Advertisement

அமெரிக்காவில் காட்டுத் தீ: 23 பேர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின், கலிபோர்னியாவில், பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி, ௨௩ பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின், கலிபோர்னியா அருகே உள்ள, சாண்டா ரோசா, சோனமா உள்ளிட்ட பகுதிகளில், சமீபகாலமாக, காட்டுத் தீ பரவி வருகிறது. அந்த பகுதியில், கடுமையான காற்று வீசுவதால், தீ வேகமாக பரவுகிறது. தீயில் சிக்கி, ஏராளமான மரங்கள் எரிகின்றன.
இதையடுத்து, ௨௦௦க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன; ஆயிரக்கணக்கான தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்து வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். தீயில் சிக்கி, 23 பேர் உயிரிழந்து உள்ளனர்; 230 காணாமல் போயுள்ளனர்; அவர்களை தேடும் பணி நடக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement