Advertisement

பிரதமர் வருகைக்காக தாமதிக்கப்படும் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு : காங்., குற்றச்சாட்டு

புதுடில்லி : இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான தேதியை தேர்தல் கமிஷன் நேற்று அறிவித்தது. குஜராத் தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


பிரதமர் வருகைக்காக தாமதம் :
பா.ஜ.,வின் அழுத்தம் காரணமாகவே குஜராத் தேர்தல் தேதியை அறிவிப்பதில் தேர்தல் கமிஷன் தாமதம் காட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. அடுத்த வாரம் குஜராத் தலைநகர் காந்திநகரில், பிரதமர் மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடக்க உள்ளது. இதில் மோடி பல முக்கிய சலுகைகளை அறிவிக்க உள்ளார். இதற்கு அனுமதி அளிப்பதற்காகவே தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்படவில்லை எனவும் காங்., தெரிவித்துள்ளது.

சந்தேகம் எழுகிறது :
முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி கூறுகையில், தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டிய 2 மாநில தேர்தலில் ஒன்றிற்கு மட்டும் தேதியை அறிவித்து விட்டு, ஒன்றிற்கு அறிவிக்கவில்லை. மோடி வருகைக்காக தான் இந்த தாமதமா என்ற சந்தேகம் எழுகிறது. இது துரதிஷ்டவசமானது என தெரிவித்துள்ளார்.

பா.ஜ., வேதனை :
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி, குஜராத் தேர்தல் தேதி தொடர்பான காங்.,ன் இந்த அறிக்கை துரதிஷ்டவசமானது. சிறிய கட்சிகள் இந்த கருத்தை கூறி இருந்தால் கூட பரவாயில்லை என எடுத்துக் கொள்வோம். ஆனால் நாட்டை பல ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி, அரசியல் ஆதாயத்திற்கு அரசியல் சாசன அமைப்பின் மீது இவ்வாறு குற்றம்சாட்டுவது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (49)

 • Manoharan - Penang,மலேஷியா

  அந்த குரேஷி தேர்தல் கமிஷனர் ஆக இருக்கும்போதே அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி காங்ரஸிற்கு சாதகமான நிலைபாடுகளை எடுத்தவன். அதனால் அவனும் காங்கிரெஸ்க்காரன் தான். அவன் சந்தேகத்திற்க்கெல்லாம் யாரும் கவலைப்பட தேவை இல்லை. தேர்தல் கமிஷன் என்பது ஓர் அரசியல் சாசன அமைப்பு அதன் மீது அரசியல் ஆதாயத்திற்கு வேண்டி இவ்வாறு குற்றம்சாட்டுவது காங்கிரஸின் மட்டமான தந்திரம் தான்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ..குஜராத் சட்டசபையின் ஆயுட்காலம் இன்னும் மூன்றுமாதங்களுள்ளது. ஒருதேர்தலை அறிவித்து  நடத்தி முடிக்க 46  நாட்கள்போதும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.மிகவும்   முன்பே அறிவிப்பு வெளியிட்டால் வழிகாட்டு நெறிகள்படி மூன்று   மாதங்கள் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து மக்கள் அல்லலுறுவார்கள்.ஹிமாச்சலிலோ டிசம்பரில் பணிக்காலம் துவங்குவதற்குமுன்தான் தேர்தல் நடத்தயியலும் . இரண்டுக்கும் ஒரேநாளில் அறிவிப்பு சரியில்லை. ஆடத்தெரியாதவள் (காங்கிரஸ்) முற்றம் கோணலாகயிருக்கு   என்றாளாம் 

 • Kanthi - chennai,இந்தியா

  எல்லாம் தெரிந்த அண்ணன் மார்கள் இந்த தேர்தல் VVPAT வோட்டிங் machine பயன் படுத்த படும். போதிய அளவு இயந்திரம் இல்லை. அதனால் கூட இருக்கலாம் ஏம்ப்பா உனக்கு உடம்பு சரியிலேனா அதுக்கும் PM தான் காரணமா

 • Ramanujam Veraswamy - Madurai,இந்தியா

  It is right time, Election Commission shall come out with the valid reasons for the delay in announcing the Polling dates for Gujarat Assembly and exhibit its neutral nature in dealing with politicial parties as well as its independent nature in dealing with the Government, in power

 • MohanaSundaram - Erode,இந்தியா

  தேர்தல் கமிஷனர் ஜோதி - (முன்னாள் ) - குஜராத் தலைமை செயலாளர் . அப்படித்தான் குஜராத் தேர்தலை நடத்துவார் .

 • JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா

  தேர்தல் ஆணையம் பாஜகவின் கைப்பிள்ளை ...EVM ல குளறுபடி பண்ணக்கூட தயங்கமாட்டாதவர்கள், இது போன்ற மக்களின் குற்றச்சாட்டுக்களை எல்லாம், சட்டைபண்ணவே மாட்டார்கள்...

 • Selva Srm - Poonamalle,இந்தியா

  எதனை எங்கு விதைத்தார்களோ அதனை அங்கிருந்து தான் அறுவடை செய்வார்கள் விதைத்தவர்களுக்கு அறுவடையின் பயன் கண்டிப்பாக இருக்கும் அங்கு தான் ஆரம்பம்

 • Appavi Tamilan - Chennai,இந்தியா

  ஐயோ பாவம். எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன் என்ற பரிதாப நிலைக்கு கமலக்கட்சி வெறும் மூன்றே ஆண்டுகளில் வந்துவிட்டதே. உருப்படியாக நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும் எதையாவது செய்திருந்தால் அதை சொல்லி தேர்தலில் போட்டியிடலாம். அதிகாரத்தை வைத்துக் கொண்டு அதிபயங்கர அராஜக ஆட்டம் ஆடிவிட்டு, தற்போது மக்களிடம் கடும் எதிர்ப்பு நாடெங்கும் கிளம்பியுள்ளதை கண்டு தொடை நடுங்கிகள் போல ஆளும் மாநிலத்திலேயே தேர்தலை தள்ளப்போடும் அந்தோ பரிதாப அவல நிலைக்கு கட்சி வந்துவிட்டதே. அதனா ல்தான் தாடி தலைவர் சில வாரங்களாக வெளிநாட்டு சுற்றுலாவை தள்ளி வைத்திருக்கிறாரா.??? போதாக்குறைக்கு கட்சி தலைவரும் அவரது மகனும் கொள்ளை அடித்து சேர்த்த சொத்துகள் தலைசுற்ற வைக்கின்றன. அதற்கும் சரியான பதில் இல்லை. குஜராத் மாநிலத்திலேயே பெரும் எதிர்ப்பும் அதிருப்தியும் நிலவுகிறது. அண்மையில் நடந்த பல இடை தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களில் கை கட்சி ஓங்கி இருப்பது அதனை காட்டுகிறது. வாக்கு இயந்திர தில்லுமுல்லுகளையும் மக்கள் உணர்ந்துவிட்டனர். வெளிநாடுகளில் இருக்கும் கட்டமைப்புகளை போட்டோ எடுத்து அவை குஜராத் உள்ளிட்ட கமலம் ஆளும் மாநிலங்களில் இருப்பது போல காட்டி மக்களை ஏமாற்றியதும் தற்போது மக்களுக்கு விளங்கிவிட்டது. மதக்கலவரத்தை, வெறுப்பு அரசியலை வைத்து அரசியல் ஆதாயம் அடையவும் தற்போது வழி இல்லை. இனி என்ன செய்வார்கள் என்று பார்ப்போம்??? ஆனால் மிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும் மக்களே. ஆட்சி அதிகாரத்திற்கான இந்த கொடியோர் கும்பல் எந்த எல்லைக்கும் செல்லும்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  ஆப்பு குஜராத்திலிருந்து தான் ஆரம்பம்....ரம்பம்..பம்.. எப்போ தேர்தல் வச்சாலும்....

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  முன்னர்  2007  லும் 2012லும் கூட குஜராத் ஹிமாச்சல் தேர்தல்கள் வெவ்வேறு தேதிகளில் அறிவிக்கப்பட்டு தனித்தனியாகத்தான் நடத்தப்பட்டன. அப்போதெல்லாம் மத்தியில் காங்கிரஸ் அரசு தானே இருந்தது? அப்போது தனித்தனியாக அறிவிக்க அது தேர்தல் கமிஷனுக்கு அழுத்தம் கொடுத்தது உண்மையா?

 • vnatarajan - chennai,இந்தியா

  தேர்தல் நடந்தால் பிஜேபி திரும்பவும் ஆட்சி அமைப்பது நிச்சயம். ஆனால் அவர்கள் எதிர்பாத்த அளவு மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம்.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  தெள்ள தெளிவாக இதன் பின்னணியில் அரசின் அழுத்தம் இருப்பது நன்றாகவே உணர முடிகிறது, இது ஒரு அப்பட்டமான அத்துமீறல், இதே காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால், வானத்துக்கும் பூமிக்குமாக குதித்து இருப்பார்கள், எங்கும் அதிகார துஷ்பிரயோகம் தான்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  2007 மற்றும் 2012 இரண்டு ஆண்டுகளிலும் ஹிமாச்சல் , குஜராத்துக்கு ஒரே நாளில் தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது .. எப்பிடி யுபி தேர்தல் மோடிஜி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் வரை வெய்ட் பண்ணி அறிவித்தார்களோ , அதே போல் இப்போதும் வெயிட் பண்றாங்கோ.. மிகவும் சுயேச்சையான அமைப்பு தேர்தல் கமிஷன் .. தேர்தல் வருகிறது என்றவுடன் 3 ஆண்டுகளில் இல்லாத எத்தனை திட்டங்களை குஜராத் , ஹிமாச்சல் மாநிலத்துக்கு அறிவிச்சிருக்காங்க பாருங்க மத்திய அரசு .. ஹிமாச்சலுக்கு எய்ம்ஸ் , குஜராத்துக்கு புல்லட் ட்ரெயின் வடை என்று நிறைய சுட்டாச்சு .. ஏன் ஹிமாச்சல் 3 வருஷமா கண்ணுக்கு தெர்லயா ?? குஜராத்துல ஜப்பான் பிரதமரை கூட்டி கொண்டு ரோட் ஷோ போகிறார் .. வேறு நாட்டு பிரதமரையே பிரச்சாரம் செய்வது போல பயன்படுத்தியது இதுவே முதல் முறை என்று நினைக்கிறன் .. அருமை ..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  ஆடத்தெரியாதவளுக்கு மேடைதான் கோணல். கோழை காங்கிரசுக்கு எந்தத்தேதியில் தேர்தல் வைத்தாலும் ஒரே தோல்விதான்.

 • MURUGAN - Mumbai

  பின்வாசல் வழியாக தமிழகத்தை பிடித்த அனுபவம் மோடிக்கும் அவர் சகாக்களுக்கும் புதுத் தெம்பை கொடுத்திருக்கும் ஆனால் ஒன்று நாம் எதை விதைக்கிறோமோ அதையே அதையே அறுவடை செய்வோம் மாவீர்கள் அலெக்சாண்டர் நெப்போலியன் போன்றோரே ஒன்றுமே ஒன்றும் கொண்டு போகவில்லை மோடி எம்மாத்திரம்

 • krishnan - Chennai,இந்தியா

  இந்த தேர்தலில் நிச்சயமாக வோட்டிங் மெஷின் குளறுபடி பிஜேபி காரர்கள் பண்ணுவார்கள்.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அனாவசியக் குற்றச்சாட்டு. ஹிமாச்சலுக்குப்பின்   குஜராத் மாநில சட்டசபையின் ஆயுட்காலம் ஜனவரி 22 வரையுள்ளது. டிசம்பர் கடைசியில் தேர்தல் நடத்தினாலும்   போதுமானது. இப்போது இருமாதங்களுக்கு முன்பே தேர்தல் நடைமுறைகளைத் துவக்கினால் தேர்தல் வழிகாட்டி நடைமுறைகள் வெள்ள நிவாரணப்பணிகளை அது  பாதிக்கும் எனக்கூறி குஜராத் அரசு தேர்தல் கமிஷனில் முன்பே வேண்டி கேட்டதாலேயே டிசம்பரில் தேர்தலும் நவம்பரில் அறிவிப்புமென தேர்தல் கமிஷன் முடிவெடுத்தது. எல்லாவற்றிலுமே உள்நோக்கம் பார்த்தல்  காங்கிரசுக்கு பிடித்துள்ள மனோவியாதி. (மேலும் ஹிமாச்சலில் கடும் குளிர்காலத்துக்குமுன்   தேர்தல் நடத்தவேண்டிய கட்டாயமுமுள்ளதே )

 • மாதவன்.க,திருவாரூர் -

  ஜனநாயக நாட்டில் இது மிகவும் சாதாரணமான விஷயம் எவன் அந்த இடத்தில் இருந்தாலும் இதைதான் செய்வான் இவனுங்கள மக்கள் ஒரு யாகம் வளர்த்து தான் மாத்தனும்

 • ssk - chennai,இந்தியா

  ஆட தெரியாதவா கூடம் கோணலா இருக்குகுனு சொன்னாளாம் .....

 • தங்கை ராஜா - tcmtnland,இந்தியா

  பயங்கரவாத நாடு என்று முத்திரை குத்தப்படும் பாகிஸ்தான் நீதிமன்றம் தன் நாட்டு பிரதமரை நீதியை நிலைநாட்ட பதவி நீக்கம் செய்து காட்ட முடிகிறது. நம்நாட்டில் அத்தகைய நேர்மையை எதிர்பார்ப்பவர்களை போலி தேஷ் பக்தால்ஸ் கும்பல் தேசவிரோதிகளாக்கி கூக்குரலிடும்.

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  ஹிமாச்சல் பிரதேஷ் ஒரு குளிர் பிரதேசம் , குளிர் காலத்தில் அங்கு உள்ள நிலைமையை முதலில் அறிந்து தான் குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்க முடியும் . இது புரியாத கூமுட்டைகள் பதறிக் கொண்டிருக்கின்றன

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  தேர்தல் எல்லாம் பிஜேபி கு தேவை இல்லை .ஆனால் உலகம் கேள்விகேட்கும் .ஜனநாயகம் செத்துப்போனதாக எதிர்க்கட்சிகள் கூவும் .அதுக்குதான் தேர்தல் . அப்புறம் தேர்தல் என்று பேருக்கு வைத்துவிட்டு பிஜேபி தேர்தல் ஆணையர்கள் ,அரசு அதிகாரிகள் தில்லுமுல்லு செய்து யாருக்கு ஓட்டுப்போட்டாலும் , தாமரைக்கு வாக்கு போடும் இயந்திரம் டுமுக்கலக்கடிமிக்க செய்து பிஜேபி கு மட்டும் ஓட்டுப்போட்டு பிஜேபி உ பி தேர்தல் மாதிரி உல்டா குஜராத்தை சீரழிக்கும் .

 • M Ragh - Kanchi,இந்தியா

  Our Election committee not reliable now

 • Jai Hinth - chennai,இந்தியா

  காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு தேர்தல் கமிஷன் பதில் சொல்லவேண்டும். தேர்தல் கமிஷன் செய்வது நியாயமா

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  தேர்தல் கமிஷன் பிஜேபியின் ( மோடியின் ) பாக்கெட்டில் என்பதை உறுதி செய்கிறது.....

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  மோடியின் இந்த ஒருகூட்டத்தால் தான் தோல்வியடைந்தோம் இல்லையென்றால் பிஜேபி முழுவதுமாக துடைத்து எறியப்பட்டு எதிர்கட்சியே இல்லாத சட்டசபையை அமைத்திருப்போம் - ரவுல் வின்சி , இத்தாலி.

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  தேர்தல் commission மோடியின் கைப்பாவையாக இருக்கும் இந்த நிலையில் தேர்தல் எப்படி நேர்மையான முறையில் நடக்கும். கண்டிப்பாக மோடி அரசின் தேர்த முறைகேடுகளுக்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருக்கும் என்பதில் சநதேகமேயில்லை. இவர்களின் வெற்றி எல்லாமே இப்படி புறக்கடை முறையில் பெற்ற வெற்றியாகத்தான் //எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்துள்ள பா.ஜ., செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி, குஜராத் தேர்தல் தேதி தொடர்பான காங்.,ன் இந்த அறிக்கை துரதிஷ்டவசமானது// இப்படி ஒரு துரதிருஷ்டமான அறிக்கையை வெளியிட காரணமாயிருந்த நபர் பற்றி இந்த சுதான்சு கருத்து தெரிவிக்க இல்லையா அல்லது பயமா. கேவலமான ஆட்சி அணுகுமுறை நமது துரதிருஷ்டம்தான்.

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  தோல்விக்கான காரணத்தை இப்போதே தேட ஆரம்பித்துவிட்டார்கள், தேர்தல் முடிவு வந்தபிறகு இந்த காரணங்களை தொகுத்து பைண்டிங் செய்து தருவார்கள். பப்பு வெளிநாடு கிளம்பி செல்வார்.

 • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

  குரோஷி முதலில் தேர்தல் ஆணையம் அரசு கட்டுப்பாட்டில் உள்ளதா இல்லையா என்பதை தெளிவு படுத்தவேண்டும்

 • திராவிடத்தால் விழிந்தோம் தேசியத்தால் எழுந்தோம் - சோழர்கள் நாடு ,இந்தியா

  முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி ஒரு முன்னாள் அரசு அதிகாரி என்பதை மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் போல் பேசுவது துரதிஷ்டவசமானது

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  தேர்தல் commission மோடியின் கைப்பாவையாக இருக்கும் இந்த நிலையில் தேர்தல் எப்படி நேர்மையான முறையில் நடக்கும். கண்டிப்பாக மோடி அரசின் தேர்த முறைகேடுகளுக்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருக்கும் என்பதில் சநதேகமேயில்லை. இவர்களின் வெற்றி எல்லாமே இப்படி புறக்கடை முறையில் பெற்ற வெற்றியாகத்தான் இருந்திருக்கும்.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///பிரதமர் வருகைக்காக தாமதிக்கப்படும் குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பு///என்னவோ இப்போ தான் தேர்தல் ஆணையம் எங்கள் தலைவரின் பேச்சை கேட்டு நடப்பதாக சொல்லப்படுவது ஒரே தமாசு, எங்கள் தலைவர் என்ன நினைக்கிறாரோ அதன் படிதான் சில காலமாக நடந்து வருகிறது, ஏன் UP தேர்தல் கூட அவ்வாறுதான் தானே நடந்தது, எங்கள் எண்ணப்படி, தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்றோம், போங்கப்பு, நீங்க வேற இன்னமும் அதே பழைய காதிலேயே இருக்கீங்க.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  பின்னே தாண்டிய ஒரு அமைப்பை சும்மா பார்த்து கொண்டா இருக்க முடியும், அது தேர்தல் ஆணையமாக இருந்தாலும் சரி, உச்சா நீதிமன்றமாக இருந்தாலும், அது எங்கள் தலைவருக்கு கட்டப்பட்டதாக தான் இருக்க வேண்டும், அவரை மீறி எதுவும் இங்கே இல்லை,ஆகையால் தேர்தல் ஆணையம் செய்தது சரியே.

 • Ayappan - chennai,இந்தியா

  Rizwan that hold good for Khan+cross too

 • Appu - Madurai,இந்தியா

  ஆப்புக்கு பயப்படும் மாப்பு.....

 • chails ahamad - doha,கத்தார்

  தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இன்றைய பா ஜ வின் ஆட்சியில் சந்தேகத்துக்கு உரியதாக மாறி விட்டதை என்னதான் அந்த கட்சியினர் சப்பைக்கட்டு கட்டினாலும் மறுக்க முடியாது என்பதே உண்மையாகும் , தற்போதைய ஆட்சியில் நீதிமான்களில் இருந்து மற்ற இதர துறையினர்களின் மூத்த அதிகாரிகள் , தேர்தல் ஆணையத்தின் தலைமையினர்கள் வரைக்கும் ஆட்சி அதிகார வட்டத்தின் கடைக்கண் பார்வை கிடைக்காதா ஏதாவது கவர்னர் பதவி கிடைக்காதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் , நீதி நேர்மை என்பதை எதிர்பார்ப்பது தவறேயாகும் . வாழ்க பாரதம் .

 • sampath, k - HOSUR,இந்தியா

  No doubt. Definitely, fault on the side of Election Commission. They should inform the reasons for postponement of election date for Gujarat.

 • சுப்பையா, கருப்பட்டி வியாபாரம். - முடிவைத்தானேந்தல் ,இந்தியா

  முன்னாள் தேர்தல் கமிஷனர் குரேஷி ......ஹா ஹா ஹா...... பெயர் ஒன்றே போதுமே தரம் எளிதில் விளங்கும் . அது எப்படி குரேஷி, ஹமீத் அன்சாரி போன்றோர் பெரிய பதவியில் சுகத்தை அனுபவித்துவிட்டு இன்று தங்கள் மதம் தான் முக்கியம் என்று கருத்து சொல்லவந்துவிட்டனர் .

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  தான் மட்டுமே தான் எல்லாம் என நினைத்தவர்களின்...ஆணவத்தை சமீபத்தில் இந்திய அரசியல் உணர்ந்தது..நம்ம பிரதமர் உணர்ந்தால் நன்று..

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement