Advertisement

நாளை குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை : சென்னை குடிநீர் வாரிய குறைதீர்க்கும் கூட்டம், நாளை நடைபெற உள்ளது.இது குறித்து சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகின்றன.இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் கூட்டம், அனைத்து குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களிலும், நாளை காலை, 10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடைபெறும்.இந்த கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு பகுதி அலுவலகங்களிலும், ஒரு மேற்பார்வை பொறியாளர் தலைமை வகிப்பார்.பொதுமக்கள், தங்கள் பகுதியின் குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான பிரச்னை, குடிநீர், கழிவுநீர் வரி மற்றும் கட்டணம், நிலுவையில் உள்ள குடிநீர், கழிவுநீர் புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்களாக தெரிவிக்கலாம்.இதில், மழைநீர் சேகரிப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான விளக்கங்களும் அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement