Advertisement

சபரிமலையில் பெண்களை அனுமதிக்கலாமா? : வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்

புதுடில்லி : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது தொடர்பான வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சபரிமலையில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான முடிவை சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்., மாதம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் இன்று மீண்டும் விசாரித்தது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • narayanan iyer - chennai,இந்தியா

  It is better to say, the court and their law should not intervene into the traditional policy of temples. If traditional says don't do . obey that . That's all.

 • Changes - Pkt,இந்தியா

  சபரிமலையை தவிர இந்தியாவில் எவ்வளவோ ஐயப்பன் கோவில்கள் உள்ளது, அதிலெல்லாம் பெண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சபரிமலையில் புராணத்தின்படி ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் அனுமதிக்கபடுவதில்லை. சில ஓடுகாலிகள் தேவையில்லாமல் இதை வைத்து பிரச்சனை செய்கிறார்கள். இதற்கும் பெண்கள் வழிபாடு உரிமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பெண்கள் வேண்டுமானால் சபரிமலையை தவிர்த்து மற்ற அய்யப்பன் கோவிலுக்கு செல்லலாம். இந்த ஓடுகாலீகல் நாளை சமத்துவம் என்ற பெயரில் ஆண்களை பெற்றுக்கொள்ள சொல்லி வழக்குபோடும் அதையும் வேலையில்லாத நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.

 • அப்பாவி -

  இது மாதிரி வாய்தா போட்டு தீர்ப்புங்கறது வராமலே போவதால் தான் மக்களுக்கு நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை குறைகிறது. அமருங்க... நீதியரசர்களே... நன்றாக ஓய்வு பெறும் வரை அமர்ந்து ஆலோசிச்சு ....அப்பிடியே பதவி ஓய்வு அடைந்துவிடுங்கள்.

 • Dol Tappi Maa - NRI,இந்தியா

  கோவில் என்பது ஒரு வியாபாரம் . அதிக கூட்டம் அதிக வசூல். உண்டி இல்லாத ஒரு கோவில் காண்பியுங்கள் பார்க்கலாம் ? எல்லாமே கடவுளு படிதான் அவனுக்கு சொந்தம் என்றால் எதற்கு ஏழைகளிடம் இருந்து பிடுங்கவேண்டும் ? காணிக்கை கொடுத்தால் தான் கடவுள் நன்மை செய்வான் என்றால் அவன் கடவுளே அல்ல . அவன் ஒரு வியாபாரி .

 • Ganesan Mani - chennai,இந்தியா

  THE SABIRAMALAI TEMPLE IS KNOWN FOR TRADITIONS FIRST OF ALL BEFORE GIVING JUDGMENT THERE IS A HISTORY FOR AYYAPPAN WHY PARTICULAR AGE WOMEN NOT BEING ADMITTED IN THE TEMPLE , STUDY THAT AND GIVE DECISIONS

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  நான் நம்பிய ஐயப்பன் கைவிட வில்லை...... அவனுக்கு தெரியும் எல்லாம்

 • Muthukumaran - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ

  அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உங்களுக்கு 8 மாதம் வேண்டுமா???? ரொம்ப வேகமா வேலை செய்யுறீங்க???? இந்த வேகத்தில் வேலை செய்தால் இந்தியா ஒளிராது. இருட்டுக்கு தான் போகும்................

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதற்காக போராடும் பாப் கட் மாதர் சங்க போராளிகளிடம் வருடந்தோறும் தவறாமல் 48 நாள் விரதமிருந்து இருமுடி கட்டி கோவிலுக்கு போய் வருவேன் என்று சத்திய பிரமாணம் தாக்கல் செய்யச்சொல்லுங்கள் , அதை மீறினால் தலா 100 கோடி அபராதம் கட்டவேண்டும் என்றும் தீர்ப்பில் சேருங்கள். தலைதெறிக்க ஓடிவிடுவார்கள்.

 • Thirumal Kumaresan - singapore,இந்தியா

  தேவை இல்லாத பிரச்சனை என தோன்றுகிறது.

 • LAKSHMINARASIMHAN - Chennai,இந்தியா

  தேவையற்ற வழக்குகள் நமது நீதிபதிகளின் நேரத்தை வீணாக்குகின்றன .... கவலை அளிக்கும் விஷயம்...

 • ranga - chennai,இந்தியா

  சபரிமலையில் கூட்டம் வரத்து குறைந்துவிட்டதா பெண்களையும் வரவழைத்தாள் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருக்கும் அல்லவா.இதுதான் அவர்களுடய பிளான் போல இருக்கே

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  IN NORTH NO BODY KNOWS ABOUT AYYAPPA GOD - IN NORTH GANESHA IS MARRIED GOD WITH WIFE AND MURUGAN THAT IS KARTHIK IS A BACHELOR GOD IN TAMILNADU HE HAS TWO WIVES = LADIES R NOT ALLOWED IN KARTHIK'S SANNAdhi in north

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  எதற்கு இந்த வீம்பு.. யார் கேட்டார்கள்.. இறை நம்பிக்கை உள்ள பெண்கள் ஒரு விஷயம் மரபு மீறல் என்றால் நிச்சயமாக செய்யமாட்டார்கள்.. பாப் கட் மாதர் சங்க போராளிகளுக்கோ கடவுள் நம்பிக்கை என்பதே கிடையாது.. இவர்கள் என்ன வருஷாவருஷம் இருமுடி எடுத்து மலையேற போறார்களா?..பிறகு யாருக்காக இத்தனை ஆர்பாட்டம்.. சத்தியமாக புரியவில்லை... இதே கேரளாவில் சில பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன...அங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை... ஆண்கள் அனுமதி கேட்டு போராடப்போவதுமில்லை.. அனுமதிக்கவில்லையே என்று கவலைப்படப் போவதுமில்லை..சில இடங்களில் சில கட்டுப்பாடுகள்.. நமக்கு புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இருப்பதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்..

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. - அந்த அமர்வில் எத்தனை பெண் நீதிபதிகள் என்று அறியலாமா?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement