Advertisement

பெங்களூரு சிறையில் சசி மீண்டும் அடைப்பு

பெங்களூரு: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவரை பார்க்க, பரோலில் சென்ற சசிகலா, மீண்டும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு திரும்பினார்; நேற்று மாலை, அவர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
தகராறு உச்சக்கட்டத்தை எட்டியதால், சசியுடன் வருவதை தவிர்த்த தினகரன், தனியாக பெங்களூரு வந்தார். சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்ற, சசிகலா, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவரது கணவர், நடராஜனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை பார்ப்பதற்காக, சசிகலாவுக்கு ஐந்து நாள், 'பரோல்' வழங்கப்பட்டது.இதையடுத்து, 6ம் தேதி, சிறையிலிருந்து வெளியில் வந்த அவருக்கு, கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
பார்வையாளர்கள் சந்திப்பு, அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்பது, ஊடகங்களுடன் பேசுவது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. 12ம் தேதி மாலை,6 மணிக்குள் சிறைக்கு திரும்ப வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், ஐந்து நாட்களாக, சென்னையில் உள்ள மருத்துவ மனைக்கு சென்று, தினமும், தன் கணவரை பார்த்து, நலம் விசாரித்தார். சென்னை, தி.நகரிலிலுள்ள இளவரசியின் மகள் வீட்டில் தங்கியிருந்த சசிகலாவின் பரோல், நேற்றுடன் நிறைவடைந்தது.

இதையடுத்து, நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டார்; உடன், இளவரசி மருமகன் ராஜராஜன் மட்டும் வந்தார்.பூந்தமல்லி, வேலுார், கிருஷ்ணகிரி வழியாக, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, மாலை, 4:30 மணிக்கு வந்தார்.

உட்கட்சி தகராறு உச்சக்கட்டத்தை எட்டியதால், சசியுடன் வருவதை தவிர்த்த தினகரன், முன் கூட்டியே தனியாக பெங்களூரு வந்தார். பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வளாகத்தில், சசிகலா காருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மீடியாக் கள் அனுமதிக்கப்படவில்லை; தொண்டர்கள் அனுமதிக்கப் பட்டனர்.

சிறைக்குள் சென்ற சசிகலாவுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவருக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்குள் சென்றதும், இளவரசியை பார்த்து கண்கலங்கியதாக சிறைத்துறை வட்டாரங் கள் தெரிவித்தன. வெளி யில் இருந்த சம்பவங்கள் குறித்து, இளவரசியுடன் விவாதித்து உள்ளார்.
இதற்கிடையில், தன் ஆதரவாளர்களுடன் சிறை வளாகம் வந்த தினகரன், மாலை, 4:55 மணிக்கு, சிறைக்குள் சென்று, சசிகலாவை சந்தித்தார்.

ஆம்பூரில் பிரியாணி:பரோல் முடிந்து, பெங்களூரு சிறைக்கு, சசிகலா காரில் சென்றதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது. நேற்று காலை, சென்னையில் இருந்து பெங்களூரு சிறைக்கு, வேலுார் வழியாக காரில் சென்றார்.வேலுார் மாவட்டம், வாலாஜாபேட்டை டோல்கேட்டுக்கு, காலை, 11:30 மணிக்கு வந்த சசிகலாவை, ஆதரவாளர்கள் வரவேற்றனர். பகல், 12:45 மணிக்கு, வேலுார் சத்துவாச்சாரி எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும் வரவேற்பு அளித்தனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற சசிகலாவுக்கு, வழியெங்கும், அ.தி.மு.க., அம்மா அணியினர், நீண்ட வரிசையில் நின்று, வரவேற்பு அளித்தனர். ஆம்பூரில் இருந்து மின்னுார் வரை, போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், 2 கி.மீ.க்கு நீண்ட வரிசையில், நடு ரோட்டில் ஆதரவாளர்கள் நின்றனர்.

இதனால், அந்த பகுதியில், அரை மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கபட்டது. முன்னதாக, வாலாஜாபேட்டை டோல்கேட் அருகே உள்ள குத்துாஸ் கடையில், சசிகலா டீ சாப்பிட்டார். ஆம்பூரில், பிரியாணி சாப்பிட்டார்.

Advertisement
 

வாசகர் கருத்து (28)

 • narayanan iyer - chennai,இந்தியா

  தியாகத்தலைவி என்கிறார்களே எதை தியாகம் செய்தார்? ஜெயாவை மூலதனமாகக் கொண்டு தனது குடும்பத்தினருக்கு சொத்தை சேர்த்து ஜெயாவை கெடுத்து , கொலைசெய்தது தான் தியாஹமா? தாலி கட்டிய கணவனை பிரிந்து வந்து பணத்திற்காக வேலை செய்தது தியாகமில்லை . கணவனுக்கு பணிவிடைசெய்து வாழாமல் வாழ்ந்து என்னப்பயன்? ஒரு மஹாபாவி .

 • Shanu - Mumbai,இந்தியா

  ஒரு களவாணிக்கு இந்த மீடியா எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ??

 • Prem - chennai,இந்தியா

  தெரிந்தோ தெரியாமலோ கர்நாடக அரசு பரோல் வழங்கி விட்டது இனி அப்பிடி ஒரு தவறை அந்த அரசு செய்ய கூடாது சசி சிறைக்கு உள்ளேயே இருந்து சாகட்டும்

 • niki - Chennai,இந்தியா

  thuroga thalaivikku sirantha idam jail than

 • Jeeva - virudhunagar,இந்தியா

  தயவு செய்து அங்கேயே இருந்துக்கோ

 • shekaran - thiruchi,இந்தியா

  புடிச்சு சிறையில போடுங்க சார்

 • Endrum Indian - Kolkata,இந்தியா

  தியாகத்தலைவி?????? மறுபடியும் சிறையில் அடைப்பு??????????

 • Vijay D Ratnam - Chennai,இந்தியா

  கர்நாடக மாநிலத்தில் இருபது பெண்களை கற்பழித்து பின் சயனைடு கொடுத்து கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவன் மோகன்குமார், இவன் 2003 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இருபது பெண்களை கற்பழித்து பின் சயனைடு கொடுத்து கொன்றதை ஒப்புக்கொண்டான். 2013 ஆம் ஆண்டு கர்நாடக விரைவு நீதிமன்றம் விதித்தது. மேல்முறையீட்டில் இப்போது இவனுக்கு விதித்த தூக்குத்தண்டனையை ரத்து செய்து ஆயுள்தண்டனையாக தீர்ப்பு வழங்கி இருக்கிறார் ஒரு உத்தமமான நீதிமான். அவர் வேறு யாருமல்ல மைக்கேல் டி குன்ஹா.

 • elangovan - TN,இந்தியா

  Karnataka high court judge and Jail superintendent and who gave the bail order to prime suspect in Ammas death case Sasi, to kindly note all these are political drama, not to see her husband in hospital, it is for just reason only. The criminals are to be severely punished no mercy and no kindness, and they want to realize the feeling not to do any more criminals activity in future. Jail is GOD temple, not for criminal to grow in jail using the power and Money. Sasi is the prime criminal in AMMAS death case still it is not and she should be punished in those criminal activities also. Those who all are supported to SASI and team please resign the ministries and MLAS and MPS post to come and see in the next election . People like AIADMK not with the current team and no one will be reliable to AMMA, all are to be punished in next election. We want the new leader AMMAS blood relation Deepa mam to take over the AIADMK in future with the real people support.

 • mariyappangopinathan - Chennai,இந்தியா

  எல்லாரும் நல்லா பாத்துக்குங்க நான் ஜெயிலுக்கு போறேன். ஜெயிலுக்கு போறேன். ஜெயிலுக்கு போறேன்.

 • Krishna Prasad - Chennai,இந்தியா

  ஒரு சிங்க குட்டியை கூண்டில் அடைத்து விட்டார்களே

 • karthi - chennai,இந்தியா

  பொதுமக்களின் வெறுப்பை தொடர்ந்து சம்பாதித்து கொண்டு இருக்கிறார். இது மேலும் மேலும் இவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும். ஜெயலலிதாவின் காரை இவர் பயன்படுத்துவது, ஆட்களை திரட்டி வரவேற்பு அளிக்க செய்வது, பூக்களை காரில் கொட்டுவது ஆகிய செயல்கள் இவர் மேல் மேலும் வெறுப்பை உண்டாக்குகிறது.

 • Balaji - Bangalore,இந்தியா

  பெங்களூரு சிறையில் குத்தூஸ் பிரியாணி கிடைக்குமா?

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  அழகாக தோன்றும் ஒரு கருநாகம் கண்டேன்... அநியாயம் செய்பவருக்கும் மரியாதை கண்டேன்... கொள்ளைக்கார கூட்டம் ஒன்று சிறை செல்ல கண்டேன்... அவரன்றி உண்மையை கொல்லும் கொடூரம் கண்டேன்...

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  சசி... இளவரசி..... சுதாகரன் மூவருக்கும் “மாமியார் வீட்டில்” தலை தீபாவளி..... அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்கள்....

 • அம்பி ஐயர் - நங்கநல்லூர், சென்னை - 61,இந்தியா

  டீ குடித்தார்.... பிரியாணி சாப்பிட்டார்.... இதெல்லாம் ரொம்ப முக்கியமான செய்தியா....

 • Tamilselvan - Chennai,இந்தியா

  சனியன் சிறைக்கு செல்வதை மக்கள் கொண்டாடுகிறார்கள் .

 • தேச நேசன் - Chennai,இந்தியா

  அம்மா பயன்படுத்திய காரில் மாமியார் வீட்டுக்குப் பயணம் (சிறைவாசம் தான் ஜெயாவின் உடல்நிலை மோசமானதற்கு காரணம் என சொல்கிறார்களே. அவரை விட இவர் புண்ணியவாதியா? )

 • Suresh - Nagercoil,இந்தியா

  முட்டாள்கள் குற்றவாளியை சிறைக்கு அனுப்புவதற்கு வரிசை பிடித்துள்ளார்கள்...

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  உண்மையில் A2 A1 க்கும் உண்டான தண்டனையையும் சேர்த்து அனுபவிக்கவேண்டும்.. கணக்கில் அடங்காது சொத்துக்களை ஆட்டையை போட்டு சாதனை செய்த இருவருக்கும் சிறை சென்று வந்தவுடன் சொத்துக்கள் அத்தனையும் சொந்தம்...

 • skv(srinivasankrishnaveni) - Bangalore,இந்தியா

  அடைசீ கண்ராவிகளா அவள் ஒரு சிறைகைதியேதான் முதல்வருக்கு அவள் செய்ததெல்லாம் தீமைகளேதான் அப்படி இருக்க நீங்கல்லாம் என்னாத்துக்கு இவ்ளோ ஆர்பாட்டம் செய்யறீங்க அவ்ளோபாசம் நா தீவாளி கொண்டாடாதீங்க துக்கம் அனுஷ்டிக்கவும் காரணம் என்ன முதல்வர் ஒரு பிராமின் லேடி என்ற கேவலம்தானே இவை உங்க சாதிக்காரி மாமிசம் துண்ணுறவைதானே என்ற வீம்புதானே , இவளால் சொத்துக்களை இளந்தவா எவ்ளோபேர் ஒலோபெரின் சாபங்களேதான் இன்று அவ ஜெயில்லே இருக்கா அவபுருசன் ஆசுபத்திரிலே கிடைக்கான , பண்ண பாவம் போறாளேன்னு ஒரு அப்பாவியை மூளை சாவு அடைய வச்சு அவனோட கிட்னி கல்லீரல் எல்லாம் பிடுங்கிவச்சுருக்காங்க அந்தாளுக்கு கேரக்டரும் இல்லே குடிச்சே கல்லீரல் அவுட்டு , எப்படியாச்சும் இளம்வயதா 74 வயது கிழக்குக்கு எதுக்கு இவ்ளோ ட்ரீட்மெண்ட்

 • Baskar - Paris,பிரான்ஸ்

  சென்னையில் தங்கி இருந்த போது அவர் சைவம் தான் சாப்பிட்டார்.அசைவ உணவுகளை தவிர்த்தார் என செய்திகள் வந்தன.இப்போது என்னவென்றால் போகிற வழியில் ஆம்பூர் பிரியாணி சாப்பிட்டார் என்கிறீர்கள்.நல்ல லெஃபிஸ் சாப்பிட்டாரா .இது தான் அவர் கடைசியாக வெளியில் சாப்பிடும் சாப்பாடாக இருக்கும்.அப்புறம் வழக்கம் போல் களி தான்.

 • ramasamy naicken - Hamilton,பெர்முடா

  சசி அதிகாரத்தில் இருந்தவரை முக்குலத்தோர் நல்ல நிலையில் இருந்தனர். பன்னீரோ சுயநலத்தை மட்டுமே கருதி டெல்லியில் மட்டுமல்ல, சென்னையில் கவுண்டர்கள் காலில் விழுந்து தன் பதவியை பிடித்து கொண்டு இருக்கின்றார். அவரை நம்பி வந்தவர்கள் நட்டாற்றில் இரங்கி காணாமல் போய் விட்டார்கள். இந்த மண்குதிரையை நம்பி முக்குலத்தோர் அமைச்சர்களும், எம் எல் ஏக்களும் பயணம் செய்ய நினைத்தால் ஐயோ பாவம், அரசியலில் காணாமல் போய் விடுவார்கள்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement