Advertisement

பட்டினி நாடுகள் பட்டியல் : 100 வது இடத்தில் இந்தியா

புதுடில்லி : வளர்ந்து வரும் உலக நாடுகளில் உள்ள பட்டினி விகிதத்தின் அடிப்படையில் புதிய அட்டவணை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 119 நாடுகள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் உள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவை தொடர்ந்து வடகொரியா, வங்கதேசம், ஈராக் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97 வது இடத்தில் இருந்தது.


சர்வதேச உணவு கொள்கை ஆய்வு கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் ஆப்கானிஸ்தானும், 2வது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன.


உலக பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா(29), நேபாளம் (72), மியான்மர் (77), இலங்கை (84), வங்கதேசம் (88), பாகிஸ்தான் (106) ஆப்கானிஸ்தான் (107), வடகொரியா (93), ஈராக் (78) ஆகிய இடங்களில் உள்ளன. இந்தியாவில் ஐந்தில் ஒன்றுக்கும் அதிகமான, 5 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளின் உடல் எடை அவர்களின் உயரத்தை விட மிகவும் குறைவாகவே உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (39)

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  நமது நாட்டில் எல்லாவளமும் இருந்தாலும் நதிகள் இணைப்பை நிறைவேற்றி திட்டங்களில் "விவசாயத்துக்குத்தான் முதலிடம் கொடுக்கவேண்டும்" என்ற கோட்பாடோடு நாட்டை நடத்திச் சென்றால் நிச்சயமாக பட்டினி என்கிற பேச்சே வராது. THINAKAREN KARAMANI, VELLORE, INIDA.

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  அந்த ஆய்வறிக்கையில் உள்ளே நுழைந்து பார்த்தால் இந்தியாவில் இது முஸ்லிம்களின் அளவில்லாத ஜனப்பெருக்கத்தால் என்று இருந்திருக்கும்.

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இந்தியா இந்த பட்டியலில் 2003 ஆம் ஆண்டில் 96 வது இடத்திலும் , 2014 இல் 55 ஆவது இடத்திலும் இருந்தது .. இப்போது மோடிஜியின் மிக சிறந்த ஆட்சியால் 100 வது இடத்துக்கு வந்திருச்சு .. செம செம .. இப்படி தான் நாட்டை வளர்க்க வேண்டும் .. நாங்க ஆதார் மூலம் சேமித்துவிட்டோம் சேமித்துவிட்டோம் என்று சொன்னாரகளே ?? ஞாபகம் இருக்கா ?? அது இப்பிடி தான் .. ஏழைகளுக்கு சென்று கொண்டிருந்த உணவு தானியங்களை குறைத்து சேமித்த சாதனை .. இன்னமும் கொஞ்ச நாள் தான் மானியம் முற்றிலும் தடை பண்ணிட்டா , இந்த பட்டியலில் முதல் இடத்துக்கு வந்துரலாம் .. அதாவது 119 வது இடத்துக்கு .. கடைசியில் இருந்து அது தானே முதல் இடம் என்று பக்தா சொல்லுவா

 • vnatarajan - chennai,இந்தியா

  குழந்தைகளின் எடை குறைவிற்கு மற்றொரு காரணமும் உண்டு. தற்போது பெண்களும் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் சரிவர கொடுப்பதில்லை. 6 மாத விடுப்பில் வீட்டில் இருந்தாலும் அவர்களிடம் குழந்தைக்கு தேவையான தாய்ப்பாலும் இல்லை . முன்பெல்லாம் தாத்தா பாட்டி குழந்தைகளை பார்த்துக் கொண்டார்கள் அவர்கள் எல்லாம் தற்போது முதியோர் இல்லத்தில் இருப்பதால் வேலைக்கும் செல்லும் பெண்கள் சிறு குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்தில் விட்டு செல்கிறார்கள். இங்கு தாயாரின் பாசமின்மையால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் எடை இயற்கையாகவே குன்றிவிடும்

 • Kumz - trichy,இந்தியா

  இந்தியா சோமாலியாவாக மாறுவதை தடுப்போம் குடும்ப கட்டுப்பாட்டை கொண்டு வருவோம்

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  இதுதான் காங்கிரஸ் அரசின் சாதனை , 60 ஆண்டுகள் பலமான எதிர்க்கட்சி இல்லாமல் இந்த நாட்டை ஆண்டு குட்டிசுவராகியதன் விளைவு. இனிமேல் யாரும் காங்கிரசை என்ன செய்தீர்கள் என்று கேட்க கூடாது. வெள்ளைக்காரன் எந்த நிலையில் விட்டு சென்றானோ ? அதே நிலையில் அவனுடனேயே கூட்டு வைத்து நம் மக்களை இந்த நிலையிலேயே வைத்திருந்தார்கள். அதில் ஒரு மாற்றம் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது நிகழ்கால ஆட்சியில் அதை எப்படியாவது நிறுத்தி திரும்ப பழையநிலைக்கு கொண்டுபோக அனைத்து முயற்சிகளும் எடுக்கிறார்கள். ஆகவே யாரும் அவர்களை குறை சொல்ல வேண்டாம். (97 ..100 என்பது கணக்கிடும் முறையில் நடக்கும் குழப்பத்தில் கூட முன்னே பின்னே ஆகலாம் )

 • balakrishnan - coimbatore,இந்தியா

  வெட்கக்கேடான விஷயம், இதை முதலில் ஆளும் வர்க்கத்தினர் தான் தெரிந்து கொள்ள வேண்டும்

 • Karuthukirukkan - Chennai,இந்தியா

  இதே பட்டியலில் இந்தியா 2014 இல் இதை விட மிகவும் நல்ல நிலையில் இருந்தது .. மோடிஜியின் நல்லாட்சியில் மேலும் பல குழந்தைகள் தேசத்துக்காக பட்டினி இருந்து இந்த இடத்தை பிடிக்க வெச்சிருக்கு .. வாழ்க இந்த ஆட்சி ..

 • N.Mahendiran - Pondicherry,இந்தியா

  உலகத்தில் மிகவும் கொடியது பசியால் வாடுவது. அப் பசியை ஒழிக்க சரியான திட்டங்கள் தேவை.

 • N.Mahendiran - Pondicherry,இந்தியா

  அரசியல் வாதிகளால் தான் இந்தியா வறுமையில் தவிக்கிறது. தனி மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழிப்போம் என்றான் பாரதி. இப்போது நாம் செய்ய வேண்டியது அழிப்போம் உழல்வாதிகளை .காப்போம் kadaisi மனிதனை.

 • saravanan - kadayanallur

  வங்கதேசம் இலங்கையை விட நாம் மோசம் வெட்க பட வேண்டிய செய்தி

 • ashamed. indian - tirunelveli

  bullet train, digitel india ,, new currency, jai ho

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  இந்தியாவில் பசி, பட்டினி பிரச்னையால் அதிக அளவிலான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியில் அதிகம் வாடுவோர் உள்ள ஆசிய நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. எல்லா பணமும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் வசம் சென்றுவிடுகிறது . இதனால் ஏழைகள் இந்தியர்கள் வணங்கும் சக்தி இல்லாமல் ,கடையில் பொருள் இருந்தாலும் அது வீட்டுக்குள் வராது ஆனால் அரசியல்வாதி அரசு ஊழியர்கள் வீட்டுக்குள்மட்டும் செல்லும் .

 • BJP NESAN - BJP Puram

  அப்படயெல்லாம் சொல்லப்படாது இந்தியா படுவேகமாக வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து பொறாமையால் இவர்கள் இப்படி குறுகின்றனர் உண்மையில் இந்தியா வளர்ந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டன எல்லா ஏழைகள் அக்கவுண்டிலும் பதினைந்து லட்சம் போட்டாகிவிட்டது கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டு நாட்டின் கடன்கள் அடைக்கப்பட்டு விட்டன ரூபாய் நோட்டு வாபசுக்கு பிறகு லஞ்சம் முற்றிலும் ஒழிந்து விட்டது புதிதாக கொணடுவரப்பட்ட வரித்திட்டத்தால் எல்லைப் பொருட்களும் விலை குறைந்துவிட்டது ஏழைகள் எல்லோரும் இப்பொழுது பணக்காரர்கள் ஆகிவிட்டனர்

 • Mano - Madurai,இந்தியா

  Waiting for bullet train to eliminate this problème. I mean to eliminate the poor people. Bharath mattuki j'ai.

 • thiru - Chennai,இந்தியா

  இனி புல்லட் ரயில் மூலம் உணவு இல்லாதவர்க்கு உணவு வழங்கப்படும்...

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  மோடி அரசு , வாஜ்பாய் அரசு காங்கிரஸ் அரசு எதுவுமே இந்த பிரச்சினையை தீர்க்க தீவிர முயற்சி எடுக்கவில்லை என்றே கூற வேண்டும் . மொரார்ஜி ஆண்ட காலத்தில் உணவு பிரச்சினை மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டது மற்ற எல்லோரும் வெறும் கோஷம் மட்டும் தான் . தற்காலிக நடவடிக்கையாக NGO க்கள் மூலம் ஏழை சிறார்களுக்கு உணவு அளிக்கலாம் , நீண்ட கால நடவடிக்கையாக நதி நீர் இணைப்பு மற்றும் விவசாயம் முன்னேறினால் தான் பட்டினியைப் போக்க முடியும்

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  இவர்கள் குறிப்பிடுவது முழுப்பட்டினியல்ல. சத்து குறைபாடுதான். சமவிகித உணவுப்பழக்கம் இல்லாததே காரணம். இது வசதியான வீட்டுக்குழந்தைகளிடையேயுமுண்டு. எளிய கீரை  வாழைப்பழம் கேழ்வரகு ஆகியவற்றிலேயே பெரும்பாலான சத்துக்களுண்டு . இதனையறியாமல் சிறுவயதிலேயே சாக்லேட்  பீட்சா பர்கர் பரோட்டாவென குழந்தைகளின் நாக்கு சுவையைக்கெடுக்கிறோம்  .

 • ganapati sb - coimbatore,இந்தியா

  ஆலயங்கள் குருதவாராக்கள் மடங்கள் திருவிழாக்கள் தொண்டு நிறுவனங்கள் தர்மம் செய்யும் பல குடும்பங்கள் போன்றவற்றில் எப்போதும் அன்னதானம் நடக்கும் நம் நாட்டில் பட்டினி பிரச்சனை இருக்க வாய்ப்பில்லை. வேலைவாய்ப்பு அல்லது சம்பளம் குறைவாய் உள்ளவர்களுக்கும் அரசால் ரேஷனில் 20 முதல் 35 கிலோ வரை அரிசி அல்லது கோதுமை இலவசமாக அல்லது வெறும் 2 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. அனால் சரிவிகித ஊட்டச்சத்தும் சுகாதாரமான இடங்களில் தங்க, தகுந்த இருப்பிடம் இல்லாதவர்களுக்கு ஆரோக்கிய பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. நோய் வந்த பின் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இலவசமாக மருத்துவம் பெறுவது ஒரு பக்கம் என்றால் நோய் வருவதை காக்க ஸ்வச்சபாரத் மூலம் மக்களின் பங்களிப்போடு மறுபக்கம் தேசத்தின் சுகாதாரம் மேம்படவேண்டும் .அனைவருக்கும் வீடு திட்டம் மூலம் அனைவருக்கும் வேலை வாய்ப்பும் வீடும் கிடைக்க வேண்டும். தேவையான அளவு வருமானம் உள்ளவர்கள் செலுத்தும் வரி ஊழல் இல்லாமல் ஏழைகளுக்கு வேலைவாய்ப்புக்கு உதவும் வகையில்அரசு மற்றும் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

 • Raman - kottambatti,இந்தியா

  ஆசியாவில் முதல் இடத்தில ஆப்கானிஸ்தானும் இரண்டாம் இடத்தில பாகிஸ்தானும் உள்ளது.. அதன் பிறகுதான் இந்தியா.. இது ஒரு பெருமை அல்லவா? நமக்கு எதிரி பாகிஸ்தான் தான் அவனுக்கு பின்னால் வருவது ஒரு பெரிய சாதனை

 • உஷாதேவன் -

  இது பெருமைக்குரிய விஷயமில்லை. பட்டினியோ பட்டினி சாவோ கொடுமை.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///கடந்த ஆண்டு இந்த பட்டியலில் இந்தியா 97 வது இடத்தில் இருந்தது.///என்ன முன்னேற்றம் என்ன ஒரு முன்னேற்றம், தலைவரின் ஆட்சியில் நாம் சதமடித்து சாதனை படிக்கிறோம், இன்னமும் முன்னேறி, இதைவிட அதிக ஸ்கோர் செய்வோம், சாதனை படைப்போம், வாருங்கள் கூலி பாய்ஸ், வாருங்கள், வந்து முட்டுக்கொடுத்து தாங்குங்கள் இந்த அரசை.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///பட்டினி நாடுகள் பட்டியல் : 100 வது இடத்தில் இந்தியா//எங்களுக்கு ஏழைகளை பற்றி கவலையில்லை, ஏழ்மையை பற்றி கவலை இல்லை, எங்களுக்கு அம்பானியும் அடானியும் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது, அதற்க்கு நாங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வோ, எந்த வித தியாகமும் செய்வோம், அவர்களே எங்களை காக்கும், ஆட்சியில் அமரவைக்கும் கடவுள், எங்கள் சேவை அவர்களுக்கானதே என்று ஒரு அரசு இருக்கும் போது, இவர்களைப் பற்றி என்ன கவலை.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///பட்டினி நாடுகள் பட்டியல்: 100வது இடத்தில் இந்தியா// தலைவர் அடுத்த முறையும் ஆட்சிக்கு வந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் மொத்த ஏழ்மையையும் "ஒழித்து" விடுவார், ஏழையை மொத்தமாக ஒளித்து கட்டுவதன் மூலம், இதுதான் அவர்களின் கொள்கை, கோட்பாடு.

 • முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா

  ///பட்டினி நாடுகள் பட்டியல் : 100வது இடத்தில் இந்தியா//இந்தியா வல்லரசு வல்லரசு, வல்லரசு அவ்வளவுதான், வேறு யார் சொன்னாலும் தவறு, நாங்கள் சொல்வது தான் உண்மை, இது எங்கள் தங்க தலைவர் மோடிக்கு எதிராக நடத்தப்படும் சதி, இது கமலாலயத்தில் எழுதி கொடுத்து, கூலி படையினரால் பின்னர் பின்னூட்டம் போடப்படும்.

 • SyedAasik -

  ஏன் இந்த அவலம். அரசு செயல்படுத்த நினைக்கும் அனைத்து திட்டங்களுக்கான நிதிகளும் அரசியல்வாதிகளின் கஜானாக்களில் நிரம்பி வழிகின்றது. அளவுக்கதிகமான பணத்தின் மீது கொண்ட மோகம் என்றைக்கு தணிகின்றதோ அன்றைக்கு நாடு செழிக்கும். இந்த நாட்டை பார்த்து கேட்கின்றேன் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை கொள்வதற்கு பதிலாக ஒரே அடியாக கொன்று விடு..... வாழ்க பாரதம் என்ற முழக்கத்துடன் நிம்மதியாக வீழ்வோம். நாட்டை ஆழத்தெரியாத ஆட்சி மலர காரணமான, அரசியல்வாதிகள் மாக்கள் என்று நினைக்கும் மக்களுக்கு எனது அனுதாபங்களுடன் கூடிய நன்றி.

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  நம்மளாத்தான் வளர்ந்து வரும் உலக நாடுகளில் பட்டியலில் இருந்து நீக்கியாச்சே. வேற எப்படி, நாம அந்த பட்டியலில்? ஆதிக்க வர்க்க நாடுகள், வழக்கம்போல பட்டியலில் இணைச்சிட்டாங்களோ? இவர்களுக்கு வேற வேலையே இல்ல, எதையாவது குத்திவிட்டு வேடிக்கை பார்ப்பது.

 • Saravana Kumar - TIRUPUR,இந்தியா

  119 நாடுகள் இடம்பெற்றுள்ள பட்டினி விகிதத்தின்' அடிப்படையிலான பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான சீனா 29 வது இடத்தில உள்ளது.'டோக்லாம்' ல் மட்டும் மீசை முறுக்கினால் பத்தாது.

 • krishnan - Chennai,இந்தியா

  மோடி அரசு பட்டினியால் வல்லரசு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement