Advertisement

ஓய்வூதியத்துக்கு முதியோர் தவிப்பு!கலெக்டர் கவனிப்பாரா?

திருப்பூர் :தெற்கு தாலுகா அளவில், திடீரென ஓய்வூதிய உதவி ரத்தானதால், மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளதாக, நூற்றுக்கணக்கான முதியோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
வருவாய்த்துறையின் சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதியோர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய உதவி வழங்கப்படுகிறது. சீராக உதவித்தொகை, வங்கிகள் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், திடீரென இது ரத்தானதால், ஆதரவற்ற முதியோர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மாதாந்திர உதவியை பெற்று, வாழ்க்கை நடத்தும் முதியோர்கள், மூன்று மாதமாக உதவித்தொகை கிடைக்காமல், மனமுடைந்துள்ளனர்.
கிராம நிர்வாக அலுவலகங்களில், ஆதார், வாக்காளர் அட்டை, ஓய்வூதிய உதவி "ஆர்டர்' நகல் ஆகியவற்றையும், மூன்று பாஸ்போர்ட் அளவு போட்டோவும் ஒப்படைக்கப்பட்டது. அங்கு, விரிவான தகவல்களுடன் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. ஆனால், ஆதார் விவரம் பதிவாகவில்லை என்று கூறி, தெற்கு தாலுகாவில் மட்டும் நூற்றுக்கணக்கான பயனாளிகளுக்கு உதவி ரத்தாகியுள்ளது.
இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கூறியும், சரியான பதில் கிடைக்கவில்லை.மூன்று மாதமாக உதவி கிடைக்காததால், தங்களிடம் உள்ள நகல்களை எடுத்துக் கொண்டு, பஸ் வசதியில்லாத திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்துக்கு சென்றுவர முடியாமல், மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதனால், முதியோர்களுக்கு உதவித்தொகை கிடைக்காததால், தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை பெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
கலெக்டர் தலையிடுவாரா?
முதியோர்கள் கூறுகையில்,"ஏற்கனவே அனைத்து நகல்களும் வழங்கியுள்ளோம். பணம் வரவில்லை என்பதால், தற்போது மீண்டும் வழங்கியிருக்கோம். ஆனால், "இரண்டு மாதமாகும்; இங்கே வரவேண்டாம்' என்று, சமூகநலப்பிரிவில் உள்ள உதவியாளர்கள் விரட்டுகின்றனர். தீபாவளி நேரத்தில் பணம் கிடைக்கவில்லை என்பதால், வேதனை அடைந்துள்ளோம். எங்களின் சிர மத்தை, கலெக்டர் தலையிட்டு தீர்த்து வைக்க, வேண்டும்,' என்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Tamizhan kanchi - Kanchipuram,இந்தியா

    முதியவர்களை இன்னல் செய்பவர்கள். யாராக இருந்தாலும் மன்னிக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் விரைந்து இதில் அரசியல் தலையீடு இல்லாமல் நடவடிக்கை எடுத்தால் நல்லது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement