Advertisement

பாரபட்சம் காட்ட கூடாது!

கறுப்பு பணம், விசாரணை என்ற பெயரில், தொழிலதிபர்கள், எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களிடம், சி.பி.ஐ.,யும், அமலாக்கத் துறையும் விசாரணை நடத்துகின்றன. ஆனால், பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் மகன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; ஏன் இந்த பாரபட்சம்?

பிரகாஷ் காரத், பொதுச் செயலர், மார்க்சிஸ்ட்

பாலமாக செயல்படுங்கள்!

ஊழலற்ற, வறுமையில்லாத, துாய்மையான இந்தியாவை உருவாக்குவதில், கவர்னர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சியில், கவர்னர்கள் அக்கறை செலுத்த வேண்டும். மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே, பாலமாக செயல்பட வேண்டும்.

ராம்நாத் கோவிந்த், ஜனாதிபதி

காந்தி கொலையால் பாதிப்பு!

மகாத்மா காந்தி கொலையால் பாதிக்கப்பட்டது, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஜன சங்கம் தான்; பலன் அடைந்தது காங்கிரஸ்; ஏனெனில், சுதந்திரத்துக்கு பின், காங்கிரசை கலைத்துவிடும்படி, மகாத்மா காந்தி கூறினார். அவர் கொலை செய்யப்பட்டதால், காங்., கலைக்கப்படவில்லை.

உமா பாரதி, மத்திய அமைச்சர், பா.ஜ.,

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement