Advertisement

தண்ணீர் தேங்குவதே டெங்குவுக்கு காரணம்

சென்னை : சென்னையில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய குழுவின் அஸ்தோஷ் பிஸ்வால், கேரள போன்ற மாநிலங்களிலும் டெங்கு உள்ளது. தண்ணீரை தேக்கி வைக்கும் பழக்கமே டெங்கு கொசுக்கள் உருவாக காரணம். கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு வருவதே உயிரிழப்புக்கள் அதிகரிக்க காரணம். டெங்கு நோய் பாதிப்பை சரி செய்யவே வந்துள்ளோம். டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிரமாக இறங்கி உள்ளது. மக்களிடம் விழிப்புணர்வும், பழக்க வழக்கங்களை மாற்றும் தன்னையும் வர வேண்டும். டெங்கு பாதிப்புக்கு முழுவதுமாக அரசை குற்றம் கூற முடியாது. தண்ணீர் தேங்கும் கழிவுப் பொருட்களை அகற்றுவது மிக முக்கியமானது. டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். டெங்கு ஒழிப்பு பணியில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படும் என தெரிவித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (7)

 • அப்பாவி -

  இந்த விஷயத்தை செல்லுர் செல்லாக்காசிடம் சொல்லுங் ஆப்பீசர்....டெங்கு உயிரிழப்பே இல்லைன்னு சத்தியம் பண்றாரு.

 • Rajasekar K D - Kudanthai,இந்தியா

  மிகப்பெரிய ஆராய்ச்சிக்கு பிறகு அபூர்வமான கண்டுபிடிப்பு

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  மக்கள் விழிப்புணர்வு இருக்கட்டும்.. டெல்லி கொசுவினால் தான் வருகிறது என்று சொன்னாற்போல், அணைகளில் தேங்கி உள்ள நீர்களை முற்றிலும் திறந்து விடப்போகிறார்கள் இப்பதான் அணைக்கு நீர்வரத்து வந்துகொண்டிருக்கிறது.. மணல் அள்ளவேண்டுமே என்று நினைத்து டெங்குவை காரணம் காட்டி செய்தாலும் செய்வார்கள்...

 • wellington - thoothukudi,இந்தியா

  டெங்கு இது அதி சக்திவாய்ந்த இல்லுமினாட்டி குழுவினரின் வேலைதான் இது ,எப்படி பரப்புகிறார்கள் என்பதெல்லாம் ரகசியம் ,எதற்க்காக இப்படியெல்லாம் செய்கிறார்கள் இது ஒரு மக்கள்தொகை குறைப்பு நடவடிக்கையாக சொல்லப்படுகிறது ,மனிதனுக்கு எவ்வளவோ விஷ பூச்சிகள் எல்லாம் கடிக்கின்றன ,ஆனால் எதுவுமே உடனே ரத்தத்தில் கலந்து அணுக்களையெல்லாம் சாகடிப்பதில்லை ,ஆனால் ஒரு கொசு அதுவும் நல்ல தண்ணீரில் தான் வாழுமாம் ,அது கடித்து மனிதனை சாகும் வரைக்கும் கொண்டுசெல்கிறது ,எப்படியெல்லாம் பொய்ச்சொல்கிறார்கள் ,தண்ணீரில் பல ரசாயனங்களை கலப்பதாக சொல்லப்படுகிறது ,இதனால் மக்களுக்கு நோய்யெதிர்ப்பு சக்தியெல்லாம் குறைந்து உடனே தோற்று பரவுவதாக இதைப்பற்றி ஆராய்ந்தவர்கள் கூறுகிறார்கள் ,டெங்குவை தடுப்பதாக கூறி வீடுகளுக்கு வந்து நல்ல தண்ணீரில் மருந்துகளை தெளிப்பதால் பல உடல் உபாதைகள் வருவதாக சொல்கிறார்கள் ,என்னமோ நடக்குது எல்லாமே மர்மமாகவே இருக்குது ......

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  டெங்கு பாதிப்புக்கு முழுவதுமாக அரசை குற்றம் கூற முடியாது. டெங்கு காய்ச்சலுக்கு தமிழகத்தில் 40 பேர் பலியாகி உள்ளனர். - இதுக்கு நீ டெல்லியிலே பானி பூரி வித்துக்கிட்டு இருந்திருக்கலாம்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  தண்ணீர் தேங்குவதே டெங்குவுக்கு காரணம் - மத்திய குழுவின் அஸ்தோஷ் பிஸ்வாலுக்கு உலக சுகாதார மையம் புகழாரம். இந்த நூற்றாண்டின் முக்கிய கண்டுபிடிப்பு என்று அமெரிக்க மருத்துவக்கழகம் கூறியது.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்த வருட "தெர்மாகோல் ராஜு" விஞ்ஞான பரிசு மத்திய குழுவின் அஸ்தோஷ் பிஸ்வால் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement