Advertisement

‛டெங்குவால் உயிரிழப்பு இல்லை': 'சரவெடி' ராஜு

மதுரை: ''தமிழகத்தில் டெங்குவால் இதுவரை உயிரிழப்புகள் இல்லை,'' என கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: அனைத்து பகுதிகளிலும், தீவிர டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை.தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் இதை வைத்து அரசியல்செய்கின்றனர். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவை கட்டுப்படுத்த, போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. ரத்தவங்கிகளிலும் தேவையான அளவு ரத்தம்உள்ளது. கொசுக்களை ஒழிப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும், என்றார்.

மேடையை சுற்றி கொசு மருந்து:செல்லுார் ராஜு செல்லும் இடங்களில் ஏதாவது தடாலடியாக பேசுவார் என, 'மீடியாக்கள்' வம்புக்காக அவர் முன் மைக் நீட்டி கருத்து கேட்கின்றன. அவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

தமிழகமே டெங்கு பாதிப்பால் பதறிக்கிடக்கும் நிலையில், அதன் தீவிரம் உணர்ந்து முதல்வர் முதல் அதிகாரிகள் வரை உயிரிழப்பு குறித்து புள்ளி விபரங்களுடன் பேசி வருகின்றனர். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் பேட்டி அளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வம், டெங்கு பாதிப்பை உணர்ந்து மத்திய மருத்துவ குழுவை அனுப்ப மோடி உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அமைச்சர் ராஜுவோ, ''டெங்குவால் இதுவரை உயிரிழப்புகள் இல்லை,'' என காமெடி சரவெடிகளை தெறிக்க விடுகிறார்.

நேற்று, 'டெங்கு விழிப்புணர்வு' என்ற பெயரில், நிகழ்ச்சி நடந்த மேடையை சுற்றி கொசு மருந்து தெளிப்பது போல் நான்கு முறை 'போஸ்' கொடுத்தார். மேலும், 'டெங்குவால் மரணம் இல்லை' என காமெடிகளை அவிழ்த்து விட்டது அப்பகுதியினரை கடுப்பேற்றியது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (76)

 • P.MANIMARAN - V.KEERANUR,இந்தியா

  இந்த மாதிரி முட்டாள்கள் இருக்கும் வரை இந்தியா உருப்படுமா????

 • Prem - chennai,இந்தியா

  அரசு சரியான முறையில் இயங்கி வருகிறது டெங்குவை தடுக்க எல்லாம் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன

 • niki - Chennai,இந்தியா

  denguva control panna makkaloda othulaippu mikavum avasiyam

 • Jeeva - virudhunagar,இந்தியா

  dengu vilipunarvu makkalidam innnum adhigamaga thevai pdaukirathu .

 • shekaran - thiruchi,இந்தியா

  denguvai olippathil arsu perum pangai vagikkirathu

 • vnatarajan - chennai,இந்தியா

  செல்லூர் ராஜூவின் மேல் எந்த குற்றமும் கூறக்கூடாது. ஏனென்றால் இவரை மந்திரியாக தேர்ந்தெடுத்த வர சசிகலா அம்மையார். அவர் தேர்ந்தெடுத்த மந்திரி இப்படித்தான் காமெடி பண்ணுவார்..

  • Rajasekar - trichy,இந்தியா

   அம்மா வேடிக்கை பார்த்தாரா ?

  • Rajasekar - trichy,இந்தியா

   admk வை பிஜேபி undertaking ஆனதிலிருந்து ஒரு மாதிரி ஆகிட்டார் தெர்மாகோல் ராஜு

 • J.Isaac - bangalore,இந்தியா

  கீழ்பாக்கம் ஆஸ்பத்திரி சென்று பரிசோதனை செய்ய வேண்டும்

 • madhavan rajan - trichy,இந்தியா

  அவர் சொல்வதுதான் உண்மை. உடலை விட்டு உயிர் பிரிந்ததனால் தான் இறப்பே தவிர டெங்கு வந்ததால் அல்ல. அதற்காகத்தான் அவர் தண்ணீர் இருக்கும் இடத்தை எல்லாம் தெர்மோகோல் போட்டு மூடும் அற்புத யோசனையை கண்டுபிடித்து அதற்காக நோபல் பரிசுக்கு கூட பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். எல்லோரும் அதை மொதலில் செய்யுங்கப்பா. கொசு எங்க முட்டை இடுதுன்னு பார்ப்போம். டெங்குவாவது ஒண்ணாவது. நாங்கெல்லாம் யாரு? கூவத்தூர் கூமுட்டைகள் ஆச்சே. எங்ககிட்டயேவா...........

 • venkatesh - coimbatore,இந்தியா

  இந்த மாதிரி முட்டாள்கள் ஆட்சி செய்யும் நாட்டில் வாழ்வதை விட டெங்கு வந்து சாகலாம். யாரும் டெங்கு வந்து சாகவில்லை .ஒருத்தன் சொல்றான் டெங்கு பக்கத்துக்கு மாநிலத்தில் இருந்து வருகிறது என்று. மாடு மேய்க்க கூட லாயக்கு இல்லாதவங்களை எல்லாம் எப்படித்தான் ஜெயா வைத்து மாரடித்தாரோ.

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  என்னிக்கி பிஜேபி பின்னால் போக ஆரம்பிச்சாங்களோ அன்னிலேருந்து தமிழ் நாட்டிற்கும் உபி யில் குழந்தைகள் இறந்தது போன்ற நிகழ்வு இங்கே டெங்குவால் நடந்து கொண்டிருக்கிறது... இனிமேல் தமிழ் நாட்டில் பலவிதமான சோகங்களுக்கு பஞ்சம் இருக்காது...

 • singh - tuticorin,இந்தியா

  இந்த கருத்தை ஜெ.ஜெ உயிரோடிருக்கும் போது சொல்லியிருந்தால் உமக்கு நாஞ்சில் சம்பத்துக்கு நேர்ந்த கதிதான் வந்திருக்கும். இவர் கருத்து என்றுமே அரசுக்கு எதிராகவே இருக்கும். ஏனென்றால் இவர் ஸ்லீப்பர் செல் ராஜு.

 • மணி மாறன் - chennai,இந்தியா

  பரமார்த்த குரு பழனிச்சாமியின் சீடர்கள் வேறு எப்படி இருப்பார்கள்..???

 • எப்போதும் வென்றான் - chennai,இந்தியா

  இப்படி ஒருவரை தேர்ந்தெடுத்த அவர் தொகுதி வாக்காளர்களை என்னவென்று சொல்வது ???

 • ஜெயந்தன் - Chennai,இந்தியா

  நாசா விஞ்ஞானி சொன்னா சரியாதான் இருக்கும்... நாமதான் அவர் போல அறிவாளி இல்லை... அடுத்த தேர்தலிலாவது நாமும் அறிவாளிதான் என்று அவருக்கும் காண்பிப்போம்...

 • Rajasekar - trichy,இந்தியா

  சரியான வடிகட்டின முட்டா பசங்கள ஜெ தேர்வு செய்து தன் அடிமைகளாக வைத்துள்ளார் என்பது இவர் மூலம் நிரூபணம் ஆகிறது. ஒரு மினிஸ்டர் எப்படி பேசுவது என்பது கூடவா தெரியாது

 • Mano - Madurai,இந்தியா

  தெர்மோகோல் போர்வை உபயோகித்தால் டெங்கு கொசு கடியை தடுக்கலாம்

 • Pasupathi Subbian - trichi,இந்தியா

  தமிழக திரையுலகில் , பல வருடங்களுக்கு முன் சுருளிராஜன் என்ற நகைச்சுவை நடிகர் இருந்தார், அவர் பேசும்பொழுதே திரையரங்கம் கலகலப்பாகும் , அதே போல இந்த அமைச்சர் . இவரின் படத்தை பத்திரிகைகளில் பார்த்ததுமே , நமக்கு நகைச்சுவை உணர்வு வருகிறது. இன்னம் இவர் கூறும் அறிவிப்புகள், செய்யும் செயல்கள் மக்களை வெகுவாக சந்தோஷப்படுத்துகிறது. அரசியலில் இவர் ஒரு பபூன்

 • Mariadoss E - Trichy,இந்தியா

  அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவை கட்டுப்படுத்த, போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன ??? அது என்ன மருத்துப்பா? தெர்மக்கோல் ஜூஸ் ஆ இருக்குமோ .....

 • Appu - Madurai,இந்தியா

  அட்றா அட்றா அட்றா.....உங்க வீட்டு அடி எங்க வீட்டு அடி இல்ல.. தெர்மகோலடி..

 • Sulikki - Pudukkottai,இந்தியா

  டெங்குவால் எழவு விழுந்தாதான் ஒத்துக்குவாரோ

 • Nesan - JB,மலேஷியா

  அட பாவி ஊரே டெங்குவால் பத்திகிட்டு எரியூது. நீர் எல்லாம் ஒரு அமைச்சர் அமைச்சர், கேவலமா இல்லை இதை சொல்ல. தனியார் மருத்துவமனைக்கு Rs. 25000/- கொட்டி கொடுத்துட்டு எழுதுறேன். அவர் உண்மையிலேயே ஒரு கடவுள். காசு இப்ப முக்கியம் இல்லை. ஒரு உயிரை காப்பாற்றி விட்டார். எத்தனையோ தாய் மார்கள் தினம், தினம் குழந்தைகளை வைத்து கொண்டு சித்திரவதை அனுபவிக்கிறார்கள். அவர்கள் கண்ணீர், சாபம் உங்களை எல்லாம் சும்மா விடாது. உன் நெற்றியில் உள்ள திருநீறை அழி, இல்லை என்றால் அது உன்னை போன்றவர்களை அழித்து விடும். உம்மை நினைக்கும் பொழுது அசிங்கமா இருக்கு. எந்த கல்வி தகுதியும் எல்லாவர்கள் இப்படி தான் பேசுவார்கள். உம பேட்டியை கேட்டேன். அய்யகோ pet, ped, bet, bed வித்தியாசம் தெரியாத மனிதர். உன்னிடம் எப்படி உண்மையான IAS/IPS வேலை செய்ய முடியுது. இறைவன் கண்டிப்பா தப்பு செய்தா தண்டிப்பான். தினமலர் விமர்சனம் படிங்க, அப்பவாது புத்திவருதானு பாப்போம். நான்கூட கூட மிகுந்த உடல் சோர்வுக்கு இடையில் இதை எழுதுகிறேன். இறைவா என் தமிழக மக்களை, இந்த மாதிரி மனசாச்சியே இல்லாத மாக்களிடம் இருந்து காப்பாற்று. மோடி ஒரு சர்வாதிகாரி போல செயல் படுகிறார், உங்களை வைத்து. ஊருக்கு உதவி செய்வதை விட்டு தமிழ் மக்களை காப்பாற்ற வழி செய்யுங்கள்.

 • MUTHU - chennai,இந்தியா

  நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியல

 • karthikeyan -

  தெர்மோகோலினால் தான் இறப்பு

 • rengarajan -

  waste minister

 • Sampath Kumar - chennai,இந்தியா

  இவர்க்கு நாக்குல சனி போல வாயை கொடுத்து புண்ணாக போறார்

 • Ravi Chandhar - Coimbatore,இந்தியா

  இவரையெல்லாம் பேச விட்டு கேட்டுகிட்டு இருக்கோம்ல... நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்...

 • Rajan - Madurai

  இந்த மாமனிதருக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மதுரை வடக்கு தொகுதி மக்களுக்கு கோடான கோடி நன்றி ! சிறப்பு !

 • ilicha vaayan - chennai,இந்தியா

  பாகிஸ்தான் ஆப்கான் எல்லையில் சுகாதாரம் தேவைப்படுவதால் அமைச்சர் அங்கு சென்று 3 ஆண்டுகள் பணியாற்றுவார்

 • மாதவன்.க,திருவாரூர் -

  ஆமா எமன் சொல்லிட்டார்

 • Rockie - Nellai,இந்தியா

  மேனேஜ்மென்ட் quota அமைச்சர் ஆனா இப்படித்தான் கேனத்தனமா பதில் வரும்.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  ஏம்ப்பா ஒன்னோட காமெடிக்கு ஒரு அளவே இல்லையா

 • Sekar KR - Chennai,இந்தியா

  இந்த கொசு தொல்லை தாங்கமுடியவில்லை , இவர் என்ன சுகாதார அமைச்சரா? சம்பந்தம் இல்லாம ஏன் மூக்கை விடுறாரு.

 • balakrishnan - coimbatore,இந்தியா

  எதிரி வெளியில் இல்லை, உங்களுக்குள்ளேயே இருக்கிறார், அது தான் நடக்கிறது, இவரை தொடர்ந்து இன்னும் ஏராளமான ராஜூக்கள் இருக்கிறார்கள்,, நம்மால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்

 • smoorthy - bangalore,இந்தியா

  திரு செல்லூர் ராஜு அவர்களே நாங்களும் மதுரை காரர்கள் தான் / மதுரை காரன் மானத்தை வாங்காதீர்கள் / மற்றும் உங்களுக்கு ஒரு Phd பட்டம் தான் கொடுக்க முடியும் / அடுத்த Phd கொடுக்க குறைந்தது ஆறு மாதமாவது ஆகும் / ஆகவே பார்த்து பேட்டி கொடுங்கள் /

 • Sameside Sekarsekaran - chennai,இந்தியா

  ஸ்லீப்பர் செல் வேலையை நன்றாக செய்கிறார்.

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  இந்த ஆளுக்கு டெங்கு வந்து தர்மாஸ்பத்திரில சேக்கணும் , அப்போ தெரியும். அரசு விளம்பரத்தை பாத்துட்டு எங்க ஊர்ல அரசு சித்த மருத்துவமனைக்கு நிலவேம்பு கஷாயம் குடிக்க போனால், ஒரு அஞ்சு லிட்டர் கேன்ல வச்சிருந்தாங்க . நிறைய கூட்டம் . அஞ்சு நிமிஷத்துல காலியாயிருச்சு. இல்லை, நாளைக்கு வான்னுட்டாங்க. சிலருக்கு மட்டும் 50 மில்லி கிடைத்தது மறு நாளும் அதே கதை தான். பொடியை கலந்து கொதிக்க வச்சு குடுக்கிறதுல எவ்வளவு செலவாக போகிறது? அப்படி செலவானாலும் அரசு கொடுக்க முடியாதா? நேரம் இல்லையா? ஓக்காந்து ஈ ஓட்டிகிட்டு இருக்கிற , 4 மணி நேரம் கூட வேலை செய்யாத அரசு ஊழியர்களுக்கு எதுக்கு அதிகப்படியான சம்பளம் கொடுக்கணும்?.

 • Anton Pham - Houston,யூ.எஸ்.ஏ

  இப்படிப்பட்ட ஆளெல்லாம் அமைச்சன்னு சொல்லிட்டு திரியிற நாட்டுல, டெங்கு வந்து சாவுறது மேல்.

 • V .வெங்கடேஷ் - சிங்கப்பூர் ,சிங்கப்பூர்

  ஏன்யா வாயை குடுத்து வாங்கிக்கட்டிகறே... இவரை பத்தி செய்தி வந்தால் முதல்ல கை ஆட்டோமடிக்கா கமெண்ட்ஸ் பக்கத்துக்கே போகுது..அப்புறம் தான் நியூசையே படிக்கிறேன்..சே..

 • ShanmugasundaramRangasamy -

  மாடு மேய்பவர்கள் எல்லாம் அமைச்சர்கள் ஆனால் இது தான் நிலைமை. ஆண்டவா எங்களை காப்பாற்று.

 • சூரிய புத்திரன் - Mannai,இந்தியா

  அனைத்துலக அறிலாளிகள் சங்க தலைவா் திரு. செல்லூர் ராஜூ அவா்களை வாழ்த்த வயதில்லை ... வணங்கவும் மனமில்லை.... நான் அப்டிக்கா ஓரமா போய்க்கிறேன்....

  • P. SIV GOWRI - Chennai,இந்தியா

   சூப்பர். உண்மையில் இவர் தமிழகத்தில் தான் உள்ளாரா. எதாவது சொல்ல வேண்டும் என்று சொல்லி கொண்டு உள்ளாரா ?

 • N MUTHUKRISHNAN - chennai,இந்தியா

  விடுங்க பொய்த்தான் இவரு பேசுவாரு. அப்புறம் கட்டாயத்தாலும் பயத்தாலும் பொய் சொன்னோம் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பாரு. மூளையே இல்லாதவங்க பேச்சு இப்படித்தான் இருக்கும். கண்டுக்காதீங்க.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  பாவம் எல்லோரும் சேர்ந்து அவருக்கு தெர்மோகோலில் கண் மூடாக்கு காதுக்கு கவசமும் போட்டு விட்டார்கள்... அதுதான் இம்மாதிரி பேசுகிறார்...

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  எப்பொழுது இந்த 23ம் புலிகேசியின் ஆட்சி முடிவுக்கு வரும்........தாங்க முடியவில்லை, மங்குனிகளா ஏன்டா மக்களை இப்படி வதைக்கிறீர்கள்......

 • rajan - kerala,இந்தியா

  தமிழ்நாட்டில் ஒரு மக்கள் பிரதிநிதியாவது டெங்குவால் செத்தால் தான் இவனுக உண்மையாச்சும் பேசுவானுக. எங்கே இருந்து இந்த எடுபிடிய புடிச்சாளோ சின்னத்தாயி யும் ஆயாம்மாவும். உலகத்திலேயே பெரிய லூசுதனம்னா இது தான்.

 • உஷாதேவன் -

  டெங்குவால் உயிர் இழப்பு(குறைய)வில்லை.

 • S.Pandiarajan - tirupur,இந்தியா

  உனக்கு ஒரு டெங்கும் வர மாட்டேன்கிறதே . தாங்க முடியலை

 • ARUN.POINT.BLANK -

  already politicians have AWESOME INTELLIGENCE this guy is living proof.

 • அப்பாவி -

  இவரு மாதிரி ஆளுங்களையெல்லாம் தேர்தலில் நிக்க சீட்டு குடுத்து அமைச்சராக்கி அழகு பாத்த ஆளுமையை என்னன்னு சொல்றது? கூத்தாடிகளுக்கு வேறு என்ன தெரியும்? கண்ராவி.

  • Anandan - chennai

   அந்த ஆளுமையைத்தான் தலையில் தூக்கிவைத்து கொண்டாடியது தமிழகம். அய்யகோ.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  "டெங்குவால் (தான்) இன்னும் உயிரிழக்கவில்லை" என்று தன்னை பற்றி சொல்லியிருப்பார் ஆனால் மீடியாக்கள் இப்படி மாற்றி போட்டு இவரை கலாய்க்கின்றனர்.

 • Arachi - Chennai,இந்தியா

  லூசாயா நீ செல்லரிச்சுப்போன செல்லூர் ராஜ். மூளையில் ஒரு செல் வேலை செஞ்சா கூட இப்படி உளரமாட்டே.

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் ராஜ்நாராயண் என்ற சுகாதார அமைச்சர் இதுபோலத்தான் அபத்தமாகப்பேசி மானத்தை வாங்குவார் அவர்தான் அந்த அரசு கவிழவும் காரணமாக இருந்தார்

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   கவலை படாதீர்கள்.. இந்த அசிங்க அரசு கவிழாது.. உங்க தல தானே இதுக்கு கியாரண்டி..

 • Indhuindian - Chennai,இந்தியா

  Dismiss him from the cabinet He is the real sleeper cell

 • Rajendra Bupathi - GANGAVALLI - SALEM,இந்தியா

  இப்படியே போச்சின்னா இத சென்னை பத்துக்குதான் கொண்டு போயி அடைக்கனும்?

 • குண்டலகேசி - chennai,இந்தியா

  அவரு அமைச்சர் பெருமக்களை சொல்கிறார் போலும்... டெங்குக்கே டிங்கு காட்டுற ஆளுங்களாச்சே...

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  நாராயணா.... இந்த கொசுத்தொல்லை தாங்கமுடியல..... கோமாளித்தனத்துக்கும் ஒரு எல்லை உண்டு . அற்பங்கள்

 • aanthai - Toronto,கனடா

  குடிகாரன் கூட குடிச்சாத்தான் நிதானம் இல்லாமல் பேசுவான் . இந்த ஜென்மம் எப்போதும் உளறிக்கொண்டே இருக்கிறது . தமிழ் நாட்டின் நிலைமை அவ்வளவு தாழ்ந்துவிட்டது . இந்த ஜென்மமெல்லாம் தமிழ்நாட்டின் மந்திரி .

 • P.MANIMARAN - V.KEERANUR,இந்தியா

  அப்ப டெய்லி நியூஸ் பொய்யா ????

  • madhavan rajan - trichy,இந்தியா

   அதெல்லாம் சசிகலாவும் தினகரனும் சொல்லச் சொல்லி மிரட்டியதால் சொன்னது. அம்மாவுக்கு கூட டெங்கு இருந்திருக்கலாமோ என்னவோ? அதனால் தான் யாரையும் பார்க்கவிடவில்லை. அவர் சாப்பிட்ட இட்டலி மூலமாக கூட வந்திருக்கலாம்.

 • Uyirinam - Frankfurt,ஜெர்மனி

  விஞ்ஞானி வாழ்க ..

 • aanthai - Toronto,கனடா

  இந்த ஜென்மம் எந்த ஊரில் இருக்கு , கூட நிதானம் இல்லை போல் இருக்கு . அடுத்த தேர்தலில் மக்கள் ரொம்ப நிதானமாக யோசித்து வாக்களிக்க வேண்டும் .

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  தமிழ்நாட்டின் வெட்கம் கெட்ட ஜென்மங்கள் ..... மக்களின் தலை எழுத்து..... அடுத்த முறையாவது படித்தவர்கள் தயவுசெய்து தங்களது வாக்குகளை பதிவு செய்யவும்..... இலவசங்களுக்கு விலை போகாதீர்கள்....

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இவர்தான் டெங்கு கொசுவைவிடப் பெரிய கொசு.. இவரை முதலில் இறக்கித் தொலைக்க வேண்டும்.. எடப்பாடி மானத்தை வாங்க இவர் ஒருத்தர் போதும்

 • Anandan - chennai,இந்தியா

  நம்ம விஞ்ஞானி சாெல்லிட்டாரு.. எல்லாேரும் ஒத்துக்கனும் அவ்வளவுதான்.. பாெய் மட்டும்தான் பேசுவேன்னு சத்தியம் பண்ணியிருக்காரு பாேல.

 • Bhaskaran - Chennai,இந்தியா

  நிதானத்தில் பேசறாரா அல்லது முதல்வருக்கு சங்கடம் கொடுக்கும் விதத்தில் பேசறாரா இல்லை சின்னம்மா பேசச்சொன்னதை பேசறாரா ஒண்ணமும் புரியலியே

 • Amirthalingam Sinniah - toronto,கனடா

  தினமலர் பத்திரிகை பொய் எழுதுவதில்லை. இறந்தவர்களை படத்துடன் பிரசுரிக்கும் போது இப்படி கூறுகிறாரே .

 • TamilReader - Dindigul,இந்தியா

  இவர் இன்னும் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து வெளியே வரவில்லை

 • ManiS -

  Ivan moonjiya yen pa close up la podreenga? Neengale paarunga.... soru kidaikuma idha paatha?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பொய் சொல்ல இவர்களுக்கு சொல்லியா கொடுக்கவேண்டும்?

  • Anandan - chennai,இந்தியா

   காசிமணி, அவருக்கு தெரிந்த அளவுதான் அவர் பேச முடியும்.

  • Anandan - chennai,இந்தியா

   இவர் போன்ற பெரும் அறிவாளிகளை மந்திரியாக்கிய பெரும் தலைவரை நினைத்து பாருங்கள்.

  • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

   இந்த அரசை இன்னும் விட்டு வைத்திருக்கும் "நல்லவர்களை" நினைத்து பாருங்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement