Advertisement

தாஜ் மஹால் ஒரு களங்கம்: பா.ஜ., எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை

புதுடில்லி : நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கீத் சோம், தாஜ்மஹால் குறித்து தெரிவித்துள்ள கருத்து, புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தாஜ்மஹால் களங்கம் :
சங்கீத் சோம் பேசுகையில், தாஜ்மஹால் துரோகிகளால் கட்டப்பட்டது. இந்திய கலாச்சாரத்திற்கு களங்கம் விளைவிப்பது தான் தாஜ்மஹால். உ.பி., சுற்றுலாத்துறை குறிப்பேட்டில் இருந்து தாஜ்மஹால் நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக பலரும் கூறுகின்றனர்.

அந்த வரலாற்றை பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம் என அவர்களுக்கு தெரியவில்லை. தாஜ் மஹாலை கட்டிய ஷாஜகான் தனது தந்தையையே சிறையில் அடைந்தவர். அவர் இந்துக்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். இத்தகையவர்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் வேதனையானது. நமது வரலாற்றை மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.,வுக்கு எதிர்ப்பு :
சங்கீத் சோமின் இந்த கருத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. சமாஜ்வாதி கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.பி.ராய் கூறுகையில், பா.ஜ., வெறுப்பை பரப்பி வருகிறது. வரலாற்றை மாற்ற முடியாது. நன்மை, தீமை இரண்டையும் நாம் வரலாற்றில் இருந்து கற்க வேண்டும். இது போன்ற குறுகிய மனதுடையவர்களின் கருத்துக்களால் நமது வரலாற்று சிக்கித் தவிக்கிறது என்றார்.

சமீபத்தில் உ.பி., முதல்வர், நமது கலாச்சாரம் அல்லது பாரம்பரியத்திற்கும் தாஜ்மஹாலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என கூறிய கருத்து சர்ச்சை ஆக்கப்பட்ட நிலையில், பா.ஜ.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரும் தாஜ்மஹால் குறித்து கூறி இருக்கும் கருத்து புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (209)

 • X. Rosario Rajkumar - TRICHY,இந்தியா

  ஒற்றுமைக்கு வழிகோலுங்கள்.பிரிவினைக்கு அல்ல.

 • S.Ganesan - Hosur,இந்தியா

  இந்த MLA வுக்கு வேறு வேலை இல்லை என்றால் சும்மா இருக்க வேண்டியது தானே ? தாஜ் மஹால் குறித்து இவர் கருத்து சொல்லவில்லை என்று யார் அழுதார்கள். தாஜ் மஹால் எப்படி இருந்தாலும் நமது நாட்டின் அரிய பொக்கிஷம். உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. நாட்டில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனைகள் எத்தனையோ இருக்கும் பொது இது தேவையற்ற பேச்சு. இவர்கள் எல்லாம் வாயை மூடிக்கொண்டு இருந்தாலே நாடு உருப்படும்.

 • Kee Moo - Coimbatore,இந்தியா

  ஏன்டா மொகலாய வரலாற்றிலிந்து ஆரம்பிக்கிற? சிந்து சம வெளில இருந்து வாடா. இங்கு இருந்தது திராவிடர்கள் மட்டுமே. ஆரியர்கள் ஆகிய நீங்கள் வேறு எங்கோ இருந்து வந்தவர்கள். அதனால் உங்களை ஊரே விட்டே தொரத்திடலாமா?

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  ஏண்டா அம்பிகளா இவன் தானே மாட்டுக்கறி ஏற்றுமதி பிசினஸில் கொடி கட்டி பறக்குது , உங்க வீரத்தை அதுல காட்டுங்கடா இவன் கிட்ட.

 • Rahim - Riyadh,சவுதி அரேபியா

  சமீப காலமாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றன இது குஜராத்திலும் தொடரும் என்பதை தெரிந்து கொண்டு திசை திருப்பும் நாடகத்தை அரங்கேற்ற தொடங்கி விட்டன.

 • krishnan - Chennai,இந்தியா

  எந்த காலத்திலும் காவி சேனை (அப்படி ஓன்று இருந்ததா )அந்நியர்களிடம் இருந்து நம்மை காப்பாற்றவில்லை. இப்போதும் காப்பாத்தாது.

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  போகிற போக்கைப் பார்த்தால் "பாஜக வினர்" தவிர்த்து அனைவருமே 'ஆன்டி இன்டியன்' என்றும் இந்தியாவுக்கு களங்கம் என்றும் சொன்னாலும் சொல்வார்கள்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தாஜ் மஹால் என்பது கல்லறையா? அப்படி என்றால் அது அவர்கள் மதத்தால் ஏற்க பட மாட்டாதே? இடிக்க வேண்டும் என்று சொல்வார்கள் அவர்கள்.

 • mohankumar - Trichy,இந்தியா

  இங்கு கருத்து எழுதும் இஸ்லாமிய நண்பர்கள், இந்துக்கள் இஸ்லாமியர்களை கொன்றார்கள் என்று கூறு கிறார் தவறான தகவல் . நவகாளியில் நடந்த கலவரத்தில் எவ்வளவு இந்துக்கள் கொல்லப்பட்டார்கள் என அவருக்கு தெரியாது போலும் ,பின்னர் கேரளாவில் மாப்பிள்ளை கலவரம் மூண்ட போது என்ன நடந்தது. இந்து பெண்கள் இந்துக்கள் எல்லோரையும் மனபங்கப்படுத்தி 1000கணக்கில் வெட்டி கொன்றார்கள் . இதெல்லாம் மூடி மறைக்க முடியாது நண்பரே

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  கார்பெரேட் அரசா ஆக்ரா தாஜை நீக்கிவிட்டு, மும்பை குண்டுவெடிப்பு தாஜ் ஓட்டலை பாரம்பரிய கலாச்சாரத்தில் சேர்த்து அதை சுற்றுலா தலமாக்கி வரியை கூட நீக்கி விடுவார்களோ அல்லது சப்சிடி தருவார்களா அதற்கு.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  தாஜ் மஹால் ஓட்டல் எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்கும். அதிலும் பேலஸ் மற்றும் ரிஸார்டுகள் ரம்மியமாக இருக்கும். மும்பை டில்லியில் அங்கு தங்குவேன். சென்னையில் கோரமண்டலை விட , பிஷெர்மன் கோவ் கன்னிமாரா தாஜ் நன்கு இருக்கும். இப்போது நன்கு குறைத்திருக்கிறார்கள் கட்டணத்தை.

 • mohankumar - Trichy,இந்தியா

  நான் என்னுடைய பள்ளி பருவத்தில் சரித்திர பாட புத்தகங்களில் படித்த ஞாபகம் உண்டு . ( பின்னர் மெல்லென அவையெல்லாவற்றயும் நீக்கி விட்டார்கள் ) ஷாஜஹானுக்கு 100 கணக்கில் மனைவிமார்கள் . அதில் ஒரு மனைவிக்காக இந்த தாஜ் மஹாலை கட்டி பல கோடி செலவிட்டு பல ஹிந்து அடிமைகளை கொண்டு எழுப்பியது தான் இந்த கட்டிடம் . பலர் இறந்து போனார்கள். 1000 கணக்கில் மக்களை கொடுமை படுத்தி ,இதை போல் எங்கேயும் வேறு கட்டிடம் கட்ட கூடாது என்பதற்காக அதற்காக வேலை செய்த மக்களின் கட்டை விரல்களை வெட்டினார்கள் . அப்படிப்பட்ட இந்த தாஜ்மஹால் ஒரு கல்லறை தானே ஒழிய வேறு என்ன . தாஜ்மஹால் சென்று பார்த்தால் தெரியும் மேல் அறையில் ஷாஜஹான் ,மும்தாஜ் கல்லறை யின் மாதிரி யும் கீழ் அறையில் நிஜமான ஷாஜஹான் ,மும்தாஜ் கல்லறை இருப்பதை பார்க்கலாம். இதெல்லாம் மறுக்க முடியுமா . பின்னர் மகன் ஒளரங்கசீப், ஷாஜஹான் மக்கள் வரிப்பணத்தில் இந்த மாதிரி ஒரு கல்லறைக்காக கோடி பணம் செலவிட்டது தவறு என்று தந்தையையே சிறையில் அடைத்து விட்டார். இதெல்லாம் சரித்திர பேராசிரியர்கள் இல்லை என்று கூறுவார்களா . இன்றைய டிஜிட்டல் உலகில். சோமநாத புரா படையெடுப்பு , கஜனி முகம்மது ,கோரி முகம்மது என்று முகலாயர்கள் படை எடுப்பில் நம் பாரதம் எவ்வளவு சின்ன பின்னமானது. அப்போதும் நம் இந்துக்களிடையே ஒற்றுமை இல்லாமல் ஒரு கோஷ்டியினர் அவர்களுடன் சேர்ந்து நம் இந்து ராஜாக்களை காட்டி கொடுத்து பின்னர் இவர்களும் முகலாயர்களிடம் மடிந்து போனார்கள் . அன்று தொட்டு இன்று வரை இப்படித்தான் நமக்குள் நம்மையே காட்டி கொடுத்து முகலாயர்களிடம், ஆங்கிலேயர்களிடம் ,சீனாவிடம், பாகிஸ்தானிடம் என்று நாடு அடிமைப்பட்டு கிடந்தது . .

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  மகன் அப்பனை கொல்லுவான் அவனை அவன் மகன் கொல்லுவான். இறந்தவன் மனைவியை கொன்றவன் அபகரிப்பான் என்றெல்லாம் இருக்கும் அவர்களின் மரபை பறை சாற்றுவதா அந்த மஹால்.

 • மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

  இதை புராதான சின்னம் என்றும் இந்தியாவில் அன்றைய அரசரின் கட்டட கலையின் நாட்டம் தெரிகிது என்றும் மனைவியின் பேரில் அவர் கொண்ட அன்பின் வெளிப்பாடு என்று கூறி விட்டு விடலாமே. இருப்பது அப்படியே தொடரட்டும். ஏன் திடிரென்று சர்ச்சை. தாலிபான்களுக்கு எந்த சின்னங்களும் ஒத்துவராது தான். அங்குள்ள பண்டைய பழைமையான புத்தர் சிலைகளை அவர்கள் பீரங்கி வைத்து சிதைத்தார்கள் காஞ்சியில் மஹேந்திர பல்லவர் காலத்தில் சைவ வைணவ புத்த ஜைன மத துவசத்தின் போது சிதைத்ததை போலவே. பண்பட்ட மனம் இல்லாதவர்கள். அது போலவே ஒரு அரசு செயல் படவேண்டுமா? வரலாற்றை படித்தால் ஷாஜகான் தாஜ்மஹாலுக்காக கட்டட கலை வல்லுநர்களை சித்திரவதை செய்ததாகவும், கொல்லர்களின் கட்டை விரலை தாஜ்மஹால் முழுமை பெற்றதும் வெட்டி விட்டதாகவும் கூட படிக்கிறோம், அது போல வேறெங்கும் கட்டிடத்தை யாராலும் கட்டிவிட கூடாது என்பதற்காக. அது எல்லாம் ஒரு அநீதியாக தவறான சரித்திரங்கள் முடிந்துவிட்டவை. யமுனை ஆற்றில் நிலஒளியில் தாஜ் மஹாலை பார்ப்பதே மனதிற்கு அமைதியான கண்ணுக்கு விருந்தாக ஒரு காவியமல்லவா. அதன் மதுரத்தை அந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அழித்து வருவது போதாதென்று அரசியலால் இவர்கள் அதை மேலும் அழுக்கடைய செய்கிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் அரசியல் வாதிகள் நமது கலாச்சாரம் பண்பாடு மொழி உணர்வு என்று எதையும் பேசவேண்டாம் என்று தெரிகிறது. சாத்தான் ஓதுகின்ற விதமாகத்தான் அது இருக்கும் போல? இங்கு தமிழகத்தில் கூடத்தான் ஒரு வீரமான சிறுத்தை என்று கூறி கொள்ளும் தலைவர் கொழும்பில் வாலை சுருட்டி வைத்து கொண்டு இருந்து விட்டு இங்கு வந்து தமிழகத்தின் அரசு சின்னத்திலிருந்து கோவில் கோபுர சின்னத்தை அகற்ற வேண்டும் அது மத சின்னம் என்று தான் இருக்கும் மதத்திற்கு எதிர்ப்பாக கருத்து கூறி மற்ற மதத்தினரின் அஞ்சு பத்து வாக்குகள், தாழ்த்தப்பட்ட வாக்குகளுடன் சேர்ந்து கிடைக்கும் என்பதற்காக கீழ்த்தரமாக வீர உரை நிகழ்த்தினார். அது பெரியளவில் பேசப்பட்டு வந்த போது, ஒரு வாசகர் காமராஜர் காலத்தில் தமிழகத்தின் சின்னமாக ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கோபுரத்தை என் தேர்ந்தெடுத்தார்கள் அதன் சிறப்பு என்ன தமிழுடனும் தமிழர்களின் கலாச்சாரத்துடனும் இருந்த தொடர்புகள் என்று பல்வேறு வற்றை விளக்கி எழுதினார். அத்தகைய சிறப்பிற்காகவும், தனித்துவத்திற்காகவும் அது தமிழகத்தின் தனி சிறப்பை பெறுவதால் அதுதான் சிறந்தது என்று எந்த வகையில் எந்த அறிஞர்கள் அதை தேர்ந்தெடுத்தார்கள் என்று விளக்கினார். அதை அவரும் படித்து பார்த்தார். சமூக வலைத்தளங்களில் சிறப்பாக வலம்வந்த கட்டுரை அது. அதன் பிறகே அந்த திருமாதொல் வளவன் வாய்மூடுடி கப்சிப் ஆனார் என்கிறார்கள். அதுபோலவே இப்போது உ பி யில் ஆரம்பித்திருக்கிறார்கள் போல. கட்டிடக்கலையின் தன்மை வானசாஸ்திரத்தின் அறிவு தாஜ்மஹாலில் இருப்பது அறியாதவர்கள்.

 • jagan - Chennai,இந்தியா

  .இபின் பதூதா எனும் முசுலீம் யாத்ரீகர் மதுரை சுல்தான் பற்றி எழுதியுள்ளதை இது தான்.... Ibn Batuta describes Ghiyasuddin Dhamgani's actions as: “ the Hindu prisoners were divided into four sections and taken to each of the four gates of the great catcar. There, on the stakes they had carried, the prisoners were impaled. Afterwards their wives were killed and tied by their hair to these pales. Little children were massacred on the bosoms of their mothers and their corpses left there. Then, the camp was raised, and they started cutting down the trees of another forest. In the same manner did they treat their later Hindu prisoners. This is shameful conduct such as I have not known any other sovereign guilty of. It is for this that God hastened the death of Ghiyath-eddin. One day whilst the Kadhi (Kazi) and I were our food with (Ghiyazu-d-din), the Kazi to his right and I to his left, an infidel was brought before him accompanied by his wife and son aged seven years. The Sultan made a sign with his hand to the utioners to cut off the head of this man then he said to them in Arabic : ' and the son and the wife. ' They cut off their heads and I turned my eyes away. When I looked again, I saw their heads lying on the ground. I was another time with the Sultan Ghiyath-eddin when a Hindu was brought into his presence. He uttered words I did not understand, and immediately several of his followers drew their daggers. I rose hurriedly, and he said to me ' Where are you going ' ? I replied : ' I am going to say my afternoon (4 o'clock) prayers. ' He understood my reason, smiled, and ordered the hands and feet of the idolater to be cut off. On my return I found the unfortunate swimming in his blood.[14]

 • ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா

  சத்திரபதி சிவாஜி, காந்தி போன்று விடுதலைக்கு போராடியவர்கள் மட்டுமே அயோக்கியர்கள்..

 • K.Sugavanam - Salem,இந்தியா

  தேவையே இல்லாத முட்டாள் தனமான பேச்சு.. நாட்டில் இன்னும் வறுமை ஒழியவில்லை. அனைவருக்கும் கல்வி கிடைக்கவில்லை . பல தோல்விகளையும் குறைகளையும் மறைக்க இப்படி பேசி மக்களிடையே பிரிவினை உண்டாக்குவது சரியில்லை.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  இந்த பாஜக முட்டாள் சொன்னது தவறு ..... சொந்த மகளிடமே "அப்படி-இப்படி" நடந்து கொண்டவன் கட்டிய கட்டடம் ஆயிற்றே ???? அது ஒரு போற்றப்பட வேண்டிய சின்னம் ..... இந்தியாவில் வாழும் முகலாயர்களின் வாரிசுகளுக்கும் அதுதான் பிடிக்கும் ....

 • SALEEM BASHA - RAS AL KHAIMAH-UAE,ஐக்கிய அரபு நாடுகள்

  இடிப்பதென்றால் இடித்து தள்ள வேண்டியது தானே அது ஒன்றும் முஸ்லிம்களின் புனித தலம் அல்ல

 • kuruvi - chennai,இந்தியா

  ஷாஜஹான் போதைப்பொருளுக்கு அடிமையானவன். அவர்களால் கட்டப்பட்டவை அனைத்தும் துரோகிகளின் கட்டடம் என்று அறியப்பட வேண்டும்.

 • Varun Ramesh - Chennai,இந்தியா

  மாற்றப்படுவதற்குப் பெயர் வரலாறில்லை. நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ நடந்தவை நடந்தவையே கசப்பான வரலாற்றை திருத்தி எழுத நினைப்பது மடமை. நடந்து முடிந்தவற்றில் நமக்குப் பிடிக்காதவைகளையும் நாம் விரும்பாதவைகளையும் திரித்து எழுதினால் உண்மைகள் மறைக்கப்படும் வரலாற்றில் பொய் இடம் பெறும். இது அறிவார்ந்த செயலல்ல ஆஃப்கானியர்களின் படையெடுப்பும் மொகலாயர் படையெடுப்பும் ஆங்கிலேயர் வருகையும் அழிக்க முடியாத வரலாறு. நமக்குப்பிடிக்கவில்லை தான். ஆனாலும் வரலாறு வரலாறு தானே. சுதந்திர இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி பேசுவது அறிவுடைமை போல் தோன்றுகிறது. ஆனால், படையெடுத்து வந்த அன்னியர்களை தடுத்து நிறுத்த இயலாமல் போனது நமக்கு முன் இம்மண்ணில் வாழ்ந்த மனிதர்களின் இயலாமை தானே. அதற்கு என்ன சொல்வது? சங்கீத் சோமின் கருத்து ஏற்புடையதல்ல

 • Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  சூப்பர் சார், நஞ்சுக்கள் இல்லாத புதிய இந்தியா. ஜெய் ஹிந்த், ஜெய் பிஜேபி.

 • Srikanth Tamizanda.. - Bangalore,இந்தியா

  களங்கம் மட்டுமா??

 • hussain - cuddlore,இந்தியா

  எந்த முகலாயரும் கோயிலை இடித்ததாக எந்த ஒரு சர்த்திரமும் இல்லை மாறாக கோயிலையும் மசூதியும் சேர்த்தே தான் கட்டி இருக்கிறார்கள் வரலாறு தெரியாமல் மூடர்கள் இங்கு உளறிக்கொண்டு இருக்கிறார்கள் அறிவீனர்கள்

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  "தேஜா மஹால்" என்றால் விபச்சாரிகளின் கூடாரம்.(தேவதாசிகள்) அதைத்தான் அழித்து ஷாஜஹான் தன மனைவிக்கு தாஜ்மகாலை கட்டியுள்ள்ளார். இதை காமசூத்திரம் எழுதிய வாத்சாயனர் அவருடைய புத்தகத்தில் எழுதியுள்ளார்.

 • arabuthamilan - Manama,பஹ்ரைன்

  அம்மா ராஜலட்சுமி அவர்களே "ஆங்கிலேயர்களை முதலில் கொல்ல துப்பிருக்கிறதா ? தங்கள் சுயநலத்திற்காக இந்தியர்களின் உழைப்பின் மூலம் வந்தது. ஆங்கிலேயன் சுரண்டியவை அனைத்தும்" ......................... இந்தியன் என்று சுயமாக சம்பாதித்திருக்கிறான் . அடுத்தவர்களை சுரண்டி... வஞ்சித்து...கொள்ளையடித்து தானே முன்னேறியிருக்கிறான். அதனால் ஆங்கிலேயர்களையும், இஸ்லாமியர்களையும் உங்கள் முட்டாள்தனமான வாதங்களால் இழிவு பண்ண வேண்டாமே. இந்து என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோமே....இவ்வளவு நாளும் என்னத்த கிழிச்சீங்க.

 • hasan - tamilnadu,இந்தியா

  எப்போ 2019 வருமோ இந்த மானங்கெட்ட காவி பி ஜே பி ஆட்சி ஒழியுமோ என்று எல்லோரும் நினைக்க ஆரம்பித்து விட்டார்கள் , அதை சமீபத்திய தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன , எனவே மக்களிடம் எதையாவது உளறி அவர்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த கருமம் பிடிச்ச கைபர் வந்தேறி பி ஜே பி அமைச்சர் வாந்தி எடுத்திருக்கிறான்,

 • Rajini Kanth - chennai,இந்தியா

  சங்கீத் சோம் நாட்டில் எவ்வளவோ பிரச்சினை இருக்க தேவை இல்லாததை பேசி தமிழ் நாட்டு மக்கள் கருத்துக்கள் என்ற பெயரால் அடித்துக் கொள்கிறார்கள். பத்த வச்சிட்டியே சோம்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  இப்படி எடக்கு முடக்காக பேசியதால் தான் , யோகி முதல்வராக முடிந்தது... அதனால் தான் இப்போதே இந்த MP துண்டை போடுகிறார்... யோகி இவரை அடக்கி வைத்தால் நலம்... இல்லை யோகிக்கே, இவர் ஆப்பு வைக்க கூடும்... [ ஆனால் ஓன்று நிச்சயம் இவர்கள் இப்படியே பேசி பேசி இந்தியாவை துண்டாடாமல் விடமாட்டார்கள்... இந்தியாவை முன்னேற்றுவேன் என்று சொல்லிவந்தவர்கள், இப்படி பேசி பேசி இந்தியாவை பின்னோக்கி இழுத்து செல்கின்றனர் ]

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  சரி பாஜக கூட்டம் தான் நியாயஸ்தர்கள் ஆச்சே... காங் மற்றும் மற்ற கட்சிகள் UP யை ஆண்டது போக , பாஜகவும் UP யை 10 வருடம் ஆண்டுள்ளது... ஆக அந்த 10 வருடத்தில், தாஜ்மகால் மூலம் கிடைத்த சுற்றுலா வருவாயை , மக்களிடம் திரும்பி அளிக்க இப்போதைய UP அரசு அல்லது மத்திய அரசு தயாரா?... கொலைகாரன் கட்டிய தாஜ் மகால் மூலம் வரும் சுற்றுலா பணம் தேசபக்தர்களுக்கு தேவையா என்ன? ...ரோஷக்காரர்கள் ஆச்சே இவர்கள்... தாஜ்மகால் மூலம் ஈட்டிய சுற்றுலா வருவாயை திரும்பி ஒப்படைத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பார்கள் ]

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தாஜ்மகால் களங்கம் என்றால் இனி மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றக்கூடாது.... அதுவும் முகலாயர்களால் கட்டப்பட்டது.... அவ்வளவு எதுக்கு இந்திய ரயில்வேயில் , இப்போது இருக்கும் தடங்களை முக்கால் வாசி பிரிட்டிஷ் காரன் தான் அமைத்தான்.... ஆக பிரிட்டிஷ் காரன் அமைத்த ரயில்வேயை பாஜக காரர்கள் இனி பயன்படுத்த கூடாது... இதுக்கு சிகரம் வைத்தாற்போல, ஜனாதிபதி மாளிகை , பிரிடிஷ் அரசாங்கத்தால் கட்டப்பட்டது... அதில் முகல் தோட்டம் கூட உள்ளது... அதனை பயன்படுத்தாமல் இருக்க தயாரா?... [ சொம்புகள் இப்போ சொல்லும் பாருங்க, பிரிட்டிஷ் காரன் கட்டினாலும், அது இந்திய பணம் என்று....சொம்புகளே ...உங்களுக்கு காங்கிரஸ் காரனையும் தான் பிடிக்கவில்லை , காங் காரன் கட்டிய அணைகள் உட்பட அனைத்தையும் இடிக்க தயாரா ? ]

 • shankar - chennai,இந்தியா

  ஏங்க ஷாஜஹான் மகன் ஓரங்கசீப் தான் ஷாஜஹானை சிறையில் அடைத்தார் இவர் வேறு மாதிரி சொல்றார் சரி அப்படியே இருந்தாலும் இப்ப அதுக்கு பழி வாங்குவாரா.

 • shankar - chennai,இந்தியா

  தாஜ் மகால் கட்டியாச்சு அது நடந்து 400 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இப்ப நாட்டில நடக்கிற கதையை பேசாம அறிவுகெட்ட தனமா பேசும் மூடர்கள்

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  வெள்ளையடிக்கப்பட்ட சரித்திரம் வேண்டாம்.. அரபி வரலாற்று ஆசிரியர்கள் சொன்ன உண்மைகளை அப்படியே சரித்திரத்தில் எழுதவேண்டும்... சத்தியம் என்றும் தோற்கக்கூடாது...

 • krishnan - Chennai,இந்தியா

  இந்து என்று ஒரு மதமே கிடையாது . மக்கள் தங்கள் குல சாமியையே வழிபட்டனர்( பெரும்பாலும் தங்களுடைய பாட்டன் பூட்டன்) . பிராமிணர்கள் கொண்டு திணித்த சாமிகளே சிவன் திருமால். வேத காலத்தில் இந்திரன் பிரம்மன் மட்டுமே சாமிகள். புத்தம் ஜைனம் உயிர் கொல்லாமை கடைபிடித்த பின்பே இந்துமதம் கடை பிடித்தது அதும் கண்டிப்பாக இல்லை அப்படி இருந்திருந்தால் ஜைனம் புத்த மதங்களை போல எப்போதோ அழிந்து போயிருக்கும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தைமூர் என்ற முகல் மன்னர் இந்தியாவை ஆண்ட காலத்தில் இத்தியாவின் ஆண்களை கொலைசெய்துவிட்டு ஆப்கானிஸ்தானிருந்து வந்தவர்கள் பாரம்பரிய இந்தியர்களின் இனத்தை அழித்தொழித்ததாக கூறுகிறார்கள் .இப்போதிருக்கும் சிவப்பான வடஇந்தியர்கள் , இந்த RSS காரர்கள் எல்லாம் தைமூர் வழி வந்தவர்கள் . பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கீத் சோம், தாஜ்மஹால் குறித்து தெரிவித்துள்ள கருத்து இதனடிப்படையில்தான் இருக்கும் போலிருக்கு . இனம் அழிக்கப்பட்டதால் அழித்தவர்கள் மீது கோபம் கொள்ளுது அழிக்கப்பட்ட இனத்தின் விழுதுகள் .

 • Bharatha Nesan - Chennai,இந்தியா

  தாஜ் மஹாலை கட்டிய ஷாஜகான் தனது தந்தையையே சிறையில் அடைத்தவர். அவர் இந்துக்களை முற்றிலுமாக அழிக்க நினைத்தார். இத்தகையவர்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கமாக இருப்பது மிகவும் வேதனையானது அவரது கருத்துக்கள் முற்றுலும் உண்மையானது. தாஜ்மகால் அடிமை கைதிகளை கொண்டு அவனது பொண்டாட்டிக்காக கட்டினான் ஷாஜகான்

 • Karikalan Govind - Chennai,இந்தியா

  தாஜ்மகால் நம் நாட்டின் அடையாளமல்ல என்பது உண்மையே. அப்படி கருதுமளவுக்கு பல சோழர்/ விஜயநகர..பேரரசுகளின் சின்னங்கள் இன்றும் இருக்கின்றன. வடநாட்டில் இருந்தவை அந்நிய படையெடுப்பில் அழிக்கப்பட்டு விட்டன. அப்படி அழித்தவர்களின் படைப்பை(உழைப்பு இந்தியர்களுடையதாக இருந்தாலும்) நாம் போற்ற வேண்டுமா?

 • அசோகா -

  கள்ளக்காதலின் சின்னம் தாஜ்மஹால்

 • Rajini Kanth - chennai,இந்தியா

  ஏண்டா சோம் என்கிற சோம்பேறி, உபியில் தினம் தினம் ஒரு சிறு பிள்ளை கற்பழித்து கொல்லப்படுகிறதே அதை பற்றி தினமும் செய்தி வருகிறதே அதை பற்றி பேச நாதி இல்லையாடா?

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  சொல்வதெல்லாம் உண்மை. அதன் கூட இதையும் சேர்த்திருக்க வேண்டும் மும்தாஜ் ஒரே மனைவி கிடையாது அது 7 ஆவது மனைவி. தாஜ்மாஹால் ஒரு கலை பொக்கிஷம் அல்ல, இரண்டு பிணத்தை புதைத்த இடம்- சுடுகாடு.

 • Rajini Kanth - chennai,இந்தியா

  இங்கு கருத்து தெரிவிக்கும் அனைத்து ஹிந்து சகோதரர்களுக்கு வணக்கம். உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள் உங்களுக்கு ஒரு முஸ்லீம் , அல்லது கிறிஸ்டியன் நண்பன் கூட இல்லை என்று. எவனோ ஒருத்தன் பதவிக்கு வேண்டி ஏதாவது உளறிக்கொண்டு இருப்பான். அதற்காக நீங்கள் கருத்து என்ற பெயரால் சண்டை போடுவீர்களா? அரசியல்வாதி எதிர்பார்ப்பது உங்கள் சண்டையை தான். அரசியல்வாதி பசிக்கு நீங்கள் இரை ஆக வேண்டாம். எல்லோரும் ஒற்றுமையுடன் இருப்போம் நாட்டை காப்போம்.

 • R.BALAMURUGESAN - Muscat,ஓமன்

  ...கொஞ்சம் ஓவராத்தான் பேசியிருக்காரு சாமிகூட்டத்து எம்.எல்.ஏ ... வாயை கொஞ்சம் அடக்கி வாசிங்கப்பா, வாயாலேயே கெட்டு போயிருவாங்க போல...

 • Ganapathysubramanian Gopinathan - Bangalore,இந்தியா

  இதனால் அனைவரும் அறிய வேண்டியது.... தயவு செய்து உண்மைகளை கூறாதீர்கள்.....

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  எல்லா கோட்டையும் அழிச்சி, புதுசா ஆட்டத்தை ஆரம்பிங்க...புதிய வரலாற்றை எழுதுங்கப்பா.. .அடுத்தவன் பொண்டாட்டியை அபகரிச்சி, அவளுக்கு பதினாலு குழந்தை கொடுத்து, பதினாலாவது பிரசவத்தில் ரத்தப் போக்கினால் இறக்க வைத்து (35 வயதுக்குள்) , அவள் இறந்தவுடன் அவளது தங்கையை மணந்தது... இதுக்கு பெயர் காதலா/..இப்படிப்பட்ட பேர்வழி கட்டியது காதல் நினைவுச் சின்னம்?... பெண்ணடிமை சின்னம்....

 • Raja Jerin - nagercoil,இந்தியா

  இவனுக போதும் பிஜேபி யை அழிக்க .....

 • Appu - Madurai,இந்தியா

  இந்த தறுதலை பேச்சை ஆதரித்து கூவும் சொம்புகள் இந்தியாவில் வாழ தகுதியற்ற தேச விரோத சக்திகள்

 • Sheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்

  நாட்டிலுள்ள அணைத்து மக்களுக்கும் உண்ண உணவு உள்ளதா? உடுத்த உடை உள்ளதா? மருத்துவ வசதி, கல்வி மற்றும் சுகாதார வசதி உள்ளதா? இதையெல்லாம் விட்டுவிட்டு மதம் மற்றும் அதனை சார்ந்த பிரச்சினைகளை பெரிதாக்கிப் பார்ப்பது நாட்டின் வளர்ச்சிக்கு சிறிதும் உதவாது. இதனை அணைத்து மக்களும் நன்கு அறிவர்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  உலகம் முழுவதும் மன்னர் ஆட்சி காலத்தில் பல கொடுமைகள் நடந்துள்ளன .. எந்த நாட்டை பிடித்தாலும் அங்கே தன் பெயரை நிலை நாட்டை வேண்டும் என்பது அரசர்களின் நியதி .. இது முஸ்லீம் அரசன் , ஹிந்து அரசன் , கிறிஸ்துவ அரசன் என்று கிடையாது .. எல்லாருமே இதை தான் செய்து இருக்கிறார்கள் ... மக்களாட்சி நடக்கும் இப்போது, 1000 வருஷத்துக்கு முன்னாடி வந்தது நம் கலாச்சாரம் இல்லை என்றும் இடிக்க வேண்டும் என்றும் செல்வது எவ்வளவு பெரிய அய்யோக்கியத்தனம் .. 400 வருஷத்துக்கு முன்னாடி பாபர் கட்டியது என்று கூறி இவர்கள் மசூதியை இடித்து கலவரம் செய்த்து பொழுதே தகுந்த தண்டனை கொடுத்து இருக்க வேண்டும் .. கலவரம் செய்து ஆட்சியை பிடித்து விட்டாரகள் .. இப்போது வீழ போகிறோம் என்று தெரிந்ததும் , விஷத்தை கக்குகின்றனர் .. மக்களை குழப்பி சண்டை உருவாக்க .. மக்களே தெளிவா இருங்க .. இந்த மூடர்களிடம் ஏமாறாதீர்கள் ..

 • நெல்லை மணி, - texas,யூ.எஸ்.ஏ

  தாஜ்மகால் பற்றி சுவாமி விவேகானந்தரின் கருத்து : சுவாமி விவேகானந்தர் தாஜ்மகாலைப் பார்த்த போது கூறிய கருத்து: "இங்குள்ள சலவைக் கல்துண்டு ஒன்றைப் பிழிய முடியுமானால் அதிலிருந்துகூட அந்த அரசனின் காதலும் சோகமும் சொட்டும். இதன் உள்ளே உள்ள அழகு வேலைப்பாட்டைக் கற்க வேண்டுமானால், ஒவ்வொரு சதுர அங்குலத்திற்கும் ஆறுமாதமாவது தேவைப்படும்".

 • Ray - Chennai,இந்தியா

  இதற்கு ஒவாய்சி நாட்டு மக்கள் அனைவரையுமே தலை குனியும்படி ஒரு பதிலை சொல்லியிருக்கிறார்

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  படிப்பறிவு இல்லாத, பொது அறிவு இல்லாத ,நெலமய சரியா கணிக்கத் தெரியாவானுங்க நாட்ட ஆண்டா இப்டில்லாந்தான் நடக்கும்..... April 2019 வர சகிச்சுக்க வேண்டிதுதான்.....

 • Green Man - Coimbatore,இந்தியா

  இடை தேர்தலில் எல்லாம் தோற்க ஆரம்பிச்சாச்சு, எதையாவது கிளப்பிவிட்டு பிரச்சனையா உண்டு பண்ணாத்தான் காலத்தை ஓட்ட முடியும், நாட்ல எவளோ ப்ரிச்சனை அத எல்லாம் விட்டுட்டு எங்க போறானுங்க பாருங்க

 • POPCORN - Chennai ,இந்தியா

  குழந்தை கள் இறப்பு விவகாரத்தை மறைக்கும் முயற்சி

 • S.M.Noohu - Jeddah,சவுதி அரேபியா

  இப்படி ஒரு எம் எல் ஏ இருக்காருன்னு நமக்கெல்லாம் தெரியாமல் இருந்திச்சு. இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சு போச்சு. இதுதான் இப்போ உள்ள விளம்பர டெக்னிக்.

 • Adirai Azagan - Doha,கத்தார்

  இது மாதிரி சொல்கின்ற உன்னை மாதிரி முட்டாள்கள்தான் நாட்டின் மாபெரும் அவமானம் ,உன்னை மாதிரி ஆள்களை தேர்ந்தெடுத்த மக்களை சொல்ல வேண்டும் .முழு முட்டாள்களின் கூடாரம் தான் இப்போதைய பி.ஜே.பி அரசு. எப்படியாவது publicity ஆகவேண்டும் என்பதற்காக எதையாவது உளறிக்கொண்டிருப்பது தான் இவன் மாதிரி பி.ஜே.பி எம் ,பி களின் வேலையாகி விட்டது. ஏன்யா உனக்கு கொஞ்சம் கூட சுய புத்தி உள்ளதா ? அப்படி பார்த்தால் டெல்லி செங்கோட்டை , குதுப்மினார் போன்ற இன்னும் எத்தனையோ முகலாயர்களின் நினைவு சின்னங்களையெல்லாம் என்ன செய்வாய். அங்கு உ, பி யில் ஒரு காவிக்காரன் ,மக்களுக்கு செய்ய வேண்டிய எத்தனையோ நலத்திட்டங்களை விட்டு விட்டு கண்ணில் காண்பவற்றை எல்லாம் காவி ஆக்குகிறான். கருப்பு ,வெள்ளை ,பச்சை ,மஞ்சள் ,சிவப்பு இவைகள் தான் இயற்கை நிறங்கள் ,அதனால் தான் ,கண்ணெங்கரேல் ,வெள்ளை வெளேர், பச்சை பசேல் ,மஞ்ச மஞ்சேர், செக்க சிவப்பு என்று சொல்கிறோம் .ஆனால் காவி நிறம் பல நாட்கள் வரை குளிக்காமல் சுத்தமில்லாத சன்யாசி மார்கள் தங்களின் சுத்தமின்மை வெளியில் தெரியாமல் இருக்க தேர்ந்தெடுத்த செயற்கை நிறம். உ. பி. முதல்வர் என்னதான் காவி மயம் என்று தலை கீழாய் நின்றாலும் மரம் ,செடி,புல் தரை மைதானம் இவற்றை எல்லாம் உன்னால் ஒன்னும் செய்ய முடியாது.

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ...நீங்கள் ஆட்சிக்கு வந்தது நிகழ்கால மக்களுக்கு நல்லது செய்யவா? அல்லது கடந்த கால வரலாறை தோண்டி எடுக்கவா? அறிவுகெட்ட மூடர்களே ...இப்போ தாஜ்மஹால் தேவையா? மிக பெரிய அவமான கட்சி இந்தியாவிற்கு இந்த பாஜக மதவாத கட்சி

 • Muruganandam - karaikal,இந்தியா

  இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய களங்கம் இந்த எம் எல் ஏ, என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் உளறும் இந்த எம் எல் ஏ பதவியில் இருந்து என்ன புண்ணியம், பி ஜே பி ஏன் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கு இவர்கள்தான் காரணம்

 • POPCORN - Chennai ,இந்தியா

  சோமூ போய் கொரக்பூர் குழந்தை களை காப்பாற்ற வேண்டும்

 • yila - Nellai,இந்தியா

  அப்போ அடுத்த டார்கெட் தாஜ்மஹாலா? அட அநியாயமே

 • kadiramangalattan - DAMMAM,சவுதி அரேபியா

  தாஜ் மஹால் கலை நுணுக்கத்தாலேயே பார்க்க படுகிறது. ஷாஜஹான் என்ற நபரின் காதல் இரண்டாம் நிலை தான். எது முக்கியமோ அதை விட்டு விட்டு முக்கியமில்லாததை பிடித்து அரசியல் செய்வதுதான் பிஜேபி யின் வேலையாக உள்ளது. நம் நாட்டின் துரதிஷ்டம்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பிரிட்டிஷ்க்கால  சின்னங்களும் பெயர்களும் அடிமைக் காலனிச் சின்னங்களென்றால்  மொகலாயரது   மட்டும் புனிதமா? அவர்களும் கூட  கொள்ளை கற்பழிப்பு சுரண்டலுக்காக படையெடுத்து வந்த இழிவானவர்கள் தானே ? கருணாநிதி காலத்தில்கூட பல ஆங்கிலேய நினைவுச்சின்னங்களும் சாலைப்பெயர்களும் மாற்றப்பட்டனவே..இத்தனைக்கும்  ஷாஜஹானோடு பல ஒற்றுமைகளுள்ளவராயிற்றே.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  அமீத் ஷ் மகன் ஊழலை திசை திருப்ப இன்னொரு திட்டம் ரெடி .

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  பல தரப்பட்ட மக்கள் வாழும் நாட்டில், அரசியல் சட்டத்திற்கு எதிராக மக்களிடம், நயவஞ்சகத்தையும், சிறுபான்மையினருக்கு எதிராக விரோதத்தையும் பரப்பி வருகின்றார்கள். நம் தேசத்தை மதிக்கும் நடுநிலையானவர்களின் எண்ணங்கள் இவர்களுக்கு எதிராக திரும்புகிறது என்பதற்கு உதாரணம் இங்கு பதிவிடும் இந்து சகோதரர்களே சாட்சி.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பாத்திட்டே இருங்க, இந்தியாவ சோமாலியா மாரி "காவி-லியா" வா ஆக்கிடுவானுங்க.....

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  இந்திய என்ற நாடு எப்போது உருவாகியது, என்று கேள்விக்கு பதில் தெரியாதவர்களின் புலம்பல். நமது கலாச்சாரமா? அப்படியென்றால், அது ஆரிய வந்தேறிகளின் கலாசாரம் என்று சொல்ல வருகின்றார்கள் இந்த பிஜேபினர், தாஜ்மகாலை களங்கம் என்று சொல்லும் வெறியர்கள் செங்கோட்டையை என்னவென்பார்கள்? முகலாய மன்னர்கள் இந்துக்களை முற்றிலுமாக அழிக்க முற்பட்டிருந்தால் இப்போது இருக்கும் முஸ்லிம்கள் வெறும் 15 சதவிகிதமாக இருந்திருக்காது, மாறாக 85 சதவிகிதம் என்ற நிலையில் மாறியிருக்கும். இஸ்லாம் யாரையும் கட்டாய படுத்தி இஸ்லாத்தில் சேர்க்க சொல்லவில்லை. எங்கள் நபியின் வளர்ப்பு தந்தையே இஸ்லாத்தை தழுவவில்லை. இத்தனைக்கும் எங்கள் நபி மீது பிரியம் கொண்டவர். அசைக்க முடியாத குறிக்கோளை ஏற்று தான் இஸ்லாம் உலக மக்கள் அளவில் முதல் இடத்தை நோக்கி விரைவாக வளர்ந்து கொண்டிருக்கு, பித்தலாட்டக்காரர்களின் பொய்யுரையின் படி முஸ்லிம்கள் அதிகம் பிள்ளை பெற்றிருந்தால் கூட, இந்தியாவில் முஸ்லிகளின் விகிதாச்சாரம் 50 சதவிகிதமாவது ஆகியிருக்கும். மாறாக சுதந்திரம் பெற்ற போது இருந்த விகிதாச்சாரம் தான் இப்போதும் இருந்து வருகின்றார்கள். இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் வன்முறை என்ற போர்வையில் முஸ்லிம்களை திட்டமிட்டு பயங்கர வாதிகள் கொலை, மற்றும் அவர்களின் பொருளாதாரத்தை அழித்து வருகின்றார்கள்.

 • Rajalakshmi - Kuwait City,குவைத்

  தாஜ்மஹால் ஷாஜஹான் கட்டியதே இல்லை. ஹிந்து ராஜாவின் பிரமாண்ட அரண்மனையை கைப்பற்றிய முகலாய ஷாஜஹான் வழக்கம் போல் அதனை ஒரு மசூதி போல மாற்றியமைத்து விட்டது தான் உண்மை. இதேபோல பல கோவில்களை கைப்பற்றி அவற்றை மசூதிகளாக மாற்றியிருக்கின்றனர். சரஸ்வதி தேவியின் கோவிலில் ( மத்தியபிரதேசம் ) இன்றுவரை ஹிந்துக்கள் சொந்தம் கொண்டாட மறுப்பது முஸ்லிம்களும் செக்குலர் அரசாங்கமும். பாபர் மசூதி என்பதும் ஸ்ரீராமர் கோவிலை இடித்து தள்ளி அதே கற்கள் இத்யாதி வைத்து எழுப்பிய ஒரு structure . அது இடிந்து விழுந்தது இன்ஷா அல்லாதான். துருக்கியிலிருந்து திமிரெடுத்து நம் பாரத தேசத்தை தாக்கியவன் துருக்கியிலிருந்து materials எதுவும் கொண்டுவரவில்லை save his துவேஷம் & மதவெறி. கிறித்துவ மதவெறியர்களும் same same . வேடிக்கை தான் இன்று பல மேடைப்பேச்சாளர்கள் ஹிந்துக்களைப் பார்த்து மதநல்லிணக்கம் / மதவெறி கூடாது என மிகவும் அறுக்கிறார்கள். இந்த அறுவைக்கு பொன்னாடைகளும் இலவசமாக போர்த்தப்படுகின்றன. இந்த செகுலர் பேச்சாளர்கள் டெங்கு கொசுக்களால் தாக்கப்பட்டு மடிந்தால் சந்தோஷமே.

 • saravanan - kadayanallur

  ஆங்கிலேயர்கள் நம்மை அடிமை படுத்தி கொடுமை படுத்தியவர்கள் அவர்கள் கட்டிய அணை ரயில் தண்டவாளம் கட்டிடம் அனைத்தையும் அழித்து விடலாமா மத வெறி பிடித்த முட்டாள்களே

 • Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா

  மோடி வெகுவிரைவில் பிஜேபியை விட்டு வெளியேறலாம் என நினைக்கிறேன். மடயர்களை வைத்து கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது. காங்கிரசைவிட பெரிய எதிரிகள் மோடிக்கு அவருடைய கட்சியிலேயே இருப்பது தெளிவாக தெரியுது

 • HSR - Chennai,இந்தியா

  என்னங்கடா நாடு இது ,, ஒருத்தர் உண்மையை சொன்னா தவறா ? தீபாவளிக்கு பட்டாசு வெடித்தால் அதன் மேல் மூத்திரம் அடிப்பேன் என்று சொன்ன கீ , வீரமணி,, ரம்ஜான் பிரியாணியில் , க்ரிஸ்ம்ஸ கேக்கில் ,,இவ்வாறு செய்வானா ? ஏண்டா எங்கள ஏதாவது சொன்னா வாய ,மற்றும் எல்லாத்தையும் மூடிக்கினு வேடிக்கை பாப்பீங்க,, போங்கடா ,, இது அவமான சின்னம்,, கேவலத்தின் உச்சம்,., இது தவறே இல்லை ,, முடிந்தால் இடித்துவிடலாம் பாப்ரி மஸ்ஜித் போல.

 • செந்தில்குமார் -

  பாத்துப்பா, வரலாற்று உண்மைகளை மாத்தீறாதீங்க.

 • Siva - Chennai,இந்தியா

  சார் சொல்லிட்டாரு பிஜேபி பெரும் களங்கம்னு திராவிடம் உலக பொதுமறைய போதிக்க வந்தது போங்கடா நீங்களும் உங்க டுமிழன் திராவிடமும்......

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  ஓட்டுக்கா அரசியல்வாதிகள் ஒரு ஐந்து ஆண்டு பதவி போட்டிக்கு இந்தியா, தமிழ் நாடு என்று வரலாறை பற்றி பேசி மக்களை ஏமாற்ற கூடாது தேர்தல் நடப்பது அரசு துறைகள், அரசு அதிகாரிகளை நிர்வகிக்கத்தான் - அதை விட்டு நாட்டின் வரலாறு மக்கள் கலாச்சாரம் மதம் நமபிக்கை பற்றி பேசுவதை நீதிமன்றங்கள் தடை செய்யவேண்டும் சும்மா ஓட்டுக்கா ஏதும் பேசிவிட்டு அரசியல்வாதிகள் போவது மோசடி கணம் கோர்ட்டார் அவர்களே இந்திய இவர்கள் ஆளும் ஐந்து ஆண்டு நாடு மட்டும் அல்ல வாழ்ந்தவர்களும் வாழ்பவர்களும் தான் இந்திய தமிழ் நாடு ஆகவே சும்மா அரசியல்வாதிகள் வீண் பேச்சுக்களை நிறுத்தவேண்டும் - தாஜ் மஹால் -தாஜ் மஹால் ஒரு களங்கம்: பா.ஜ., எம்.எல்.ஏ., பேச்சால் சர்ச்சை என்றால் ப்ரித்வி ராஜ் சவுகான் கூட தான் ஒரு களங்கம் பிரிட்டிஷ் அரசை ராணியை ஆதரித்து தர்பார் நடத்திய ஹிந்து ராஜாக்கள் களங்கம் இல்லையா காஷ்மீர் ராஜா கரண் சிங்க் - ஒரு களங்கம் இல்லையா அரசியல் வாதிகளே ஐந்து ஆண்டு பதவி பணம் தானே உங்கள் நோக்கம் அது வரை பார்த்து பேசுங்கள் - ஒற்றுமையாக காலாகாலமாக வாழும் மக்களை பிரித்து வேடிக்கை பார்க்காதீர்கள் மக்கள் விழித்து கொண்டார்கள் பஞ்சாபி கேரளா தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதியை மோடி ஷா கூட்டம் கொஞ்சம் கவனிக்கவும்

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  இந்த சங்கீத் சோம் தான் இந்தியாவின் மிக பெரிய மாட்டு இறைச்சி ஏற்றுமதி நிறுவனத்தை ஆரம்பித்தவர். பிரச்னை வெடித்தவுடன் ராஜினாமா செய்து பினாமிகளை வைத்து நடத்தி வருபவர் .

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  அமைதி மார்க்க கூட்டமே, மொஹலாயர்கள் பரம்பரை இல்லை நீங்கள். நீங்கள் இந்த நாட்டின் பரம்பரை, அவர்கள் வணங்கிய கடவுளை நீங்கள் வணங்குவதால் அவர்கள் உங்கள் மூதாதையர்கள் ஆகிவிடமுடியாது. உங்கள் மூதாதையர்கள் இந்துக்கள், அவர்களும் இவர்களால் பாதிக்கப்பட்டவர்கள்தான். ஆகவே மதம் என்னும் முகமூடியை போட்டுகொண்டு கண்ணைமூடிக்கொண்டு கொள்ளைக் கூட்டத்தை ஆதரிக்காதீர்கள்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  பாஜக மற்றும் விஸ்வ இந்து பரிஷத் என்றுமே தஞ்சைக்கோவில் அஜந்தா குடுமியான்மலை ஓவியங்கள் ஆகியவற்றைவிட வீணாப்போன கள்ளக்காதல் சின்னமாம் தாஜிமெஹலை   உயர்வாக நினைத்ததில்லை . வெள்ளைக்காரன் நம்மைக் கேவலப்படுத்தத்தான் நமது மூவேந்தர் பல்லவர் குப்தர்கால  புராதன அதிசயிக்க கட்டுமானங்களைத் தாழ்த்தி அதனை உயர்வாக பிரச்சாரம் செய்தான். அதையே சங்கீத் சோம் எதிரொலித்துள்ளார். அவர் முன்பு எத்தனையோ நாட்டுநடப்புக்களைப் பற்றி பேசியதைக் கண்டுகொள்ளாத ஊடகங்கள் இதனைப் பெரிது படுத்தி விளம்பரம் தேடுகின்றன.  

 • Franklin Kumar - Chennai,இந்தியா

  ப ஐ க வே இந்தியாவின் களங்கம் தான்

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  கருத்துக்கள் மூலம் இதோ விஷமிகள் நாங்கள் என வெளிவந்தமைக்கு பாராட்டுக்கள்..

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இவர்களால் இதை தவிர மக்களுக்காக உருப்படியாக எதுவும் செய்ய முடியாது... வேற்றுமையை வளர்க்கும் பேச்சு மட்டுமே இவர்களால் முடியும்.. இவர்களின் மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள்..விரைவில் தெரியும்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  தாஜ் மகால் ஒரு நல்ல சின்னம் தான் . சில செய்திகளை அது நினைவுபடுத்துகிறது . 5000 மனைவிகளை வைத்திருந்த ஷாஜகானின் நினைவை நமக்கு தருகிறது. ஒரு மனிதனை கொன்று அவன் மனைவியை தன மனைவியாக்கி அவளுக்கு 14 குழந்தை கொடுத்தவரின் வரலாறும் நமக்கு தெரிகிறது. அவர் இறந்தவுடன் அவரின் சகோதரியையும் அபகரித்த மனிதரின் நினைவை அது தருகிறது . அடுத்தவரின் கட்டிடத்தை அபகரிப்பது அதை தன் கட்டிடம் என்று காண்பித்த சூழ்ச்சியும் தெரிகிறது . ஷாஜகான் காலத்தில் கொடிய பஞ்சம் நிலவிய போது சோற்றுக்கே வழி இல்லாமல் இருந்த நேரத்தில் இந்த கட்டிடம் எப்படி கட்டி இருப்பார்கள் என்ற கேள்வி எழுப்பவும் இந்த சின்னம் தான் துணையாக நிற்கிறது .

 • Balaji - chennai,மத்திய ஆப்ரிக்க குடியரசு

  பிஜேபி எம்பி சொல்வது தவறு இல்லை, நாம தவறான வரலாறை படித்து வந்துள்ளோம். ஆனால் இதற்க்கு ஆங்கிலேய ஆட்சியில் இருந்தபோது மற்றும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை, தேஜோமஹால் என்கிற சிவன் கோவிலை தான் முகலாயர்கள் ஆட்சிக்காலத்தி்ல் காதலியின் சமாதி்யாக மாற்றி ஹிந்துக்களின் நம்பிக்கையை அவமானப்படுத்தி்னர். நம் யாருமே இஸ்லாமியர்களுக்கு எதி்ரானவர்கள் இல்லை அதற்காக தவறான வரலாறை படிக்க வேண்டிய அவசியம் இல்லை. இடையில் ஆட்சி புரிந்தார்கள், அவர்களின் ஆட்சி போனவுடனே இதை மாற்றியிருந்தால் இப்போது எந்த பிரச்னையும் வந்தி்ருக்காது.

 • பொன் வண்ணன் - chennai,இந்தியா

  பிஜேபியே இந்த நாட்டிற்கு பெரும் களங்கம் தான்..

 • P.S.KUMARAPPA - CHENNAI,இந்தியா

  காதல் என்பது ஒரு முறை ஒருத்தர் மீது வருவது. மூன்று மனைவியை கட்டியவன் ஒரு மனைவிக்கு ஒரு கட்டடம் கட்டினால் அது சமாதி. அது காதல் சின்னம் என்று கூறினால் அது காதலுக்கே அவமானம். மேலும் shah khan ஒன்னும் நமது நாட்டு ராஜா கிடையாது. நமது நாட்டின் மீது படைஎடுத்து வந்து நமது நாட்டை ஆக்கிரமித்த ஒரு கூட்டத்தின் வாரிசு .

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  ஷாஜகானின் நூற்றுக்கணக்கான மனைவிகளில் அந்தப்புர அடிமைகளில் மும்தாஜும் ஒருவர். அழகாக இருந்த இவரை அவரின் கணவரை கொன்று அபகரித்து உள்ளான். அவர் நோய்வாய்ப்பட்டு இருந்த போதே மும்தாஜின் சகோதரியை பலவந்தமாக மனம் புரிந்து கொண்டார். ஷாஜகானின் நூற்றுக்கணக்கான மனைவிகளில் அவன் சொந்த மருமகள்களும் இருந்தனர் என்பது கூடுதல் தகவல். இதில் எங்கு காதல் இருந்தது? கோவிலை இடித்து கட்டிய இந்த கட்டிடம் எப்படி காதல் சின்னம் ஆகும்???

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  ஏற்கனவே பல மனைவிகள் உள்ள ஷாஜஹான், அடுத்தவன் மனைவியை ஆட்டையை போட்டு, அது செத்ததுக்கு அப்புறமும் பல மனைவிகளை ஒரு கட்டிடத்தியும் கட்டுவார். அதனை காதலர் சின்னம் என்றால் எப்படி ஏற்க முடியும். அந்த கட்டிடத்தை பராமரிக்கிறதுக்கு பதில் அந்த காசில் நதிகளை இணைக்கலாம்

 • Narayan - Zurich,சுவிட்சர்லாந்து

  தாஜ்மஹால் ஒரு அவமான சின்னம்.

 • ushadevan -

  இந்தியா வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டிய இந்த நேரத்தில் இவர் ஏன் பிதற்றிக் கொண்டு இருக்கிறார். இவர் பிரதமருக்கு தெரிந்து தான் பேசுகிறாரா.

 • Pattu Maami - Mambalam, Chennai,இந்தியா

  Hurting other religion peoples are not a good behaviour. We should respect them. If don't like, just keep quite instead of speaking like illiterates.

 • vnatarajan - chennai,இந்தியா

  தாஜ்மஹால் ஒரு களங்கம் அல்ல இவர்கள் பேச்சால் மோடிக்குதான் களங்கம் ஏற்படுத்துகின்றனர். ஒரு நாட்டின் கடந்தகால வரலாற்றை யாராலும் மாற்றமுடியாது. அரசியல் வாதிகள் நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன செய்யலாம் என்ற வழியை நோக்கி செல்ல முயற்சிக்காமல் ஒரு சமூகத்தின் மத்தியில் நச்சு எண்ணங்களையும் விரோதப்போக்கையும் முளைக்க விதையை விதைக்கிறார்கள். தற்போது இது தேவையற்ற சர்ச்சை. இந்த அரசியல்வாதிகளால் மத ஒற்றுமை சீர்குலைய நேரிடும். இதனால் 2019 ல் பிஜேபி க்கு தேர்தலில் சறுக்கல் ஏற்படலாம்

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  IF BJP WINS AGAIN, BJP WILL MAKE INDIA AS A PLACE WHERE PEOPLE WHO CAN'T LIVE HAPPILY....IF THEY BOTHER ABOUT TAJ , WHY THEY R NOT BOTHERING ABOUT RASTRABBATHI BHAVAN WHICH WAS BUILT BY BRITISH N MUGAL GARDEN IS THERE TILL. THIS MOMENT.... WILL BJP GOVT HAS THE GUTS DEMOLISH THAT ALSO??

 • chails ahamad - doha,கத்தார்

  நாட்டில் நிலவும் ஆயிரத்தெட்டு பிரச்சனைகளில் இதுவும் ஒன்றே என்றபடி அந்த விடயத்தை பா ஜ வின் மதவெறி அரசியலின் ஒரு அங்கமாக நாம் கருதுவோம் , மக்களுக்கான சேவைகளின் மூலம் கட்சியை வளர்த்திட திட்டங்கள் போடுவதை தவிர்த்து தேவையற்றபடி புதிய சர்ச்சைகளை உருவாக்கி , மக்களின் ஒற்றுமைகளையும் மத நல்லிணக்கத்தையும் சீர் குலைத்து அரசியல் பிழைப்பு நடத்திட தாஜ் மஹால் விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்கள் , அந்த தாஜ் மஹால் என்பதை வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மூலம் அந்நிய செலாவணியை இந்திய அரசு வருமானம் கண்டது , அங்கே கைடுகளாக பணியாற்றியவர்களுக்கும் பிழைப்பு நடந்தது , அதற்கும் உலை வைக்கின்றார்கள் இந்த மத வெறியர்கள் , இஸ்லாமிய வாழும் வழி முறையின்படி சமாதிகள் வணக்க ஸ்தலம் கிடையாது என்பதால் இந்த தாஜ் மஹால் இந்திய வரலாற்று சின்னங்களில் ஒன்றாகவே காணப்படுவதால் அதனை தகர்த்து விட முயற்சிக்கின்ற காவிகளின் எண்ணங்கள் நிறைவேறட்டும் , இந்திய வரலாறுகள் காவிகளின் கை வண்ணத்தில் மூடத்தில் திளைக்கட்டும் .

 • Bava Husain - riyad,சவுதி அரேபியா

  ............"நாலு பேரும், நல்லா இருந்த நாடும்"...............

 • Indhuindian - Chennai,இந்தியா

  He is completely correct in his observation. The moghul invasion and rule is one of the darkest periods of our country. The Mughal rulers had no morals killing their own brothers, putting their own brothers and parents in jail. What kind of rulers they were. Go back in the history of the country and look at Hindu/Buddhist rulers of any era. They were not only benevolent but absolutely selfless and had only their citizens in mind and the real Ram Rajya was in place and India was the envy of the entire world. All these were destroyed with the advent of Mughal regime. They looted the country, destroyed our symbols of heritage. What is wrong in this Minister's observation. Taj Mahal was a great architectural and structural marvel. But that was to satisfy his ego for his wife. While the citizens were subject to endless and unspeakable cruelty, the ruler was engrossed in building a mausoleum for his wife. May be it is a world wonder but was built on the blood of thousands of brethren persecuted and killed. How can this be glorified?

 • Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்

  பல இனமக்கள் வாழும் இந்திய திருநாட்டில் ஏண்டா இந்த மாதிரி விஷத்தை தெளிக்கிறீர்கள்... நாட்டுக்கு தேவையான உருப்படியான திட்டங்களை கொண்டுவர துப்பில்லை .. இதில் இந்த மாதிரி சர்ச்சைகள் வேறு...

 • Tamil - Coimbatore,இந்தியா

  பிஜேபிக்கு அடுத்த எலெக்ஷனிலே டெபாசிட் கிடைக்குமான்னு சந்தகம்தான் (இந்தியா full லாதான்).

 • mvh v - Singapore,சிங்கப்பூர்

  பா.ஜ., எம்.எல்.ஏ. ஒரு களங்கம்

 • B.Indira - thane,இந்தியா

  சர்ச்சை ஏற்படுத்துவதிலும் ,வெறுப்பு பேச்சிலும் புகழ் பெற்றவர்..இந்த ஆளை கட்சியிலிருந்து நீக்காதது பெரிய தவறு.இத்தனை நாளாக பேசாமலிருந்தார். ஓட்டுக்காக கட்சி தலைமை பேசாமல் இருக்கிறதா? இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததற்காக பிஜேபி பின்னால் வருந்த வேண்டி இருக்கும்

 • Ayappan - chennai,இந்தியா

  தஞ்சை பெரிய கோவிலை விடவா தாஜ் மஹால் உயர்ந்தது? அறுபது வருடமாக தவறாக சரித்திரத்தை தரித்திரமாக எழுதியுள்ளார்கள் . நாம் மாற்றி எழுதுவோம். வாழ்க இந்தியா

 • Ganesh Tarun - Delhi,இந்தியா

  தேஜோமஹாலையா எனும் சிவன் ஆலயத்தை ஷாஜஹான் தன்னுடைய நான்காவது மனைவி மும்தாஜுக்கு சமாதியாக மாற்றிவிட்டான். இது தான் வரலாறு.

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  லூசு பய எதுவேண்டுமானாலும் உளறுவான்., ஷாஜஹான் இந்துக்களை ஒழிக்க நினைத்தாராம். அப்படியென்றால் இந்துக்கள் இந்தியாவில் சிறுபான்மை மக்களாக இருக்க வேண்டும், எந்தக்கிராமத்தில் எந்த நகரத்தில் இருக்கிறார்கள்?

 • Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா

  ராஜபுதன அரசர் ஒருவரிடமிருந்து அரண்மனையை கைப்பற்றி, அதிலிருந்த சிவன் கோயிலையும் மாற்றி, சில காஸ்மெட்டிக் மாற்றங்களை செய்து , தான் கட்டியதாக ஷாஜஹான் கூறிக்கொண்டுள்ளார். அதையே வரலாறாக காங்கிரஸ் மாற்றிவிட்டது. தாஜ்மஹால் வளாகத்தில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கும் பல அறைகளை திறந்து அவைகளில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்தால், அது ஒரு ஹிந்து கோயில் இருந்த இடம் என்று தெரியும்.

 • BJP NESAN - BJP PURAM

  நாட்டுக்குத் தேவையான விசயங்களை விட்டுவிட்டு தேவையில்லாத காரியங்களைச் செய்வதில் எங்கள் தலைவரும் சரி அவரது எடுபிடிகளான நாங்களும் சரி அதிக சிரத்தையுடன் வேலை செய்வோம்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அது அவரது சொந்த கருத்து . இதில் பி ஜெபிக்கு அல்லது மத்திய அரசுக்கோ சம்பந்தம் இல்லை. இப்படித்தான் அனைத்து கட்சியினரும் தங்களின் சொந்த கருத்தை கூறி பிரச்சனை வந்ததும் அந்த பேச்சை நான் பேசவில்லை என்று பல்டி அடிப்பது வழக்கமாக இருக்கிறது. அது இருக்கட்டும் , பாகிஸ்தான் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதியை விடுவித்து இருக்கிறதே அதை பற்றி பத்திரிகைகள் அலசவில்லையே. ஏன்?

 • Ramesh Sundram - Muscat,ஓமன்

  உண்மை தான் தாஜ்மஹால் ஒரு அவமான சின்னமே திரு ஷாஜஹான் மும்தாஜ் அழகில் மயங்கி அவரது கணவனை கொன்று இவரை மணந்து 14 பிரசவத்தில் மும்தாஜ் உயிரை விட்டார் என்றும் பிறகு மும்தாஜின் சகோதரியை கூட விட்டு வைக்காமல் அவளையும் மணந்ததாக சரித்திரம் சொல்லுகிறது

 • Prabaharan - nagercoil,இந்தியா

  இவர்கள் இவ்வளவு நாளும் இந்தியாவில் இல்லை? ஒரு தடவை மெஜாரிட்டியுடன் வந்ததற்கு இந்த ஆட்டம் ஆடுகிறார்கள். மக்களுக்கு உருப்படியானவைகளை செய்துகொடுக்க தானே இவர்களை தேர்ந்தெடுத்தார்கள். இவர்கள் தேவை இல்லாத விஷயங்களை தான் பெரிதுபடுத்தி பிரச்னைகளை உருவாக்குகிறார்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement