Advertisement

பேரிடர்களால் லட்சக்கணக்கில் இடம்பெயரும் இந்தியர்கள்

புதுடில்லி : வெள்ளம், புயல், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடங்களால் அதிகமானவர்கள் இடம்பெயரும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆண்டுக்கு 23 லட்சம் பேர் சராசரியாக இடம்பெயர்ந்து வருகின்றன.
சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு தினத்தை முன்னிட்டு ஐ.நா., ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், இயற்கை பேரிடங்களால் வேறு இடங்களுக்கு அதிக அளவில் இடம்பெயரும் மக்களைக் கொண்ட நாடுகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவைத் தொடர்ந்து சீனா 2வது இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 13 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
நடப்பு ஆண்டில் மட்டும் இந்தியாவில் பீகார் வெள்ளித்தின் போது மட்டும் 1.75 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8.55 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். பெரும்பாலும் மக்கள் இடம்பெயர்வதற்கு வெள்ள பாதிப்பே காரணமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (18)

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  இதே மாதிரி தான் ரோஹிங்கிய அகதிகளில் ஒரு சிலரை (இருவரை மட்டுமே) பேட்டி கண்டு மியான்மர் ராணுவம் அட்டூழியம் செய்தது, அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள், பலரை கொலை செய்தார்கள், கற்பழித்தார்கள்". என்று முடிவு செய்தது ஐ.நா ஆய்வு அறிக்கை. ஆனால் நிலைமை அதில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிகம் என்று இன்னொரு அறிக்கை (ஐ.நா அல்ல) சொல்கின்றது. இதுவும் அதே நிலையில் தான் இருக்கவேண்டும். ஆகவே ஐ.நா ஆய்வு அறிக்கையின் முடிவு சொல்லி அதன் பிரகாரம் அதை ஆய்வு செய்து பார் என்று ஆய்வாளர்களிடம் அறிக்கை பெறப்படுகின்றது. இதெல்லாம் டுபாக்கூர் ஆய்வு அறிக்கை. நம்ம அ.திமு.க சொல்லுதே "டெங்கு இல்லை டாஸ்மாக்கினாட்டில்" என்று. அதே போலத்தான் இதையும் நாம் அறிந்து கொள்ளவேண்டும்.

 • vns - Delhi,இந்தியா

  சர்வதேச கணக்கெடுப்புகள் அதன் மூலம் வரும் செய்திகள் எல்லாம் தோராயமான கணக்குகள் தான். தொண்ணூற்றி தொண்ணூத்தி ஒன்பது சதவிகிதம் பொய்.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  இதென்ன ஆச்சரியம்... இந்த பிஜேபி ஆட்சி இப்படியே தொடர்ந்தால் மொத்த இந்திய மக்களும் இந்தியாவை விட்டே இடம் பெயர்ந்தாலும் ஆச்சரியமில்லை...

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  நீர் வழி தடங்களை மறித்து , குடியிருப்புகள் , ஆக்கிரமிப்புகள் அதிகம் ஆகும்பொழுது , இந்த இடம்பெயரும் நடவடிக்கை நடக்கத்தான் செய்யும். கிராமங்களில் இருந்து நகரத்துக்கு பிழைப்பை தேடி வரும் மக்களுக்கு , இடவசதிகள், ஒதுக்கி கொடுத்தால் , இதுபோன்ற அவலங்கள் நேராது. இதற்க்கு உள்ளாட்சி அமைப்புகள் , எதிர்காலத்தை கணித்து, வசதிகளை பெருக்கவேண்டும்.

 • Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா

  Very alarming but can't help.

 • Appu - Madurai,இந்தியா

  ஏனுங்க எசமா....இந்த பேரிடர் இடம் பெயர்வோர் படத்துல கலரு காலரா தெரியுதுங்களே எசமா?

 • தெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா

  பேரிடர் அபாயத்தினால் இடம் பெயர்வது தற்காலிகமானது .. இயல்பு நிலை திரும்பிய பிறகு அவர்கள் பழைய இடத்திற்கே மீண்டும் குடிபெயர்ந்து விடுவார்கள்.. ஆனால் ரோஹிங்கியா , காஸ்மீரி பண்டிட்டுகள், யூதர்கள் வட ஆப்பிரிக்கர்கள் போன்றோர் இடம் பெயர காரணமான மார்க்க மதவெறி மற்றும் மத மாற்ற வெறியர்களின் அட்டூழியங்கள் எப்போது குறையும் ? உலக அளவில் மிக பெரிய வியாபாரமே ஒரு குறிப்பிட்ட மதத்தினர் செய்யும் மத மாற்ற வியாபாரமே என்பது எத்துணை பேருக்கு தெரியும் ? பழம் பெரும் கலாச்சாரங்களையும், பழமை வாய்ந்த மொழி களையும் ஆராய்ச்சி என்ற பெயரில் சிதைக்க நடந்து வரும் நாடகங்களையும் அப்பாவி முன்றாம் உலகம் எப்போது அறிந்து கொள்ளும் ? மருத்துவ சேவை என்ற பெயரில் மதம் மாற்ற நாடு பெயர்ந்து வந்தவரை புனித அன்னை என்று அனைவரையும் அழைக்க வைத்த கொடுமை என்று ஒழியும் ?

 • Shriram - Chennai,இந்தியா

  நீர் இணைப்பு திட்டத்தை கட்டாயம் ஆக்கினால் வறண்ட பூமியும் நீர் பெரும் வெல்ல அபாயமும் நீங்கும்

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  A .C. காமராஜ் வகுத்துக்கொடுத்த நீர்வழி சாலை இருந்தால் வெள்ள பாதிப்புகளும் அநேகமாய் இருக்கவே இருக்காதே...ஏன் இதை செயல்படுத்தாமல் இருக்கிறார்கள்..

 • thiru - Chennai,இந்தியா

  இதில் ஆச்சரிய பட வாென்றும் இல்லை ஜனத்தாெகை அடிப்படையில் இந்தியா இரண்டாம் இடம்.. சீனாவில் கட்டமைப்பு வசதிகள் இந்தயாவை காட்டிலும் நன்றாக உள்ளதால் இரண்டாம் இடம்...

 • kundalakesi - VANCOUVER,கனடா

  முதலில் நீர் பாயும் விளை நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டு குடியிருப்புக்களாக்கப் படும். தரிசு தரிசாகவே இருக்கும். அப்புறம் தண்ணி நிரம்புதே, குத்துதே குடையுதே ன்னா எப்பிடி.

 • hasan - tamilnadu,இந்தியா

  கேரளாவை சேர்ந்த ஒரு புவியியல் ஆராய்ச்சியாளர் வரும் 31 டிசம்பர் க்குள் மிகப்பெரிய நிலநடுக்கம் இந்தியா பெருங்கடலில் ஏற்பட வாய்ப்புள்ளது அதனால் இந்தியா வளைகுடா நாடுகள் பாகிஸ்தான் தாய்லாந்து உள்ளிட்ட 11 நாடுகள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்று கூறியிருக்கிறார் , அந்த எச்சரிக்கை கடிதத்தை பிரதமருக்கும் அனுப்பியிருக்கிறார் , உண்மையோ பொய்யோ நாம் கொஞ்சம் தயாராக இருப்பது நல்லது

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement