Advertisement

'டெங்கு' கொசுவை ஒழிக்க துப்புரவு பணி கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தரவு

சென்னை:'அனைத்து மாவட்டங்களிலும், 15 நாட்களுக்கு, 'டெங்கு' கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள பகுதிகளில், கலெக்டர்கள் தலைமையில், துப்புரவு பணி மேற்கொள்ள வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
டெங்கு மற்றும் பருவ காலங்களில் ஏற்படும் காய்ச்சல்களை கட்டுப்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது. முதல்வர், பழனிசாமி, துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், டெங்கு ஏற்படுத்தும், 'ஏடிஸ்' கொசுக்களை ஒழிக்க, தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், மக்களிடையே மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு
பிரசாரம், மருத்துவமனைகளில் உள்ள வசதிகள் குறித்தும், முதல்வர் ஆய்வு செய்தார்.

அதன்பின், அதிகாரிகளுக்கு, முதல்வர் பிறப்பித்த உத்தரவுகள்:

* அனைத்து மாவட்டங்களிலும், கலெக்டர்கள் தலைமையிலும், சென்னையில், மாநகராட்சி கமிஷனர் தலைமையிலும், வரும், 15 நாட்களுக்கு, டெங்குகொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள, நீர் தேங்கும் இடங்கள், குப்பை, கட்டுமானப் பகுதிகள் போன்றவற்றில், முழுமையாக துப்புரவு செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும்
* இப்பணிகளை, வட்டம் மற்றும் வட்டார அளவில் கண்காணிப்பதற்காக, சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட வேண்டும். இக்குழு உறுப்பினர்கள், தினமும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில், துப்புரவு பணி நடைபெறுவதை கண்காணித்து, கலெக்டருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்
* இப்பணிகளை கண்காணிப்பதற்காக, கலெக்டர் தலைமையில், மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும், கூடுதல் துப்புரவு பணியாளர்கள் மற்றும் தேசிய ஊரகவேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவர்
* பள்ளிகள், கல்லுாரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்கள், கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்கள், குடிசைப் பகுதிகளில், இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும்* சுத்தம் செய்யப்படாத இடங்கள் மற்றும் டெங்கு நோயை உருவாக்கும் கொசுக்கள் உற்பத்தியாகக் கூடிய இடங்கள் கண்டறியப் பட்டால், அந்த இடத்தின் உரிமையாளர் மீது, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
* டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, அனைத்து மருத்துவமனைகளிலும், கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி அமர்த்தப்படுவர்
* இப்பணிகளை ஒருங்கிணைக்கவும், அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, தேவைகளை நிறைவேற்றவும், ஒவ்வொரு மாவட்டத்திற் கும் நியமிக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள், உடனடியாக மாவட்டத்திற்கு சென்று, தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • P Gunasekaran - Lakshmipuram,இந்தியா

  I am subedar P Gunasekaran of Indian Army, a resident of Surya Nagar lakshmipuram again invited your kind attention towards poor hygiene and sanitary problem being faced by the residents of the area. I raised the issue before three months to your kind office for which you had instructed the concerned area health inspector to submit a report on this issue. However, despite elapse of considerable time, no action has been taken by any authority and day by day, the condition of the area become very worsening. I think the concerned authorities will wake up once any untoward incident like series illness or any death has taken place. The above complaint has been out up by me to the hon'ble district collector, BDO, Health Department and the Panchayat Office in number of tomes in the last two to three years. No nody has taken any action till date.

 • raguraman venkat - Cary,யூ.எஸ்.ஏ

  நமக்கு தான் 'Swach Bharath' பிடிக்கவே பிடிக்காதே, அப்புறம் எப்படி கொசுவைக் கட்டுப்படுத்துவது? இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தேன். ரயிலில் பயணம் செய்யும் போது எதிரில் அமர்ந்திருந்த பயணி (ஆங்கிலப் பத்திரிகை படித்தார், புதிய ஏற்பாடும் படித்தார்) குடித்து விட்டு அந்த தேநீர் கோப்பையை தன் காலடியிலேயே நசுக்கினார். பொறுக்க முடியாமல், நானே வாங்கி அதை குப்பை தொட்டியில் போட்டு வந்தேன். அரசாங்கம் எதுவும் செய்வதில்லை என்று எனக்கு உபதேசம் வேறு. Many times I think that and I am fairly certain that had MMS or PC introduced this Swach Bharath or Demonitization or GST, there would not have been such a fierce opposition in Tamil Nadu (and my thinking gets more convincing from the recent agitation for Jallikattu, Methene, ONGC issues - all these things were started when previous Government was in the office, and no one even knew about those projects, and now all of a sudden everything becomes anti-Tamil Nadu. Losers). சாராயத்துக்கும் பணத்துக்கும் ஓட்டை விக்கிற அடிமைகளை கொசு கடிக்காம பின்ன மயிலா வந்து தன் இறகால தடவிக் குடுக்கும்

 • venkat - chennai,இந்தியா

  அமெரிக்காவில் 6 மாதம் சுற்றுலா பயணியாக தங்கி இருந்த பொது ஒரு கொசு, ஒரு ஈ பார்க்கவில்லை. வீட்டிலும் வெளியிலும் கடைகளிலும் சாலைகளிலும் பொது இடங்களிலும் ஒரு குப்பை யாரும் தரையில் போடுவது இல்லை. அவ்வளவு சுத்தம். வீடுகளில் பாத்ரூமில் குளிக்கும் தண்ணீர் கூட தரையில் சிந்தாமல் குளியல் தொட்டி குழாய் வழியே மறுசுழற்சிக்கு செல்லும். கிச்சன் தண்ணீரும் அவ்வாறே. குப்பைகள் வீட்டிலேயே மக்கும் மற்றும் மக்கா குப்பைகளாக தரம் பிரிக்கப்பட்டு இரண்டு பைகளில் கட்டப்பட்டு அவரவர் மாடி சூட் வழியே தரைத்தளத்துக்கு அனுப்பப்பட்டு மக்கா குப்பைகள் யாவும் மறுசுழற்சி செய்யப்படும். மக்கும் குப்பை எரிபொருள் மற்றும் கம்போஸ்ட் போன்று பல வழிகளில் குப்பை மேடு ஆகாமல் பயன் படுத்தப் படும். எல்லா பொது இடங்களிலும் இரண்டு குப்பை தொட்டிகள் (மக்கும், மக்கா) இருக்கும். யாரும் தொட்டிக்கு வெளியே குப்பை போட்டால் அபராதம் கட்டாயம் கட்ட வேண்டும். எல்லா பொது இடங்களிலும் மிக சுத்தமான கழிப்பிடம் அழகாக அமைக்கப் பட்டு இருக்கும். திறந்த வெளியில் சிறுநீர் கழித்தால் கட்டாயம் மாட்டிக்கொண்டு கட்ட வேண்டிய அபாரதத்திற்கு பயந்து எல்லோரும் கழிப்பிடத்தை சுத்தமாகப் பயன் படுத்துவர். சாலைகளிலும்சி, நடைபாதைகளிலும் ஒரு ஆக்கிரமிப்பு இருக்காது. ஏரி, குளம், ஆறுகளில் எந்த ஆக்கிரமிப்பும் அனுமதிக்கப் படாது. சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளிலும் இவ்வாறே பொது இடங்களில் சுத்தம் பராமரிக்கப் படுகிறது. அங்கு சட்டங்கள் தயவு தாட்சயமின்றி அமுலாக்கப் படுகின்றன. இங்கு டெங்கு கொசு நல்ல தண்ணீரில் மட்டும் முட்டை இடுகிறது என்று ஒரு கதை விட்டு, கெட்ட சாக்கடை தண்ணீரை தெருவில். ஆறுகளில், குளம், ஏரிகளில், மழை நீர் கால்வாய்களில் விட்டால் கேட்க எந்த அலுவலருக்கும் கடமை இல்லை என்பது போல் ஒரு மாய வார்த்தை பேசி எங்கும் பரவி உள்ள அசுத்தத்தால் நோய் எல்லோருக்கும் பரவி குழந்தைகள் நோயினால் இறந்த பின் மறுபடியம் குப்பையை எடுக்காமல் மருந்து அடிக்கிறார்கள், கஷாயம் தருகிறார்கள். A to Z சுத்தம் இருந்தால் தான் மக்கள், குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

 • Shanu - Mumbai,இந்தியா

  மோடியையும் இவரையம். தலைவராக பார்க்க நமக்கு தலை விதி...,.

 • Shanu - Mumbai,இந்தியா

  இவரை எல்லாம் தலைவராக பார்க்க நமக்கு தலை விதி...,.

 • peekg pappinissery - chennai,இந்தியா

  I THINK WE NEED TO GIVE HIGH PRIORITY IN THE SEARCH FOR REMEDIES ERADICATING MOSQUITOS. WHAT CONTRIBUTIONS OUR RESEARCH ESTABLISHMENTS SO FAR GIVEN TO REDUCE MOSQUITO TROUBLE? NIL, AND THEY CONTINUE TO SWALLOW TAX PAYERS MONEY MERELY PRODUCING PAPER THESIS.WHY NOT THEY START FOCUSSING ON THIS SERIOUS ISSUE. IN THIS HIGH TECHNOLOGY ERA , THERE ARE LASER TECHNOLOGY ,SOUND WAVES ETC TO DECIMATE THIS TINY NUISANCE. I READ SOMEWHERE THAT CERTAIN WAVE LENGTH OF SOUND CAN KILL LIVING BEINGS. IF OUR EXPERTS IN THE LABS CAN IDENTIFY THAT OUR SIVAKASI WILL COME OUT OF THEIR SAGGING BUSINESS.

 • R chandar - chennai,இந்தியா

  Most of the place in chennai area are accumulated with garbage private agency and government also had short of labours kindly instruct to reduce unwanted expenses like freebies and other expenses and try to give contract with good private company as like onix and keep all places of chennai as garbage free area implement pick up garbage at source level at least right now

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  கடந்த ஒரு வாரமாக கோவை நகரில் பல இடங்களில் மிக அதிக அளவில் கொசுக்கள் படை எடுத்து வருவதை கண்கூடாக பார்க்கிறேன். காரை (கால் டாக்சி) ஒரு இரண்டு நிமிடம் கதவை திறந்து வைத்தால் அதற்குள் இருபது கொசு காருக்குள் வந்து விடுகிறது. மாநகராட்சிகள் கொசு ஒழிப்பு எந்த லட்சணத்தில் இருக்கு என்பதற்கு இது ஒரு சின்ன சாம்பிள். கோவையிலேயே சிறந்த பகுதியில் இந்த நிலைமை என்றால், பிற பகுதிகளில் என்ன நிலைமையில் இருக்குமென்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

 • ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா

  அமைச்சரவையிலிருந்து ஆரம்பிக்கணும்.

 • spr - chennai,இந்தியா

  கொசுவோ, ஊழலோ, தீவிரவாதமோ இவை எதுவுமே அறவே ஒழிக்க இயலாதவை இவை அறியாமையால் மக்களால் அவர்கள் அறியாமலேயே ஆதரிக்கப்படுபவை. தனக்கு வேலை ஆகவேண்டுமென்றால் லஞ்சம் ஊழல் குறித்துப் பேசாத மனிதர்கள் போல கொசுவைத் தங்கள் அருகிலேயே வளர்த்துக் கொண்டிருக்கிறோம் என அறியாதவர்கள் நம்மவர்கள் அவரவர் வீடுகளைத் துப்புரவாக கழிவு நீர் தேங்காமல், குப்பை கூளங்கள் சேராமல் பார்த்துக் கொண்டால் கொசு உற்பத்தியாவது குறையும் அதற்கு வேண்டியதெல்லாம் பிளீச்சிங் பவுடர் விளக்குமாறு இவைகளே தெருவில் கழிவுநீர் தேங்காமல் குப்பை கூளங்கள் சேராமல் பார்த்துக் கொள்வதுவும், கண்ணுக்கு மறைவாக கொசு உற்பத்தியாக எதுவாக இருக்கும் பாதாளச் சாக்கடைகள், கூவம் அடையாறு போன்ற கழிவுநீர்க் கால்வாய்களுக்குள் ஊடுருவும் வகையில் கொசு ஒழிப்பு மருந்து கலப்பது, இவை அரசின் கடமை. முன்பெல்லாம் டெங்கு என்றால் காய்ச்சல் உடல்வலி என்று சிலநாட்கள் இருக்கும் என்று மட்டுமே அறியப்பட்டது ஆனால் இன்று டெங்கு எனக் கூறப்படும் இந்தக் காய்ச்சல் மிக வேகமாக ரத்தத்தில் உள்ள வெள்ளை சிவப்பு அணுக்களை அழிப்பது என்பது இன்னமும் மக்களுக்கு அறியாத ஒன்றாகவே இருக்கிறது எனவே சிகித்சை தாமதப்படுகிறது மருத்துவ மனையினை அணுகுமுன் காலன் வந்துவிடுகிறான் எனவே இனியும் இதனை டெங்கு எனக்கூறாமல் உயிர்க்கொல்லி நோய் என மக்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கினால் அதனைக் குறைக்க அதிகத் தீவிரம் காட்டுவார்கள் முன்னெச்சரிக்கையாக நிலவேம்புக் குடிநீர் அருந்துவது அன்றாட வழக்கமாக வேண்டும் அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் மக்களின் மேல் அக்கறை கொண்டுள்ளதாகக் காட்டுக்கு கொள்ளும் எதிர்க்கட்சிகளும் உதவவேண்டும் அனைத்துத் தலைவர்களும் சினிமா உலக தாரகைகளும் தங்கள் தொண்டனுக்கு தூய்மையின் அவசியத்தை உணர்த்த வேண்டும் கோயம்பேடு அங்காடிக்குச் சென்றால் அரசின் மெத்தனம் நன்கு புரியும் அன்றாடக் கழிவுகளை அகற்றி மண்புழு உரம் உற்பத்தி மின்சாரஉற்பத்தி என்றெல்லாம் சொல்லி இன்று அவை கொசு உற்பத்திக்கான களமாக இருக்கிறது புரியும் இதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசின் குடிநீர் வடிகால் வாரியங்கள் கழிவுநீரை சுத்தம் செய்யும் பொழுது எஞ்சிய கழிவுநீர் அங்கேயே விடப்படுவதால் அங்கும் கொசு உற்பத்தியாகிறது நன்னீரில் இக்கொசு உற்பத்தியாவதாகச் சொல்லப்படுகிறது ஆனால் நன்னீர் அடிக்கடி மக்களால் பயன்படுத்தப்படுவதால் அதில் கொசு உற்பத்தியானால் அது மக்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு அப்படியாயின் திருநெல்வேலி மாநகரம் டெங்குக் கொசுவால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும் ஆனால் சாக்கடைகள் அதிகம் உள்ள சென்னை அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது எனவே கழிவுநீர் தேக்கமே கொசு உற்பத்தியாகக் காரணம் புகை போட்டால் அந்தக் கொசுக்கள் அங்கிருந்து கிளம்பி அருகில் உள்ள வீடுகளில் புகுந்து கொள்கிறது எனவே அரசு புகை போடாமல் கொசு ஒழிப்பு மருந்து தெளித்துக் கொசுவைக் கொல்ல வேண்டும் இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும் இதற்கு அரசு வறட்டு கௌரவம் பார்க்காமல், எதிர்க்காட்சிகள் தன்னார்வு நிறுவனங்கள், தொண்டுள்ளங்கள், மக்கள் என அனைவரின் ஒத்துழைப்பையும் நாட வேண்டும் மக்களுக்கு கொசு கடிக்காமலிருக்க களிம்புகள் எண்ணெய்கள் பரிந்துரைக்கப்படுவதுடன் அளிக்கப்படவும் வேண்டும் வாசனை நீக்கப்படாத வேப்பஎண்ணெய் கொசுவை விரட்டும் என்பதால் வீடுகள் ஆலயங்களில் வெப்ப எண்ணெய் விளக்கேற்றலாம் பொது இடங்களில் வேப்ப எண்ணெய் விட்டு அகண்ட தீபங்கள் அங்கங்கு எரிக்கப்படலாம் வேப்ப எண்ணெய் மெழுகுவர்த்திகள் தயாரித்து வீடுகளில் எரியச் செய்யலாம் இதனையெல்லாம் செய்தால் டெங்கு எனப்படும் இந்த உயிர்க்கொல்லி நோய் கட்டுப்பாட்டுக்குள் வரலாம்

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  இந்த வேலையை மேற்பார்வை செய்ய collectora ரொம்ப நல்லா இருக்கு

 • Prabaharan - nagercoil,இந்தியா

  சாலை பணியாளர்கள் மாதிரி கொசு ஒழிப்பு பணியாளர்களை நிமியக்க வேண்டும்?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  சுத்தம் சோறுபோடும்... சுகாதாரம் நோயற்ற வாழ்வை கொடுக்கும்... நிதம் நிதம் அனைத்து பஞ்சாயத்துக்கள். மாநகராட்சிகள் சுகாதாரத்திற்கு முக்கியதத்துவம் கொடுக்கவேண்டும்...

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  தமிழகத்தில் உள்ள 4062 கிராம ஊராட்சிகளிலும் துப்புரவுப் பணியாளர்கள் ஒரு சில ஆண்டுகளாகப் பணி (??) புரிந்து வருகின்றனர்.... அவர்களுக்குச் சம்பளமும் தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.... ஆனால் எந்த ஒரு கிராமத்திலுள்ள மக்களைக் கேட்டால் சொல்வார்கள்.... அவர்கள் என்ன பணி செய்கிறார்கள் என்று.... எனக்குத் தெரிந்து சம்பளம் மட்டும் போகிறது..... ஆனால் அவர்கள் யாரும் எந்தப் பணியும் செய்வதில்லை.... பணி செய்ததாக அறிக்கை மட்டும் போகிறது.... இந்த லட்சணத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் மேலும் பத்து ஊழியர்களை நியமித்துக் கொள்ளலாமாம்..... அதுவும் ஒரு மாதத்திற்கு மட்டும்....4062 X 10 X சம்பளம் கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.... எத்தனை லட்சங்கள் கொள்ளை போகிறது என்று...

 • G.Prabakaran - Chennai,இந்தியா

  சென்னையில் அதிகமாக கொசு உற்பத்தியாகும் கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு போன்றவற்றை கொசுவலையால் மூடி விட்டால் கொசு தொல்லையை ஒழிக்கலாம் என செல்லூர் ராஜூவை கேட்டால் இது போல் நல்ல ஆலோசனை எல்லாம் வழங்குவார். உங்களிடமே ஒரு விஞ்ஞானியை வைத்துக் கொண்டு ஏன் அவரை புறக்கணிக்கிறீர் அவர் கோவித்துக் கொண்டு தினகரன் அணிக்கு தாவி விட போகிறார்.

 • Uyirinam - Frankfurt,ஜெர்மனி

  இது PETA க்கு தெரியுமா ? உயிரினங்களை, அதுவும் நமது தேசிய பறவையை நீங்கள் எப்படி துன்புறுத்தலாம் ?

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  "தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள்" - இவர்களால் இந்தப்பயனாவது இருக்கிறதே என்ற ஒரு ஆறுதல்..

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  இவனுங்க 45% 55%னு வாங்கி தின்னுபுட்டானுவோ.. இப்போ வந்து வவ்வ வவ்வ.. வவ்வ வவ்வனுக்கிட்டு.. மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள்கிட்ட துடைப்பம் கூட இருக்கோ என்னமோ.

 • சந்தோசு கோபு - Vellore,இந்தியா

  ஆமா ஆமா.. அப்படியே டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களை புடிச்சி கட்டி போட்டுடணும்.

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  யாகம் செய்தால், கோடி ஓடிடாது?

 • அன்பு - தஞ்சை,இந்தியா

  பழனிக்கு எப்போது அரசு கவிழும் என்ற பயத்திலேயே இருப்பதால், கொஞ்சம் கூட மக்களை நினைத்து பார்க்க முடியவில்லை. கண்ணைமூடினால், சசியும் தினகரனும் தான் காட்சி அளிக்கிறார்கள். இதற்கு மருந்து எடுத்தால் தான், கொசுக்கு மருந்து அடிக்க முடியும்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  ஐயா நாம் யாகம் நடத்துவோம். மாணவர்களையும், பயனீட்டாளர்களையும் கூட்டி வந்து எம் கியாருக்கு விழா நடத்துவோம். கொத்து கொத்தாக பிணம்கள் விழுந்தால் என்ன, அதில் இருந்து பணம் நமக்கு வந்தால் போதும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement