Advertisement

கடுப்பில் பா.ஜ., தலைவர்கள்

பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்று, ஜனாதிபதியானவர், ராம்நாத் கோவிந்த். 'இனிமேல் இவர், பா.ஜ., மேலிடத்தின் சொல்படி தான் நடப்பார்' என, எதிர்க்கட்சிகள் வெளிப்படையாக சொல்லாமல், உள்ளுக்குள்ளாகவே சொல்லி வந்தன. ஆனால், ஜனாதி பதியின் சமீபத்திய செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, பா.ஜ., தலைவர்களை கோபத்தில்கொந்தளிக்க வைத்துள்ளது.கர்நாடக சட்டசபையில் உரையாற்றிய ஜனாதிபதி,'ஆங்கிலேயர்களை வெளியேற்ற போராடி, உயிர்விட்ட திப்பு சுல்தான்' என, பாராட்டி உள்ளார்; இது, பா.ஜ.,வினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் உள்ள, சித்தராமையா தலைமையிலான, காங்., அரசு, அடுத்த மாதம், திப்பு சுல்தானின் நுாற்றாண்டு விழாவை கொண்டாட திட்டமிட்டு உள்ளது; இதை, கர்நாடக, பா.ஜ., தலைவர்கள் எதிர்த்து வருகின்றனர். அடுத்த ஆண்டு, இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளநிலையில், திப்பு விவகாரம், அரசியலை பரபரப்பாக்கிஉள்ளது.
'மங்களூரில் உள்ள சர்ச்சுகளை இடித்து தரை மட்டமாக்கி, மதம் மாற்றியவர் திப்பு சுல்தான்' என்பது, ஒரு தரப்பு வாதம். 'ஆங்கிலேயரை நாட்டை விட்டு துரத்த பாடுபட்டவர் திப்பு. தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு, நிதி உதவி செய்தவர் திப்பு' என்பது, மற்றொரு தரப்பு வாதம்.
இந்நிலையில், ஜனாதிபதியின் பாராட்டு, பா.ஜ.,வுக்குள் பிரச்னையை எழுப்பி உள்ளது. 'கோவிந்தின் உரையில், திப்பு விவகாரத்தை, கர்நாடக, காங்., அரசு, அவருக்கு தெரியாமல் திணித்துவிட்டது' என்கின்றனர், பா.ஜ., தலைவர்கள். ஆனால், 'அது உண்மையல்ல; ஜனாதிபதியின் உரையை தயாரித்தது, ஜனாதிபதி அலுவலகம் தான்' என்கிறது, கர்நாடக அரசு. 'உரையை தயாரித்தது நாங்கள் தான்' என, ஜனாதிபதி மாளிகையும் கூறியுள்ளது.இது மட்டுமல்லாமல், கேரளா சென்ற ஜனாதிபதி, அங்குள்ள, பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி அரசை பாராட்டி உள்ளார். கேரளஅரசுக்கு எதிராக, பா.ஜ., போராட்டங்களை நடத்தி வரும் இந்த நேரத்தில், ஜனாதிபதி பாராட்டு, பா.ஜ.,வினரின் கோபத்தை அதிகப்படுத்தி உள்ளது.'ஜனாதிபதி பதவியில் அமர்ந்த பின், நடுநிலையாக செயல்பட வேண்டும்; அதைத் தான் செய்கிறார் கோவிந்த்' என்கிறது, ஜனாதிபதி மாளிகை வட்டாரம்.


எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்!


தமிழக அமைச்சர்களின் காமெடி பேச்சுக்கள், அ.தி.மு.க., அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. 'ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது பொய்' என, ஓர் அமைச்சர் கூறினார். மற்றொருவரோ, 'பிரதமர் மோடி, தகப்பன் ஸ்தானத்தில் இருந்து, எங்களை பாதுகாத்து வருகிறார்; அதனால், எங்களுக்கு கவலையில்லை. இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் கிடைக்கும்; இந்த விஷயத்தை, மோடி பார்த்துக் கொள்வார்' என்றார்; இந்த பேச்சு, தேர்தல் கமிஷனில் பெரும் பிரச்னையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில், தேர்தல் கமிஷனில், இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை நடந்தது. அப்போது, தினகரனின் வழக்கறிஞர், தமிழக அமைச்சரின் பேச்சை சுட்டிக்காட்டி வாதிட்டார். 'இரட்டை இலை சின்னம் எங்களுக்குத் தான் கிடைக்கும்; மோடி பார்த்துக் கொள்வார் என, அமைச்சர் பேசி உள்ளார்; இதற்கு என்ன அர்த்தம்? அமைச்சரின் இந்த பேச்சுக்கு பின், விசாரணை தேவை தானா' என, அவர் வாதிட்டார்.
'குஜராத் சட்டசபை தேர்தல் தேதியை, வேண்டுமென்றே, பா.ஜ.,வுக்கு சாதகமாக, தாமதமாக, கமிஷன் அறிவித்துள்ளது' என, ஏற்கனவே, தேர்தல் கமிஷன் மீது, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. இந்நிலையில், தமிழக அமைச்சரின் பேச்சு, பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து வாய் திறந்தால், நிலைமை மோசமாகும் என்பதால், மூன்று தேர்தல் கமிஷனர்களும் அமைதியாக இருந்தனர். உடனே, முதல்வரின் வழக்கறிஞர், 'அந்த பேச்சுக்கும், இந்த விசாரணைக்கும், எந்த சம்பந்தமும் இல்லை' எனக்கூறி, இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தினகரன் தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரத்தை எழுப்பிய போது, விசாரணையில் அமர்ந்திருந்த தமிழக அமைச்சர்கள் பதற்றம் அடைந்தனர். வழக்கமாக, டில்லி வரும் போதெல்லாம், போட்டி போட்டு, பேட்டி தரும் தமிழக அமைச்சர்கள், இந்த முறை, பின்புற வழியாக வெளியேறினர். அமைச்சர் ஜெயகுமார் மட்டும், பேட்டி அளித்தார். அவரும், எதிர்க்கட்சிகளை விமர்சித்தாரே தவிர, வழக்கு தொடர்பாக அதிகம் பேசவில்லை.
Advertisement
 

வாசகர் கருத்து (8)

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  செத்தாலும் எதுக்கு விழா எடுத்து படுத்தனும் சோத்துக்கே வழி இல்லேன்னு பலரும் தவிக்க திப்புக்கும் ஹைதராளிக்கும் விழா எடுக்கலேன்னு ஏவாளும் ஒப்பாரியே வைக்கலே

 • Jesudass Sathiyan - Doha,கத்தார்

  இந்த பாஜக வின் ஆட்சி கேலிக்கூத்து ஆட்சியாக இருக்கிறது.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  போக போக தெரியும் இந்த பூவின் வாசம் புரியும் ...

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  கோவிந்தா ... கோவிந்தா .. கோவிந்தா ..

 • Darmavan - Chennai,இந்தியா

  BJP கு காங்கிரஸ் போல் அதிர்ஷ்டமில்லை ..ஆட்களையும் தேர்வு செய்ய தெரியவில்லை...கடைசியில் முதுகில் குத்துகிறார்கள்... வேதனை.

 • Sridhar - Jakarta,இந்தோனேசியா

  பிரணாப்பும் சோனியா ஆதரவில்தான் ஜனாதிபதி ஆனார். முதல் இரண்டு வருடம் சோனியா ஆட்சியில் நடந்த ஊழல்கள் ஒன்றையும் கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் கூடவே கூட்டுகளவாணி போல் இருந்து எல்லா விஷயமும் தெரிந்தவர். அப்படி ஒரு நன்றி உணர்ச்சியோடு செயல்பட்டார். அதை யாரும் கேட்கவில்லை.

 • SENTHIL NATHAN - DELHI,இந்தியா

  end

கருத்தைப் பதிவு செய்ய

  மேலும் செய்திகள் :

Advertisement