Advertisement

தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை : அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் இன்று (அக்.,13) வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை இரவு நேரங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வாணியம்பாடி மற்றும் ஒசூரில் தலா 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • கேண்மைக்கோ சேகர் - Dharmapuri/Bangalore,இந்தியா

    yes,last night was heavy rain in hosur

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement