Advertisement

இனி பணம் எடுக்க கட்டணம், கட்டுப்பாடு இல்லை: எஸ்பிஐ

புதுடில்லி : வாடிக்கையாளர்கள் ஏடிஎம்.,களில் பணம் எடுப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த கட்டணம் மற்றும் பணம் எடுப்பதற்கான வரையறையை திரும்பப் பெறுவதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி கிளாசிக் டெபிட் கார்டு வைத்திருப்போர் இனி நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம். ஆன்லைன் பண பரிவர்த்தனை அளவும் ரூ.50,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கிளாசிக் டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு பராமரிப்பு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் ஜிஎஸ்டி உடனான ரூ.300, இனி ஜிஎஸ்டி உடன் ரூ.100 ஆக குறைக்கப்படும்.
பிரைடு மாஸ்டர் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கான அளவு ரூ.1 லட்சமாகவும், ஆன்லைன் பணபரிவர்த்தனை அளவு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. இதற்கான ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.250 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிளாடினம் டெபிட் உடனான ஏடிஎம் கார்டு வைத்திருப்போர் இனி தினமும் ரூ.2 லட்சம் வரை எடுக்கலாம். ஆன்லைன் பணபரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்படுகிறது. ஆண்டு பராமரிப்பு கட்டணம் ஜிஎஸ்டி உடன் ரூ.350 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ் வாடிக்கையாளர்கள் இனி தங்களின் தவணை தொகையை கிரெடிட் கார்ட்கள் மூலமும் செலுத்தலாம். மொபைல் டாப் அப் செய்ய, செக் புக் வாங்குவதற்கு உள்ளிட்ட தேவைகளுக்கும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்பிஐ குழுமத்திற்கு உட்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் இனி ஏடிஎம்.,களில் கட்டணம் இன்றி பண பரிவர்த்தனை செய்ய முடியும். ஒருநாளைக்கு பணம் எடுப்பதற்கான அளவு ரூ.2 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. எஸ்பிஐ ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனின் பொருட்கள் வாங்குவதற்கான அளவு ரூ.5 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • Kuppuswamykesavan - Chennai,இந்தியா

  ஏன் இப்படி ?. 2000 ரூபா நோட்டு செல்லாது என்று, அறிவிப்பு ஏதும் வருமோ ?.

 • thiru - Chennai,இந்தியா

  அப்ப திரும்பவும் செல்லாத நாேட்டுஅறிவிப்பு வருமாே ...

 • vns - Delhi,இந்தியா

  இப்போதைய செய்தி.. மருத்துவ செலவு இன்னமும் அதிகரிக்கும்.. Export soars 25.67% to $28.61 billion in Sep "In continuation with positive growth exhibited by exports for the last thirteen months, exports during September 2017 have shown growth of 25.67 per cent in dollar terms," the ministry said in a statement.

 • அப்பாவி -

  மக்கள் கணக்கிலே பணமில்லை. இருக்கிறதை சொறண்டி எடுத்து ஜாலியா செலவு பண்ணுங்கன்னு சொல்லவர்ராங்க....மக்கள் செலவு பண்ணலேன்னா பொருளாதார வளர்ச்சியாவது புண்ணாக்காவது.இப்பிடியே போனா பப்புவெல்லாம் ஈசியா பிரதமர் ஆயிடுவான்....அம்புட்டுத்தேன்..

 • raja - lalgudi,trichy,இந்தியா

  0 பாலன்ஸ் அக்கௌன்ட் ஓபன் பண்ணி காஸ் புக் பண்ணினா அதில வர்ற மானியம் பணத்தையும் புடுங்கிட்டாங்க.அதனால ஆயிரம், ஐநூறு மைன்ட்டைன் பண்றவங்க பணத்தை புடிச்சி மல்லையா போன்ற நல்ல கார்ப்பரேட்களுக்கு கொடுத்துட்டு நஷ்ட கணக்கு காட்டுவாங்கப்பா

 • SATHIK BASHA - SINGAPORE,இந்தியா

  மாதம் எத்தனை தடவை பணம் எடுக்கலாம் என்ற வரைமுறையை மாற்றவில்லை போல

 • ரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா

  இது அனைத்து எஸ் பி ஐ டெபிட் கார்டுகளுக்கும் பொருந்துமா இல்லை குறிப்பிட்ட கார்டுகளுக்கு மட்டுமே பொருந்துமா???

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  ஹைதராபாதிலும் கொல்கத்தாவிலும் எனது வீட்டருகே உள்ள எஸ்.பி.ஐ -ஏ.டி.எம் ல் எப்பொழுதும் பணம் இருப்பதில்லை அல்லது பாதி கதவு மூடியிருக்கும்?????

 • Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா

  சேட்டு பாங்க் ஆப்பு இந்தியா ....

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  \\நாள் ஒன்றிற்கு ரூ.40,000 வரை பணம் எடுக்கலாம் ..சரி தான். பகல் பன்னிரண்டு மணிவரைத்தான் ATM ல் பணமிருக்கும் .. பிறகு அவுட் ஆப் சர்விஸ் ன்னு சொல்லிடும்.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  நல்ல நடவடிக்கை. சிதம்பரம் துவக்கி வைத்ததை முடித்து வைத்ததற்கு நன்றி. வாடிக்கையாளர்களின் சுமை சிறிது குறையும்.

 • ragavendran - chennai,இந்தியா

  விஜய் மல்லையா திருடின காசலாம் திருப்பி மக்கள் கிட்ட இருந்து வாங்கிட்டிங்க போல... சூப்பர்

 • ragavendran - chennai,இந்தியா

  விஜய் மல்லயா திருடின காச திருப்பி வாங்கிட்டிங்களா..... வாழ்த்துக்கள்

 • Sudharsan - Coimbatore,இந்தியா

  Poor people and middle class people, farmers banks is known as SBI but service charges are heavy in SBI for each and everything.

 • subramaniansingarukeezhathenoor -

  Inga irukkura Indians Ku minimum balance vachukkavae vazhi Illa.athula Sbi 3000 minimum balance vachikkanuma, so ithula labam vachi ATM la freeyam dei naanga minimum balance vachikkira alavuku panam iruntha naanga yan unga bank la. a/C vakkirom..ithuku kuda Inga. vazhi Illa Mr Central minister Arun Shirley.so muthala minimum balance theva illanu solllunga .atha vittu vittu..anga vae engala poor people nu sollitu ATM la. freeyam ponga ...

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  இது வரை வசூலிச்சதை திருப்பி தருவீங்களா ஆபிசர்..

 • MadheswaranPG -

  accountல பணமே இல்லாட்டி பணம் எடுக்க முடியுமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement