Advertisement

தமிழகத்துக்கு கருணை காட்டிய தென் மேற்கு பருவ மழை

புதுடில்லி: தென்மேற்கு பருவமழை, தமிழகத்தில் தான் அதிகமாக பெய்துள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்மேற்கு பருவ மழை, ஜூனில் துவங்கி, செப்டம்பரில் முடியும். இந்த ஆண்டு, மே, 30ல் பருவ மழை துவங்கியது; நாடு முழுவதும் கொட்டி தீர்த்தது. செப்., 15க்கு பின், வட மாநிலங்களில் மழை குறையத் துவங்கியது.


நேற்றைய நிலவரப்படி, ஆந்திரா, தெற்கு கர்நாடகா, தெலுங்கானா, தமிழகம், புதுச்சேரியில் மட்டும், தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. படிப்படியாக குறைந்து, ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை அளவு விபரங்களை, இந்திய வானிலை ஆய்வு மைய பொது இயக்குனர், கே.ரமேஷ் வெளியிட்டுள்ளார்.


அதன் விபரம்:
• தென்மேற்கு பருவ மழை காலத்தில், வழக்கத்தை விட அதிகமாக, தமிழகத்தில், 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது

• நாடு முழுவதும், 84.1 செ.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில், 90; மத்திய மாநிலங்களில், 94; கிழக்கு, வடகிழக்கு மாநிலங்களில், 96 சதவீதமும் மழை பெய்துள்ளது. தென் மாநிலங்களில், 100 சதவீதம் பெய்துள்ளது

• தென் மாநிலங்களில், இயல்பாக பெய்ய வேண்டிய, 71.6 செ.மீ.,க்கு பதில், 71.7 செ.மீ., மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, தமிழகம், புதுச்சேரியில், இயல்பான அளவான, 31.7 செ.மீ.,க்கு பதில், 41.4 செ.மீ., பெய்து உள்ளது

• இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காலத்தில், புயல் எதுவும் உருவாகவில்லை. ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆறு வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் ஐந்து காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகியுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா

  இனி அடுத்த வருட மழைக் காலத்துக்குள்ளாவது அரசியல் குழப்பங்களை ஒதுக்கி வைத்துவிட்டு நீர் நிலைகளைச் செம்மைப்படுத்தி எல்லா ஆறுகளிலிருந்தும் அருகிலுள்ள எல்லா ஏரி குளங்களுக்கு வழிகள் அமைத்துக்கொடுத்து அணைத்தும் நிரம்பிவழிய ஏற்ப்பாடு செய்யுங்கள். நாடு செழிக்கும் வளம் பெரும். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.

 • Chola - bangalore,இந்தியா

  இவ்வளவு மழை பெய்தும் வைகையில் நீர் இல்லை எனும் போது மிகுந்த வேதனையாக உள்ளது :(

 • Rockie-பாலியல் ஜனதா கட்சி - Nellai,இந்தியா

  100 சதவீதம் இல்ல 200 சதவீதம் மழை பெய்தாலும் நாங்க மழை நீரை, அணைகளிலோ/ எதிலும் சேமிக்க மாட்டோம். சேமித்தால் எங்களால் அரசியல் செய்யமுடியாது.

 • mukundan - chennai,இந்தியா

  மழை வரும்போது சேமிக்காமல் அடுத்த வருடம் நாம் கர்நாடக காரன் கிட்ட போய் தண்ணீருக்கு மல்லுக்கு நிற்போம். எதோ நாம் நல்லவர்கள் போல அவனை வைவோம்.

 • mindum vasantham - madurai,இந்தியா

  Still vaigai dam is not even half full

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  தமிழகத்தில், 31 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது..ஒரு சதவிகிதம் அந்த மழை நீரை சேமிக்க முடிந்ததா... நாம்தான் சட்டபூர்வமாக பல நீர் பிடிப்புப்பகுதிகளை கூறு போட்டு விற்று விட்டோமே..சில சமூக விரோதிகளே சில நீருக்கு சொந்தமான பகுதிகளை வீட்டு மனைகளாக ஆக்கி அரசு ஆதரவுடன் விற்று காசாக்கி விட்டார்கள்..

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  தென்மேற்கு பருவமழை உள்மாவட்டங்களில் நன்கு பெய்துள்ளது ஓரளவு மண்ணை வளப்படுத்தியுள்ளது வடகிழக்கு பருவமழையோ பெரும்பாலும் கடற்கரையருகில் பெய்வதால் சேமித்தல் கொஞ்சம் கடினம் இருந்தாலும் அனைவரும் மழை நீர் சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டும்

 • இடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா

  என்னுயிர் தமிழகமே.... நொம்ப புத்திசாலி என நினைப்பா?.. மூன்று மாத டேட்டா எடுத்து கம்பைல் பண்ணி இப்ப விவரம் வெளியிடறாங்க

 • anvar - london,யுனைடெட் கிங்டம்

  தண்ணீரை தேக்கி வைக்க மாட்டார்கள்.. இரண்டு மாதங்களுக்கு பிறகு கர்நாடக அரசுடன் வழக்கு போடுவார்கள்

 • Suresh - Nagercoil,இந்தியா

  இந்த ஆண்டு வெயிலும் அதிகம் மழையும் அதிகம்...

 • Renga Naayagi - Delhi,இந்தியா

  இப்போ மழை அதிகமா பெஞ்சுதுன்னு போராட்டம் நடத்தாம இருக்கணும் ...

 • என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா

  ஜூலை முதல் செப்டம்பர் வரை என்று கூறி விட்டு அக்டொபர் மத்தியில் என்னவோ சொல்ல வர்றீங்க? கேக்குறவன் கேனையன் என்றால்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement