Advertisement

மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.சென்னை, கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் தலைமை அலுவலகமும், மெட்ரோ ரயில் பணிமனையும் உள்ளன.இதற்கு, சென்னை குடிநீர் வாரியம் மற்றும் தனியாரிடம் தண்ணீர் வாங்கி பயன்படுத்தப்படுகிறது. மெட்ரோ நிர்வாகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு, ஆழ்குழாய் கிணறு அமைத்து, அதிலிருந்து, தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய, நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.இந்த நீரை தினசரி, 80 ஆயிரம் லிட்டர் சுத்திகரித்து வழங்கும் வகையில், புதிய சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, 38.25 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement