Advertisement

யுனெஸ்கோவில் இருந்து விலகல்: அமெரிக்கா, இஸ்ரேல் அறிவிப்பு

வாஷிங்டன்: ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது. எனினும் அமெரிக்கா செலுத்தவேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்தது. யுனெஸ்கோவில் இருந்து விலகுவதற்கு இதையும் ஒரு காரணமாக அமெரிக்கா கூறியுள்ளது.

யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். அமெரிக்கா விலகும்போது அந்த சமயத்தில் இஸ்ரேலும் விலகுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி வெளியுறவுத் துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பெஞ்சமின் நேதன்யாகு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது. பன்முகத் தன்மை மற்றும் ஐ.நா. குடும்பத்திற்கு இழப்பு என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (16)

 • தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா

  1984 to 2003 இல் விலக்கித்தான் இருந்தது. அதனால் குடி ஒன்றும் முழுகிவிடவில்லை.

 • Agni Shiva - Durban,தென் ஆப்ரிக்கா

  ஐக்கிய நாட்டு சபை மற்றும் யுனெஸ்கோ இந்த இரு அமைப்பும் செயல்படுவதின் முக்கிய காரணமே அமெரிக்கா தான். அதன் நிதி தான். இந்த இரு அமைப்புகளுக்கு மொத்த மூர்க்க நாடுகள் அளிக்கும் நிதியுதவி அற்பமான ஐந்து சதவீதத்திற்கும் குறைவு. ஆனால் அமெரிக்கா அளிக்கும் நிதிஉதவியோ சுமார் 70 சதவீதத்திற்கும் அதிகம். மற்ற பிறநாடுகளில் பங்களிப்பும் குறைவே. அமெரிக்காவின் பணத்தை பெற்று கொண்டே அதை எதிர்த்து அதன் எண்ணங்களுக்கு எதிராக ஈடுபடுவது, மூர்க்கங்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக செயல்படுவதும் தான் தற்போது நடந்து வருகிறது. இந்த இரண்டு அமைப்புகளும் ஆரோக்கியமாக தொடர்ந்து இயங்க வேண்டுமானால் மூர்க்க ஆதரவு என்ற தற்கொலை எண்ணத்தில் இருந்து விலக வேண்டும் இல்லை அவ்வாறு தான் இருக்கும் என்றால் இந்த இரு அமைப்புகளும் ஒழிவது நல்லதே. இதில் இருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் விலகுவதில் தவறு இல்லை. இந்த இரு நாடுகளும் அவ்வாறு செய்வின் இந்தியாவும் இதிலிருந்து விலகுவது நல்லதே.

 • Parneev Upt - jersey,யூ.எஸ்.ஏ

  தமிழ் பச்சைகள் யூதர்கள் மீது என்ன பகை ... ஏன் வெறுப்பு ... அரேபிய மூளை சலவையின் வெளிப்பாடு ..

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  உலகநாடுகளின் புரதான சின்னங்களை பாதுகாத்திடும் புனித பணியில் UNESCO ஈடுபட்டுள்ளது . இது மனிதனின் தொன்மை ,நாகரீகம் வரலாறு பேணும் அமைப்பு . இதிலிருந்து இஸ்ரேலும் ,அமெரிக்காவும் விலகுவது , இன்னொரு UNESCO வேறு வடிவில் உருவாகும் அது உலக சரித்திரத்தை புரதான சின்னம்களின் கதையை வேறுவிதமாக சொல்லும் . இதே போல UN ன்னும் இஸ்ரேலும் ,அமெரிக்காவும் விலகினால் உலக அமைப்பு என்ற பேரில் யுத்த சத்தம் கேட்க்கும் . இஸ்ரேலும் ,அமெரிக்காவும் UNESCO விலிருந்து விலகுவது ஆபத்துக்கான அறிகுறிதான் .

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  அதானே , யு எஸ் என்றாலே , இஸ்ரேல் என்று ஓரணியில் உள்ளவர்கள் . இந்தியா என்றால் காவிகள் என்று எடுத்துக்கொள்ளமுடியுமா? மத போர்வையில் இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்துக்கு , வெளிநாட்டு யுக்தி இப்போது அவசியமாகிறது. இந்த யுக்தி இஸ்ரேலிடம் நிறைய உள்ளது. அந்த யுக்திகளை கைக்கொண்டு இந்த வன்முறைகளை ஒழித்து மக்கள் அமைதியாக வாழ அரசு முயல்வது தவறா? மத போர்வையில் கலவரம் செய்பவர்களை கண்டிப்பதை விட்டு, அந்த கலவரங்களை ஒடுக்க முயலும் arasuk

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  ஒபாமா ஆட்சியால் வந்த வினை? மத்திய கிழக்கு நாடுகளுடன் ஒபாமா ஒத்துஊதினால் விளைவு இப்படித்தான்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  எங்கப்பா வெள்ளை பாவாடைகளை காணவில்லை. வந்து கொஞ்சம் விளக்குங்கப்பா.

 • VSubramanian -

  SIMILARLY INDIA ALSO SHOULD COME OUT OF UN AS INDIA IS NOT GETTING HER DUE SHARE. FURTHER CONCEPT OF PERMANENT MEMBERSHIP SHOULD ALSO BE ABOLISHED

 • Appu - Madurai,இந்தியா

  நீ விலகு இல்ல சேந்துக்கோ...யாருக்கென்ன லாப நட்டம்? இஸ்ரேலுக்கு எதிரா பாகுபாடு காட்டுதுன்னு சொல்லி ஐநா மேல காண்டுல வௌவுறது உலக மக்கள் கவனிக்கனும்...மற்ற எத்தனையோ பிரச்சனைக்கு சில நாடுகள் ஒன்று கூடி நின்றாலும் அமெரிக்கா தன்னுடைய தனிப்பட்ட பவரை பிரோயகம் செஞ்சி ஒன்னுமில்லாம செஞ்சிருது..இதே இஸ்ரேலுக்கு பிரச்சனைன்னு தனிப்பட்ட நாடா நின்னு அமெரிக்கா வேடிக்க காமிக்குது...உலகம் அமேரிக்கா இஸ்ரேலுக்கு பின்னால போவுறது அழிவோட ஆரம்பம்...

 • chails ahamad - doha,கத்தார்

  தவறை தவறாக சுட்டி காட்டுவது அமெரிக்காவிற்கு பிடிக்காது , இஸ்ரேல் என்ற நாட்டின் அடிமைகளே அமெரிக்காவை ஆளும் வர்க்கமாகும் , இஸ்ரேலிய யூதர்களே அமெரிக்காவின் அதி உயர் பதவிகளில் அரசின் ஆளுமையை தங்களது கண் அசைவில் நிகழ்த்தி கொண்டு இருப்பவர்கள் என்பதை உலக நடப்பு அறிந்தவர்கள் அறிந்தே உள்ள போது, தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக யுனஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவது ஏதும் ஆச்சரியத்துக்கு உரியது இல்லை என்பதே நிதர்சன உண்மையாகும் பாலஸ்தீனத்தை யுனஸ்கோ அங்கீகரிப்பதை எதிர்த்து இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா விலகுவதில் இருந்து நாம் உணருவது , அமெரிக்காவின் கொள்கை முடிவுகளை எடுப்பவர்களில் அதி உயர் பதவியில் இருப்பவர்கள் யூதர்களே என்பதால் அவர்களால் தங்களது தாயகமாக கருதும் இஸ்ரேலுக்கு ஆதரவாக முடிவு எடுப்பதையே பெரும் புண்ணியமாக கருதுபவர்கள் உள்ளார்கள் என்பதை உலக நடப்பு அறிந்தவர்கள் உணர்ந்தே உள்ளார்கள் என்பதையும் நாமும் உணரலாம் ,

 • kundalakesi - VANCOUVER,கனடா

  வெல்டன் யூஎஸ். இப்போ ஒரே பச்சை அனுதாபம், தேவையில்லாமல் எக்கச்சக்கமாக இருக்கிறது. பயங்கரவாதத்தால் கொல்லப்படுவதும் அவர்களால்தான்.

 • hasan - tamilnadu,இந்தியா

  அமெரிக்காவின் கள்ளக்குழந்தை இஸ்ரேல் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகிறது , இவர்களின் ஆதிக்க வெறி தான் உலகில் கடந்த 70 ஆண்டுகளாக நடந்த பல போர்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் முக்கிய காரணம் , இந்தியா இதை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும் , இஸ்ரேல் உடன் நட்பு பாராட்டுவது நல்லபாம்புக்கு முத்தம் கொடுப்பது போன்றது , இதை சொன்னால் காவிகளுக்கு கோவம் வரும் ,ஆனாலும் இது தான் உண்மை , வரலாறு ,

 • கருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா

  வேலில போன ஓணானை (palestine ) வீட்டுக்குள் விட்டதால் இந்த இழப்பு யுனெஸ்கோவிற்கு ...... அமெரிக்கா பயப்படுவதில் அர்த்தம் உள்ளது, அவர்கள் இனப்பெருக்கத்தை கணக்கில் கொண்டால் இன்னும் 50 வருடத்தில் , உலகில் பெரும்பான்மையோர் அவர்களே அதற்கப்புறம் அந்த யுனெஸ்கோ அமைப்பில் மத்த எல்லா கலாச்சாரத்திற்கும் தடை போடுவார்கள். உலகம் அவ்ளோதான்..... நினச்சா இப்பவே பயமா இருக்கு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement