Advertisement

கெஜ்ரி காரை திருப்பி தந்தால் பரிசு : ஆம்ஆத்மி அறிவிப்பு

புதுடில்லி : டில்லியில் தலைமை செயலக வளாகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஊதா நிற வேகன்ஆர் கார் நேற்று மர்ம நபர்களால் திருடப்பட்டது.
பல ஆண்டுகளாக கெஜ்ரிவால் பயன்படுத்தி வந்த இந்த காரை தற்போது, ஆம்ஆத்மி கட்சியின் இளைஞர் அணி தலைவர் வந்தனா சிங் பயன்படுத்தி வருகிறார். இவர் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, காரை திருடியவர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காரை திருப்பி தந்தால் பரிசு வழங்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. ஆம்ஆத்மியின் நவீன் ஜெய்ஹிந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எனக்கு அந்த கார் திரும்ப வேண்டும். பல நினைவுகளையும், உணர்வுகளையும் உள்ளடக்கியது அந்த கார். அந்த காரை திருப்பி அளிப்பவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும். அந்த காரை விற்றால் உங்களுக்கு என்ன தொகை கிடைக்கும் என நினைக்கிறீர்களோ, அதை விட கூடுதல் தொகையாகவே அந்த பரிசுத்தொகை இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் எவ்வளவு பரிசுத் தொகை வழங்கப்படும் என அவர் குறிப்பிடவில்லை. டில்லி போலீசாருடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், போலீசாரின் கவனக்குறைவே இதற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (18)

 • YesJay - Chennai,இந்தியா

  காரை திருப்பி குடுத்த்திட்டு கெஜ்ரியை கூட்டிட்டு போய் விடும் படி பொது மக்கள் வேண்டிக்கொள்கிறார்கள்

 • B.Indira - thane,இந்தியா

  இது மோடி ,BJP ,LG ஆகியோரின் சதி.நான் பிரதமராக ஆகி விடுவேன் என்று .அந்த காரில் போய் தான் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பிகளை அறுத்தேன்.தெரு போராட்டங்களை நடத்தினேன். போலீசை என்னிடம் கொடுங்கள் உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன்.tullu . இப்படிக்கு கெஜ்ரிவால்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வக்கீல் வண்டுமுருகன் : -இவ்வளவு கேவலமான அரசை நீங்கள் கண்டதுண்டா யுவர் ஆனார் , திருடனுக்கு சன்மானம் கொடுத்து திருடிய பொருளை கேட்கிறார்கள்.

  • appaavi - aandipatti,இந்தியா

   நீதிபதி : வண்டு முருகா, தேசீய கீதம் ஒலித்தபோது நாட்டின் பெரிய தலைவர் 'cat walk' செய்ததற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.

  • Appu - Madurai,இந்தியா

   சீட்டிங் சாம்பியன் குரங்குகுப்பன் போன்ற ஆட்கள் மொத்தத்தில் ஆளும்போது வண்டுமுருகன் தன் வேலையை காண்பிப்பதில் தவறென்ன கண்டீர்?

 • Nagarajan D - Coimbatore,இந்தியா

  அந்த காருக்கு ஈடாக அந்த கோமாளி கெஜ்ரியையும் தூக்கி செல்லுங்கள்

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  முதல்வர் காரை திருடும் அளவுக்கு பிஜேபி ஹோம் மினிஸ்ட்ரி வசமுள்ள டெல்லி காவல் துறை இருக்கு .

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  "வந்தனா சிங் பயன்படுத்தி வருகிறார்".முதலில் இது அரவிந்த் கெஜ்ரிவால் கார் இல்லை என்று செய்தி மிகத்தெளிவாகச்சொல்கின்றது. பின் எதற்கு இந்த மீடியா சொறிவால் கார் திருடப்பட்டது என்று டாம் டாம் என்று செய்தி டப்பா அடிக்க வேண்டும்??? அதுவும் இது மிகப்பழைய ஓட்டை லாட்டரி ஒன்றுக்கும் உதவாத கார்?? எல்லாம் சொறிவால் விளம்பரம் செய்வதற்காக ஒரு பியூனிடம் ரூ. 500 கொடுத்து திருட வைக்கப்பட்டது என்று பல மாதத்திற்கு பின் தெரிய வரும். அந்த பியூனுக்கு கார் கூட ஓட்டத்தெரியாது என்று பிறகு தெரிய வரும். இது வெறும் விளம்பரம்.

 • DESA NASAN - DESA NASA PURAM

  சரியாக சொன்னீர்கள் தேச நேசன் அவர்களே உங்கள் கச்டம் உங்களுக்கு மட்டும் தான் புரியும்

 • vnatarajan - chennai,இந்தியா

  எடுத்தவர் யாராவது பரிசு தொகைக்கு ஆசைப்பட்டு போலீசிடம் மாட்டிக்கொள்ள திருடியவன் என்ன முட்டாளா

  • Sanny - sydney,ஆஸ்திரேலியா

   சுத்த லூசா நீங்க, எடுத்தவன் ஒரு தெருவில் நிறுத்துவான், அவனுக்கு வேண்டப்பட்டவன் எனது வீட்டின் முன்னே 3 , 4 நாட்களாக ஒரு வண்டி நிக்குது சந்தேகமாக இருக்கு என்று போலீசுக்கு தகவல் கொடுப்பான், அவ்வளவு தான். நம்ம பாதுகாப்பு துறையை விட திருடர்கள் அதில் டிகிரி வாங்கியவர்கள்.

  • appaavi - aandipatti,இந்தியா

   தம்பிக்கு முன் அனுபவம் இருக்கும் போல....

 • கருப்பட்டி சுப்பையா - முடிவை, தூத்துக்குடி,இந்தியா

  உங்க கட்சி காரங்க சதிதான் இது. ஸ்டிங் ஆபரேஷன் பண்ணி ஏதாவது மைக் காருக்குள்ள இருக்கலாம். அது சிபிஐ கிட்ட கிடைச்சா சங்கு தான். அதனால தான் இவர்கள் புலம்புகிறார்கள். உங்க கட்சி ஆளுங்க தான் வழக்கம் போல எடுத்திருப்பாங்க. இந்த திருட்டு சம்பவம் மூலம், டெல்லி போலீசை திசை திருப்பி எதாவுது குண்டு வைச்சாலும் வைப்பானுங்க. ஏற்கனவே ஆமாத்மி கட்சி வெப்சைட்ல பாகிஸ்தானுக்கு காஸ்மீரை தாரைவார்த்து துரோகிகள் உஷார் .

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  இப்போ கார் காணாமப்போச்சு..அடுத்த எலெக்ஷன்ல கார் ஓனரே காணாமப் போகப் போறாரே ..என்ன பண்ணுவீங்க..

 • Parthasarathy - Chennai,இந்தியா

  சத்ய சோதனை...

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  திருடனின்  கஷ்டம் திருடர்களுக்குத்தானே  புரியும்?

  • appaavi - aandipatti,இந்தியா

   நீங்கள் கஷ்டப்பட்டு கருத்து எழுத்துவதிலே தெரிகிறது உங்கள் கஷ்டம்...

  • Appu - Madurai,இந்தியா

   @appaavi - aandipatti,இந்தியா...ஹா ஹா ஹா ஹா ..செம்ம நோஸ்கட் டூ பசுநேசன்..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement