Advertisement

சபரிமலையில் பெண்கள் தரிசனம்: சுப்ரீம் கோர்ட் இன்று முக்கிய முடிவு

புதுடில்லி : சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று(அக்.,13) முக்கிய முடிவு எடுக்கிறது.

சபரிமலையில், பத்து வயதுக்கு உட்பட்ட சிறுமியரும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே, கோவிலுக்குள் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், 'சபரிமலைக்கு செல்ல, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான முடிவை சுப்ரீம் கோர்ட் கடந்த பிப்., மாதம் நிறுத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்நிலையில், 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதா, வேண்டாமா என்ற வழக்கை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவதா, வேண்டாமா என்ற முக்கிய முடிவை இன்று சுப்ரீம் கோர்ட் வெளியிட உள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (19)

 • JOKER - chennai,இந்தியா

  ஒரு கோவிலின் பாரம்பரிய முறையில் கோர்ட் ஏன் தலையிடவேண்டும் .இந்த வழக்க விசாரிக்க உகந்தது அல்ல

 • V.Rajeswaran - chennai,இந்தியா

  ஐயப்பன் பார்த்துக்கொள்வார் இந்த பிரச்சனையை சாமி சரணம் ஐயப்ப சரணம்

 • P. SIV GOWRI - Chennai,இந்தியா

  இளம் பெண்கள் சபரி மலைக்கு போவது அழிவுக்கே வழி வகுக்கும். தேவை இல்லாத வேலை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  கோவில்களில் நீதிமன்றத்துக்கு என்ன அதிகாரம் இருக்கமுடியும்? இதே போல மசூதிகளில் யார் யார் போகவேண்டும் என்று தீர்ப்பு சொல்வார்களா? இளித்தவாயர்கள் இந்துக்கள் மட்டுமே..

 • athikesavan - sholavandan

  சிவன் சொத்து குல நாசம் ஆக போகிறது

 • Mal - Madurai,இந்தியா

  Please stay away from religious matters.... Dear respected Supreme court.... Those feminists who don't go to temples or believe in gods are the ones who protest... We need not pay heed to them... Kerala is going to get ruined .... First Padmanabha temple ing of lockers and now aiyapan temple issue ... These non Hindus of Kerala are taking Kerala to destruction.... Please leave Hindu temple issues to Hindus and concentrate in social n national issues ....instead

 • A R J U N - ,இந்தியா

  எது எதுல எல்லாம் தலையிடுவது என 'அரசியல்'வாதிகள்..இப்போது நீதிமன்றம்- ஆகம விதிகள் என்ன சொல்கின்றன? என ஒருவராவது நினைத்ததுண்டா.. அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நீதி மன்றம் தலையிடலாமா.. SORRY என தான் சொல்ல தோன்றுகிறது.. அது முன்னோர் பரம்பரையாக ஏற்படுத்திய விதிகள்... மீறலாகாது..அழிவிற்கு "வழிவகுக்கும்".. இன்னும் என்னென்ன நடக்குமோ .இறைவா

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  எதற்கு இந்த வீம்பு..யார் கேட்டார்கள்.. இறை நம்பிக்கை உள்ள பெண்கள் ஒரு விஷயம் மரபு மீறல் என்றால் நிச்சயமாக செய்யமாட்டார்கள்.. பாப் கட் மாதர் சங்க போராளிகளுக்கோ கடவுள் நம்பிக்கை என்பதே கிடையாது.. இவர்கள் என்ன வருஷாவருஷம் இருமுடி எடுத்து மலையேற போறார்களா?..பிறகு யாருக்காக இதனை ஆர்பாட்டம் சத்தியமாக புரியவில்லை... இதே கேரளாவில் சில பகவதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன...அங்கே ஆண்களுக்கு அனுமதி இல்லை... ஆண்கள் அனுமதி கேட்டு போராடப்போவதுமில்லை.. அனுமதிக்கவில்லையே என்று கவலைப்படப் போவதுமில்லை..சில இடங்களில் சில கட்டுப்பாடுகள் நமக்கு புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் இருப்பதை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்..

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அய்யப்ப சரணங்களுடன் முக்கல் முனகல்களை கேட்க வைத்து விடாதீர்கள்..

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  அயோத்யா ராமஜென்ம பூமி வழக்கு எழுபத்தி ஐந்து வருடங்கள் கழித்தும் தீர்ப்பு வழங்க வில்லை ....

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  வேண்டாம்... ஏற்க்கனவே கோவில்கள் காதலர்களின் சந்திக்கும் கேளிக்கை கூடமாக விளங்குகிறது... ஐயப்பன் கோயில்கள் தான் சுத்தமாக இருக்கிறது... அதையும் கெடுக்காதீர்கள்..

 • பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா

  எனது தாய்மாமா கிட்ட தட்ட எல்லா வருஷமும் அவர் உயிருடன், உடல் நிலை நன்றாக இருக்கும் வரை சபரிமலைக்கு போகும் பக்தர். அவர் வெற்றிலை போடும் பழக்கமுள்ளவர். ஆனால் அந்த நாற்பத்தி எட்டு நாளும் அவர் அந்த பழக்கத்தையோ விட்டு விட்டு கடுமையான விரதம் இருப்பார். கடுமையான விரதம். அந்த விரத காலத்தில் அவர் உடல் நிலை பாதிக்க பட்டாலும் மருந்து எடுத்து கொள்ள மாட்டார். ஐயப்பன் பார்த்து கொள்வான் என்று சொல்லுவார். அவருக்கு ஒன்றும் ஆனதும் கிடையாது. இன்று அவர் குடும்பம் ஓஹோ சகல சௌபாக்யமும் பெற்று நல்ல வாழ்க்கை வாழ்கிறது. அவருடன் கூட இருந்த அத்துணை பேரும் அப்படித்தான். ஆனால் இன்று நடப்பதோ தலை கீழ். விரதம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதவர்கள். அந்த கோவிக்குக்கு பெண்கள் ஏன் போக கூடாது என்று தெரியாமல் பேசுபவர்கள். ஆனால் அப்படி அந்த விரதத்தின் தத்துவம் தெரியாதவர்கள் இன்று கஷ்டமும் படுகிறார்கள். நான் சிறு பிள்ளையாக இருந்த போது ஐயப்பனின் அபிஷேக நெய்தான், அந்த மிளகு தான் என் மருந்து.... ஆனால் இன்று குதர்க்க வாதிகள். இவர்களிடம் பேசுவதும் பாறாங்கல்லில் போய் முட்டி கொள்வதும் ஒன்றுதான். ஆனால் எது நடந்ததோ அதுவும் நன்றாகவே நடந்தது....எது நடக்கிறது அதுவும் நடக்கிறது...எது நடக்க போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்....தீர்ப்பு ஐயப்பன் கைகளில்...

 • vns - Delhi,இந்தியா

  நீதிபதிகளை தேர்வு செய்யும் collegium முறையை மாற்றவேண்டும் என்று அரசு கூறியபோது அது வழக்கத்தில் உள்ளதொன்று அதை matra மாட்டோம் என்று கூறிய நீதிபதிகள் மத விஷயத்தில் ஏன் தலையிடுகிறார்கள் ? இதை ஒரு இந்தியக்குடிமகனாக எல்லா ஹிந்துக்களும் எதிர்க்க வேண்டும்

 • s.suresh - tirupur,இந்தியா

  Iyyappan temple not allowed 10 to 50 years not allowed

 • s.suresh - tirupur,இந்தியா

  No permission 10 to50 years ladies not allowed

 • Kalyanaraman -

  ஏற்கனவே டெல்லியில் பட்டாசுக்குத் தடை விதிச்சாச்சு. இப்போ சபரிமலையில் பெண்களை அனுமதிக்கனும்னு சொல்லிட்டாப் போச்சு. எவன் கேட்பான்? இந்துக்கள் பெருவாரியா உள்ள நாட்டுலயே இந்த நிலை. judge mind voice: இந்துமதம் தான்யா நல்ல மதம். அவங்கதான் எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாங்க.

 • vns - Delhi,இந்தியா

  உச்ச நீதிமன்றம் இருக்கும் சட்டத்தை அமல் படுத்தத்தானே தவிர புதிய சட்டங்களை இயக்க அல்ல. உச்ச நீதிமன்றம் மத விஷயங்களில் தலையிடக்கூடாது.

 • Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா

  நாட்டில் எங்கெல்லாமோ வருமானவரி சோதனை நடக்கிறது. இந்த நீதிபதிகள் வீட்டில் மட்டும் நடப்பதில்லை. அணைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் வீட்டிலும் சோதனை செய்யுங்கள். தேவைக்கு அதிகமான பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  சில வழிபாடுகள் பாவம் என்பதை விட அவசியமில்லை என்ற கோணத்தில் பார்த்தாலே பிரச்னை தீர்ந்துவிடும் உதாரணமாக தீவீர வைணவர்கள் மற்ற தெய்வங்களை வணங்குவதில்லை காரணம் வெறுப்பல்ல மற்ற தெய்வங்கள் இல்லவே இல்லை எனும் நினைப்புமல்ல ஸ்ரீமன் .நாராயணன் ஒன்றே போதும் நற்கதிக்கு என்ற கொள்கையே .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement