Advertisement

டெங்கு சிகிச்சை முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பு

சென்னை : டெங்குவுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட வேண்டும், தனியார் மருத்துவமனைகளில் டெங்கு நோயாளிகள் அனுமதிக்க மறுக்கப்படுகிறார்கள் என சென்னை ஐகோர்ட்டில் சூரிய பிரகாசம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கில் இன்று தமிழக அரசு தரப்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் டெங்கு சிகிச்சை சேர்க்கப்பட்டுள்ளது. அக்டோபர் 9 ம் தேதி வரை 11,944 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40 பேர் உயிரிழந்துள்ளனர். கொசுக்களை கட்டுப்படுத்த ரூ.13.95 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்குவை கண்டறிய தமிழகம் முழுவதும் 125 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது என கூறி எவரையும் திருப்பி அனுப்பவில்லை. நிலவேம்பு குடிநீருக்காக 2000 கிலோ பொடி கையிருப்பு உள்ளது. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோயாளிகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தாலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (6)

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  என்ன அநியாயம் இது இந்த டெங்குக்கு எவ்ளோ கொழுப்பு பாருங்கோ இந்நாள் முன்னாள் முதல்வர் மந்திரிகளையெல்லாம் தாக்கவேபயப்படத்தே எதனால் இந்த நிலை ராகுல் கண்டுபிடிச்சுட்டாரு பாமரனைக்கண்டாலே தான் தாக்குமாம் மத்தபடி எந்த மந்திரிகள் கவர்னர் எதிர்கச்சிக்கறாளைக்கண்டால் பயந்துண்டு ஓடிடுமாமே உண்மையா

 • மாதவன்.க,திருவாரூர் -

  சிவசுப்பிரமணியன் சார் வருத்தம் வேண்டாம் அவர் கண்டிப்பாக இந்திய பாரம்பரியமாக இருக்க மாட்டார்

 • Sivasubramanian - chennai,இந்தியா

  படு கேவலமாக மிக மட்டமாக கருத்து தெரிவித்திருக்கிறார் தமிழர்நீதி என்ற பெயரில் ஒருவர். குறிப்பாக, ஹிந்துக்களையும் ஹிந்து பண்பாடுகளையும் கடுமையாக தாக்கிக் கொண்டிருக்கிறார் இவர். இவருடைய கருத்துக்கள் அனைத்தும் ஒருதலை பட்சமானவை. அது அவருக்கே தெரியும் என நினைக்கிறேன்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  மை லார்ட் டெங்கு வந்தால் இன்னும் எந்த நோய் வந்தாலும் தனியார் மருத்துவர் ,மருத்தவ மனை , மருந்து கம்பனிக்கு தான் வருமானம் . நோய் தாக்கும் இலக்கு மக்கள் ஏழைகள் சரியான பொது சுகாதர கட்டமைப்பு இல்லாமல் தவிப்பவர்கள் . கழிவு நீர் கால்வாய் இல்லாமல் , சாலை குண்டுகுழிகள் ,குடிநீர் வசதி இப்படி அடிப்படை வசதி இல்லாமல் இன்னும் கழிவுகளில் தத்தளிப்பவர்கள் . சாராய புட்டிகள் , சைடு குடுவைகள் , ஊறுகாய் புட்டிகள் , பிளாஸ்டிக் நீர் புட்டி , சாலை குண்டுகள் , தீபாவளி ,கிருஷ்ணா ஜெயந்தி களிமண் விளக்கு குடுவைகள் , மீன் மற்றும் எக்கோ சிஸ்டம் இல்லாமல் சாமிகள் முங்கி எழும் கோவில் குளம்கள் எல்லாம் கொசுவை பெருக்குது. இந்தியாவின் விழாக்கள் வழிபாட்டு முறை சீக்கிரம் இந்தியர்களை கொன்றுபோடும் . பொங்கல் என்றால் கொளுத்துதல் .தீபாவளி என்றால் வெடித்தல் எல்லாம் காற்றை கண்ணை அழித்திடுகிறது. டெல்லி போல நீதி அரசர்கள் களம் இறங்கி மண்ணை மாசுபடுத்தும் வெடிகள் இல்லாத தீபாவளி போல நீரை தேக்கும் பொருள்கள் இல்லாத விழாக்கள் கொண்டாட நீதி வழங்க படவேண்டும் . பசுமாடுகள் கொட்டைகள் மூத்திரம் ,பால் குடுவை எல்லாம் ஊரைவிட்டு வெளியேற்ற படவேண்டும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement