Advertisement

இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபை தேர்தல்: விஜயகாந்த்

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேரில் சந்தித்து இன்று (அக்.,13) ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ரூ.2000 தரும் என அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். ஆனால் நோயாளிகள் தினமும் ரூ.10,000 வரை செலவழிக்கிறார்கள். இதனால் தமிழக அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். திருவள்ளூரில் நேற்று நான் சென்றதால் குப்பைகள் அள்ளப்பட்டது. இதே போன்று எல்லா பகுதிகளிலும், எல்லா நாளும் குப்பைகள் அகற்றப்பட்டால் நன்றாக இருக்கும்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடாது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கு முன்பே தமிழக சட்டசபைக்கு தேர்தல் வரும். டெங்கு குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்துள்ள மத்திய மருத்துவக் குழுவால் எந்த பயனும் இல்லை. இவர்கள் ஆய்வு அறிக்கையை பிரதமர் மோடியிடம் தான் ஒப்படைப்பார்கள். அதனால் டெங்குவை ஒழித்து விட முடியாது என தெரிவித்தார்.

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • அப்பாவி -

  நீங்க போனாத்தான் குப்பை அள்ளுறாங்களா? அப்பிடின்னா தினமும் ஒரு ஊருக்குச் செல்லுங்கள். உங்க புண்ணியத்துல ஊர்களெல்லாம் சுத்தமாகட்டும். எங்கள் ஓட்டெல்லாம் உங்களுக்கே... கேப்டனா? கொக்கா?

 • Prem - chennai,இந்தியா

  எப்படியும் டெபாசிட் கூட இல்லாமா தோக்கதா போற அப்புறம் ஏன் இந்த வெட்டி பந்தா எல்லாம்

 • Anand - chennai,இந்தியா

  குஜராத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு சொல்லுகிறாரோ என்னவோ?

 • niki - Chennai,இந்தியா

  ungalukku yaar vote pannuvaanga???

 • Jeeva - virudhunagar,இந்தியா

  unga captanukku dengu vandhurukku adha mudhailla paarunga ?

 • shekaran - thiruchi,இந்தியா

  hmm... note pannitaen... vera ethuvum neenga sollanumah

 • sambantham sasikumar - chennai,இந்தியா

  எதிர் கட்சி தலைவர் பதவியை சரியாக பயன்படுத்தி இருந்தால். இன்று R .K நகர் உங்களுடையது.

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  தமிழகத்தில் அண்ணா பெரியார் பெயரை கூறிவாக்கு கேட்டு வெற்றி பெற்றவர்கள்.. அவர்களின் வாழ்க்கையை வளமாக்கிக் கொண்டார்கள்...? தமிழகம் அரசு ஊழியர்களையும் ஆ‌சி‌ரிய‌ர்க‌ளையும் மட்டுமே வாழவைக்கிறது

 • ramanathan - Ramanathapuram,இந்தியா

  ஏம்பா ...விஜய்காந்த் அவர்களே நீங்கள் மருத்துவமனை சென்றால் மட்டும் இறந்தவர்கள் திருப்பி வந்துவிடுவார்களா.. .என்ன...? இவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரிகிறது...?

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  கும்பகர்ணன்னு ஒருத்தன் இருந்தான்னு படிச்சிருப்போம்..இப்போ பாக்கறோம்.. எலக்ஷன் சமயத்துக்கு பிறகு ஆள் எங்கே இருக்காருன்னே தெரிய மாட்டேங்குது.. செயல்பட்டுக்கிட்டு இல்லாட்டி மக்கள் மறந்துவிடுவார்கள் விஜயகாந்த்..

 • GB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா

  நல்ல வந்துருக்கவேண்டியவர்... அல்ப விசயத்துக்கு (டாஸ்மாக் பார் தனது கட்சிக்காரர்களுக்கு ஒதுக்க வேண்டி) சண்டையிட்டு அம்மையாரின் கோவத்துக்கு ஆளாகி ... தந்து மனைவியின் மற்றும் மைத்துனனின் பேச்சுகளாலும் எந்நேரம் குடிபோதையில் இருந்து தனக்கு தானே அழிவை தேடிக்கொண்டவர் முதல்வர் ஜெ வசம் நட்பு பாராட்டி இருந்தால் இந்நேரம் பாதி அதிமுக இவருதான் இருந்து இருக்கும் பிழைக்க தெரியாதவர்

 • Murugan - Mumbai

  எனக்கு தெரிந்து திரு விசயகாந்த் அவர்கள் தான் நடித்து சம்பாத்தித்த காலத்திலிருந்தே மக்களுக்கு நிறைய உதவி செய்து வந்தவர் இனிமையாக பேசி மக்களை ஏமாற்றும் வித்தை அவரிடம் இல்லாததால் மக்களுக்கு காமெடியன் ஆகிவிட்டார் இவர் எடுத்த சில முடிவுகளும் தவறாகிப் போய்விட்டன தைராய்டு பிரச்சனையால் அவதிப்படும் இவர் திக்கி திணறி பேசுவதால் மக்களின் கேலிக்கு உள்ளாகி விட்டார்

 • unmai nanban - Chennai,இந்தியா

  அந்த ஒரு பெண்மணி மரித்தார் எல்லோரும் வீட்டுக்குள்ளிருந்து வெளியே வந்துட்டார்கள் அதுக்கே அந்தம்மாவுக்கு ஜெ போடலாம்

 • Murugan - Mumbai

  ஆளு நல்லவர் தான் ஆனால் பேச்சாற்றல் இல்லையே

 • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

  மத்திய அரசை எதிர்த்து பேசிவிட்டார் விஜயகாந்த். திமுக, கமல் கட்சி, காங்கிரஸ் கட்சி, குருமா, கம்யூ, எல்லோரும் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி அமைத்துக்கொள்ளுங்கள். "அந்த" ஓட்டு வங்கி சிதறாமல் பார்த்து கொள்ளுங்கள். இப்போ துப்ப மாட்டார்... நம்பி போகலாம்.

 • Appu - Madurai,இந்தியா

  அய்யா சவுண்டு இல்லாம கமுக்கமா இருந்தாவுக...இப்ப வெளிய வந்துட்டாவுக...வாங்க வாங்க ஒரு கை கொறவு தா....

 • Appu - Madurai,இந்தியா

  விஜயகாந்த் ரொம்ப நாளா சவுண்டே இல்லாம இருந்தாரே?

 • M Ragh - Kanchi,இந்தியா

  Last election la nalla decisions eduthu irunda ADMK vandu irukkadu. Total your mistake

 • kowsik Rishi - Chennai,இந்தியா

  உறுதியாக தமிழ் நாட்டில் சட்டமன்ற தேர்தல் வர தான் வேண்டும் செல்வி ஜெ ஜெ வின் தொடர் ஆட்சி பேச்செல்லாம் இனி இங்கே எடுபடாது மு.கருணாநிதி தான் வென்றார் அழித்துவிடுவேன் என்று சொன்ன செல்வி ஜெ ஜெ வை மு.கருணாநிதி நிஜ வாழ்விலும் அரசியல் வாழ்விலும் அழித்து ஆப்பு வைத்து விட்டார் செல்வி ஜெ ஜெ வாழ்ந்திருந்தாலும் அவருக்கு அரசியல் மதிப்பு ஒன்றும் இருக்காது அரசு மரியாதையை மரணம் அடக்கம் என்று எதுவுமே நடந்திருக்காது ஆகவே தான் செல்வி ஜெ ஜெ தொடர் ஆட்சி என்று வந்து சீக்கிரமாக விடை பெற்று கொண்டு அரசு மரியாதையோடு எம்.ஜி.ஆர் பக்கத்தில் அடக்கம் பெற்றுவிட்டார் - செல்வி ஜெ ஜெ அரசியல் வாழ்வு அதோடு முடிந்துவிட்டது ஆகவே தமிழ் நாட்டில் சட்டமன்றத்திற்கு தேர்தல் வர வேண்டும் மோடி ஷா பாஜாகா வின் ஆக்ரமிப்பு ஆட்சி முடியட்டும் தேர்தல் வரட்டும் - இடை தேர்தல் வேண்டாம் சட்டமன்ற பொது தேர்தல் வரட்டும் தமிழ் நாடு மக்கள் உலக தமிழ் மக்கள் விரும்புவது இதை தான்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement