Advertisement

முப்படையினருடன் தீபாவளி கொண்டாட்டம்: நிர்மலா சீதாராமன் முடிவு

புதுடில்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், முப்படையினருடன் இணைந்து தீபாவளி கொண்டாட முடிவு செய்துள்ளார்.

கொண்டாட்டம்:இதுகுறித்து பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியாவின் முப்படைகளும் அந்தமான நிகோபார் தீவுகளில் நிலைகொண்டுள்ளன. அங்கு வரும் 18ம் தேதி(அக்.,18) பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். முப்படைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அவர், வட இந்தியாவில் தீபாவளி கொண்டாடும் தினமான அக்.,19ம் தேதி, முப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுகிறார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் பயணம்:இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இரு நாட்கள் சுற்றுப்பயணமாக நிர்மலா சீதாராமன் செல்ல உள்ளார். அக்., 24 மற்றும் 25 ஆகிய இரு நாட்கள் பிலிப்பைன்ஸ் செல்லும் அவர், அந்நாட்டு தலைவர்களுடன் ராணுவ ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சரான பின், நிர்மலா சீதாராமன் மேற்கொள்ள உள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
 

வாசகர் கருத்து (50)

 • truth tofday - india,இந்தியா

  திடீர் தலைவியின் தியாகங்களில் இதுவும் ஒன்று, பி ஜி பி க்காக இவர் செய்த இந்த தியாகம் தான் பெரியது கரசேவகர்கள் பி ஜி பிக்காக உயிர் விட்டவர்கள் தியாகத்தை விட இவர் தீபாவளி கொண்டாடும் தியாகம் தான் பெரியது திடீர் தலைவியும் இந்திய வரலாறு படைத்துக் கொண்டே இருக்கிறார்

 • Hariharan Iyer - Nagpur,இந்தியா

  அட்வான்ஸ் நல்வாழ்த்துக்கள் ஸ்ரீமதி சீதாராமன் அவர்களே. உங்கள் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களை போல் நேர்மையாக உழைக்கும் அரசியல்வாதிகள் குறைவு. இத்தாலியின் அடிவருடிகள் பொறாமையால் பேசும் வார்த்தைகள் உங்களை ஒன்றும் செய்யாது. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

 • vnatarajan - chennai,இந்தியா

  அந்தமானில் தீபாவளி கொண்டாடும் மேடம் நிர்மலா சீதாராமனுக்கும் முப்படை வீரர்களுக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள். எப்போதுமே அவர் எடுத்துக்கொண்ட துறை ஒளிர்விட்டு பிரகாசிக்கும் தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்ப்பார்

 • Advaiti - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள்

 • "????????????" ??????????? ?????? - ???????????? ???????????,இந்தியா

  கொண்டாட்டத்தில் பரமபதம், பல்லாங்குழி, கும்மி, நொண்டியாட்டம் போன்ற வீரம் நிறைந்த பொழுதுபோக்கு விளையாட்டுக்கள் சேர்க்கப்படுமோ?

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  பாராட்டுகிறோம். எல்லாத்தையும் நொள்ளை கண்ணோட பார்த்து பழகினவங்களுக்கு எதுவுமே தப்பா தெரியும்.. ஏன்னா, கடந்த 60 வருஷமா, காங்கிரஸ்காரங்க, , பயாஸ்கோப் காட்டி, நாட்டை பாழாக்கி, மக்கள் மனசிலயும் அரசியல்வாதிங்கண்ணா ஏமாத்தறவங்கன்னு நிரூபிச்சிருக்காங்க. போலி மத சார்பின்மையால் வந்தேறிகளுக்காக வக்காலத்து வாங்கி, நம்ம நாட்டு பாரத நாட்டின் பாரம்பரியத்தை பண்பாட்டை, கலாச்சாரத்தை சீரழித்திருக்கின்றார்கள். பிஜேபியால் மட்டுமே அவைகளை காப்பாற்ற முடியும்.

 • தமிழர்நீதி - சென்னை ,இந்தியா

  நல்லதுதான் . தீபாவளி , பொங்கல் ,தசரா , வெள்ளிக்கிழமை பூஜை அப்டீன்னு ராணுவத்தை காவி மயமாக்கி அப்புறம் தயிர்சாதம் , பொங்கல் ,வடை , சாம்பார் கொடுத்து நெத்தியில் நாமம் பூசி ராணுவ உடைகூட கோவண வேட்டி, மேலுக்கு சட்டை இல்லாமல் ,பூணுல் போட்டு , பெண் ராணுவ வீர்களுக்கு மடிசார் கொடுங்கள் . எதிர்க்கட்சிகள் கேட்டால் இதுதான் அணு ஆயுதத்தை தடுக்கும் எதிர்க்கும் மந்திரசக்தி கொண்டது என்று காதில் பூ சுற்றி ஜாமாயுங்கள் . தினம் காலை மாலை உடல் பயற்சி இல்லாமல் பாபா ராம் தேவை வைத்து யோகா சொல்லிவிடுங்கள் . ஜாக்கி வாசுதேவனை வைத்து யாகம் நடத்துங்கள் . எல்லையை பசுமாடு விட்டு மேய விடுங்கள் . ஒரு மாதிரியாக இந்திய ராணுவம் உலகத்தின் கண்ணுக்கு தெரியும் . ராணுவ அமைச்சரும் இவரது நடவடிக்கையும் பார்த்தல் எதிரிமீது குண்டு போடச் சொன்னால் பட்டாசு விடும் சிறுபிள்ளைத்தனம் தெரிகிறது . காவிகளிடம் மாட்டிக் கொண்டு இந்திய ராணுவம் தவிக்கிறது . போகிற போக்கை பார்த்தால் அண்டை நாட்டான் இந்தியாவின் பொருளாதாரத்தின் மீதி ஆதிக்கம் செலுத்துவது போல அரசியல் ராணுவம் என்று விரிவடைவான் போலிருக்கு .இதுக்கு நிர்மலா மட்டும் போதும் .

 • Narayanan Muthu - chennai,இந்தியா

  அந்த ஒரு நாளாவது ராணுவ வீரர்களுக்கு நல்ல உணவாக வயிறார கொடுக்கும்படி நிம்மியை கேட்டுக்கொள்ளுங்க வீரர்களே

 • அண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் அமைச்சரே. காங்கிரஸ் மட்டைகள் போல வெளிநாடு சென்று பண்டிகையை கொண்டாடாமல் இந்த மண்ணின் கலாச்சாரத்தை வீரர்களுடன் கொண்டாடுவது மகிழ்ச்சி.

 • Appu - Madurai,இந்தியா

  இந்த தீவாளி நாம நிர்மலா அம்மாவுக்கு தவுசண்ட் வாலாவோ இல்ல டென் தவுசண்ட் வாலாவோ இல்ல.. பீரங்கி வாலா,, கப்பலு வாலா,,,, விமான அணுகுண்டு வாலா.. என்ஜாய்... மேடம் தீபாவளி வாழ்த்துக்கள்...மேடம் அப்டியே எல்லைலையே பெர்மனெண்டா குடி இருந்துக்கங்க..ஏன் சொல்றேன்னா நாட்டுக்காக நீங்க ரொம்ப தியாகம் செய்றீங்க.. வருங்காலத்துல உங்களுக்கு செல செஞ்சி இந்திய வரலாற்றுல பெரிய முக்கியத்துவம் கொடுக்கனும் இல்லே?

 • Solvathellam Unmai - Chennai,இந்தியா

  பொய்யில் புலவி

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நல்லா தீபாவளி கொண்டாடுங்க.. ஆனா சீனா பட்டாசை கொழுத்தி தீபாவளி கொண்டாட வேண்டாம். உங்க குஜராத்தி சேட்டு கண்டைனர் கண்டைனரா சீன பட்டாசை கடத்திக்கிட்டு வந்து மார்க்கெட்டுல வுடுறான்.

 • Sampath Kumar - chennai,இந்தியா

  கிடா விருந்தா தாயீ அசத்துங்க

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  "Remember one thing India Military force has zero person with their religion. India can have only Indian as Military officer” Great words from Gen. JJ Singh .

 • ushadevan -

  இங்க பட்டாசுக்கு தடை. அதனால அவர்களுடன் தீபாவளி. All the best.

 • எமன் - எமபுரம்,அன்டார்டிகா

  சூப்பரப்பு. அப்போ "அரசாங்க பணத்துல ஒரு 10 பட்டு புடவை 2 வைர நெக்லஸ் வாங்கிடுவாங்க, இந்த தீபாவளிக்கு இவங்க காட்டுல தான் மழை". அடிச்சது பாரு யோகம் வரிகட்டறது நாம. அந்த வரிப்பணத்துல பட்டுப்புடவையை வாங்கி வாரிகட்டிக்கறது இவிங்க. இந்த பொழைப்பு பிழைக்கறதுக்கு நாலுவீட்டுல பாத்திரம் தேய்க்கலாம். "இவங்களுக்கு மட்டும் தான் தீபாவளி, நமக்கெல்லாம் தலைவலி". வாழ்க ஜனநாயகம்.

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  கலக்கிறீங்க . தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  இது நம் படைவீரர்களை உற்சாகப்படுத்தும் நற்செயல் தான். அப்படியே எல்லையில் எப்போது உயிர் பிரியும் என்கின்ற நிலையில் பணிபுரியும் வீரர்களுக்கு சரியான உணவு வழங்கப்படவில்லை என்கின்ற செய்திகள் வந்தவண்ணம் உள்ளது. அதையும் சரி செய்யுங்கள்.

 • D.RAMIAH - RAIPUR,இந்தியா

  THIS IS A GOOD THING - IT SHOULD BE FOLLOWED BY ALL MINISTERS

 • A R J U N - ,இந்தியா

  NEET தேர்வுக்கு இந்த வருடம் மட்டும் அனுமதி வழங்க கோரிக்கை விடுங்கள் "நான்" பாத்துக்கொள்கிறேன்.. என்றார்.. நம் பொன் ரா வும் ஆமாம் சாமி போட்டார்... என்னவாயிற்று? நமது "மந்தி"ரிகளும் நடையோ நடையாக அலைந்தார்கள் தான் மிச்சம்.. இந்தம்மாவுக்கு "பாதுகாப்பு"துறை. எதை பாதுகாக்கப் போகிறார்?.

 • முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  திராணி இருந்தா போயி பொது மக்களோட கொண்டாடவேண்டியது தான......? மந்திரி வேல பாக்கற அம்பூட்டு பயலுவலயும் அடிச்சி வெரட்டிடுவாங்க... எல்லாரும் இவிங்க மேல அம்பூட்டு காண்டுல இருக்காங்க..,.

 • krishnan - Chennai,இந்தியா

  ஒரு நல்ல நாளாவது கொஞ்சம் ரிலாக்ஸா இருக்க உடராங்களா. சலூட் அடுச்சுட்டு இவங்கள தாங்கிட்டு தட்ட தூக்கிட்டு நிக்கனும்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  நிம்மி ரொம்பவே பிலிம் காட்டுகின்றார் . என்றைக்கு ஆப்பு அடிக்க போகிறார்களோ

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  நேரு காந்தி குடும்பம்போல அவ்வபபோது வெளிநாட்டில் விடுமுறையைக் கழிப்பதற்கு பதிலாக இப்படி செய்யறீங்களேம்மா? என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  நல்லா கொண்டாடுங்கோ..நிஜ துப்பாக்கி வெச்சே சுடலாம்...ஒரு நாலு பாகிஸ்தான் பயங்கரவாதிகளை டார்கெட்டா புடிச்சி வெச்சு சுட்டு பழகிக்கோங்கோ..

 • krishnan - Chennai,இந்தியா

  வெடி மருந்து வேற கம்மியா இருக்கு எல்லாத்தையும் இந்த தீபாவளிக்கு வெடிச்சு தீர்க்க வேண்டாமுன்னு சொல்லிஇருக்காம்

 • Raman - kottambatti,இந்தியா

  எப்படி.. தண்ணியிலா தரையிலா அல்லது ஆகாயத்திலா? நீ என்ன பண்ணா என்ன? அதனால் நாட்டுக்கு என்ன பயன்?

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  நல்லது தான். கிருஸ்துமஸும், ரம்ஜானும் கொண்டாடுவாரா அமைச்சர்? மற்ற மதத்தினரும் மற்ற மதத்தை நம்புபவர்களும் இந்திய ராணுவத்தில் உள்ளார்கள். இந்திய தேசம் என்பது மதத்தை கடந்து அதற்கும் மேலே என்று அழுத்தமாக பதிவு செய்யும் வண்ணம் நடந்து கொள்வாரா?

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  கலக்கறேள் போங்கோ .....வெளுத்து வாங்குங்கோ... நல்லவா எல்லாரும் உம்ம பக்கம்தான்.... கவலை படாதேள்.... தீபாவளி நல்வாழ்த்துக்கள்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement