Advertisement

பள்ளி அளவிலான கூடைபந்து 16 மாணவ - மாணவியர் அணிகள் பங்கேற்பு

தி.நகர் : தியாகராயா நகரில் நடக்க இருக்கும், பள்ளி அளவிலான கூடைபந்து போட்டியில், 16 அணிகள் பங்கேற்று

அசத்த உள்ளன.
ஸ்ரீ ராகவேந்திரா கூடைபந்து கிளப் சார்பில், பள்ளி அளவிலான, கூடைபந்து போட்டி, சென்னை
தியாகராயா நகரில் உள்ள, மாநகராட்சி கூடைபந்து திடலில் நடக்க இருக்கிறது. ஸ்ரீ ராகவேந்திரா கோப்பைக்கான, இந்த போட்டி, லீக் கம் நாக் - அவுட் முறையில் நடக்க உள்ளது.
ஆண்கள் பிரிவில், எம்.சி.டி.எம்., சாந்தோம், வேலம்மாள், ஏ.வி.எம்., ராஜேஷ்வரி, எம்.சி.சி., செட்டிநாடு வித்யாஷ்ரம் உள்ளிட்ட, எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
பெண்கள் பிரிவில், வித்யோதயா, செயின்ட் ரபேல், கே.கே., நகர் அரசு பள்ளி, சாந்தோம், செட்டிநாடு வித்யாஷ்ரம் என, எட்டு அணிகள் கலந்துக்கொள்ள உள்ளன.
இன்று மாலை போட்டி துவங்குகிறது. 15ம் தேதி காலை அரையிறுதி, மாலையில் இறுதி போட்டியும் நடக்கும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement