Advertisement

'போர் தீயை மூட்டுகிறார் டிரம்ப்' : வட கொரியா கடும் கண்டனம்

மாஸ்கோ: 'போர் தீயை மூட்டியுள்ள அமெரிக்காவுக்கு, சரியான பதிலடி கொடுப்போம்' என, வட கொரியா எச்சரித்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, சமீபகாலமாக, அணு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதனால், வட கொரியா - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வட கொரிய வெளியுறவு அமைச்சர், ரி யாங் ஹோ கூறியதாவது:

வட கொரியாவின் அணு ஆயுத திட்டங்கள், மிகவும் பாதுகாப்பானவை. இதனால், கிழக்கு ஆசிய பகுதியில், ஒரு போதும் அமைதி பாதிக்கப்படாது; இது பற்றி விவாதிக்க தேவையில்லை.
ஆனால், போரை துாண்டும் வகையில், வட கொரியாவுக்கு எதிராக, அமெரிக்க அதிபர், டிரம்ப் பேசி வருகிறார். இந்த பிரச்னைக்கு தீர்வு காண விரும்புகிறோம்.

அமெரிக்காவுக்கு சரியான பதிலடி கொடுக்கும் வகையில், எங்கள் தீர்வு இருக்கும். அமெரிக்காவின் தீயசக்தியாக, டிரம்ப் உள்ளார். அவரது பேச்சுக்கள், விமர்சனங்கள், எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போல் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement