Advertisement

வியட்நாமில் கடும் வெள்ளம் : 43 பேர் பலியான பரிதாபம்

ஹனோய்: தென்கிழக்கு ஆசிய நாடான, வியட்நாமில், மழை, வெள்ளத்துக்கு, இதுவரை, 43 பேர் பலியாகிவிட்டனர்; 34 பேரை காணவில்லை. வியட்நாமில், பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அந்நாட்டில் உள்ள ஆறுகளில், வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளது. பல்வேறு பகுதிகளில், மழைநீர், வெள்ளம் போல் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்த, ௧௭ ஆயிரம் பேர், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பலத்த மழை காரணமாக, பல இடங்களில், நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 43 பேர் பலியாகி உள்ளனர்; மேலும், மாயமான, 34 பேரை, மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், 8,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து உள்ளன. நீண்ட கடலோரப் பகுதிகள் உள்ளதால், வியட்நாம், மழை, புயல், வெள்ளத்தால், அடிக்கடி பாதிக்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement