Advertisement

ரிசர்வ் படை வீரர் 'பேஸ்புக்'கில் மீண்டும் சர்ச்சை 'வீடியோ'

புதுடில்லி: ஓய்வின்றி வேலை செய்யும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக உயரதிகாரிகள் மீது மீண்டும் புகார் கூறி மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, அசாமில் உள்ள, ஜோர்கட் முகாமில் பணியாற்றி வரும், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர், பங்கஜ் மிஸ்ரா, பேஸ்புக்கில், தன் உயரதிகாரிகள் மீது புகார் கூறியிருந்தார். இதை தொடர்ந்து, இந்த விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.


இந்நிலையில், பங்கஜ் மிஸ்ரா, பேஸ்புக்கில் மீண்டும், 'வீடியோ' ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், 'ஓய்வின்றி வேலை செய்யும்படி அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர். சரியான உணவு இல்லை. வீரர்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து, உண்ணாவிரதம் துவங்கி உள்ளேன்' என, கூறியுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தி வருவதாக, மத்திய ரிசர்வ் படை போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement
 

வாசகர் கருத்து (12)

 • vnatarajan - chennai,இந்தியா

  மற்ற சக வீரர்கள் இது பற்றி என்ன கூறுகிறார்கள் என்பதை விசாரித்து வேண்டிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மிஸ்ரா கூறுவது போய் என்றால் அவரை மன நல மருத்துவரிடம் பரிசோதிக்க கூட்டிச்செல்ல வேண்டும் .அவர் கூறுவது உண்மை என்றால் அந்த அதிகாரிகள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்

 • hasan - tamilnadu,இந்தியா

  நம் நாட்டை பொறுத்தவரை பெரும்பாலும் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை எதோ தங்கள் மேலிருந்து குதித்தவர்கள் போன்று மனப்பாங்கு உள்ளவர்கள், கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் பிரச்சினை யை பார்க்கமாட்டார்கள் , ஒரு ராணுவ வீரன் தன்னுடைய குடும்பத்தை விட்டு நாட்டுக்காக உழைக்க வருகிறான் என்றால் அவனை முதலில் நாம் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் , அவனுக்கு சரியான உணவு , தூக்கம் , ஓய்வு ,விடுப்பு போன்றவைகள் சரியாக கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும் , அப்போது தான் அவன் எந்த மன உளைச்சலுக்கும் ஆளாகாமல் சரியாக வேலை செய்யமுடியும் , சரியான உணவே கிடைக்க வில்லை என்றால் மற்றவைகளை பற்றி சொல்ல வேண்டியதில்லை ,

 • ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா

  மேலதிகாரியிடம் புகார் சொல்ல முடியாது சொன்னாலும் தண்டனை தான் கிடைக்கும் . வீரரின் நிலை பரிதாபம் . சில நாள் கழித்து பைத்திய பட்டம் கட்டி , பதவி நீக்கம் செய்வார்கள் . பேசாமல் பதவியை விட்டுட்டு சொந்த வூருக்கு வந்து பொட்டி கடை வெச்சு பொழப்ப நடத்துங்க

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எதற்கும் இவரை மட்டும் மனநிலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்... அவர் சொல்லுவது உண்மைகள் என்றால் நடவடிக்கை எடுங்கள்..

 • ARASU - ,சிங்கப்பூர்

  அமெரிக்கால சுறுசுறுப்பா நல்லா சரியா வேலை செய்யுங்க. உங்களை போன்ற ஆட்களை ராணுவத்தில் சேர்த்து வேலை செய்ய சொல்ல வேண்டும். போலீஸ் உயர் அதிகாரிகள் கீழ் மட்டத்தில் உள்ளவர்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது பற்றி தெரியுமா? அப்படி தெரிந்து இருந்தால், அதைவிட பல மடங்கு துயரத்தை சந்திக்கிறார்கள் இந்த ராணுவ வீரர்கள். உயிரை மதிக்க தெரியாத இந்திய அரசை நம்பி தங்கள் உயிரை பணய வைக்கிறார்கள் இந்திய ராணுவ வீரர்கள்.

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  ராணுவ, போலீஸ் துறையில முதலில் இரும்புக்கர ஒழுக்கம் தேவை. புகாரை தன் மேலதிகாரிகளுக்கு தெரிவிக்காமல் சமுக வலைத்தளங்களை பயன் படுத்துவது மிக கண்டனத்துக்குரியது. இவரை கடும் தண்டனைக்கு உள்ளாக்குவது அவசியமே. இல்லையென்றால் கட்டுக்கோப்பு சிதைந்து விடும்.

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  இந்த மாதிரி சோம்பேறிகள் ராணுவத்துக்கு சரிப்பட்டு மாட்டார்கள்... ராணுவத்தில் அனுசரித்து போகிறார்கள் ..

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பிரச்சினை உள்ள இடங்களில் அதிகமாக வீரர்களை வைத்து இருக்கவேண்டியது அவசியம்... அதும் குறிப்பாக அஸ்ஸாம், பங்களாதேஷ் எல்லை போன்ற இடங்களில் கவனமாக இருப்பது நல்லது...

 • Makkal Enn pakam - Riffa,பஹ்ரைன்

  இந்தியாவின் நிலைமை இதுதான்... எல்லாம் ஊழல் எதிலும் ஊழல்.....ஆஃப்ரிக்க நாடுகளைவிட ஊழல் தலைவிரித்து ஆடுகிறது......மஸ்தான் இதையெல்லாம் சட்டைசெய்ய மாட்டார் ....இன்னும் சிறிது நாட்களில் இந்த படை வீரர் பணிநீக்கம் செய்யப்படுவார்......

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement