் சண்டையிட்ட பொதுமக்கள் நமக்கு தெரியாதா? செய்வதறியுயாது திகைத்த அதிகாரிகள், சுற்றுலாவிற்கு குடும்பத்துடன் சென்று திரும்ப முடியாமல் தவித்த மக்கள், இருக்கும் பணத்தை வங்கியில் செலுத்த பட்டபாடு அம்மாமாமா? அது எதற்கு பெட்ரோல் புக்கில் மட்டுமே ருபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் அது பணமிலப்பிற்கு பேறாகும் செல்லுபடியாகும் என்று சொன்னார்கள், அதன் மூலம் தானே பல்வேறு திமிங்கலங்கள் மிகப்பெரிய அளவில் ஏப்பம் விட்டதாக சொன்னார்கள்.

  • sundaram - Kuwait,குவைத்

    அன்றாட பெட்ரோல் கொள்ளை குறித்து தினமலர் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினாலும் சற்றொப்ப நூற்று பத்து விழுக்காட்டு மக்கள் ஆதரவுதான் தெரிவிப்பார்கள்.

  • Jaya Prakash - Medan,இந்தோனேசியா

    எந்த கருத்து கணிப்பும் வேண்டாம்... ஒரே ஒரு வார்த்தை ஜெட்லீ நேற்று சொன்னார்...பணமதிப்பிழப்பு மற்றும் GST கு பிறகு சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரித்துக்கு இருக்கு என்று... அப்போ பட்டவெளிச்சம்... இறக்குமதி எப்போ செய்வோம்?.... நம்ம ஊரில் கிடைக்காதபோது... ஏற்றுமதி அதிகரிக்கும்போதுதான் ஒரு நாடு முன்னேறும்.... இவர் கருத்துக்கு என்ன அர்த்தம்?.... சீனா பொருளை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு புறம் பிரச்சாரம்... ஆனால் உண்மை நிலைமை?.... இப்போ நம்ம செயலினால் அவன் லாபம் சம்பாதிச்சான் அதான் உண்மை... அவன் இப்போ கால் மேல் கால் போட்டு சிரித்துக்கொண்டு இருப்பான்... நாம??.. இளித்துக்கொண்டு இருப்போம்....

  • velimalaya - Chennai,இந்தியா

    கருப்பு பணம் வைத்திருந்தவர்களுக்கு தான் இன்று கருப்புதினம்.மேலும் பணப்புழக்கம் என்பது வெள்ளை ரூபாயாக இருந்தால் தான் நாட்டிற்கு வளர்ச்சி .எப்போதும் நேர்மைக்கும் மற்றும் உண்மைக்கும் துணை நிற்போம் .

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

    எல்லா ஊடங்களையும் விலை கொடுத்து வாங்கியாச்சு , மக்களுக்கு இரண்டாவது சுதந்திர போராட்டதை தவிர வேறு வழியில்லை ? மார்வாடிகள் கையில் இருந்து நாட்டை காப்பாத்தவேண்டும் .

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    Economic Times பேப்பரு வடநாட்டு மலர்...... இப்பொம் வெளங்கிச்சா....?

  • B. இராமச்சந்திரன் - இராமநாதபுரம்,இந்தியா

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகசிறந்த நடவடிக்கை.. ஆனால் மோடி ஒருவர் மட்டுமே நேர்மையாய் இருந்தால் எந்த நல்ல திட்டத்தையும் வெற்றியடைய செய்யமுடியாது.. குறைந்தது ஒரு 50 சதமான அதிகாரிகளும் மக்களும் கூட நேர்மையாளராக இருக்க வேண்டும்.. ஆனால் பல வங்கி அதிகாரிகள் மோசடியாளர்களுக்கு உடந்தையாக பணத்தை மாற்ற உதவினார்கள், இதில் ரிசர்வ் வங்கி அதிகாரிகளும் விதிவிலக்கல்ல.. மோசடிகளை விசாரித்து பிடிக்கவேண்டிய வருமானவரி துறை அதிகாரிகளும் கூட சிலர் நேர்மையற்றவர்களாக இருப்பதை காணமுடிகிறது.. சில சாதாரண மக்களும் கூட கருப்புப்பண பதுக்கல் காரர்களிடம் கமிஷன் பெற்றுக்கொண்டு அவர்கள் பணத்தை தங்கள் கணக்கில் வரவு வைத்து மாற்றி கொடுத்த நிகழ்வுகளும் நடந்தது.. அதிகாரிகள் அத்தகைய வங்கி கணக்காளர்களிடம் விசாரணை நடத்தும் பொழுது அது - தான் சிறுக சிறுக வீட்டிலேயே சேமித்த பணம் என்று கூறி மோசடியாளர்களுக்கு உதவினர். எப்படி இருந்தாலும் மிகப்பெரிய பணபரிமாற்றங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துள்ளன. அவர்கள் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.. மொத்தத்தில் இந்த நடவடிக்கை மிக துணிச்சலான நடவடிக்கை.. திரு மன்மோகன் சிங் அவர்கள் தனது அமைச்சரவை சகாக்கள் செய்யும் ஊழல் அறிந்தும் கண்டும் காணாமலும் அதற்கு பொறுப்பேற்காமலும் இருந்தார். மேலும் ஊழலை ஒழிக்கக்கூடிய மந்திரக்கோல் தன்னிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.. அவரோடு ஒப்பிடுகையில் திரு மோடி அவர்களின் ஊழலுக்கு எதிரான மற்றும் கருப்பு பண பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆயிரம் மடங்கு மேல்..

  • Dol Tappi Maa - NRI,இந்தியா

    அவ்வளவு ஆதரவு இருந்தா தமிழகத்தில் தனியா நின்று ஜெயிக்க வேண்டியது தானே ? வோட்டு கேட்க கூட போகமுடியாது , அவ்வளவு எதிர்ப்பு .

  • K.Sugavanam - Salem,இந்தியா

    சர்வே எடுத்தாங்களோ இல்லியோ,ஆனா ரிசல்ட்டு மட்டும் வருது ..அவங்க சொன்னபடி..

  • yaaro - chennai,இந்தியா

    மக்கள் இதை ஆதரப்பித்தாகவே நான் நம்பினாலும் , ஒன்லைன் போல் எல்லாம் ஒரு நம்பகமான விவகாரம் இல்லை ..இதில் பல முறை ஓட்டு போடுபவர்கள் உண்டு ..

  • தேச நேசன் - Chennai,இந்தியா

    EVM machine போல தானே

  • Shanu - Mumbai,இந்தியா

    மோடியும் பொய் சொல்லுவார். பத்திரிகைகளும் பொய் சொல்லும், மொத்தத்தில் மக்களின் கஷ்டம் மக்களுக்கு மட்டும் தான் தெரியும். எவ்வளவு நாட்கள் தான் ஏமாற்றமுடியும் ஒருவரால்??

  • krishnan - Chennai,இந்தியா

    ஒரு வருடம் முடிந்த பிறகு பயங்கரவாதம் ஒழிந்தது (ஒரு 36 கோடி , சேகர் REDDY அத விட அதிகம் வைத்திருந்தார்) மேலும் 2016 1 பொது மக்கள் கொல்ல பட்டார்கள் ஆனால் 30 பொதுமக்கள் கொல்ல பட்டு இருக்கிறார்கள். பிஜேபி மட்டும் தான் இது பெரிய வெற்றி போல் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.

  • Pandianpillai Pandi - chennai,இந்தியா

    //ஒருவேளை மோடி ரூ.2000 நோட்டையும் வாபஸ் பெற்றால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, 56 சதவீதம் பேர் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களையே பாதிக்கும் எனவும், 31 சதவீதம் பேர் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும் என்றும், 13 சதவீதம் பேர் நேர்மையாக தொழில் செய்பவர்களை பாதிக்கும் என தெரிவித்துள்ளனர். // இதிலிருந்தே தெரியவில்லையா இந்த திட்டம் தோல்வியடைந்த திட்டம். மற்றும் இந்த கருத்துக்கணிப்பு என்பது திணிப்பாகத்தான் தென்படுகிறது... கறுப்புப்பணம் ஒழியவில்லை... ஆக மொத்தம் எல்லாவற்றையும் கூட்டி பார்த்தல் 100 சதவிகித தோல்வி உறுதியாகிறது.

  • G.Prabakaran - Chennai,இந்தியா

    பொய் சொல்லியே ஆட்சியை நடத்துறீங்க இந்த மாதிரி பொய் சொல்ல சொல்லிய தரணும். உங்க பிஜேபி ஆளுங்க கிட்டயே சர்வே எடுத்திருப்பீங்க.

  • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    இவ்வளவு ஏன் கஷ்டப்படணும்? பேசாம " நாங்க இந்தியாவுல இருக்கற மக்கள் எல்லாரயும் நேருல சந்திச்சோம், அத்தன பேரும் ஆதரவு தர்றாங்க" அப்டீன்னு ஒரு survey result ட போடவேண்டியதுதான..... நம்பராமாரியும் இருக்கும்.....

  • Bharatha Nesan - Chennai,இந்தியா

    நல்லது செய்தார், நல்லதே விளையும் , காத்திருங்கள். நமது வாழ்க்கையில் உடனே ஒளி பிரகாசிக்காது,பிரகாசிக்க நெரம்பிடிக்கும்.நமக்கு அதனால் நல்லது இல்லையென்றாலும் தீமையில்லை அது நம் நாட்டிற்கு சந்ததிகளுக்கு நல்லதே, உணர்வீராக.

  • சூரிய புத்திரன் - வெள்ளைக்காரன் பட்டி , கிர்கிஸ்தான் , ,கிரிகிஸ்தான்

    இப்போ இங்க வந்து கதறுவானுக பாருங்க ஊழல் பெருச்சாளிகளின் அல்லக்கை அடிமைகள்,... நீங்க கலக்குங்க மோடி ஜீ....

  • Raj - Chennai,இந்தியா

    இந்த எகனாமிக் டைம்ஸ் நடத்திய கருது கணிப்பில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் நகரத்தை சேர்ந்த பணம் படைத்தவர்கள் இது ஒரு மாயை உங்கள் தெருவில் பெட்டி கடை வைத்து இருப்பவரிடம் கேளுங்கள் இந்த கருத்து கணிப்பை பற்றி

  • karthikeyan - singapore,சிங்கப்பூர்

    வாழ்த்துக்கள் பாரத பிரதமர் மோடி அவர்களே . மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பார்கள் நல்ல செயலுக்கு . கொள்ளை அடித்து சேர்த்த கூட்டம் தான் மாற்ற முடியாமல் கதறுகிறது

  • Karthi -

    majority of people supported. so good thing only

  • டீக்கடை கேடி - ????????? ?????, ????? ,இந்தியா

    அல்லக்கை எக்கனாமிக்ஸ் டைமின் கேவலமான எண்ணத்தை மக்கள் புரிந்து கொள்ளலாம்.

  • Rahim - Riyadh,சவுதி அரேபியா

    காவி பொய் என்பது இதுதான் போல, கேடுகெட்ட மத்திய அரசின் கைக்கூலி ஊடகங்கள் மூலம் மோடி அரசு தன் மீது விழுந்த கறையை துடைக்க பொய் பரப்புகிறது , ஒன்லைனில் ஏற்க்கனவே 7 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தி தான் பொய் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தது இப்போதும் ஒன்லைன் வேலையை காட்ட தொடங்கிவிட்டார்கள் , மக்களை சந்திக்காமல் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் மங்கி பாத்தில் மட்டும் கதை அளப்பார் பிரதமர் இப்போது அவரின் எடுபுடி ஊடகங்களும் இணையத்தில் மக்கள் ஆதரவு என்ற பிலிம் காட்டும் வேலையை தொடங்கி இருக்கிறார்கள் , வங்கி வாசலில் காத்து நின்ற அப்பாவி மக்களில் எத்தனை பேருக்கு இணையம் பற்றி தெரியும் ? கைக்காசை இழந்து தெருவோர வியாபாரத்தை இழந்த தலைச்சுமை வியாபாரிகள், சிறு நிறுவனங்கள், பட்டறை தொழிலாளர்கள், நெசவாளர்கள்,அப்பாவி மக்கள் என சாதாரண மக்களிடம் நேரடியாக சென்று விவாதம் நடத்த தயாரா ? தைரியம் இருந்தால் பிரதமரும் சர்வேக்களும் மக்கள் மத்தியில் வந்து பேசட்டும் அப்போது தெரியும் உண்மை நிலைமை.

  • Original Indian - Chennai,இந்தியா

    பணமதிப்பிழப்புக்கு ஆதரவு என்று பிஜேபி ஆதரவாளர்கள் மட்டுமே கொக்கரிக்கிறார்கள்........

  • HSR - Chennai,இந்தியா

    2000 வாபஸ் பெற்றால் நேர்மையாளர்களை பாதிக்குமா ?

  • MANI DELHI - Delhi,இந்தியா

    இந்த நடவடிக்கையை நேர்முக பொருளாதாரம் மற்றும் மறைமுக பொருளாதாரம் என்று பார்த்தோமானால் வெளிப்படையான பணப்புழக்கம் செய்தவர்கள் கண்டிப்பாக பாதிப்பு அடையவில்லை. PARALLEL ECONOMY தன்மையை MAIN STREAM ECONOMY உடன் இணைப்பதற்கு பெரிதும் உதவியே உள்ளது. சிறிய அளவில் பணம் வைத்துஇருந்தவர்களுக்கு மூன்று மாத காலம் புதிய நோட்டுகள் வரும் வரை அவர்களின் புழக்கத்திற்கு பிரச்னை இருந்தது என்பதில் மாற்று கருது இல்லை. ஆனால் அவர்கள் வருமானம் எல்லாம் பெரிய அளவில் இல்லை. உடனே அவர்கள் ஏன் பதிக்கப்படுத்தப்பட்டார்கள் என்ற கேள்வி கொழுத்த அரசியல்வாதிகள் சிறிய அளவில் பரிவர்த்தனை செய்பவர்களுக்கு என்னவோ தினசரி வாழ்க்கையில் எல்லாவித உதவிகளை செய்வது போல் கேட்கிறார்கள். ஒரு சீர் திருத்த நடவடிக்கை எடுக்கும் போது அவர்களும் பொது மக்களாக அதற்கு ஆட்படுவது இயல்பே. அவர்கள் கூட இதனை இந்த நடவடிக்கைகளை குறித்து பேசாத போது ஒரு சீர்திருத்த நடவடிக்கையை பொது தளத்தில் மக்களிடையே தங்கள் சுய அரசியல் லாபத்திற்காக emotional வார்த்தைகளை பேசும் அரசியல்வாதிகளுக்கு என்ன உரிமை உள்ளது. ஏன் இந்த குறைவான வருமானம் உள்ளவர்கள் எல்லாம் கடந்த ஆட்சிகளில் பெரிய பண முதலாளிக ஆகிவிட்டார்களா. நேற்று NDTV தொலைக்காட்சியில் வந்த விவாதத்தை கேளுங்கள். ஆந்திராவில் சிறிய ரேஷன் கடையில் வேலை செய்பவர் எப்படி இந்த நிலைமையை எதிர்கொண்டார் என்று விளக்குகிறார். தமிழர்கள் எளிதாக இப்படிப்பட்ட நடைமுறைகளை எளிதாக ஊக்குவித்திருக்க முடியும். அந்நாள் அவர்களை செய்யவிடாமல் தடுக்கும் அரசியல் சார் பண முதலைகள் தான் உண்மையான புல்லுருவிகள். மக்கள் உணர்ந்துள்ளார்கள. வளர்ச்சி வேண்டுமென்றால் தொலை நோக்கு வேண்டும். அது தமிழர்களிடேயே உள்ளது. அரசியல் பம்மாத்து வேலைகளை செய்யாமல் இருந்தாலே தமிழகம் வளப்படும் என்பதில் சந்தேகமில்லை

  • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

    எதிர்பார்த்த கருத்துகணிப்புதான் பல அதிரடி நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • Mano - Madurai,இந்தியா

    நாட்டு முட்டாள்கள் இருக்கும்வரை தேசத்தை காப்பாற்ற முடியாது. இவர்களுக்கு ஊடகங்களும் துணை போவது வேதனை.

  • புதுகை வானம்பாடி - புதுக்கோட்டை,இந்தியா

    வோட்டு போடுற குப்பனும் .... சுப்பனும் .... ON லைன் இல்ல

  • Gurusamy -

    have to check with village people and small business people.. they were only really affected ...

  • Parthasarathy - Chennai,இந்தியா

    பொய்யான தகவல்.. ஆரம்பத்தில் வரவேற்றோம் ஆனால் மாற்றம் ஏதுமின்றி ஏமாற்றமே மிச்சம்.

  • சிவபழனிவேல் -

    நவம்பர் 8 கருப்பு பண ஒழிப்பு தினம். வாழ்துக்கள் நரேந்திர மோடி ஜி.

  • thangavel.a - banglore

    முப்பத்தி எட்டு சதவிகிதம் போக அறுபத்திரண்டு எதிர்ப்பு தானே

  • Karuthukirukkan - Chennai,இந்தியா

    பிஜேபி ஐடி விங் வெறியா வேலை செஞ்சிட்டு இருக்காய்ங்க .. அப்போ கூட எதிர்ப்பு அதிக அளவில் இருப்பது தெரிகிறது ..

  • Ram - Panavai,இந்தியா

    நம்பிட்டோம்

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    EVEN AFTER DEMO , PEOPLE ARE NOT USING DIGITAL TRANSACTION... 2016& 2017 WITNESSED SAME AMOUNT OF DIGITAL TRANSACTIONS ... IT SHOWS MODIS UTTER FAILURE OF DEMO....EXCEPT JOB LOSS , NO BENEFITS FOR COMMON MEN AS WELL AS FOR GOVT

  • ganapati sb - coimbatore,இந்தியா

    மக்கள் தெளிவாக உள்ளனர் மாற்றத்தை வரவேற்கின்றனர் . பொதுமக்கள் என பெயரை சொல்லி கொண்டு அரசியல்வாதிகளை கூவச்சொல்லும் கருப்புப்பண முதலைகள் கடுப்பில் உள்ளனர் .

  • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

    எங்க தலையை யாரும் அசைக்கமுடியாது. அடுத்த பிரதமரும் இவரே. யானையை எதிர்த்து ஒரு பூனையை நிறுத்தினால் கூட பரவாயில்லை , ஒரு எலி (ராகுல் ) நிற்கிறது.

  • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

    ONLINE VOTES..... SUPER COMEDY ....GO N TAKE SURVEY AMONG MIDDLE CLASS , LOWER CLASS N BPL PEOPLE.... 90 % PEOPLE AMONG THEM ARE AGAINST THIS DEMO ....

  • Htanirdab S K - Hyderabad,இந்தியா

    Excellent.. Kudos to NaMo.. யார் யாரோ என்னவோ சொன்னாலும் கடைசியில் மக்கள் நமோ பக்கம் என்பதை உறுதி செய்து விட்டார்கள்

  • abu - chennai,இந்தியா

    120 கோடி மக்கள் தொகையில் பத்தாயிரம் பேர் வாக்களித்தது ஒரு கருத்துக்கணிப்பா? இது ஒரு செய்த்தியா? ஏன் இந்த வெற்று விளம்பரம்?

  • Anandan - chennai,இந்தியா

    ஆன்லைன் கருத்து கணிப்பு வைத்து மக்கள் ஆதரவு போடுறீங்க. இப்படியே பேசுங்க அப்பத்தான் மக்கள் பெரிய அப்பு வைக்கும் போது அசைய முடியாது.

  • AbarajithanJithan -

    Dinamalar... ne Nalla Sombu thooku....

  • Ganesh Tarun - Delhi,இந்தியா

    We support notebandi (Demonetisation). ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை ஒழிக்க பெரிதளவு உதவியது. அதன் விளைவு ரோடுகளில் செல்லாத நோட்டுகள் கிழிந்த நிலையில் கிடந்ததன. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு ஊக்குவித்தது. நாட்டுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதில் சிக்கல் உருவானது.

  • Mohammed Abdul Kadar - dammam,சவுதி அரேபியா

    எங்கள் ஊரில் விசாரிக்க வில்லை , கருத்து கணிப்பு எல்லாம் சும்மா கப்ஸா தமிழ் நாட்டில் 5 % கூட ஆதரவு கிடையாது

  • Bava Husain - riyad,சவுதி அரேபியா

    அன்று விமர்சித்த பலரும், இன்று ஆதரிக்கின்றனர் என்பதைவிட, அன்று ஆதரித்த பலரும் இன்று விமர்சிக்கின்றனர் என்பதே உண்மை.....

  • Shyam - Chennai,இந்தியா

    இந்த கட்டுரை வெளியிட்டது யார் முதலில் சொல்லுங்கள், ஆவர் முதலில், gst அமலாக்கத்துடன் மகிழ்ச்சி.........

  • baski - Chennai,இந்தியா

    இது மக்களுக்கு தெரியுமா..

  • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

    "....... ஒருவேளை மோடி ரூ.2000 நோட்டையும் வாபஸ் பெற்றால் அது எந்த அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்விக்கு, .....". - ஐயா, அப்படி செய்தால், அது சத்தியமா, கருப்பு பண பேர்வழிகளையும், இவர்களின் எடுபிடி (கமிசனுக்கு வேலை பார்க்கும்-கடத்தல்) ஆட்களைத்தான் பாதிக்கும் எனலாம். சரிதானே?.

  • Mariappa T - INDORE,இந்தியா

    உலக வங்கி தலைவரே அட்வெர்ட்ய்ஸ்மென்ட் பண்ணியும் பருப்பு வேகல. அதனால் உளூர் துவரம் பருப்பு போடுகிறார். இதில் கருத்து சொல்வதற்கு முன் தய்வு செய்து எவ்ளோ கருப்பு பணம் பிடிசீங்க னு சொல்லுங்க

  • தலைவா - chennai,இந்தியா

    சந்திர குப்தன்: குருவே அண்ட புளுகு என்றால் என்ன ? சாணக்கியன்: சிஷ்யா இன்னும் தினமலர் படிக்க வில்லையா?

  • Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்

    அருமை. திட்டம் மிகப்பெரிய வெற்றி. வாழ்த்துக்கள் மோடி ஜி.

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    ஒரு சிலருக்கு பாதிப்பு இருந்தாலும் பலருக்கும் நன்மை , இதுதான் உண்மை

  • இந்தியன் kumar - chennai,இந்தியா

    நல்ல மக்கள் நிச்சயம் வரவேட்பார்கள் . போலி அரசியல்வாதிகள் தான் எதிர்ப்பார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement