Advertisement

டெங்கு பற்றி அச்சம் தேவையில்லை : மத்தியக்குழு

சென்னை : தமிழகத்தில் டெங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை வந்துள்ள மத்தியக்குழு, சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இன்று (அக்.,13) ஆலோசனை நடத்தியது.

கூடுதல் நிதி தேவை :
இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் டெங்கு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.256 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்க வேண்டும் என மத்திய குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த தொகையை அவர்கள் உடனடியாக வழங்குவார்கள் என நம்பிக்கை உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை மத்திய குழு வழங்க உள்ளனர். தமிழகத்தில் நிலவும் டெங்கு பாதிப்புக்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மத்திய குழு ஆய்வு செய்வர். தமிழகத்தில் 2 முதல் 3 நாட்கள் தங்கி இருந்து அவர்கள் ஆய்வு மேற்கொள்வர் என தெரிவித்துள்ளார்.

டெங்கு அச்சம் வேண்டாம் :
பின்னர் பேசிய மத்திய குழுவின் அஸ்தோஷ் பிஸ்வால், கேரளா போன்ற மாநிலங்களிலும் டெங்கு உள்ளது. தண்ணீரை தேக்கி வைக்கும் பழக்கமே டெங்கு கொசுக்கள் உருவாக காரணம். கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புக்கள் அதிகரிக்க காரணம். டெங்கு நோய் பாதிப்பை சரி செய்யவே வந்துள்ளோம். டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வும், பழக்க வழக்கங்களை மாற்றும் தன்னையும் வர வேண்டும். டெங்கு பாதிப்புக்கு முழுவதுமாக அரசை குற்றம் கூற முடியாது. தண்ணீர் தேங்கும் கழிவுப் பொருட்களை அகற்றுவது முக்கியமானது.
டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். டெங்கு ஒழிப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும். டெங்கு குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. டெங்கு பரவ காரணமான நீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து அகற்றினாலே டெங்குவை ஒழிக்க முடியும். தேவைப்பட்டால் மாவட்டங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (10)

 • J.Isaac - bangalore,இந்தியா

  இந்த அறிவிப்பை டெல்லி யில் இருந்தே சொல்லி இருக்கலாம் . கர்நாடகா தமிழ் நாடு மாநிலங்கள் தவிர பிற மாநிலங்கள் இல் ஏன் இல்லை. அவ்வளவு சுகாதாரமாக உள்ளதா பிற மாநிலங்கள்

 • Tamil - Madurai,இந்தியா

  எங்க வீட்டுல எழவு விழுகுது , உனக்கென்ன சொல்லிட்டுப் போயிருவ

 • Rassi - nellai,இந்தியா

  250 கோடியில் எத்தனை கோடி மந்திரி விஜயபாஸ்கர் மண் குவாரிக்கு போகப்போகுதோ எல்லாரும் நல்லா பங்குபோட்டு திங்கலாம் இங்கு ஓடி வாருங்கள் டெங்கு பேரை சொல்லலாம்

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  தெர்மோகோல் அமைச்சர் யாரும் சாகலவில்லை என்றார் . பயம் வேண்டாம்னு சொல்றிங்க அப்புறம் எதுக்கு 257 கோடி . உங்களை டெங்கு பாதிப்புக்கு உள்ளாக்கி உங்க வீட்ல உள்ளவர்களா பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க

 • Nesan - JB,மலேஷியா

  நீங்க எல்லாம் டெங்கு கடித்தாலும் சாக மாட்டீங்க. என்ன கொடுமை தமிழகத்தின் உண்மையான மந்தி(ரி)கள். நாடு உருப்பிட்ட மாதிரிதான். வெளி நாட்டு காரன் காரி துப்புறாங்க

 • ngopalsami - Auckland ,நியூ சிலாந்து

  ஐயோ, எங்க தெர்மோகோல் அமைச்சர் இப்ப தானே டெங்குவிற்கு தமிழகத்தில் யாரும் பலி ஆகவில்லை என்று ஒரு வெடி வைத்தார். நீங்க இப்போ தமிழகத்திலே நாற்பது பேர் பலி ஆகி இருக்கிறார்கள் என்று சொல்வது சரியா? மொத்தத்தில், அந்த 256 கோடி சீக்கிரமா அனுப்பி வைங்கோ. டெங்கு ஒழிப்புன்னு சொல்லி அந்த பணத்தை வெச்சி நாங்க எல்லாம் ஆட்டையே போடணும்.

 • vnatarajan - chennai,இந்தியா

  போன வருடம் சென்னை மற்றும் புறநகரங்களில் ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதம் வரை முறையாக மாதம் மூன்றுமுறை வான் மூலம் நகர் தெருக்களில் கொசுமருந்து புகையும் , வாரத்திற்கு ஒருமுறை எல்லோர் வீட்டிற்குள்ளும் வந்து கொசு மருந்து தெளித்து சம்ப் மற்றும் ஓவர் ஹெட் டேங்கில் மருந்தை தெளித்துவிட்டு சென்றார்கள் . அதனால் பாதிப்பு குறைவாகவே இருந்தது ஆனால் இந்த வருடம் இப்படி செய்வதை புறக்கணித்து விட்டார்கள் நலச்சங்கங்கள் அவர்கள் பார்வைக்கு கொண்டு சென்றும் மெத்தனமாக இருந்துவிட்டார்கள் இதுதான் அதிக உயிர் நஷ்டத்திற்கு காரணம்

 • balakrishnan - coimbatore,இந்தியா

  இதுவரையிலும் செத்தவர்கள் எண்ணிக்கை ஏறக்குறைய 50 க்கு மேல் அரசு கணக்கின்படி சென்றுவிட்டது, எப்படி அச்சம் இல்லாமல் இருக்க முடியும், சந்து இடுக்குல சிந்து பாடுற மாதிரி, இது தான் சந்தர்ப்பம் என்று அமைச்சர் ஒரு 250 கோடி நிவாரணம் கேட்டது தான் சூப்பர்

 • Sekar KR - Chennai,இந்தியா

  KK நகர் குடிசை மாற்றுவாரியத்தில் கட்டப்பட்ட 500 க்கு மேற்பட்ட அடுக்கு மாடிகளில் வைக்கப்பட்ட PVC தொட்டிகள் புழங்கப்படாமலும், மூடியும் இல்லாமலும் இருப்பதால் அதனுள் மழைத்தண்ணீர் தேங்கி கொசு பெருக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது . மேலும் சுற்றுப்புறத்தில் எந்தஒரு துப்புரவு பணியும் நடைபெற்றதாக அறிகுறி இல்லை. இவைகளை கண்டறிந்து சரி செய்தால் டிங்குவை ஒழிக்கலாம். முன் வார்டு மெம்பெர் , கவுன்சிலர் என்று யாராவது ஒருவர் இருந்தார் இன்று கேட்கக்கூட யாரும் இல்லாத நிலை.

 • Parthasarathy - Chennai,இந்தியா

  "அம்மா நலமாக உள்ளார் கவலை வேண்டாம் - மத்தியக்குழு" தட் மொமெண்ட்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement